Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2041
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


    மீண்டும் வருக..






    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2042
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Info

    பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!

    உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

    பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

    1.நல்ல பாம்பு
    2.கட்டு வீரியன்
    3.கண்ணாடி வீரியன்,
    4.சுருட்டை பாம்பு
    5.கரு நாகம்
    6. ராஜ நாகம்.

    மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

    இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

    பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

    கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

    வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க
    வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

    வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

    இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

    ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.


    Tamil Thantha Chittharkal


    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2043
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Info

    இந்த பதிவு பலருக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறன் குறிப்பாக பெண்களுக்கு:-
    ---------------------------------------------------------------------------------------------------

    வயிறு ஒரு கோணிப்பை மாதிரி.. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறு
    குடல், மலக்குடல், கணையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை/விந்துபை/சினைப்பை' ன்னு அவ்வளவு உறுப்புகள் இருக்கு...

    வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்... சிம்பிளா ட்ரை பண்ணிருக்கேன்...

    வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம் அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் 9 பகுதிகள்.

    அதாவது மேல், நடு(தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு(தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி... ஓகே வா??

    மேல்வயிறு வலது மூலையில வலிச்சா.. ஈரலில் பிரச்சனை.. பித்தப்பை கல்.

    மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்.

    நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி வித் நீர்கடுப்பு இருந்தால் கிட்னி ஸ்டோன்.

    நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் ஃபூட் பாய்சன்.

    அடிவயிறு வலது மூலை - அப்பன்டிசைடிஸ்,

    அடி வயிறு நடுவில், சிறுனீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

    அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்.

    ஓரளவாவது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு டாக்டரை பாருங்க.

    உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!
    # sanjana chayya


    jv_66, lavanyap and datchu like this.

  4. #2044
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    Re: Today's Medical Info

    நன்மை எல்லாம் தரும் நுங்கு!

    நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.
    பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.
    சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும்.
    குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
    நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.
    நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.

    datchu and thenuraj like this.

  5. #2045
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    பப்பாளிப் பழம் கைவசம் இருக்க பாத வெடிப்பு பற்றிய கவலை எதற்கு?

    பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்ர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.

    அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

    வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

    வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம் இரவு நேரத்தில் முங்க செல்லும் முன் காரல நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது. தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.


    datchu likes this.

  6. #2046
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    முழங்கால் வலி தடுக்கும் நடைப்பயிற்சி

    வழக்கமாக 40 வயது ஆகிவிட்டாலே முழங்கால் வலி தொடங்கிவிடும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம்தான் இதற்குக் காரணம், 20 வயதிலிருந்தே நடைப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது. இதற்குக் காரணம், நடைப்பயிற்சியானது மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

    திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. எலும்புகளையும் தசை நாண்களையும் பலப்படுத்துகிறது. மூட்டுகளைத் தேயவிடாமல் பாதுகாக்கிறது. கால்களுக்கு நல்ல வலிமை கொடுக்கிறது. நடைப்பயிற்சியால் எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் வலுவடைகின்றன.

    முழங்கால் மூட்டுகள் உடல் எடையைத் தாங்குவதற்குச் சிரமப்படும்போதெல்லாம், அந்த எடையைக் கால் தசைகள் தாங்கிக் கொள்கின்றன. இதன் பலனாக, முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது. மேலும் இது முதுமையில் வருகின்ற ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்புச் சிதைவு நோயைத் தடுக்கிறது.

    இவை தவிர, உணவு நன்றாகச் செரிமானம் ஆகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நன்றாக உறங்க முடிகிறது. நாள் முழுவதும் புத்துணர்வுடன் செயல்பட முடிகிறது. தன்னம்பிக்கை பெருகுகிறது. ஆக்கப்பூர்வ மனப்பான்மை வளர்கிறது.


    datchu likes this.

  7. #2047
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும் உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கை அதிகம் சேர்த்தால் வாயுத் தொந்தரவு ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் கிட்டவே சேர்க்கக் கூடாத ஐட்டம் என்றெல்லாம் உருளையின் நெகடில் பலன்களை மட்டும் தான் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், உருளைக்கிழங்கும் மருத்துவ குணம் கொண்ட அருமருந்து என்பது உங்களுக்கு தெரியுமா?

    * உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும். சருமமும் பளபளப்பாகும்.

    * உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்பபடுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால், குணமடைவர்.

    * உருளை அற்புதமான சிறுநீர்ப் பெருக்கி.

    * வாரத்துக்கு 2, 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகம் சுரக்கும்.

    * நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தருகிறது உருளைக்கிழங்கு.

    * குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.


    datchu likes this.

  8. #2048
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    அஜீரண பிரச்சினைக்கு வீட்டு வைத்தியம்

    நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.

    மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும். இந்த அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பலன் அடைய முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்.

    • வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமநிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. இதில் குறைவான அமிலத் தன்மை இருப்பதால் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

    இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

    • துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.

    • பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது.

    எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

    • புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவையூட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்றில் அமிலத்தைக்குறைத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

    அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.



    datchu likes this.

  9. #2049
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    தண்ணீர் தாராளமாய் குடிங்க


    நிறைய தண்ணீர் பருகுவது நல்லது என்று பலரும் பரிந்துரைக்கிறார்கள். அது முற்றிலும் உண்மையே. எப்போதெல்லம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம்கொள்கிறதோ, அப்போதே நமக்குத் தாகம் ஏற்பட்டுவிடுகிறது.

    உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளும் வகையில், உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களில் இருந்தும் பல்வேறு அறிகுறிகள் வெளியிடப்படுகின்றன. அந்த அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

    ஆனால், உடம்புக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் அதில் என்ன நிகழும் என்ற விவரம் பலருக்குத் தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளைத் தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் பல வியாதிகள் தொடக்கத்திலேயே அடக்கப்படுகின்றன.

    தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண வழிகளில் தண்ணீர் முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே 70 சதவீதமாகும். உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை, நுரையீரல், போன்ற திரவங்களிலும், செரிமான முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்புகளிலும் அதிகமாகவே அடங்கியுள்ளது.

    நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் பொதுவாக மென்மையாகவும், நிலத்தடி நீர் கடின நீராகவும் இருக்கும். அதாவது நிலத்தடி நீர் கடின நீராகவும் இருக்கும். அதாவது நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிறைய அடங்கியுள்ளன. கடின நீருடன் ஒப்பிடும் போது மென்னீர் நோய்களைக் குணப்படுத்தும்.

    அதே நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போனால் அதுவே உடல் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்


    datchu likes this.

  10. #2050
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    தினமும் முட்டையை சாப்பிடுவது நல்லதா?

    முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. முட்டையை அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும்.

    நினைவு தெரிந்த நாள் முதல் காலை உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.

    முட்டைகளை தினமும் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்று நினைத்து இன்றைய இளைய தலைமுறையினர் வளமையான சக்தி வாய்ந்த உணவை உண்ண பயப்படுகின்றனர்.. இருப்பினும் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் கொழுப்புகள் குறையும் என்பதே உண்மையாகும்.

    உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முட்டை அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் என்ற பயமின்றி தினமும் ஒரு முட்டையை கண்டிப்பாக உண்ணலாம். பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.

    அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை. முட்டையை உங்கள் உணவில் இருந்து முழுவதுமாக நீக்குவதற்கு பதிலாக அதனை புத்திசாலித்தனமாக உட்கொண்டால் முழுஆரோக்கியத்தையும் பெறலாம்..


    datchu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter