Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2151
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள் :-

    உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

    தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.

    கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை..கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

    வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.

    நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

    சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.

    அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி . நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.

    நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்





    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2152
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    கீரையில் உள்ள சத்துக்கள்.....!!

    1) வெந்தயக் கீரை :

    கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)

    2) புளிச்ச கீரை :

    இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்)

    3) முட்டைகோஸ் :

    வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.

    4) முருங்கைக் கீரை :

    வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

    5) கறிவேப்பிலை :

    வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.

    6) புதினா கீரை :

    போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.

    7) கொத்தமல்லி :

    கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.

    மணத்தக்காளி:

    இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்.



  3. #2153
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    முதுமையைத் தடுக்கும் பலாப்பழம்!




    மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை.பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது, மருத்துவ குணம் கொண்டது.

    நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

    வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-jackfruit.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2154
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை!



    வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினில் பத்து துளிகள் எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். நெஞ்சு சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.வெற்றிலையை அரைத்து வாதம், விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக கட்டினால், வீக்கமும் வலியும் குறைந்து நல்ல தீர்வு ஏற்படும். வெற்றிலைச் சாற்றோடு சமபங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து குடித்தால் சுவாச கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.

    திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய், நெஞ்சுச் சளி இருமல் குணமாகும்.பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.

    வெற்றிலைச் சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாகக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.இரவு தூங்கச் செல்லும் முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச் சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்து சேர்த்து குடித்துவர மூட்டு வலி, எலும்புவலி ஆகியன குணமாகும்.


    Selliyal




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2155
    Sriramajayam's Avatar
    Sriramajayam is online now Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் ரோஜா பூ!

    ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுடையது. ரோஜா இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. ரோஜா இதழ்களை சாப்பிட்டால் வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதியை சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும். நீர்கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.ரோஜா மொட்டுகளில் ஒரு கை அளவு எடுத்துக்கொண்டு அதை அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியான தயிரில் போட்டுக் கலக்கி, காலை வேளையில் மட்டும் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.பித்தம் காரணமாக கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி மற்றும் பித்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு,இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கலக்கி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும்.ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 150 கிராம் சுத்தமான தேனை அதில்விட்டு நன்றாக கிளறி வெயிலில் வைத்து விட வேண்டும்.தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி மாலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிடவேண்டும். காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்துவிடவேண்டும்.இதை இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிடவேண்டும். இதை தயாரிக்க சிரமமாக தோன்றினால் தமிழ் மருந்துக்கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வரவேண்டும்.ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி அந்த தண்ணீரை இறுத்து காட்டுச்சீரகத்தில் ஒரு தேக்கரண்டி அளவு அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு வந்தால் தும்மல் நிற்கும்.Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-pink-rose-flower-hd-desktop-wallpaper.jpg   Today's  Medical Info-dancing-rose.gif  
    Last edited by Sriramajayam; 19th Sep 2014 at 01:37 PM.
    kvsuresh, thenuraj and banumurali like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2156
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    சர்க்கரை வள்ளிக் கிழங்கு


    என்ன சத்துக்கள்?

    கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம்,கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம் மற்றும் விட்டமின் ஏ

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. இதிலுள்ள ஒருஎன்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்துவைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது.

    என்ன பலன்?

    இதயத்துக்கு நல்லது. இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்க்கும் ஆற்றலும் உள்ளது.100கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.

    நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிடஇதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர்பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்புமண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

    நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.


    எப்படி சாப்பிடலாம்?

    இந்தக் கிழங்கில் அதிகமான உணவுச்சத்து நிறைந்துள்ளது. இதைச் சமைப்பதும் எளிது.ஆவியில் வேக வைத்து சாப்பாட்டுடன் இணை உணவாகச் சாப்பிடலாம். இல்லை எனில்,பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்துசாப்பிடலாம்.இதன் தோலும் சாப்பிடக் கூடியதுதான். இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால்உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.

    பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் ஏ சத்து கிடைக்கும்.


    KOTHAISURESH

  7. #2157
    banumurali is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chidambaram
    Posts
    120

    Re: Today's Medical Info

    அனைத்தும் பத்திரமாக பாதுகாக்க வேண்டிய தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி !!!!

    thenuraj and Sriramajayam like this.

  8. #2158
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info



    ரத்தசோகையைத் தடுக்க*...

    ரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் ரத்தசோகை இருப்பதுதெரியவரும்.
    வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து போதல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு,எதிலும் பிடிப்பின்மை இவையே ரத்த சோகையின் குணங்கள்.
    சேர்க்கவேண்டியவை: இரும்புச் சத்து அதிகம் இருக்கும் சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை,பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளையும் சாப்பிடலாம்.
    எள், பனை வெல்லம் கலந்த உருண்டை, கம்பஞ்சோறு, வரகரிசியில் செய்த கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்த்துசாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். இதைத்தவிர, பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டியதானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பை கிரகிக்க உதவும்.
    தவிர்க்கவேண்டியவை: இரும்புச் சத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுவது வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும்மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, மாத்திரை, மருந்துகளாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.


    KOTHAISURESH

  9. #2159
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  10. #2160
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.

    முயற்சி செய்து பாருங்களேன்:

    வரக்கொத்தமல்லி --அரை கிலோ

    வெந்தயம் ---கால் கிலோ
    தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

    இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

    இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

    ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

    சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.



    kvsuresh likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter