Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2141
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு :-
    ------------------------------------

    நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல.
    எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
    இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

    எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

    ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால்,
    அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
    சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.

    இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும்
    அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

    எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின்
    பெயரை வெளியிட்டிருந்தார்

    அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).

    ( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10- க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
    இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

    நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில்
    எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
    கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர்
    பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க
    வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

    அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
    மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
    அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல்
    பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

    இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள். சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

    துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம். ( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

    ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

    திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக
    இருக்குமாம்.

    மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
    குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
    அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

    தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம்,
    பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

    இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல்
    உருவாவதை தடுக்கலாமாம்.

    வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

    மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல்
    உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

    பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

    பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல்
    பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..

    இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

    # sanjana chayya



    Sponsored Links
    kvsuresh, jv_66, sumitra and 2 others like this.

  2. #2142
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  3. #2143
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    உங்களுக்கு நீரிழிவு வர வாய்ப்பு உண்டா?




    உங்களுக்கு நீரிழிவு வர வாய்ப்பு உண்டா?
    ஒரு சின்ன டெஸ்ட்

    வயது மதிப்பெண்
    35 வயதுக்குள் ------------------- 0
    35 மூதல் 49 வரை---------------10
    50 வயதுக்கு மேல்-------------- 20

    தொப்பை அளவு
    ஆண் 90-செ.மீ.க்குக் குறைவு
    - பெண் 80.செ.மீ,க்குக் குறைவு------------- 0
    ஆண் 90 முதல் 99 செ.மீ
    - பெண் - 80 முதல் 89 செ.மீ ----------------10
    ஆண் 100 செ.மீ.க்கு மேல்
    - பெண் 90 செ.மீக்கு மேல் -------------------20

    உடல் இயக்கம்
    கடும் உடற்பயிற்சி
    / கடும் உடல் உழைப்பு -------------------------0
    நடுத்தர உடற்பயிற்சி
    / நடுத்தர உடல் உழைப்பு----------------------10
    உடல் உழைப்பு மற்றும்
    உடற்பயிற்சி இல்லை------------------------- 30

    குடும்ப வரலாறு
    யாருக்கும் நீரழிவு இல்லை--------------------0
    பெற்றோரில் ஒருவருக்கு---------------------10
    பெற்றோர் இருவருக்கும்-----------------------20

    உங்கள் மதிப்பெண் 30-க்கும் கீழ் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்பு இல்லை.
    30 லிருந்து 50க்குள் இருந்தால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்புண்டு.
    60 க்கும் மேல் இருந்தால் கடுமையான வாய்ப்புள்ளது.
    வாய்ப்புள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை சற்றே மாற்றிக் கொள்ள தயாராகுங்கள்!

    jv_66, thenuraj, sumitra and 2 others like this.

    KOTHAISURESH

  4. #2144
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    ​மைதா உணவுக்கு மயங்காதீங்க!

    கோதுமையிலிருந்தும், மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த முழுகோதுமை,மாவாக அரைக்கப்படும். இந்த மாவு இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வெண்மையாக்க, 'பென்சாயில்குளோரைடு" என்ற வேதிப் பொருளும், மிருதுவாக்க 'அலாக்சன்' என்ற வேதிப் பொருளும் சேர்க்கப்படுகின்றன.அதன்பின்தான் மைதா மாவு கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
    மாவில் உள்ள புரோட்டினுடன், இந்த வேதிப் பொருட்கள் சேரும்போது, நம் கணையத்தில் உள்ள 'பீட்டா' செல்கள்அழிக்கப்பட்டு நீரழிவு நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
    பர்கர், சமோசா, கேக், பிட்சா, நூடுல்ஸ், பரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி வகைகள் என பெரும்பான்மையானஎல்லாவற்றிலுமே மைதான்தான் மூலப் பொருள்.
    இந்த உணவுகளை அடிக்கடி, அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். மேலும், ஜீரணஉறுப்புகள் படிப்படியாக செயலிழக்கும் அபாயமும் உள்ளதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.
    இனி, ரோட்டோர பரோட்டாக் கடைக்கு.... டாட்டா சொல்லிடுவீங்கதானே...

    jv_66, thenuraj, sumitra and 2 others like this.

    KOTHAISURESH

  5. #2145
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Today's Medical Info

    Thank you Kothai for giving this important information about Maida flour !


  6. #2146
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    welcome sumithra.

    thenuraj and Sriramajayam like this.

    KOTHAISURESH

  7. #2147
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ரத்த அழுத்தம், இதய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவும் புளுபெர்ரி!



    புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நீலநிறத்தில் காணப்படுகிறது. இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    இதன் தாயகமாக பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற நாடுகள் கருதப்படுகிறது. இது கொழுப்பை குறைக்க, ரத்த அழுத்தம், இதய பாதுகாப்பு, போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி:

    இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, வேறு எந்த பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

    நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழம் நீலநிறமாவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகளவு கொண்டுள்ளது. மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாகக் கூடிய நோய்களை தடுக்கிறது.

    கொழுப்பை குறைக்க:

    நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை அழகாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

    இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிறது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொப்பையைக் குறைக்கலாம்.

    இரத்த அழுத்தத்தை தடுக்க:

    இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த பழத்தின் நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134,000 பெண்கள் மற்றும் 23,000 ஆண்கள் சோதனைக்கு உட்படுத்தபட்டனர்.

    அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.

    மூளை பராமரிப்பு:

    புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் எனப்படும் சத்து மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

    புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது என்று ‘சின்சின்னாட்டி அகாடமிக் ஹெல்த் சென்டர்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    12 வாரங்களுக்கு பிறகு பழச்சாற்றை பருகினவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் திறன் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர்.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    kvsuresh, jv_66, thenuraj and 1 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2148
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


    மீண்டும் வருக..





    kvsuresh and banumurali like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2149
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    கல்லீரல் கிருமிக ளை குணப்படுத்தும் சைவ உணவுகள்!



    மனிதன் உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. இக்கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் ஆகும். இதில் ஏ, பி, சி, டி, இ என பல வகைகள் உள்ளன.

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சனையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலை பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஆகும். பொதுவாக கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் கிருமிகள் அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் கிருமிகளை கடுமையான வகை, நீடித்த கடுமையான வகை என்று இரண்டாக பிரிக்கலாம்.

    கடுமையான வகை:

    கல்லீரல் கிருமிகள் என்பது கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும்.

    மேலும் காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, தோல் மஞ்சள் நிறமடைதல், வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள்.

    நீடித்த கடுமையான வகை:

    நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் கிருமிகள் இருப்பது தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள்ளதை பொறுத்து, இந்த வகை நோயின் தீவிரம் தெரியும்.

    மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளுடன் வயிறு உப்பி இருப்பது, எடை குறைதல், ரத்தக்கசிவு, முகப்பரு, சிறுநீரக கோளாரு, வீக்கம் ஆகியவை இந்த வகைக்கான அறிகுறிகள். பொதுவான அறிகுறியாக ஜீரணப் பிரச்சனையும் ஏற்படும்.



    தடுப்பு முறைகள்:

    சீரான உணவு முறை, உடற்பயிற்சி, சரியான ஓய்வு ஆகியவையே கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும் அடிப்படையாக இருக்கும்.



    கிருமிகள் வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம். மது அருந்துவது கல்லீரலை கடுமையாக பாதிக்கும் என்பதால் குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

    கல்லீரலை பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும், மருத்துவரின் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்கு சாப்பிடக்கூடாது.

    முக்கியமாக கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகியவற்றை தானமாக அளிக்கக்கூடாது. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.

    கல்லீரல் கிருமிகள் உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. திராட்சை சாறு, கேரட் சாறு ஆகியவற்றை தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாக வெளியேறும். எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலை நோய்க்கு நல்லது.



    தினசரி சமையலில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது. சீரகப் பொடி கலந்த மோர் பருகினால் ஜீரணம் மேம்படும். கல்லீரல் கோளாறு உள்ளவர்களும், கல்லீரல் நோய் வராமல் தடுக்கவும், அதிகளவில் சமையல் எண்ணெயை பயன்படுத்தாமல் குறைந்தளவில் பயன்படுத்த வேண்டும்.

    கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர், உணவு எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி வரும். மாதுளம்பழம், துளசி இலைகளை எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து காய்ச்சி, அரை டம்ளராக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    உணவில் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் நெய், சீரகம், பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும். இவற்றை முக்கியமாக பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும்.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg   Today's  Medical Info-image.jpg   Today's  Medical Info-image.jpg   Today's  Medical Info-image.jpg  
    jv_66 and banumurali like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2150
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Today's Medical Info

    நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?


    அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…



    மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

    சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.


    சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

    இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

    மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

    மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
    உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.



    Sriramajayam and banumurali like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter