Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2101
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உஷ்ணக் கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக் கள்ளி!



    சப்பாத்திக்கள்ளி. இது ஒரு பாலைவனத்தாவரம் – வறண்ட பகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி.

    நமது இரத்தத்தில் பலவிதமான அணுக்கள் (செல்கள்), கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உடல் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச் சத்தை தருவதுடன் அணு விருத்திக்கும் பெரிதும் உதவுகின்றன.

    இந்த வகை பல கனிம வளங்களையும், வைட்டமின்களையும் சப்பாத்திக்கள்ளி தன்னிடத்தில் கொண்டுள்ளது.



    ‘டிபன்ஸ் மெக்கானிசம்’ என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன.

    அல்லது இரத்த அணுக்களால் தூக்கியெறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டு பண்ணுகின்றன.

    அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.

    இவ்வாறு தோன்றும் கட்டிகள் உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.



    சப்பாத்திக் கள்ளிகள், கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை. சப்பாத்திக் கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும்.

    புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.


    Selliyal



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg   Today's  Medical Info-image.jpg   Today's  Medical Info-image.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2102
    spmeyyammaisp06 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    663

    Re: Today's Medical Info

    thank you for infos.

    sumitra and Sriramajayam like this.

  3. #2103
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Today's Medical Info

    Useful information.Thanks for sharing.

    sumitra and Sriramajayam like this.

  4. #2104
    XXXXXX's Avatar
    XXXXXX is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    dddddd
    Posts
    155

    Re: Today's Medical Info

    thanks for information

    sumitra and Sriramajayam like this.

  5. #2105
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


    மீண்டும் வருக..





    kvsuresh and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2106
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

    பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.

    சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது.

    அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

    வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

    வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.

    நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

    மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

    கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

    பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

    தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

    சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


    sumitra and Sriramajayam like this.

  7. #2107
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மாலைக்கண் நோயை குணமாக்கும் செவ்வாழைப்பழம்!

    Today's  Medical Info-image.jpg

    எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

    பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது.

    இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளது.

    செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆதாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

    பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் குணமாக்கும்.

    சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.

    நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

    மேலும் தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது.

    எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.


    Selliyal


    thenuraj and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2108
    elkiritin is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    saudi arabia
    Posts
    1

    Re: Today's Medical Info

    very useful information. Thx

    thenuraj, sumitra and Sriramajayam like this.

  9. #2109
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது?






    உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டெ
    ன்ஷன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை.

    வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான். நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

    “நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”என்றார்.

    உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒரு பிரச்சினை உங்களுக்கு வரும்போது (அப்படி ஒரு விஷயம் வெளியே தெரியும் முன்னரே) உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ளும். பாதிக்கப்பட்ட உறுப்புக்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது, அதனால் தேவைப்படும் அந்தச் சக்தியை அதி வேகத்துடன் இரத்தத்தின் மூலமே எடுத்துச் செல்லவேண்டும். அப்போது இரத்தத்தில் எண்ணற்ற வேதியியல் மாற்றங்கள் நடக்கும். இரத்தத்தின் அடர்த்தியும் மாற்றம் அடையும்.

    பின்னர் அந்தச் சக்திகளைச் சுமந்துகொண்டு இரத்தம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மெதுவாகவா செல்லும்? 108 ஆம்புலென்ஸ் போல விரைவாகத்தானே செல்லும். அதற்கு இதயம் வேகமாக துடித்துத்தானே ஆகவேண்டும். அதுதானே இரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தேவையை ஒட்டி அனுப்புகிறது. இவ்வாறு உடல் தன்னைத்தானே குணமாக்கும் நிகழ்ச்சியையே நாம் இரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொள்கிறோம். ஏன் என்றால் படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வருவதால்.

    உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரிசெய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும். பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள். அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.

    அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும். அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

    உடலில் உருவான நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது. இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன. அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.

    இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது. பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான். அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.

    நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள், உடலில் நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுங்கள். இந்த இரண்டையுமே அக்குபஞ்சர் (தொடு சிகிச்சை) மருத்துவம் செவ்வனே செய்கிறது. வயிறுதான் அனைத்து நோய்களின் வரவேற்பறை. அதைச் சரி செய்யாமல் பி.பி. வந்து விட்டது சுகர் வந்து விட்டது என்று புலம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.


    sumitra and Sriramajayam like this.

  10. #2110
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    அறுவைச் சிகிச்சைக்கு புதிய கருவி: அரசு மருத்துவர் வடிவமைப்பு





    கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக ஒரு கருவியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் வடிவமைத்துள்ளார்.
    மருத்துவமனையில் ஆர்த்தோ அறுவை சிகிச்சையின்போது பாதிக்கப்பட்டவரின் கை மற்றும் கால் பகுதியை தாங்கிப் பிடிக்கும் பணியில் ஈடுபடும் உதவியாளர்களின் சிரமத்தை குறைக்க, தான் வடிமைத்துள்ள பெரிஸ் லிம்ப் ஹோல்டர் எனும் கருவி உதவும் என்கிறார் புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை அறுவைச் சிசிச்சை நிபுணர் எம்.பெரியசாமி.
    ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

    விபத்து அல்லது ஏதோ ஒரு வகையில் கை மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்காக மயக்க நிலைக்கு மாற்றப்படுவது வழக்கம்.


    அவ்வாறு மாற்றப்படும்போது கை அல்லது காலின் எடை 10-15 மடங்கு உயர்ந்துவிடும். சுத்தம் செய்யும்வரை பாதிக்கப்பட்ட பகுதியை படுக்கையில் படாமல் இருக்க தனியாக ஒருவர் சுமார் 1 மணி நேரம் உயர்த்திப் பிடிக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் அசைவில்லாமல் சுமார் 10 கிலோ எடையைத் தாங்கிப் பிடிப்பது என்பது மிகவும் கடினம். இதனால் ஆர்த்தோ அறுவை சிகிச்சை என்றாலே உதவியாளருக்கு பயம் வந்துவிடும். பலர் மறுப்பர். அதிலும் கால் பகுதி என்றால் சொல்ல வேண்டியதில்லை. சில நேரங்களில் உதவியாளர்கள் தடுமாறிவிடும் நிலையும் ஏற்பட்டது.

    இதனால் மருத்துவருக்கும், நோயாளிக்கும் ஏற்படும் பிரச்சினையை நிரந்தரமாக போக்க வேண்டுமென்பதற்காக தனியாக ஒரு கருவியை வடிவமைக்க கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்தேன். அதன்படி மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக சுமார் 1.2 மீட்டர் உயரத்தில் ஆங்கில எழுத்தான ‘F’ வடிவில் நிக்கல் பூசப்பட்ட இரும்பு கம்பியைக்கொண்டு கருவி வடிவமைக்கப்பட்டது.


    அரங்கில் உள்ள படுக்கையின் பக்கவாட்டில் உள்ள திருகில் இந்தக் கருவியைப் பொருத்தி தேவையான அளவு உயரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பின்னர் கால், கை பகுதியை கட்டுவதற்கு சங்கிலி பயன்படுத்தினால் காயம் ஏற்பட்டுவிடும் என்பதால் எளிதில் கட்டி அவிழ்ப் பதற்கும் அனைத்து வயதினருக்கும் பயன்படும் வகையில் வசதியாக பிளாஸ்டிக் பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பொருத்த வளையம், கொக்கியும் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கருவியை அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தி சோதித்ததில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதை பயன்படுத்திய பிற மருத்துவர்களும் ஆதரித்துள்ளனர். இக்கருவி ரூ.1000 செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


    நடப்பாண்டில் தமிழக அரசால் பாராட்டப்பட்ட மருத்துவர் எம்.பெரியசாமி, அறுவைச் சிகிச்சை அரங்கில் பயன்படுத்துவதற்காக ஏற்கெனவே 3 விதமான கருவிகளை கண்டுபிடித்து அவைகள் தற்போது மருத்துவமனை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் விவரம் பெற விரும்புவோர் மருத்துவர் எம்.பெரியசாமியை 97509 69955 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


    sumitra and Sriramajayam like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter