Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2121
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    welcome sumitra, eppadi irukka?


    Sponsored Links
    thenuraj likes this.

    KOTHAISURESH

  2. #2122
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    ஆரோக்கியத்தைத் தரும் கம்பு கூழ்

    அக்காலத்தில் எல்லாம் காலை உணவாக தானியங்களைத் தான் அதிகம் உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் எவ்வித நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருந்தனர். எனவே நீங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், காலையில் தானியங்களை சேர்த்து வாருங்கள். அதிலும் தானியங்களில் ஒன்றான கம்புவை கூழ் செய்து குடித்து வருவது, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது, சத்தானது.

    இங்கு அந்த கம்பு கூழ் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு மாவு - 1 கப்
    சாதம் ஊற வைத்த தண்ணீர் - தேவையான அளவு
    சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
    மோர் - 1 கப்
    சாதம் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சாதம் ஊற வைத்த நீரில் கம்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்து, 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்ரை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்பு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    அப்படி கிளறும் போது கலவையானது களி போன்று வரும் போது, அதனை இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.

    இறுதியில் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மற்றம் சாதம் சேர்த்து நன்கு கரைத்தால், கம்பு கூழ் ரெடி!!!

    குறிப்பு:

    இதனை மண் பாத்திரத்தில் கரைத்து குடித்தால், இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

    நன்றி : ஆரோக்கிய உணவு பக்கம்


    jv_66 likes this.

  3. #2123
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  4. #2124
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Today's Medical Info

    ஜின்ஜெங்:

    ஒரு புதிய கண்டுப்பிடிப்பு

    * அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர்
    விறுவிறுப்பாக விற்பனையாகிறது.

    அதன் பெயர், ஜின்ஜெங்.

    இது சீனாவில் உற்பத்தியாகிறது.

    * இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள்.

    மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள்,

    தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள்.

    மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள்.

    சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

    * காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது.
    மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

    * ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்.

    * உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.

    * ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

    * இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

    * படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.







    thenuraj likes this.
    Jayanthy





  5. #2125
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Today's Medical Info

    கருஞ்சீரகத்தின் பலன்கள் :-
    கருஞ்சீரகத்தின் பலன்கள் :- *

    தோல் நோய்களை குறைக்கும்.

    பசியைத்தூண்டும்.

    சீரணத்தை சீர்படுத்தும்.

    வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

    * புழுக்கொல்லியாக செயல்படும்.

    வாந்தியைத் தடுக்கும்.

    இதய வலியை குறைக்கும்.

    சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.

    *பால் சுரப்பைக் கூட்டும். *

    சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

    * கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.

    * கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.

    * கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

    * கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும். *

    கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

    * கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

    * கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும். *

    கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

    * கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும். *

    கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும். இயற்கை மருத்துவம்







    Last edited by jv_66; 10th Sep 2014 at 12:28 PM.
    thenuraj likes this.
    Jayanthy





  6. #2126
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    குழந்தைகட்கான நல்லுணவு


    ஒரு முறை ஒரு உணவு விடுதியில் குடும்பத்துடன் சாப்பிடப் போயிருந்த சமயம். ஒரு பிரபலம் குடும்பத்துடன் சாப்பிட வந்திருந்தார்கள். கூடவே 3 பணிப்பெண்கள். அட! பரவாயில்லையே! வீட்டுப் பணிப்பெண்களை ஒன்றாய் அழைத்து வந்து சாப்பிடும் சமதர்ம சமுதாயத்திற்கு வித்திடுகிறதே அந்தப் பிரபல குடும்பம் என நினைத்தேன்..ஓரிரு நிமிடம் போயிருக்கும். உணவுகள் பரிமாற ஆரம்பித்ததும், மூன்று பணிப்பெண்களும் அவ்வீட்டுக் குழந்தைகளை ஆளுக்கொன்றாய் அழைத்துக் கொண்டு ஓட்டல் வாசலில் இருந்த விளையாட்டு அறையில் வைத்து பிஸ்கட், சிப்ஸ், கூல்டிரிங்க்ஸ் என பொட்டலத்தை பிரித்து கொடுக்க ஆரம்பித்தனர். ஒருபக்கம் பிரபலமும் மற்றொரு பக்கம் அவர்கள் வீட்டு பரிதாபங்களும் ஆரவாரமாய் சாப்பிட ஆரம்பித்தனர்..இன்று இது பிரபல பணக்கார வீட்டில் மட்டுமல்ல.. நகர்ப்புற மக்களில் பலர் வீட்டில் நடக்கும் விஷயம் தான். இப்போது வேகமாக உருவாகிவரும், “நேரமில்லை ஜாதி” குடும்பங்களில் இதற்கு கற்பிக்கப்படும் நியாயம் ரொம்ப அதிகம்.

    நல்ல ஆரோக்கியமான குழந்தைப்பருவம் என்பது, வாழ்நாள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை. உங்கள் வீட்டு குழந்தைச் செல்வம் சரியான வேளையில் சரியான உணவை விரும்பிச் சாப்பிட வைத்து விட்டீர்கள் என்றால் பெற்றோராய் வாழ்வில் பெரும் பொறுப்பை செய்து முடித்ததாக அர்த்தம். “எனக்கு வேணாம்; பிடிக்கவேயில்லை;” என்ற வார்த்தைகளைக் கேட்டு கேட்டு, கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி கடைசியில் மன நோயாளியாகவே மாறிவிடும் சில அம்மாக்களை எனக்குத் தெரியும். கூடவே “என் குழந்தை அவங்க அப்பா..அவங்க ஃபேமிலி மாதிரி கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி சார்!” என தன் ஏழாம் அறிவில் சுருதி சேர்க்கும், அம்மாவும், “உனக்கு பொறுமையில்லை..பிள்ளைய சாப்பிட வைக்கிறத விட உனக்கு வேற என்ன வேலை?; உனக்கு அக்கறையில்லை..”-என ஏதோ எக்ஸிபிசனில் குழந்தையை வாங்கி வந்து மாதிரி தனக்கு சம்பந்தமில்லாதது போல் பேசும் மேல்ஷாவனிஸ அப்பாவும் நிறையவே உள்ள படித்த ஊர் இது. குழந்தைய சாப்பிட வைப்பதில் அப்பா அம்மா இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்க வேணாம்.

    குழந்தைக்கு உணவூட்டுவது என்பது அறிவியல் இல்லை. ஒரு கலை.

    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  7. #2127
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    வாழைப்பழத்தில பொட்டாசியம் இருக்கிறதென்று அக்குழந்தைக்கு தெரியாது..கார்ட்டூனில் பார்த்த பழம் சாப்பிடும் யானையும், தொலியில் வழுக்கி விழுந்த தாத்தாவும் மட்டுமே தெரியும். அந்த தாத்தா-யானையில் துவங்கி, பொட்டாசியத்தில் வந்து சேர்க்கும் வித்தையைச் செய்ய வேண்டியது பெற்றோர் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக எந்த பட்டப்படிப்பும் தொலைதூரப்படிப்பாக இந்த வித்தையை நடத்துவதும் இல்லை. தேவையெல்லாம் நிறைய அக்கறை; நிறைய பொறுமை; கொஞ்சம் மெனக்கெடல்.


    குழந்தை என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அறிவை இணையத்தில் தேடும் முன்பு, வீட்டு நல்இதயத்தில் தேடுங்கள். மருத்துவரிடம் கேட்கும் முன்பு அம்மாவிடம், மாமியாரிடம், பாட்டியிடம் கேளுங்கள். நல்ல புத்தகங்களிடம் தேடுங்கள். அதே வயசு குழந்தையை வளர்த்துவரும் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பேசுங்கள். 80% சூத்திரங்கள் இதில் கிடைத்துவிடும். நீங்கள் இதல்லாம் எளிதில் கிட்டாத சென்னை மாதிரி ஆர்டிக் அண்டார்டிகா கண்டத்தில் ஐயோ பாவமாக வசித்து வருபவராக இருந்தால், உங்களுக்கு இந்தக் கட்டுரை கொஞ்சம் உதவும்.

    rajisugu, jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  8. #2128
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    ஒன்று முதல் ஒன்றரை வயது மட்டும் தாய்ப்பால் மறுக்காமல், மறக்காமல் கொடுப்பது முதல் கடமை. 5 - 6 மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் மட்டும் போதாத போது கூடுதலாக உணவுத் தேடல் துவங்கும் போதுதான் ஒவ்வொன்றாய் குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.


    அரிசி-பாசிபருப்பு-கஞ்சி, நேந்திரபழக் கஞ்சி என துவங்கி 7-8 மாதங்களில் கீரை கடைந்த சாதம், என தொடரவும். ஒருநாள் அரிசி; மறுநாள் கேழ்வரகு; ஒருநாள் தினை என குழந்தைக்கு கஞ்சியாகவோ அல்லது குழைந்த சாதமாகவோ அறிமுகப்படுத்துங்கள். காய்கறி சூப் (நார்களை நீக்கி) 1-வயது குழந்தைக்கு கொடுத்துவாருங்கள். கொடுக்கும் போதே அந்த காய்கறி குறித்த கர்னபரம்பரைக்கதையோ, கார்ட்டூனோ சொல்லுங்கள். முடிந்தால் அந்த காய்கறி வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுங்கள். மனது ஒட்டினால், வாய் திறக்கும். ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கிறான்; ஒரு டம்ளர் பாலாவது குடி; என பால் ஊற்றி வளர்ப்பது கெடுதி என்கிறது தற்போதைய உணவு அறிவியல். கொஞ்சம் கூடுதல் அக்கறையிலோ அல்லது சின்ன புள்ளதானே சாப்பிட்டு போறான் என சோம்பேறிகள் ரெகமன்டேஷனிலோ பிள்ளை, பிள்ளையார் மாதிரி உருண்டு திரண்டு உருவாக ஆரம்பித்தால் பாலையும் தயிரையும் கண்ணில் காட்டாதீர்கள். மழலை உடற்பருமனுக்கு தயிர்சாதமும் பாலும் உருளைகிழங்கு சிப்ஸும் சாக்லேட்டும் தான் பெருவாரியான காரணம்.



    இனிப்பு உடலை வளர்க்கும் ஒரு சுவை. வளரும் குழந்தைக்கு குறைந்த அளவில் அது நல்லதே. வெள்ளைச் சீனியாக இல்லாமல். பனை வெல்லத்தில், நாட்டு வெல்லத்தில் செய்யும் அடை பிரதமன், நேந்திரம்பழ ஜாம், அதிரசம் –போன்ற உணவுகள் அவ்வப்போது தரலாம். மில்க் சாக்லேட் அதிகம் வேண்டாம். 10வயதிற்குள்ளாக வயதுக்கு வரும் பெண்குழந்தைக்கு மில்க் சாக்லேட் காரணமாக இருக்கலாம்
    முருங்கைக் கீரை, சிறு கீரை, அரை கீரை-ஆகியன குழந்தைகட்கான கீரைத் தேர்வில் முக்கியமானவை. கேரட்டைக் காட்டிலும் முருங்கைக் கீரையில் கண்ணுக்கு தேவையான கரோட்டின் சத்து அதிகம். உருளை, சேனைக்கிழங்கு(elephant yam) உடல் எடை தேறாத குழந்தைக்கு மிக நல்லது. வாரம் இருமுறை கொஞ்சம் இஞ்சி, மிளகுத்தூள்சேர்த்து கொடுக்கவும். பழங்களில் நேந்திரம்பழம், மலைவாழை, கூழாஞ்செண்டு, மட்டி, கோழிக்கூடு –வகை வாழைப்பழங்கள் ரொம்பவே நல்லது. மாதுளை, சமீபத்தில் தேசிய உணவியல் கழகத்தால் உலக பழ தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ள, நம்ம ஊர் கொய்யா( நல்ல வேளை வழக்கம் போல் நியூசிலாந்தின் கிவி, ஸ்காண்டினேவியன் ஸ்ட்ராபெர்ரி தான் சிறப்பு என புத்திசாலி விஞ்ஞானிகள் சொல்லவில்லை), ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை 2-3 வயதிற்குள் பழக்கிவிடுவது ரொம்ப அவசியம்.



    ஒருமுறை பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமான கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக்குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல், பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கவிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது. தேவையெல்லாம் அக்கறை மட்டுமே; கலோரி கணக்கு பார்த்து, கடைசியில் தோற்றுப்போவதல்ல.


    கொழுப்பு பயம் கூடியுள்ள காலம் இது. பொய்யுக்கு பயப்படுவதை விட நெய்யுக்குப் பலருக்கும் பயம். ஆனால் குழந்தைக்கு பசு நெய்யும், தேங்காய் எண்ணெயும் ரொம்ப அவசியம். பருப்பு சாதத்தில், பாயாசத்தில் என இதனை சிறிதளவு சேர்ப்பது முக்கியம். invisible fat- கொழுப்பானது நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு தானியம் மூலமாக வந்து சேரும். அது போதாது. Poly unsaturated, mono saturated மற்றும் saturated கொழுப்பு வகைகள் சேர்ந்த கொழுப்பு கொஞ்சம் அளவில் குழந்தைக்கு கண்டிப்பாக தேவை. இதில் இருந்து பெறப்படும் essential fatty acids மூலமாகத் தான் fat soluble vitamins வகைகளை,(கண்ணைக் காக்கும் vitamin A அதில் அடக்கம்) கரைக்கும் கொழுப்பு அமிலத்தை, prostaglandins எனும் உடலுள் ஏற்படும் காயங்கள் ஆற்றுவது முதல் கான்சர் வரை வராது காக்கும் பொருளை, உருவாக்குவதும் சாத்தியம். அதனால் இரத்தக் கொழுப்பைக் கண்டு அஞ்சி, எண்ணெயின் மீது அவதூறு பரப்பவேண்டாம். அளவோடு சாப்பிட மறக்க வேண்டாம். Pre mature baby –என்றால் கண்டிப்பாக பருப்புசாதத்தில் சிறுதுளி தேங்காய் எண்ணெய் விட்டு கொடுங்கள்.


    ஆடியோ பாடியோ அல்லது “டாக்டர் மாமகிட்ட சொல்லி முருங்கைக்காய் ஊசி போடச்சொல்லவா? அல்லது செல்லமாய் நான் முருங்கைக்காய் ஊட்டவா?”, என அழகாய் பயமுறுத்தியோ, சாப்பிட வையுங்கள். எதிர்காலத் தலைமுறை எதிர்கொள்ள வேண்டிய நோய்க்கூட்ட சவால்கள் ஏராளம்.
    புஜ்ஜுகண்ணா..இதுதான் கடைசி வாய்..வாங்கிக்கோடா!” என நீங்கள் ஊட்டும் உணவுருண்டை மட்டும் தான் அந்த சவால்களைச் சமாளிக்கக்

    rajisugu, jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  9. #2129
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info




    ஆண்களைவிட, பெண்களுக்கு கொழுப்பா?

    ஆண்க*ளின் உடலில் உள்ள கொழுப்பைவிட, பெண்களின் உடலில் கொழுப்பு அதிகம். பெண்களின் உடல் எடையில்15% கொழுப்புச்சத்துதான். இது அதே வயதுடைய இளைஞர்களைவிட சுமார் இருமடங்கு அதிகம். அதனால்தான்ஆண்களைவிட பெண்கள் வெகு சீக்கிரமே எடை கூடிவிடுகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் நின்றபிறகு.கொழுப்பைக்குறைக்க தேகப் பயிற்சி அவசியம். இதனால் நன்மை செய்யும் ஹெச்.டி.எல் கொலஸ்ட்ரால் அதிகரித்து, தீங்குசெய்யும் எல்.டி.எல். மற்றும் வி.எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறையும்.
    * நெய், வறுத்த, பொரித்த உணவுகள், பாலாடை, கொழுப்பு கலந்த பால், வெண்ணெய் இவற்றை தவிர்க்கவேண்டும்.
    * அதிக அளவில் நெய், சர்க்கரை சேர்த்த பிஸ்கட், கேக் வகைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.* ஹோட்டலுக்குசென்றாலும், கொழுப்பில்லாத உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

    உடலில் கொழுப்பு குறைந்து ஸ்லிம்மாகிவிடலாம். இனி, 'உனக்கு ரொம்ப தான் கொழுப்பு' என்று பெண்களை யாரும்ஒரு பேச்சுக்குக்கூட சொல்லிவிட முடியாது பாருங்க!

    rajisugu, jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  10. #2130
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    சர்க்கரை நோயை உறுதிப்படுத்தும் பரிசோதனை






    சர்க்கரை நோயை உறுதிப்படுத்தும்
    ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை

    நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்புஅணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள்வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப்பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரைஅளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்குமேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால்,சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பானஅளவு (Normal).

    சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியானஉணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள்கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாகஉள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்- மூலம், மூன்று மாதக்காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

    rajisugu likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter