Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2091
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    வாயுதொல்லை

    பெரும்சப்தத்துடன்ஏப்பம்விடுபவர்களைகாணமுடிகிறது. நமக்குஅருவெறுப்பு, சிறிதுகூடநாகரிகம்இல்லாமல்இப்படிபொதுஇடத்தில்ஏப்பம்விடுகிறாரேஎன்று. ஆனால்ஏப்பட்ம்விட்டவர்புத்திசாலி. ஆயுர்வேதத்தின்உபதேசங்களைநன்குஅறிந்திருக்ககக்கூடும். பெரும்சப்தத்துடன்விடுவதுதவறுதான்என்றாலும்ஒருஇயற்கையானஉபாதையைதடுக்காமல்ஏப்பத்தைநன்குவெளியேவிட்டுவிட்டதால்வாயுத்தொல்லைகள்அவருக்குவராமல்தன்னைபாதுகாத்துக்கொள்கிறார். இதேநபர்வரும்ஏப்பத்தைதடுக்கக்கூடியவழக்கத்தைகொண்டிருந்தால்அவருக்குகீழ்காணும்உபாதைகள்வரக்கூடும்.

    1.
    ருசியின்மை 2. உடல்நடுக்கம்

    3.
    ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும்வாயுப்பிடிப்பு

    4.
    வாயுவினால்வயிறுபெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

    ஜீரகத்தைலேசாகவறுத்து (5 கிராம்அளவில்) கால்லிட்டர்தண்ணீரில்சிறிதுநேரம்கொதிக்கவிட்டுவடிகட்டி, வெதுவெதுப்பாகசிறியஅளவில்அடிக்கடிபருகவேண்டும்.ஆயுர்வேதமருந்துகடைகளில்தான்வந்திரம்குளிகை, வாயுகுளிகைஎன்றுமாத்திரைகள்விற்கப்படுகின்றன, தான்வந்திரம்குளிகையைமேல்குறிப்பிட்டஜீரகஜலத்துடன் 1மாத்திரையைகாலை, மாலைவெறும்வயிற்றில்சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ்அதாவது 25il, 1 வாயுகுளிகையுடன்காலை, இரவு -ஆஹாரத்திற்குப்பிறகுசாப்பிடுவதுநல்லபலனைத்தரும். மருந்தைநாடாமல்இருக்கவேண்டுமாயின்ஏப்பத்தைதடுக்காமல்அதிகசத்தமில்லாமல்மெதுவாகவிட்டுவிடுவதேநல்லது.

    நம்உடலில்புகும்தீயசக்திகளில்பெரும்பாலானாவைதண்ணீர்மூலமாகவேசேர்கின்றன.தண்ணீரைக்காய்ச்சிஆறவைத்துஅருந்திவந்தால்நமதுஎண்ணங்கள்துõய்மையாகிஆன்மீகமுன்னேற்றம்துரிதம்அடையும். தண்ணீரில்சிறிதுசீரகத்தைச்சேர்த்துகொதிக்கவைத்துகுடித்தால்தோஷங்கள்அகலும்..



    Sponsored Links

    KOTHAISURESH

  2. #2092
    nithyaswamy is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvallur
    Posts
    71

    Re: Today's Info

    வாயு தொல்லைக்கு சுக்கு வென்னிர் குடித்தால் உடனடி நிவரனம் தெரியும்


  3. #2093
    nithyaswamy is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvallur
    Posts
    71

    Re: Today's Medical Info

    useful post

    kvsuresh, sumitra and Sriramajayam like this.

  4. #2094
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Today's Medical Info

    Thanks for sharing this useful tips.

    kvsuresh, sumitra and Sriramajayam like this.

  5. #2095
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Today's Info

    Quote Originally Posted by nithyaswamy View Post
    வாயு தொல்லைக்கு சுக்கு வென்னிர் குடித்தால் உடனடி நிவரனம் தெரியும்
    Thanks for the tips Nithya.

    sumitra and Sriramajayam like this.

  6. #2096
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    இதய ஆரோக்கியம் மிக அவசியம்....

    நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல் துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம். இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க வேண்டும்.

    மனஅழுத்தம்

    உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மௌனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிகொள்ள வேண்டும். அவ்வாறு பழகிக்கொண்டாலே இதயத்தில் அழுத்தமோ, டென்ஷனோ ஏற்பட வாய்ப்பில்லை

    முறையற்ற உணவுப் பழக்கம்

    முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது. தோல் நீக்கிய சிக்கன் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்தை காக்கும் உணவுகள்..

    சீரான ரத்த ஓட்டம்

    இதயநோய்கள், மாரடைப்பு இவை வருவதற்கு முதல்காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் இ, சி, போன்றவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன. ஒவ்வொருவரும் ஒரு நாளில் காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்.

    புகைப்பதை நிறுத்துங்கள்

    24 மணி நேரமும் ஓய்வே எடுக்காமல் நம்மை பாதுகாக்கும் இதயத்தினை பாதுகாக்க நினைத்தால் புகைப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் இதயத்தின் முக்கிய எதிரி புகைதான். எனவே புகையை விட்டொழியுங்கள். புகையிலை சேர்ந்த எந்தப்பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைபாக்கு போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள்.

    சிரித்து மகிழுங்கள்

    எப்போதும் சிடுசிடு என்று டென்ஷனாக இருக்காமல் சந்தோஷமாக இருங்கள். நம்முடைய இதயத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.




    thenuraj, sumitra and saidevi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2097
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


    மீண்டும் வருக..





    sumitra likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2098
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்..!


    உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.


    பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,


    1.நல்ல பாம்பு
    2.கட்டு வீரியன்
    3.கண்ணாடி வீரியன்,
    4.சுருட்டை பாம்பு
    5.கரு நாகம்
    6. ராஜ நாகம்.


    மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.
    இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.
    பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால்


    மருந்து :-


    கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .


    வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.


    வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-


    இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.
    ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.



    Tamil Thantha Chittharkal


    thenuraj, sumitra and saidevi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2099
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் குடைமிளகாய்!

    Today's  Medical Info-image.jpg

    குடைமிளகாய் பெயரில் மட்டுமே காரம்… ஆனால், உள்ளே இருப்பது அத்தனையும் காரத்துக்கு நேர்மாறான நல்ல குணங்கள்.

    ‘சேரிடம் அறிந்து சேர்’ என்பதற்கு எதிராக, எந்த உணவுடன், எப்படிச் சேர்த்தாலும் தன் தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தனியாகவும் நிற்காமல் சுவை கூட்டும் ஒரு காய் குடைமிளகாய்.

    பச்சையாகவும் சாப்பிட ஏற்றது. சாம்பார், பொரியல் முதல் பீட்சா வரை எதனோடும் இணக்கமாகப் போவதுதான் இதன் சிறப்பு. மிளகாய் குடும்பத்தைச் சேர்ந்த குடைமிளகாய், பாரம்பரிய காயாகக் கருதப்படுவதில்லை.

    தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காதான் குடைமிளகாயின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது. கொலம்பஸ்தான் 1492-ல் மேற்கிந்திய பகுதிகளில் இருந்து குடைமிளகாயை சேகரித்து, ஸ்பெயினுக்கு கொண்டு சென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.

    சூடான மற்றும் குளிர் பிரதேசம் என எங்கேயும் வளரக்கூடிய தன்மை கொண்ட குடைமிளகாய், இன்று சீனா, துருக்கி, இத்தாலி, ஸ்பெயின், ரோமானியா, இந்தியா, மெக்சிகோ நாடுகளில் பிரதானமாக பயிரிடப்படுகிறது. உலகம் முழுக்க 27 வகையான குடைமிளகாய் விளைகிறது.

    Today's  Medical Info-image.jpg
    குடைமிளகாயின் நன்மைகள்:

    *குடைமிளகாய்க்கு ‘ட்ரைகிளிசரைட்’ எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, கலோரி எரிப்பைத் தூண்டி, வளர்சிதை மாற்ற இயக்கத்தை சீராக்கும் குணமுண்டு.

    *குறைந்த அளவு கொழுப்பு மற்றும் நார்ச்சத்து (கார்போஹைட்ரேட்) கொண்டது என்பதால் எடை குறைப்புக்கு உதவக்கூடியது.

    *பீட்டா கரோட்டின், மற்றும் வைட்டமின் சி ஆகிய ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகளை அதிகம் கொண்டது. அதன் விளைவாக திசுக்களுக்கும், ரத்தக்குழாய், நரம்புகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்து, இதய நோய்கள், ஆஸ்துமா, சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.

    *குடைமிளகாயில் ‘கேப்சைசின்’ என்கிற அமிலம் உண்டு. வாயினுள் ஒருவித எரிச்சல் உணர்வை உண்டாக்கக்கூடிய இதற்குப் புற்றுநோயைத் தவிர்க்கக்கூடிய சக்தியும் உண்டாம்.

    *இந்த குடைமிளகக்கு சருமத்திலிருந்து முதுகெலும்புக்கு வலி பரவுவதைத் தவிர்க்கும் சக்தியும் உண்டாம். அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகான வலிகளைக் குறைக்கவும் உதவக்கூடியது.

    *வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் நிறைந்த குடைமிளகாயானது நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதமளிக்கக் கூடியது. இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலேட் ஆகியவை மன அழுத்தம், மனச்சோர்வை விரட்டக் கூடியவை.

    *ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுப்படுத்துவதால் குடைமிளகாய்க்கு இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் குணமும் உண்டு. செரிமான நீர் சுரப்பைத் தூண்டி, செரிமானத்தை சீராக்கக் கூடியது.


    Selliyal


    thenuraj, sumitra and saidevi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2100
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மசாலா டீ குடித்தால் தொண்டை வலி குணமாகும்!

    Today's  Medical Info-image.jpg

    தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில வழிகள்.

    சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது.

    இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது.

    இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும்பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.

    இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா டீ குடித்தால் நல்லது. மசாலா டீ என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

    Today's  Medical Info-image.jpg

    இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப்பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும்.

    எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

    பாதுகாப்பு முறை:

    தொண்டையில் நோய் தொற்று இருக்கும்பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் (தண்ணீர், சூப்) போன்றவைகளை குடிக்கலாம்.

    மிதமான சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.


    Selliyal


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter