Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree4812Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2131
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    உடல் இளைக்க மோர்க்கூழ்



    உடல் இளைக்க மோர்க்கூழ்

    உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலேஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடிமோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறம் ஸ்லிம் ஆகிடுவீங்க.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு – 2 கப்
    கோதுமை மாவு – 1 கப்
    சோயா மாவு – 1/4 கப்
    தண்*ணீர் – 2 கப்
    மோர் – 2 கப்
    எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
    கடுகு – 1 டீ ஸ்பூன்
    பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் – 6
    உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    * எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து,தண்ணீ*ர் ஊற்றவும்.

    * இப்போது உப்பைப் போட்டு கொதிவந்தவுடன், அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவுமூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, கொதிவந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்தமாவைப் போட்டுக் கிளறவும்.

    * கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

    * மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித்தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    * முருங்கைக்காய் சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிகமிக ருசியாக இருக்கும்.

    * சூடாக சாப்பிட்டால் தேவாம்ருதம்தான். உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்குசாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.


    Sponsored Links
    jv_66, datchu, sumitra and 1 others like this.

    KOTHAISURESH

  2. #2132
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    68,332
    Blog Entries
    1604

    Re: Today's Medical Info

    இரத்த சோகை நீங்க பாட்டி வைத்தியம்:-

    1. ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.


    2. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

    3. பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.


    இரத்த விருத்தி


    பாற்சொரிக் கீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் இரத்த விருத்தி உண்டாக்கும்.


    இரத்தக் குறைவு


    இரத்தக் குறைவால் சிலருக்கு மயக்கம் வருவதுண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து காய வைத்து இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.


    இரத்த ஓட்டம்

    தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்.





    Last edited by Sriramajayam; 11th Sep 2014 at 03:43 PM.
    kvsuresh, jv_66, datchu and 1 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  3. #2133
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்



    அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.


    மருந்து - 1
    நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர்வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்துகுழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

    மருந்து - 2
    ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின்மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம்போட்டு வரவும்.

    உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில்அலையக்கூடாது,

    மருந்து - 3
    சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒருமொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலைஉண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

    jv_66, datchu, sumitra and 1 others like this.

    KOTHAISURESH

  4. #2134
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    வேலைக்குசெல்லும்பெண்களுக்கு...

    இன்றையநவீனயுகத்தில்ஆண்களுக்குநிகராகபெண்களும்பணிக்குச்செல்லும்நிலைவந்துள்ளது.

    போதியகல்வியறிவு, எத்தகையசெயல்களையும்திறம்படமுடிக்கும்தன்மைபெண்களுக்கும்உண்டுஎன்பதைதற்போதுதான்ஆணாதிக்கசமூகம்உணரத்தொடங்கியுள்ளது.

    பொருளாதாரசூழ்நிலையில்இன்றுஆண், பெண்இருவரும்பணிக்குச்செல்லவேண்டியநிர்ப்பந்தமும்தற்போதுஉள்ளது..

    இத்தகையசூழலில்பெண்கள்தங்கள்குடும்பத்தையும்கவனித்துவேலைக்குச்செல்லும்நிலையில்பலஉடல்ரீதியானதொந்தரவுக்குஆளாகநேரிடுகின்றனர்.

    பொதுவாகபெண்களுக்குஇயற்கையாகவேமாதவிலக்குசுழற்சியின்காரணமாகபலவகையானசத்துக்குறைபாடுகள்உண்டாகிறது. இத்தகையசத்துக்குறைபாட்டால்உடல்பலவீனமடைந்துபாதிப்படைகிறது.

    இதனால்தான்நம்முன்னோர்கள்பெண்களுக்குபருவம்எய்தியவுடன்வீட்டில்இருக்கவைத்துஉடலுக்குவலுகொடுக்கும்உணவுகளைக்கொடுத்துவந்தனர். மாதவிலக்குகாலங்களில்போதியஓய்வும்கொடுத்துவந்தனர். ஆனால், இன்றையசூழலில்பணிக்குச்செல்லும்பெண்களுக்குஓய்வுஎன்பதுகிடையாது. மேலும்உணவுதயாரித்துஅதைசாப்பிடக்கூடநேரமில்லாமல்அவசரஅவசரமாககிளம்பிபயணத்தின்போதேஉண்கின்றனர் , அல்லதுபட்டினிகிடக்கின்றனர். போதியஉணவுஉண்ணநேரமின்மை, காலந்தவறியஉணவு, அவசரஅவசரமாகஉண்ணும்நிலைஇவற்றால்பெண்களுக்குகுடலில்புண்உண்டாகிறது.

    இதனால்பித்தம்அதிகரித்துஅஜீரணம், தலைவலி, கை, கால்வலி, இடுப்பு, முதுகுவலிபோன்றவற்றைஏற்படுத்துகிறது. மேலும்உடல்அசைவில்லாமல்கணனிமுன்அதிகநேரம்அமர்ந்திருந்துவேலைபார்ப்பவர்கள்இரவுப்பணி, குறைவானதூக்கம், மனஅழுத்தம்இவைகளாலும்பெண்களின்உடல்பாதிப்படைகிறது. இத்தகையபாதிப்புகள்பின்னாளில்பெரியநோய்களாகமாறிவிடும்.


    jv_66, datchu, sumitra and 1 others like this.

    KOTHAISURESH

  5. #2135
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    இத்தகையஉடல்பிரச்சனைகளில்இருந்துவிடுபடஇவர்களுக்குஊட்டச்சத்துமிகுந்தஉணவுஅவசியத்தேவையாகும். அதற்காகஊட்டச்சத்துமாத்திரைகளைவாங்கிஉண்பதுநல்லதல்ல.அவைஉடலுக்குத்தீங்கிழைக்கக்கூடியவை.

    இவர்கள்உணவில்கீரைகள், காய்கள்அதிகம்சேர்த்துக்கொள்ளவேண்டும். சிறுநீரைஅடக்குவதுஅல்லதுசிறுநீர்கழிவதைத்தடுக்கதண்ணீர்அருந்தாமல்இருப்பதுபோன்றவற்றைதவிர்த்துநன்குநீர்அருந்தவேண்டும். முளைகட்டியபயறுவகைகளைஉணவில்சேர்த்துக்கொள்ளலாம்.

    வேலைக்குச்செல்லும்பெண்கள்ஊட்டச்சத்துமிகுந்தசூப்செய்துஅருந்தலாம்.

    மணத்தக்காளிக்கீரை - 1 கைப்பிடி
    ஆரைக்கீரை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 1 கொத்து
    கறிவேப்பிலை - 2 இணுக்கு
    சின்னவெங்காயம் - 3
    பூண்டு - 2 பல்
    இஞ்சி - 1 துண்டு
    காரட் - 1
    புதினா - சிறிதளவு
    சீரகம் - 1 ஸ்பூன்
    மிளகு - 5
    சோம்பு - 1 1/2 ஸ்பூன்
    இலவங்கப்பட்டை - 1

    இவற்றைஎடுத்துஒன்றாகச்சேர்த்துவாரம்இருமுறைசூப்செய்துஅருந்திவந்தால்உடலுக்குத்தேவையானஊட்டச்சத்துகிடைப்பதுடன்நோய்எதிர்ப்புசக்தியும்அதிகரிக்கும்.


    jv_66, datchu, sumitra and 1 others like this.

    KOTHAISURESH

  6. #2136
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,032
    Blog Entries
    18

    Re: Today's Medical Info

    Hi Kothai, wonderful information! thank you!

    kvsuresh, datchu and Sriramajayam like this.

  7. #2137
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    காலில் பித்த வெடிப்பா?
    கவலையை விடுங்கள்!
    சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

    பித்தவெடிப்பு மறைய
    காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
    தொண்டை வலிக்கு
    பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
    இருமல் தொல்லைக்கு
    தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ*ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
    கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்
    கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.
    இருமல் சளிக்கு
    தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்*ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
    கட்டிகள் உடைய
    மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
    பேன் தொல்லை நீங்க
    வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
    மேனி பளபளப்பு பெற
    ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.
    தும்மல் வராமல் இருக்க
    தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
    கரும்புள்ளி மறைய
    எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
    தொண்டை கரகரப்பு நீங்க
    அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
    கருத்தரிக்க உதவும்
    அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ*ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
    இருமல் சளி குணமாக
    சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.


    kvsuresh, jv_66 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #2138
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் பெருங்காயம்


    பெருங்காயம் உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
    பெருங்காயம் அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது.

    செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவுகிறது.

    சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    பெருங்காயத்தின் பயன்பாட்டினால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

    பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

    பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.

    இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.

    பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும்.

    அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.

    சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது.

    இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.


    kvsuresh and jv_66 like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #2139
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    வல்லாரையின் மருத்துவ பலன்கள்


    தரையில் படர்ந்து வளரும் இயல்புடைய வல்லாரை “மூளைக்கான உணவு” என அழைக்கப்படுகிறது.

    இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.

    நினைவாற்றலை அதிகரிப்பதுடன், பாக்டீரியாக்களை அழிக்கும்.

    * வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

    * சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

    * பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்த்து தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும்.

    * 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

    * தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும், திக்குவாய் குணமாகும்.



    kvsuresh, jv_66 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #2140
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    68,332
    Blog Entries
    1604

    Re: Today's Medical Info

    இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

    1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

    2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

    3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

    4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

    5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

    6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

    7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

    8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

    9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

    10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

    11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

    12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.




    Tamil Thantha Chittharkal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    Last edited by Sriramajayam; 16th Sep 2014 at 01:15 AM.
    kvsuresh and jv_66 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter