Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2171
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Today's Medical Info

    Hi Kothai, Wonderful information! thank you!


    Sponsored Links
    thenuraj likes this.

  2. #2172
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    தண்ணீர்... தண்ணீர்!




    ”நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். இந்த உலகின் அத்தனை சீவராசிகளுக்கும் அடிப்படை வாழ்வாதாரம் நீர். நீர் தான் முதல் தலையாய உணவும் கூட. உலகின் 70% இடத்தை ஆக்ரமித்திருக்கும் தண்ணீரை தவிர்த்து எந்த ஒரு செயல்பாட்டையும் கற்பனை செய்வது கூட கடினம். நம் உடலின் நலவாழ்வுக்கு மிக அடிப்படை தேவையும் சரியான அளவிலான தண்ணீர்தான். சராசரியாக 3-4 லிட்டர் தண்ணீர் ஒரு நல்ல உடலுக்கு அவசியம் தேவை. நம் உடல் எடை, உருவ அமைப்பு, தட்பவெப்பம், பணியிடம் பொறுத்து இந்த அளவு கொஞ்சம் மாறாலாம். நம் உடலின் நீரளவு 2% மேல் குறைய துவங்கினாலே மயக்கம் தலை சுற்றல் என பாதிப்பைத் தரும்.ஆதலால், அப்புறமாய் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் என தாக உணர்வை தவிர்ப்பது, “அட! நான் எங்க இருக்கிறேன்? எல்லாரும் ஏன் என்னைச் சுற்றி இருக்கிறார்கள்? முகத்தில ஏன் தண்ணீர்?” என வசனம் பேசும் காட்சிக்கு
    நம்மை கொண்டுவந்து விடக் கூடும்.


    ’எந்த தண்ணீர் உடலுக்கு நல்லது? என்ற அக்கறையில் துவங்கி, ’நான் பாட்டில்-வாட்டர்ல தான் முகம் கழுவி வாய் கொப்பளிப்பேன். வில்லேஜ் தண்ணீர் ஒத்துக்குமா? என்ற அதிகப்பிரசங்கி முன்ஜாக்கிரதைகள் வரை தண்ணீர் வீட்டிலும் நாட்டிலும் அரசியலுக்கும் அடித்தளமாய் இருப்பதறிவோம். விவசாயம் பெருக பெருக நல்ல தண்ணீருக்கான தேவையும் கூடியதில், தற்போது கிட்டத்தட்ட உலகில் உள்ள நல்ல தண்ணீரில் 70% அளவு விவசாயத்திற்கு மட்டுமே தேவைப்படுகிறதாம். பசுஞ்சாணியும் வேப்பம் புண்ணாக்கும் கோமேயமும் ஊற்றி விவசாயம் செய்த போது தேவைப்பட்டதைக் காட்டிலும் இந்த ’நட்டு போல்ட்டு, வெடிகுண்டு இரசாயனம், விஷத் தெளிப்பான்கள்’ போட்டு செய்யப்படும் நவீன விவசாயத்தில் இந்த தண்ணீரின் தேவை பல மடங்கு பெருகியது. ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்.. மலையில் வாழ்வோரை எல்லாம் விரட்டி பெரிய அணைகட்டுவோம்..” என்ற மனிதநேயம் தொலைத்த வசனங்களுடன் அரசியல் வக்கிரங்கள் கூடவும் வகை செய்தது.


    jv_66, thenuraj, sumitra and 2 others like this.

    KOTHAISURESH

  3. #2173
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    தண்ணீர் நம் தலையாய உணவு. நாம் சாப்பிடும் உணவின் சாரத்தை கரைத்து அதிலுள்ள உப்பு, கனிமங்களில், தாவர சத்துக்கள், பலவற்றைக் கரைத்து குடலுறிஞ்சிகளால் உட்கிரகிக்கப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றம் பிரச்சினையின்றி சுமூகமாக நடைபெற சரியான அளவு தண்ணீர் அவசியம் தேவை. நாம் குடிக்கின்ற தண்ணீரிலுமே குறிப்பிட்ட அளவு உப்புக்களும் கனிமங்களும் உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. கல்லிடைக்குறிச்சி தாமிரபரணித் தண்ணீரும், கோவையின் சிறுவாணித் தண்ணீரும் சுவைபட இருப்பது அத்தண்ணீர் கடந்துவரும் பாதியில் கரைத்துவரும் கனிமங்களால் தான். சாக்கடையையும், சாயத்தையும்..கண்ட கண்ட இராசயனங்களையும் ஆற்றிலும் மண்ணிலும் இஷ்டத்திற்கு கரைத்து விடும் களவாணித்தனம் பெருகியதில் தண்ணீரின் சுவை மட்டும் மாறவில்லை. தண்ணீரினால் வரும் நோயும் பெருகியது. சுத்தமில்லாத தண்ணீரினால், வாந்தி பேதி வந்த காலம் போய், மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைப்பேறும், புற்று நோயும் கூட வர ஆரம்பித்திருப்பதுதான் வேதனை.


    நல்ல தண்ணீரைத் தேர்ந்தெடுப்பது நல்ல வரன் பார்த்து கல்யாணம் பண்ணுவதைக் காட்டிலும் ரொம்ப முக்கியம். தண்ணீர் குடிக்க தகுதயானதா என்பதை அறிய Total disoved salts(TDS) அளவு எவ்வளவு என்று சொவதைக் கேள்விப்படிருக்கலாம். கிட்ட்த்தட்ட 100-120 TDS அளவு இருந்தால் அது சுவைபட குடிக்கத்தகுதியானதாக இருக்கும். TDS அளவு குறைய குறைய சுத்தமாய் சுவையே இல்லாத தண்ணீராகிவிடும் (அதில் எந்த உப்பும் இல்லை என்பதால்). TDS அளவு ரொம்ப கூட கூட உடலுக்கு கேடு விளைவிக்கும் தண்ணீராகிவிடும். தொழிற்சாலை கழிவுகளால், இந்த தண்ணீரின் TDS அளவு மாறுபடுவது தான் உடலுக்கு கேட்டை தருகிறது.அதல்லாம் நாங்க ”சுடவச்சு ஆற வச்சு” குடிக்க்றோமுல்ல..” என்பவருக்கு ஒரு சேதி! சுட வச்சு ஆறவைத்தால், பாக்டீரியா வைரஸ் போகும்; வாந்தி பேதி வ்ராது! ஆனால் இந்த உப்பு-கனிமக் கூட்டணி அதிகமிருந்தால் இந்த சுட ஆறவைக்கும் சாங்கியங்கள் கறிக்குதவாது! அதனால் மினரல் வாட்டரோ, ’ரிவர்ஸ் ஆச்மாஸிஸ்’ செய்த குடி தண்ணீரோ வாங்கி உபயோகிப்பதோடு நின்று விடாமல், உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீரை நாசப்படுத்துவதைக் கண்டிக்கத் தவறவும் கூடாது.



    jv_66, thenuraj, sumitra and 2 others like this.

    KOTHAISURESH

  4. #2174
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    காலை எழுந்ததும் பல்துலக்கிவிட்டு 4-5 குவளை குளிர்ந்த (பிரிட்ஜில் வைத்ததல்ல..) நீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அதேபோல் உணவு சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் 10-15 நிமிடங்கள் தண்ணீர் சாப்பிடுவது நல்லதல்ல என்ற கருத்தும் பெருகி வருகிறது. அதற்காக விக்கல் வரும்போதும் ”இன்னும் 10 மினிட்ஸ் பொறுப்போம்”, என இருப்பது ஐசியு-க்கு அழைத்துப் போய்விடும். ஒவ்வொரு கவளத்திற்கும் நடுவில் தண்ணீரை ’சிப்’ செய்து சாப்பிடுவது நல்லதல்ல. ‘இடையில் குடியாதே; கடையில் மறவாதே’, என்ற வழக்குமொழி தண்ணீரைச் சாப்பிடுகையில் எப்போது அருந்த வேண்டும் என்பதற்காக சொன்னது தான். சாப்பிடும் போது இடைஇடையே தண்ணிர் அதிகமருந்தினால் உணவுக்கூழை உடலில் செரிக்க வைக்கும் நொதிகள் நீர்த்துப்போய், செரிமனம் கெடும். சில நேரங்களில் வேகமாய் சர்க்கரை உடலில் ஏறவும் செய்து விடும்.


    ஆனால் உணவில் நீர்சத்துள்ள தக்காளி, சுரைக்காய், வெள்ளைப்பூசணி, வெள்ளரி, பீர்க்கு, புடலை, போன்ற காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். குறிப்பாய் அதிகம் வியர்க்கும் நம் மாநிலத்தில் இந்த தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கள் நிறைய தேவை. கிரணிப்பழம், தர்ப்பூசணிப்பழம், ஆரஞ்சு, போன்ற பழங்களும் அப்படித்தான். பழங்களில் நீரும் நாரும் பல்வேறு சத்துக்களும் அதிகமிருப்பதால் தான் அதற்கு உணவில் முதலிடம் தர அதிகம் வலியுறுத்தப்படுகிறது.


    நல்ல சுத்தமான சரியான ’டிடிஸ்’ அளவுள்ள தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து பாத்திரங்களில் சேமித்து அருந்துவது நல்லது. பிளஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை சேமித்து வைத்து அருந்துவது நல்லதல்ல. சில வகை பிளாஸ்டிக்குகள் அதில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில் செய்யும் போது பயன்படுத்தப்படும் ரசாயனத்தை மிக நுண்ணிய அளவு அதில் கலக்கின்றன எனும் செய்திகள் பல வருகின்றன. அவை உடலுக்கு கேடு என்றும் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன. ஆதலால் முடிந்த வரை பிளாஸ்டிக் பாட்டிலைத் தவிர்ப்பதும் கூட நல்லது தான்.


    தினசரி காலையில் நீரருந்துவது போல, இரவில் படுக்கும் போது வெதுவதுப்பான நீர் 2-3 குவளை அருந்துவதும் மிக மிக நல்லது. இரத்தக் கொதிப்பு, மதுமேகம், மலச்சிக்கல், அசீரணமுடன் கூடிய வயிற்றுப்புண் எல்லாம் நன்றாகக் கட்டுப்பட இந்த தண்ணீரின் மீதான அக்கறை உதவிடும்.


    மொத்தத்தில் தண்ணீர் உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை. சுத்தமான பாதுகப்பான தண்ணீரை தேடி, அதை சரியான அளவில் தினசரி அருந்துவதும், நம் வருங்கால சந்ததியரின் நல்வாழ்விற்காக, நம் சுற்றுப்புறத்து தண்ணீரை கேடடையச் செய்யாமல் இருப்பதும் நம் கடமை

    jv_66, thenuraj, sumitra and 2 others like this.

    KOTHAISURESH

  5. #2175
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    முதுகுவலி வராமல் தடுக்க…!






    முதுகுவலி வராமல் தடுக்க…!

    1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

    2.
    தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

    3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில்உறங்கவும்.

    4.
    நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறுமாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

    5.
    கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனதுமுழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

    6.
    அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

    7.
    அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

    8.
    அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

    9.
    முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்குஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

    கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை)அணுகவும்.

    1.
    தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

    2.
    வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை(அல்லது) எரிச்சல்.

    3.
    குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

    4.
    நீண்ட நேரம் நின்றால், அமர்ந்தால் முதுகுவலி வருவது.




    jv_66, thenuraj, sumitra and 2 others like this.

    KOTHAISURESH

  6. #2176
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு






    வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு

    நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி,வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக்குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும்.
    இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக, இதுதொற்று நோய் அல்ல.

    காரணங்கள்:
    உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு வயிற்றில் உள்ள கிருமிகள் நாட்பட்டவயிற்றுக் கோளாறுகள் ஹார்மோன் பாதிப்பு
    மன அழுத்தம் நோய்வாய்ப்பட்ட நிலை அமீபியாசிஸ்

    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
    கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
    காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்துசாப்பிடலாம்.
    நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
    அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
    அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
    வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
    அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர்அருந்தலாம்.
    அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
    வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
    தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன்உண்ணலாம்.
    கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
    வெளிப்பிரயோகம்:
    கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
    கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
    கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்காய்ச்சிப் பூசலாம்.
    துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
    முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
    மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
    காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
    சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
    மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரைகாய்ச்சிப் பின் பூசலாம்.
    செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
    சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
    சேர்க்க வேண்டியவை:
    பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி,பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
    தவிர்க்க வேண்டியவை:
    காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள்,பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்





    KOTHAISURESH

  7. #2177
    Kiruthi.K is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    pondicherry
    Posts
    3

    Re: Today's Medical Info

    very nice tips really super..

    sumitra and Sriramajayam like this.

  8. #2178
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Today's Medical Info

    Really very much useful tips! thank you!

    Sriramajayam likes this.

  9. #2179
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Today's Medical Info

    Very useful tips.Thank u.

    Sriramajayam likes this.

  10. #2180
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    இயற்கைக் குளியல்
    -----------------------------

    நீங்கள் எந்த நீரில் குளிக்கிறீர்களோ, அந்த நீரில் 3 முறை வாய்கொப்பளித்து துப்பிவிட்டு, சிறிது தண்ணீரை குடித்துவிட்டு குளித்தால் ஜலதோசம், தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. அடிக்கடி நீர் மாற்றி குளிப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மிகுந்த பயனடைவார்கள்.

    மழையில் நனைபவர்கள் நனைந்து கொண்டே சுமார் இருபது துளி மழைநீரை குடித்துவிட்டால் போதும். மழையில் நனைவதால் ஏற்படும் எந்த பாதிப்பும் இருக்காது.!

    வெயில் காலத்தில் தினமும் இரண்டு, மூன்று முறை குளிப்பவர்கள் இந்த முறையை பின்பற்ற எந்த நோயும் அணுகாது தப்பலாம்




    Chitthar Maiyam


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-graphics-competitive-swimming-531557.gif  
    saidevi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter