Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2161
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை இரசம்..!

    "கிரேக்கத்துல "கடவுளின் பானம்"னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!". திராட்சை இரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

    * இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

    * இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

    * திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

    * ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை "டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

    * "ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

    * பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.

    ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!



    Sponsored Links
    kvsuresh, jv_66, kkmathy and 2 others like this.

  2. #2162
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    சர்க்கரை நோயாளிகள், பழங்கள் சாப்பிடலாமா?

    'பழங்கள் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லதுதான் என்றாலும் சர்க்கரை நோயாளிகள் சற்றுக் கவனத்துடன் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றில் இனிப்புச் சத்து கூடுதலாக இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் அவற்றை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. நாவல் பழம் மிகவும் நல்லது. இலந்தைப் பழமும் உங்கள் உடலுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. பழுத்த கொய்யாக்கனியைத் தவிர்த்து, காய்வெட்டாக இருக்கும் கொய்யாவைச் சாப்பிடலாம். ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக உவர்ப்புச் சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும் பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கான மருந்தைத் தவறாமல் எடுத்துக்கொண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.'


    kvsuresh, jv_66, sumitra and 1 others like this.

  3. #2163
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

    கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

    அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.

    வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...

    எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.

    உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.

    வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


    kvsuresh, jv_66 and sumitra like this.

  4. #2164
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்;

    குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

    நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.


    நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

    நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

    தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

    பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

    ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

    நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

    நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

    நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

    நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

    நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

    முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

    மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

    ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

    இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

    மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

    ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

    நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

    நமது மூளை 80% நீரால் ஆனது.

    நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

    நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

    மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

    பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

    மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

    மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

    கண்கள் 31 நிமிடங்கள்

    மூளை 10 நிமிடங்கள்

    கால்கள் 4 மணி நேரம்

    தசைகள் 5 நாட்கள்

    இதயம் சில நிமிடங்கள்



    kvsuresh, jv_66 and sumitra like this.

  5. #2165
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்

    பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

    சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு
    கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.

    ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.

    அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!

    அடிக்கடி சிறுநீர் கழித்தல்

    சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

    அதீத தாகம்

    சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

    மங்கலான கண் பார்வை

    அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.

    எடை குறைதல்

    இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

    சோர்வு

    சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

    கைகள் மரத்துப் போதல்

    இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

    சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும்

    இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

    சரும வறட்சி

    புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.


    எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்

    நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

    வீக்கமடைந்த ஈறுகள்

    கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.



    kvsuresh, jv_66 and sumitra like this.

  6. #2166
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    கண்களையும் கவனியுங்கள்.....!!

    நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும்.

    கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.


    அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.

    கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

    நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம்.

    ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.



    kvsuresh, jv_66 and sumitra like this.

  7. #2167
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    இரத்த நாளத்தை சீர்படுத்தும் தாமரை மலர் !!

    செந்தாமரை, வெண்தாமரை என தாமரையில் பல வகைகள் உண்டு. தாமரையை அதன் அழகு மலர்களுக்காக மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். அதன் மருத்துவ பயன் பலருக்கு தெரியாது. தாமரையின் மலர்கள் தான் பெரும்பாலும் மருத்துவ நோக்கில் அதிகமாக பயன்படுகிறது-.

    தாமரை மலரின் பொதுக்குணம் உடல் சூட்டை தணிப்பது தான். மற்றும் இரத்த நாளத்தையும் இது ஒழுங்குபடுத்தும் இயல்புடையது. வெண்தாமரை மலரைவிடச் செந்தாமரை மலருக்கு அதிகப்படியான மருத்துவச் சிறப்புகள் உண்டு. இது இதய நோய்க்கு நல்ல மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது-. செந்தாமரை மலரை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு மண்பாண்டத்தில் ஆறு லிட்டர் அளவுக்குச் சுத்தமான நீர்விட்டு ஓர் இரவு முழுவதும் ஊறிக்கொண்டிருக்கச் செய்ய வேண்டும். மறுநாள் நன்றாக காய்ச்சி வடிகட்டி கண்ணாடி போன்ற பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நீரில் ஓரு அவுன்ஸ் அளவு எடுத்து அத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் படிப்படியாக குறைந்து முற்றுமாக அகன்று விடும். உடலின் உள்புண்களுக்கும் வெளிப்புண்களுக்கும் இது சிறந்த மருந்தாக உபயோகப்படும்.

    வறட்சி காரணமாகத் தோன்றும் இருமலுக்கும் இது நல்லது. பித்த தலைவலியையும் இது அகற்றும். இதனை நாள்பட சாப்பிட வேண்டும். இரண்டொரு வேளையோடு நிறுத்திக்கொண்டால் முழுக்குணம் தெரியாது. வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

    செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21நாட்களுக்கு குடித்து வர இருதய நோய் குணமடையும்.


    kvsuresh, jv_66 and sumitra like this.

  8. #2168
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    ஆயில் புல்லிங்






    ஆயில்புல்லிங்எனப்படும்எண்ணெய்மருத்துவம்இப்பொழுதுஅநேகஇடங்களில்பிரபலமடைந்துவருகிறது.எண்ணெயைவாயில்விட்டுசாதாரணமாககொப்பளிப்பதுதானேஎன்றுஅலட்சியமாகஇல்லாமல்தொடர்ந்துஆயில்புல்லிங்எடுத்துக்கொள்பவர்களுக்குஅனைத்துநோய்களும்தீரும்என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளது

    இன்றைக்குபிரபலமாகிக்கொண்டுவரும்ஆயில்புல்லிங்கைநூற்றாண்டுகளுக்குமுன்பேநம்முன்னோர்கள்கண்டுபிடித்துபின்பற்றியுள்ளனர். இதுஅனைத்துநோய்களுக்கும்பாதுகாப்பானஎளியமருத்துவமுறையாகஇருந்துள்ளது. பல்வகையானநுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும்நமதுவாய்தான்நாற்றங்காலாகிநமக்குதீமைசெய்கிறது. இந்தஎண்ணெய்கொப்பளிப்பு, அத்தகையதீய, கொடியகிருமிகளையும்நுண்ணுயிரிகளையும்அழித்துஅதன்மூலமாகஉடலில்நஞ்சுகலந்தவேதியியல்பொருட்களைவெளியேற்றுகிறது. இதனால்நமதுஉடலில்உள்ளஒவ்வொருஅணுக்களும்புத்துணர்வுபெறுகிறது.

    ஆயில்புல்லிங்எடுத்துக்கொள்வதுபற்றிதெலுங்குநாளிதழானஆந்திரஜோதியில்ஒவ்வொருவாரமும்ஞாயிற்றுக்கிழமைஆய்வுநடத்தப்பட்டது. மூன்றுவருடங்களாக 1041 நபர்களிடம்நடத்தப்பட்டஆய்வில் 927நபர்களுக்குநோய்குணமானதுதெரியவந்தது. 758 நபர்களுக்குகழுத்துமற்றும்உடல்வலிகுணமாகியது. அலர்ஜிமற்றும்ஆஸ்துமாநோய்கள் 191 பேருக்குசரியானது.

    தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்டநோய்கள்குணமடைந்ததாகதெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய்,சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம்,நரம்புதொடர்பானநோய்கள்குணமடைந்ததாகசர்வேயில்தெரிவித்திருந்தனர்.


    jv_66, thenuraj and sumitra like this.

    KOTHAISURESH

  9. #2169
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    உட*ம்பு இளை*க்க இ*ஞ்**சி சாறு


    உட*ம்பு இளை*க்க *ஞ்**சி சாறு

    இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

    இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

    இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

    இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும்.சுறு சுறுப்பு ஏற்படும்.

    இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

    காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல்தீரும். உடம்பு இளமை பெறும்.

    பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலைஇரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.




    jv_66, thenuraj and sumitra like this.

    KOTHAISURESH

  10. #2170
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    கவனம்... கணினி... "கண்"மணி


    கவனம்... கணினி... "கண்"மணி

    கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' பாதிப்பு ஏற்படும். கண்ணில் எரிச்சல்,அரிப்பு, நீர் வடிதல், காய்ந்து போதல், கண்ணைச் சுற்றி வீக்கம், இறுக்கமாக இருப்பது இவையெல்லாம் அறிகுறி.இதற்கு முக்கிய காரணம்... கண் சிமிட்டுவது குறைவதுதான்.
    இதனால், கண்ணீர் சுரப்பு குறைந்து, கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. கண் திறந்தே இருப்பதால், சுரக்கும்கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகிவிடுகிறது.
    ஒரு மனிதன் நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் நேரம் போக, ஒருநாளைக்கு சுமார் 10,080 முறை.. கண் சிமிட்ட வேண்டும்.
    * மானிட்டர் மீது வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதைக் குறைக்க, மானிட்டரின்மீது ஸ்பெஷன்கண்ணாடி மாட்டிக் கொள்ளலாம்.
    * உங்களுக்கு மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்கவேண்டும்.
    * ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு, பிறகு எழுந்து கண்ணை நன்றாகக்கழுவிவிட்டு, திரும்பவும் வேலையை தொடங்குங்கள்.
    * இடை இடையே மானிட்டரிலிருந்து கண்ணை திருப்பி, அருகில் ஜன்னல் வழியாக வெளியே ஒரு முறைபார்த்துவிட்டு, மறுபடியும் வேலையில் ஈடுபடுங்கள்.
    * எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்வதன் மூலம் கண்ணுக்கு அதிக* அசதி, சோர்வை தவிர்க்கலாம்.

    (இதைப் படிக்கும்போதே... அட்லீஸ்ட் 24 முறையாவது கண் சிமிட்டினீர்கள் என்றால், 'விஷன் சின்ட்ரோம்' பயம்தேவையில்லை)






    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter