Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2051
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info




    Sponsored Links
    jv_66 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #2052
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info



    jv_66 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #2053
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் சிகப்பு காராமணியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.....


    தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனமும் அறிவும் விரும்பாது.

    காலையோ அல்லது மதியமோ சாப்பிடும் இந்த காராமணி (தட்டைப்பயிறு) சுண்டலே போதும். முடிந்தால் மதியம் சாதத்தில் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த இரண்டு உணவுகளால் விரைந்து அதிக எடையைக் குறைத்துவிடலாம்.

    சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் எரிந்துவிடும். அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும்.


    jv_66, lavanyap and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #2054
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    கறிவேப்பிலையை ஏன் தாளிக்கின்றோம்?


    கறிவேப்பிலை
    யை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

    ‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #2055
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.

    இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

    அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

    முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

    அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

    இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

    காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

    ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

    இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

    நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

    ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

    வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

    வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

    அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

    வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #2056
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    Re: Today's Medical Info

    தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் :-
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
    மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது....
    இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
    தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
    தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

    சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
    கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
    நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
    நம்பிக் காண்

    இதன் விளக்கம் :-

    இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

    வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

    எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

    உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

    கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

    இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

    மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
    இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

    வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்...


  7. #2057
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    அழகுடன் ஆரோக்கியம் - கருஞ்சீரகம்


    இயற்கை கொடுத்த மூலிகை மருந்துகளில் கருஞ்சீரகம் மிக முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது நூற்றுக்கும் மேலான மருத்துவ குணங்களை உள்ளடக்
    கியது. இன்னும் கூட இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இன்னும் பலப் பல வியாதிகளுக்கு இந்த கருஞ்சீரகத்தின் துணையுடன், மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    எகிப்து மக்களின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் அருமருந்து கருஞ்சீரகம். எகிப்தில் பிரமிடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட அரச குடும்ப "மம்மி" களுடன் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு இணையாக நிறைய மருந்துப்பொருட்களையும் சேர்த்தே பாதுகாத்திருக் கிறார்கள்... அப்படி பாதுகாக்கப்பட்டவைகளில் மிக முக்கியமான இடத்தை இந்த கருஞ்சீரகம் பிடித்திருக்கிறது..கருஞ்சீரகத்தினை பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அங்குள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்..இதன் பயன்பாடுகள் பற்றிய நீண்ட வரலாறு எகிப்தில் உண்டு. இதன் காரணமாகவே அனைவரது வீட்டு சமையலறையிலும் கருஞ்சீரகத்துக்கு ஒரு முக்கிய இடத்தை அம்மக்கள் இன்றளவும் கொடுத்து வருகிறார்கள்..

    டூடுட் அங்க் அமான் என்கிற பாரோ எகிப்து மன்னன் தன்னுடைய மரணத்திற்கு பின்னான வாழ்க்கைக்கும் அவசியம் என்று தன்னுடைய கல்லறையில் இந்த கருஞ்சீரகத்தை வைக்க சொன்னதற்கான குறிப்புகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.... எகிப்தில் கடவுளுக்கு அடுத்த நிலையில் மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த ஃபாரோஸ் மற்றும் மருத்துவர்கள் நாட்டில் நடக்கும் பெரிய விருந்துகளுக்கு பிறகு வயிற்றில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கவும், அதனை சமன்படுத்தவும் இதே கருஞ்சீரகத்தை உபயோகித்துள்ளனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும் அவர்கள் தலைவலி, பல்வலி, சளி மற்றும் தொற்றுநோய்களுக்கும் இதையே மருந்தாக கையாண்டுள்ளனர்.

    18ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த அழகியாக திகழ்ந்த அரசி ஃநெபிர்டிடி தன் அழகைப் பாதுகாக்கவும், பாரமரிக்கவும் கருஞ்சீரக எண்ணெயை உபயோகித்ததாகவும், மேலும் தன்னுடைய நகங்கள் மற்றும் முடியையும் இந்த எண்ணையைக் கொண்டே தன் வாழ்நாள் முழுவதும் பராமரித்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.


    சமகாலத்தில் எல்லோரையும் மிரட்டும் வியாதியாக இருப்பது கேன்சர் அதிலும் உள்ளுறுப்புகளில் வரும் கேன்சரானது எவ்வித அறிகுறியையும் காட்டாமல் ரகசியமாய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் முடக்கும் போதுதான் தெரியவரும்.. ஆனால் அப்போது அதை குணப்படுத்த முடியாத அளவு நிலைமை கைமீறி போய் இருக்கும்.

    குறிப்பாக கணைய புற்றுநோய் (Pancreatic cancer)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்த பின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. (சர்க்கரை நோயுடன் கர்ப்ப காலங்களில் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் இந்த கான்சர் வரும் வாய்ப்பு உண்டு) . அதோடு நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த கணைய புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

    உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் கேன்சர் செல்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன.. கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும் (natural interferon), எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது..

    மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B1, வைட்டமின்கள் B2, வைட்டமின்கள் B3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.

    அஜீரணம், இருமல், வாந்தி, வாயு, வீக்கம் போன்றவற்றை குணமாக்கும். பசியைத்தூண்டும், வயிற்றுப் போக்கை நிறுத்தும், புழுக்கொல்லியாக செயல்படும். இதயத்தில் உண்டாகும் வலியைக் குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். முகப்பரு அறவே போக்கும். கரப்பான், சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களைத் தீர்க்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் அதிகம் சுரக்க வைக்கும், பிரசவத்திற்கு பின் உண்டாகும் வலிகளைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. கீல் வாதம், தலைவலி, நாய்க்கடி, கண்வலி, கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். சிறுநீரக* கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

    சிறப்பு குறிப்பு: கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் சளி தொல்லையிலிருந்து உடனடி நிவராணம் பெறலாம்.

    பல வியாதிகளுக்கு கருஞ்சீரகம் ஒன்றே அருமருந்து. அருமருந்தான கருஞ்சீரகத்தை நாமும் நம்முடைய சமையலறையில் அமர்த்தி நோய்களின் வரவை தடுக்கலாமே.
    Aaranyam


    Sriramajayam and saidevi like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #2058
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info


    இளமையா இருக்க ஆசையா?


    ‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

    ‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.

    கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

    என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!

    சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.

    தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

    கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

    சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

    வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

    கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

    இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
    மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது



    Sriramajayam and saidevi like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #2059
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்

    உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
    கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
    கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
    கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
    உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்

    இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

    இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

    குளியல் பொடி

    இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

    அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

    சோம்பு - 100 கிராம்
    கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
    வெட்டி வேர் - 200 கிராம்
    அகில் கட்டை - 200 கிராம்
    சந்தனத் தூள் - 300 கிராம்
    கார்போக அரிசி - 200 கிராம்
    தும்மராஷ்டம் - 200 கிராம்
    விலாமிச்சை - 200 கிராம்
    கோரைக்கிழங்கு - 200 கிராம்
    கோஷ்டம் - 200 கிராம்
    ஏலரிசி - 200 கிராம்
    பாசிப்பயறு - 500 கிராம்

    இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

    இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

    இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்


    Sriramajayam and saidevi like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #2060
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஆரோக்கிய எதிரிகள்
    ================

    1.பற்பசை
    2.சீனி
    3.ரீபைண்ட் ஆயில், பெட்ரோலிய கழிவு கலந்த எண்ணைய்கள்.
    4.மைதா, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி.
    5.சாக்லேட், கேக், மஞ்சளாய் இருக்கும் பச்சை வாழைப்பழம், வத்தல்,
    பஜ்ஜி, பீட்சா, சமோசா, வடைகள், மிக்சர், காரசேவு, குர்குரே, போன்ற நொறுக்கு தீனிகள்
    6. ஹார்லிக்ஸ், பூஸ்ட்,காம்ப்ளான், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,டீ, காப்பி, பாக்கெட் பால்,கோக், பெப்ஸி, மாசா போன்ற பானங்கள்.
    7.பிராய்லர் கோழிகள் , பிராய்லர் முட்டைகள்,
    குளிரூட்டப்பட்ட மீன்கள்.
    8. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அனைத்து உணவுகளும்.
    9. கலர்பொடி, அஜினாமோட்டா, பெருங்காயம், வினிகர். போன்றவைகளை கலந்த உணவுப் பொருட்கள்.
    10. அதிகஉப்பு, அதிககாரம், அதிகபுளிப்பு மற்றும் அறுசுவை சேராத அனைத்து உணவுகளும்.

    இவைகளை தவிர்க்க வேண்டும் என்று ஒரு நண்பரிடம் கூறினேன். உடனே அவர் மதுபானம் அருந்தலாமா என்று கேட்டார் நான் கூறினேன். " சாக்கடை கலந்து விசமாகும் உணவுகளை தவிர்க்க வேண்டும். என்கிறேன் நான், நீங்கள் சாக்கடை நீரை அள்ளி குடிக்கலாமா? என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்று."

    இப்படித்தான் நிறைய பேரு
    நோய் வந்தபிறகு பார்த்துக்கலாம். எங்ககிட்ட வாங்க. நாங்க இருக்கோம்னு விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்காங்களே தவிர இதையெல்லாம் தவிருங்கனு எந்த வர்த்தக மருத்துவர்களும் சொல்றது இல்லை.!

    அதுஏன்? சிந்திப்போர்க்கு வெற்றியுண்டு.!

    வாழ்க வளமுடன்.!
    நலம் பெருகட்டும் …


    Sathyan, FB


    Chill Queen and saidevi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter