Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2251
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Today's Medical Info

    Quote Originally Posted by priyamuthu View Post
    Hi frnd ,

    I suffer from moth ulcer (vaai pun)very often .please suggest me home remedies

    ஹாய் ப்ரியா ,

    வாய்ப்புண்ணிற்கு , மணத்தக்காளி கீரை ஒரு அருமருந்து .

    இதை நன்றாகக் கழுவி , அப்படியே சாப்பிடவும் செய்யலாம் . அல்லது கீரையாக சமைத்தும் சாப்பிடலாம் .

    அடிக்கடி இதை சாப்பிட்டு வரவும் .

    ஒருவேளை , உடம்பு சூடு அதிகமாக இருந்தால் கூட வாய்ப்புண் வரும் .

    அதற்கு , இந்தக் கீரையும் சாப்பிடலாம் . கூடவே , vitamin B complex capsule சில நாட்களுக்காவது சாப்பிட்டால் உடனே குணம் தெரியும் .


    Sponsored Links
    Jayanthy





  2. #2252
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    வேலிப்பருத்தி





    வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

    இதன் இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும்

    இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்கு வதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.

    இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.

    நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

    பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.
    குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.

    கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.

    இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
    இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.


    கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும். அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி
    என்ற உத்தாமணியும் ஒன்று.





    • உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும். வேலி ஓரங்களில் கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர். இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும்.
    • இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.
    • உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.
    • வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால், கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும். இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார். வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும். மேலும் உடல் அசதியைப் போக்கும். நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும். நெஞ்சுலி குறையும்.
    • சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள். இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், அருகம்புல் பொடி 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.
    • குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள். இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
    • உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.
    • உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.
    • உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.
    • பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.
    • சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.


    • காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.


    • இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.
    • இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.
    • இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
    • இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
    • 5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
    • உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.
    • தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.
    • இந்த இலையையும் , கருஞ் சீரகத்தையும் , நொச்சி இலையையும் எடுத்து நல்லெண்ணையில் பதமுடன் காய்ச்சி சனிக்கிழமையன்று ஆண்களும் வெள்ளிகே கிழமையன்று பெண்களும் தலையில் தேய்த்து என்னை முழுக்கு செய்தால் தலை சம்பந்தப்பட்ட ஒற்றை தலைவலி, இரட்டை தலைவலி , மற்றும் தலை பாரம் ஆகியவை தீரும்




    jv_66, Sriramajayam and fatima15 like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #2253
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..

    1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

    2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

    3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

    4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

    5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

    6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

    7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

    8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

    9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

    10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.....


    FB


    jv_66, datchu, fatima15 and 1 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2254
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    இலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள்


    அருகம்புல் சாறு: அருகம்புல் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு வாழைப் பழகங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக் கொள்ள வேண்டும். எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதிதாக க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்குப் புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சத்துக்களை அளிக்கிறது. இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்.

    துளசி இலைச்சாறு : காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது.

    தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.

    மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு : உடல் தங்கம் நிறமைடயும், கண்கள் நல்ல பார்வை பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து அறிவு தெளிவு ஏற்படும்.காமாலை தீரும், மலச்சிக்கல் நீங்கும்.

    பொன்னாங்கண்ணி இலைச்சாறு: உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும், கண்ணொளி அதிகரிக்கும் வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.

    வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும், தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இதயம் வலுவாகும்.

    வில்வ இலைச்சாறு: காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும், காலாரா குறையும்.

    முசுமுசுக்கை இலைச்சாறு: தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.

    புதினா இலைச்சாறு: வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.

    நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும், நன்கு பசிக்கும், இதய நோய்கள் குறையும், நீரழிவு நோய் குறையும், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.

    வாழைத்தண்டுச் சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், இரத்த அழுத்தம் குறையும், தொந்தி குறையும், அமிலத்தை குறைக்கும், உடல், கை, கால் வீக்கம் குறையும், பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும், இரத்தம் சுத்தமாகும்.

    சாம்பல் பூசணிக்காய் சாறு: பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.
    கேரட் சாறு கண்பார்வை ஒளி பெறும், கண்நோய்கள், பல்நோய்கள் குறையும், அமிலத்தைக் குறைக்கும்.

    அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல் சூடு, கர்ப்பப்பை நோய்கள் குறையும், காம உணர்வுகளைத் தூண்டச் செய்யும்.

    பூவரசு இலைச்சாறு: காலரா, தொழுநோய், தோல் நோய்கள் குறையும்.

    கொத்தமல்லிசாறு: பசியைத் தூண்டும், பித்தம் குறையும், வாத நோய் குறையும், காய்ச்சல் குறையும், மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.

    jv_66 and Sriramajayam like this.

  5. #2255
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    கீரைகள்

    சில தாவரங்களின் இலைப்பகுதியை நாம் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இவற்றை தாம் “கீரைகள்” என்று கூறுவர். கீரைகள் பொதுவாக அனைவரும் சாப்பிடும் உணவு ஆகும். இருப்பினும் அதை சரியாக எடுக்காமலும் இருக்கின்றனர். தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் நம்மை நெருங்காது. உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. கண்களுக்கு மிகவும் சிறந்தது. எல்லா விதமான கீரைகளிலும் ஒவ்வொறு விதமான மருத்துவ குணங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

    கீரைகளின் மருத்துவ குணங்கள்:

    வெந்தயக்கீரை:

    வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
    இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

    முருங்கைக்கீரை:

    இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும்.

    இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.

    அரைக்கீரை:

    அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.

    இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    சிறுகீரை:

    உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும்.
    இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.

    அகத்திக்கீரை:

    இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது.

    இரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏதேனும் விஷம் இருந்தால் அதை முறிக்கும் திறன் வாய்ந்தது. குடற்புழுக்களை அழிக்கும்.

    அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். அளவாக சாப்பிட்டு வளம் பெறுவோம்.

    மணத்தக்காளி கீரை:

    இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.

    இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.

    பாலக்கீரை:

    இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும்.

    இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.

    புளிச்சக்கீரை:

    இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.

    பசலைக்கீரை:

    இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.

    இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.

    கீரைகளின் மருத்துவ குணங்களை அறிந்து சரியான முறையில் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

    jv_66 and Sriramajayam like this.

  6. #2256
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    முளைக்கீரை
    மருத்துவக் குணங்கள்:

    1. முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவும், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடப்பட்ட நிலங்களிலும், தாரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.
    2. முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத் தண்டுக்கீரை எனவும் குறிப்பிடப்படுகிறது.
    3. முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை. அதற்கு மேல் விட்டால் அந்தக் கீரையானது முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். இளங்கீரைகளையே பிடுங்கிப் பயன்படுத்த வேண்டும். தண்டுக் கீரையோயெனில் ஒரு நீண்ட நாள் பயிர். இது ஆறுமாத கீரை என அழைக்கப்பட்டாலும் 100-120 நாட்களுக்கு வளர்க்கலாம்.
    4. 100 நாட்களுக்கு மேல் ஆனால் கூட தண்டுக் கீரையின் தண்டு சமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். ஏறக்குறைய 100-லிருந்து 120 நாட்களுக்குட்பட்ட கீரைத் தண்டே மிகச் சிறப்புடையது. இக்கீரைத்தண்டு முளைக் கீரையைப் போல் வேகமாக வளராது. இளந்தண்டுகளில் அதிகக் கீரை இருக்காது.
    5. செழிப்பான மண்ணில் வளரும் போது தண்டுகள் சிறிது கூட நார் இல்லாமல் சுவையாக இருக்கும். தண்டுக் கீரையின் இளங்கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அது நன்கு வளர்ந்தபின் பயன்படுத்தினால் தான் அதிகளவு சாப்பிடக்கூடிய தண்டு இலை முதலியன கிடைக்கும்.
    6. எனவே தண்டுக் கீரையை நன்கு வளர்ந்தபின் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் முளைக்கீரையோயெனில் முதிராமல் இளமையிலேயே அதாவது ஏறக்குறைய 45 நாட்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்.
    7. முளைக்கீரைக்கு இளங்கீரை என்ற மற்ற பெயரும் உண்டு. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். முளைக் கீரையை மற்றப் பருப்பு வகைகளுடன் சேர்த்துக் கூட்டாகவும், மசியலாகவும் செய்துண்ணலாம். இதனைப் பொறியல் செய்து சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்து உண்ண மிகச் சுவையாக இருக்கும்.
    8. இக்கீரையில் உண்ணும் தகுதிபெற்ற பகுதி முழுச் செடியில் 39 விழுக்காடு ஆகும். முளைக்கீரையில் 85.7 விழுக்காடு நீரும், 4 விழுக்காடு புரதச்சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 2.7 விழுக்காடு தாதுப்புக்களும், ஒரு விழுக்காடு நார்ச் சத்தும், 6.3 விழுக்காடு மாவுச் சத்தும் நிறைந்துள்ளன.
    9. இக்கீரை 46 கலோரி சக்தியைக் கொடுக்கக் கூடியது. நூறு கிராம் கீரையில் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச் சத்தும்எ 61 மில்லி கிராம் கந்தகச் சத்தும், 88 மில்லி கிராம் குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது.
    10. இக்கீரை ஒன்றே எல்லாவிதமான தாதுப்புக்களையும் தன்னுள் அடக்கியுள்ளது என்பது தெள்ளத் தெளிந்த உண்மையாகும். இதனை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் ஒரு பூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் கொடுக்கக் கூடியது.
    11. இக்கீரையுள் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தி செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மற்றும் இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுச் சத்தாகும். எலும்பினுள்ளே அமைந்துள்ள ஊண் அல்லது ‘மேதஸ்’ என்னும் மூளை வளர்ச்சிக்கு இம்முளைக் கீரையில் அமைந்துள்ள மணிச்சத்து பெரிதும் உதவுகின்றது.
    12. முளைக்கீரை விதை, நன்கு உரமுள்ள நிலத்தில் நெருக்கமில்லாதபடி விதைத்து மேலே சிறிது மணலைத் தூவிவிடுதல் வேண்டும்.
    13. இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகளின் மேல் வைக்கோலைப் போட்டு மூடி அதன் மீது பூவாளியைக் கொண்டு தண்ணீர் தெளிப்பது நல்லது. விதை விதைத்த உடனேயே தண்ணீர் தெளிப்பது மிகவும் முக்கியம். மூன்று நாட்களுக்குப் பிறகு மேலே மூடப்பட்ட வைக்கோலை நீக்கிவிட வேண்டும். நான்காம் நாள் விதைகள் நன்கு முளைத்துவிடும். முளைத்துவந்த செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் விடக்கூடாது.
    14. விதைக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மழையில்லாமலிருப்பது நல்லது. அவ்வாறு மழை பெய்தால் முளைத்த கீரையெல்லாம் அழுகிக்கெட்டுப்போய் விடும். பதினைந்து நாட்கள் ஆன பிறகு வேண்டிய கீரைகளை அவ்வப்போது நெருக்கம் கலையும்படியாகச் சிறது சிறிதாகப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். களைகளை அகற்றி போதியளவு நீர்பாய்ச்சி வந்தால் 4 வாரத்திலிருந்தே கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தத்தக்க நிலையை அடையும். 6 வாரத்தில் எல்லாக் கீரைகளையும் பறித்து விடலாம்.
    15. உணவுக்காக கீரையைப் பறிக்கும் பொழுது கீரை பூக்குமுன் பறித்துவிடுதல் நல்லது. அப்போதுதான் கீரையின் தண்டு நார் இன்றி மென்மையாக இருக்கும். செடி பூத்துவிட்டால் தண்டுப் பாகம் முதிர்ந்து நார் பாய்ந்துவிடும். அடைமழை பெய்யும் காலம் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் இக்கீரையைப் பயிர் செய்யலாம்.
    16. சிறுசிறு பாத்திகளில் ஆண்டு முழுவதும் பயிரிட்டுக்கொண்டே வரலாம். காலத்தே பறித்த முளைக்கீரையும் அதன் தண்டும் நாவுக்கு உருசியும், உடலுக்கு வலுவும் தருவதால் வீட்டுத் தோட்டத்தில் இக்கீரையைப் பயிரிட்டுப் பயன்பெறுவது சிறந்ததாகும்.
    17. முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது.
    18. இக்கீரையை நன்கு ஆய்ந்து அலம்பிச் சுத்தப்படுத்தி பாத்திரத்திலிட்டு சிறிது அரிந்த வெங்காயத்துடன் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும்.
    19. சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை யாவரும் உண்ணலாம். முளைக்கீரை வீட்டுத் தோட்டம் முதல் எல்லா வகை நிலங்களிலும் பயிரிடலாம்.
    20. வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    21. சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.
    22. கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.
    23. முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளரவிட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.
    24. நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
    25. முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
    26. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.
    27. இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.


    jv_66 and Sriramajayam like this.

  7. #2257
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வயிற்றுப்புண்,
    மலச்சிக்கல் போக்கும் திராட்சை!

    திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.

    அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.

    மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும்.

    எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது.


    Vikatan


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2258
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    வயிற்று வலி நீக்கும் முருங்கைச் சாறு

    பப்பாளிப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

    # வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சளித் தொல்லை நீங்கும்.

    # வில்வ பழத்தை நாள்தோறும் சாப்பிட, பிரசவித்தப் பெண்களுக்குத் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

    # ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கு முன்பு வயிற்று வலி வருகிறதா? மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முருங்கை இலையை இடித்துப் பிழிந்து, அதன் சாற்றை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிற்று வலி வராது.

    # மூட்டு வலி, முதுகு வலி உள்ளவர்கள் தினமும் திராட்சை ரசம் அருந்துவது நல்லது.

    - எஸ். மேகலா, சென்னை.

    jv_66 and Sriramajayam like this.

  9. #2259
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    கொழுப்பைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆட்டுப்பால்!



    இதுவரை எப்போதாவது நீங்கள் ஆட்டுப் பால் குடித்துள்ளீர்களா? கடைசியாக எப்போது குடித்தீர்கள்? இந்திய தேசப் பிதா காந்தியடிகள் ஆட்டுப் பால் தான் குடித்ததாகப் படித்திருக்கிறோம்.

    ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் ஒருமுறை கூட ஆட்டுப் பால் குடித்திருக்க மாட்டோம். ஆட்டுப் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளனவாம். வயிற்று வலிக்கு சிறந்த மருந்து ஆட்டுப் பால்தானாம்.

    மேலும் பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா? தினமும் ஆட்டுப் பாலைக் குடித்து வந்தால் நம் உடல் வலுவாகும். பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்பதற்கான சில காரணங்களை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

    பசும் பால் குடிக்கும் சிலருக்கு வாயுத் தொல்லைகள் ஏற்படும். இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு ஆட்டுப் பால் ஒரு அருமையான மருந்தாகும். பசும் பாலை விட ஆட்டுப் பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் சிறியவை என்பதும், ஆட்டுப் பாலில் உள்ள பொட்டாசிய அமிலம்தான் இதற்குக் காரணமாகும்.

    பசும் பாலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்காக அதை மெருகேற்றுவது வழக்கம். பால் நிறுவனங்களில் இது ஒரு முக்கியப் பணியாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்சனை ஆட்டுப் பாலில் கிடையாது.

    ஆட்டுப் பாலில் இயற்கையாகவே கொழுப்பு சீரான நிலையில் இருக்கிறது. பசும் பாலில் உள்ள கேசின் என்னும் புரதம் காரணமாக சில குழந்தைகளுக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப் போக்கு, எரிச்சல் என்று கஷ்டப்படுவார்கள்.

    ஆட்டுப் பாலில் கேசின் என்னும் புரதம் மிகமிகக் குறைவாக இருப்பதால், இந்த தொல்லைகள் கிடையாது. பசும் பாலில் லாக்டோஸ் எனப்படும் பால் அதிகமாக உள்ளது.

    ஆட்டுப் பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 ஆகியவை அதிகம் உள்ளன. இது தவிர, கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் மிகுதியாக உள்ளன.

    இதனால், ஆட்டுப் பால் சாப்பிடும் போது நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆட்டுப் பாலில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதன் சுவை காரணமாகவே சிலர் அதை விரும்ப மாட்டார்கள்.

    இதற்கு மாற்றாக, அவர்கள் ஆட்டுப் பாலினால் தயார் செய்யப்பட்ட வெண்ணெய், தயிர், ஐஸ்க்ரீம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2260
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை!



    பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. தொடர்ந்து பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம் பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

    ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

    காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும். உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

    தினசரி 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு, வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடல் பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு.

    குழந்தைகளுக்கு பேரிச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து தந்தால் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு பலகீனத்தைப் போக்க பேரிச்சம் பழத்தை அதிகம் உட்கொள்வது நல்லது.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter