Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2291
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info


    அடிபட்டால் பிரச்னை இன்றி விளையாடலாம்!

    ஆர்த்ரோஸ்கோபி அண்ட் ஸ்போர்ட்ஸ் மெடிசன் பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் லியோனார்ட் பொன்ராஜ்:

    ஸ்போர்ட்ஸ் மெடிசனில் உள்ள அறுவை சிகிச்சை முறை தான், 'ஆர்த்ரோஸ்கோபி' எனப்படும் நவீன சிகிச்சை முறை. இதை, 'கீ ஹோல் ஆபரேஷன்' என்றும், மருத்துவ உலகில் அழைக்கிறோம்.என்னுடைய தந்தை, ஜார்ஜ் பாலாசிங் ஓய்வு பெற்ற நிதித்துறை அடிஷனல் செகரட்டரி. அவர் அடிக்கடி, 'நீ எம்.பி.பி.எஸ்., படித்து, எம்.எஸ்., முடித்து பாரினுக்குப் போகணும். யாரும் அதிகமாக படிக்காத அபூர்வமான ஒரு துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கணும். பயிற்சி முடிந்ததும் தமிழகத்துக்கு வந்து, ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யணும்' என்றார்.அவருடைய உந்துதலும், விளையாட்டுத் துறையின் மீது எனக்கிருந்த ஆர்வமும் தான், என்னை இந்த ஸ்போர்ட்ஸ் மெடிசன் குறித்த படிப்பை படிக்க வைத்தது.எலும்பு முறிவு மட்டுமின்றி, மூட்டினுள் ஏற்படும் எந்தக் காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவது தான் ஸ்போர்ட்ஸ் மெடிசன். அதாவது, முட்டிகளின் ஜவ்வு கிழிதல், தோள்மூட்டு இறங்கி விடுதல் போன்ற பல பிரச்னைகளை, 'எக்ஸ்-ரே' எடுத்துப் பார்த்தால், 'எந்த பிரச்னையும் இல்லை; நார்மல்' என்று காண்பிக்கும்.ஆனால், மூட்டில் அடிப்பட்ட பின் எலும்புச் சிதைவை விட வேறு மிகப் பெரிய ஆபத்தான பாதிப்பு இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும். இதை, எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு, ஆர்த்தோ டாக்டர்களை விட, ஸ்போர்ட்ஸ் மெடிசன் படித்தவர்களால் தான் இன்னும் நுட்பமாக சிகிச்சை அளிக்க முடியும்.சில விளையாட்டு வீரர்களுக்கு, மூட்டிலுள்ள, 'மினிஸ்கஸ்' என்ற ஜவ்வு கிழிந்தால், அது முட்டியை முடக்கி, அவர்களைச் செயலிழக்க வைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு, 'லாக்டு னீ' என்று பெயர்.இப்பிரச்னை வந்துவிட்டால், எழுந்து நடக்கவே முடியாது. இதே போன்ற பிரச்னை தான், பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை முடக்கிப் போட்டது. அவர், மும்பையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால், ஏழை, எளிய விளையாட்டு வீரர்கள் எங்கு போவர்? இவர்களுக்காகவே, தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக, ஆர்த்ரோஸ்கோபி சிறப்பு சிகிச்சைப் பிரிவு, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது; காயம் அடையும் வீரர்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.விளிம்பு நிலை விளையாட்டு வீரர்கள், இங்கு வந்து சிகிச்சை பெற்று, மறுபடியும் நல்ல முறையில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது, என் தந்தையின் கனவை நிறைவேற்றிய மனதிருப்தி உண்டாகிறது.



    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2292
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info

    சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

    "மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
    மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
    கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா...
    யாமலக முண்ணமுறை யால்"
    -தேரையர்.

    நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

    இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

    முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

    இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

    மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
    மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
    கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
    யாமலக முண்ணமுறை யால்

    பொருள்

    முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

    நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

    முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
    நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

    ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

    நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

    சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

    மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் சி` உள்ளது.

    100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

    நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

    நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
    ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

    ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
    நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

    எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

    இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

    மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

    வாய்ப்புண் தீர

    நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

    பித்தம் குறைய

    15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

    இரத்த கொதிப்பு நீங்க

    நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

    கண் நோய்கள் தீர

    நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

    நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.


    jv_66 likes this.

  3. #2293
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today"s Ladies Special

    தைராய்டு பிரச்னையை கவனிக்கணும்!

    'ஒபிசிட்டி'யால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வு குறித்து விளக்கும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா:

    'ஒபிசிட்டி' இந்த அளவுக்கு இன்று அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறி வரும் வாழ்க்கை முறை தான். நம் முன்னோரின் உணவுப் பழக்கங்கள், இன்று அடியோடு மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும், 'பாஸ்ட் புட்' மற்றும், 'ஜங்க் புட்'டுக்கு அடிமையாகி, உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாக பெறுகின்றனர்.

    வளரிளம் பருவத்தினரின், உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. அயோடின் குறைபாட்டால் வரக்கூடிய இது, ஆண்களை விட, பெண்களை ஏழு மடங்கு அதிகமாகத் தாக்குவதாக புள்ளி விவரம் கூறுகிறது. உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மன அழுத்தம் போன்றவை, இதற்கான அறிகுறிகள். தவிர, எந்நேரமும் துாக்கம், கொஞ்ச உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறிஇருப்பவர்கள், தைராய்டு சோதனை செய்து கொள்வது நல்லது.

    உலகம் முழுவதும்,20 கோடி பேர், தைராய்டு காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே, ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே, டெஸ்ட் எடுத்து பார்ப்பது அவசியம். தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடை குறைப்பதற்கான மற்ற முயற்சிகள், சிகிச்சைகளை தகுந்த மருத்துவ ஆலோசனைகளுடன் மேற்கொள்ளலாம்.

    மரபியல் ரீதியிலான பிரச்னைகளும், உடல் பருமனுக்கு காரணமாக உள்ளது. தைராய்டு டெஸ்ட்டின் அளவு, 4 பாயின்டை விட அதிகமாக இருந்தால், தைராய்டு குறைவாக சுரக்கிறது; தைராய்டின் அளவு, 0.5ஐ விட குறை வாக இருந்தால், தைராய்டு அதிகமாக சுரக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். உடல் எடை அதீதமாக அதிகரிப்பவர்கள், ஆறு மாதத்துக்கு ஒருமுறை, தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மிக முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு, தைராய்டு அதிகமாக சுரந்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, பல் வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் என, அனைத்துமே பாதிக்கப்படும்.

    தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், தினமும் குறைந்தது, 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண் டும். வறுத்த, பொரித்த இனிப்பு உணவுகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக, இனிப்பை குறைத்தல், இதயத்துக்கு மிக நல்லது. தைராய்டு குறைவாக சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைக்கோஸ், சோயாபீன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. கடல் மீன் வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அயோடின் உப்பை, பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்து பயன்படுத்துவது நல்லது. உப்பை திறந்து வைத்தால், அதில் உள்ள அயோடின், காற்றில் கரைந்துவிடும். முக்கியமாக, முளை கட்டியபயறு, பழச்சாறு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை, அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


    jv_66 likes this.

  4. #2294
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்

    காய்கறி வகைகளில் ஒன்றான பூசணியை தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால், நரம்பு தொடர்பான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவெட்டை, பிரமேக நோய் போன்றவை உள்ளவர்களுக்கு அவற்றின் தீவிரம் குறையும்.

    பூசணி, உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீக்கும். எப்போதும் உடல் வலி இருப்பவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் வலி நீங்கும். மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது தினசரி பூசணி சேர்த்து சமைத்த உணவைக் கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    மருத்துவத்தில் பூசணிக்காயின் சதைப் பகுதி, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைச்சுற்றலை நீக்கவும் பயன்படுகிறது. மருத்துவம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுகிறது.

    வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லி அளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயத்துக்குப் பலம் கொடுக்கும். ரத்தம் சுத்தப்படும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும்.

    உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப் புழுக்கள் வெளியேறவும், சிறுநீரக நோய்கள், ரத்தம் சுத்தப்படும்.

    பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும்.



    jv_66 likes this.

  5. #2295
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

    அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன.

    வாழைப்பழம் குடலில் சேரும் அமிலத் தன்மையைச் சமப்படுத்த வல்லது. இதனால் நெஞ்செரிச்சலிலிருந்து மாபெரும் நிவாரணத்தை தருகிறது. வாழைப் பழத்தோடு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவதால் இருமல் விரைவில் குணமாகும். பழுத்த நேந்திரம் பழமாக இருந்தால் இன்னும் விரைவில் குணம் தரும்.

    வாழைப் பழத்தோலை பாலுண்ணிகளின் மீது பழச் சதைப்பகுதியை கட்டிவைக்க நாளடைவில் சுருங்கி உதிர்ந்து விடும். கொசுக் கடியால் நமைச்சல் கண்டபோது கடிவாயில் வாழைப்பழத் தோலின் சதைப்பகுதி கொண்டு சிறிது நேரம் தேய்ப்பதால் அரிப்பு அடங்குவதோடு தடிப்பாக வீக்கம் காணுவதும் மறையும்.

    வாழைப்பழத் தோல்களை காயவைத்து எரித்துப் பொடித்து வைத்துக் கொண்டு புண்களின் மேற்பூச்சு மருந்தாகப் போடுவதால் புண்கள் விரைவில் ஆறிவிடும். வலிகண்ட இடத்தில் வாழைப்பழ தோலை சிறிது நேரம் கட்டி வைப்பதால் வலி சீக்கிரத்தில் குறைவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

    ஒரு செல்லுக்கும் இன்னொரு செல்லுக்கும் இடையே ஆன மின்சாரத் தொடர்பு அறுபடுவதோ அல்லது தடைபடுவதோ தான் வலிக்குக் காரணம் என்றும் வாழைப்பழத் தோலை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டுவதால் துண்டிக்கப்பட்ட தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வலி குறைகிறது.

    வாழைப்பழத் தோலை தோல் நோய் மற்றும் ரத்தக் கசிவு கண்ட இடத்தில் மேல் வைத்துக் கட்டுவதாலோ அல்லது லேசாகத் தேய்த்து விடுவதாலோ விரைவில் குணம் ஏற்படும். வாழைப்பழத் தோலில் வீக்கத்தை கரைக்ககூடிய சக்தியும் அரிப்பைப் போக்க கூடிய சக்தியும் நுண்கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தியும் அடங்கியுள்ளன.

    வாழைப் பூச்சாற்றுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து உள்ளுக்குக் கொடுப்பதால் ரத்தக் கசிவு, வெள்ளைப் போக்கு வயிற்றுக் கடுப்பு மாத விடாய்க் கால வலி ஆகியன தணியும்.

    இளம் வாழைப் பூவை எடுத்து பாத்திரத்தில் இட்டு பிட்டவியலாக்கிச் சாறு பிழிந்து போதிய சுவைக்கான பனங்கற் கண்டு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்கப் பெரும்பாடு என்னும் அதிரத்தப் போக்கு கட்டுக்குள் வரும். இதனால் ஏற்படும் வலியும், ரத்த சோகையும் குணமாகும்.


    jv_66 likes this.

  6. #2296
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    மருத்துவ குறிப்புகள்


    1.வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

    2. முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

    3. வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

    4. வெந்தயக் கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

    5. வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.

    6. வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.

    7. வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.

    8. வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு குணமாகும்.

    9. வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.

    10. மூங்கில் முளைகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    11. முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம் பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.


    Lakschellam and jv_66 like this.

  7. #2297
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    ஜாதிக்காய்

    தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
    ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
    டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
    குலக்கா யருந்துவர்க்குக் கூறு

    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை- விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும், ஜாதி பத்ரி யும் .






    ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விந்து முந்துதல் நிற்கும். ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    விந்து முந்துதல் சரியாக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது. விவரம் அறிய கேள்வி கேளுங்கள்..

    முகத்தை அழகாக்கும்:

    ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

    அம்மை கொப்புளங்கள் சரியாகும்:

    அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

    தசைப்பிடிப்பை நீக்கும்:

    ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

    ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.


    jv_66 likes this.

  8. #2298
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி




    குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணி யாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

    கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

    கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

    jv_66 likes this.

  9. #2299
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்




    இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக் கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம், தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு.

    பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை . தண்டு குட்டையானது. நேரானது, முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

    அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.

    சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.

    உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.

    ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.

    சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

    அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.
    வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

    தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

    அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும். இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.

    தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக பயன்படுகிறது.

    எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.

    அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

    இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.

    அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.

    இரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

    காலை உணவாக

    அருகம்புல்லை சாற்றை காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் ஒரு பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் கிடைத்துவிடும்.அடுத்து மதிய சாப்பாடு தான்.

    புல்லின் தனிமங்கள்

    அருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்புல்லை பறித்த உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். காய்ந்த புல்லில் சத்துகள் குறைந்துவிடுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.


    Last edited by Dangu; 24th Jan 2015 at 03:34 PM.
    jv_66 likes this.

  10. #2300
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நண்மைகள்!





    செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை மார்ஷ் மாலோ என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    அதே போல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது.

    செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது.

    ம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதனை உலகத்தில் உள்ள பல நாடுகளாலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து வருகிறது.

    புற்றுநோயை எதிர்த்து போராடும் செம்பருத்தி இலைகள் :-

    புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம்.

    சளி மற்றும் இருமலை குணமாக்கும் :-

    செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல்நல பயனாக உள்ளது.

    ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :-

    செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

    மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் :-

    மெட்டபாலிச வீதத்தை அதிகரித்து உடலில் உள்ள நீர்ம சமநிலையை மேம்படுத்த செம்பருத்தி இலைகள் பெரிதும் உதவுவதால், இதுவும் ஒரு முக்கிய உடலநல பயனாக கருதப்படுகிறது.

    கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :-

    உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும்.

    சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் :-

    செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக இருங்கள். சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும்.

    உடல் எடையைக் குறைக்கும் :-

    செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், முக்கியமாக மாதவிடாய் காலத்தில் பெண்கள், அந்நேரத்தில் ஏற்படும் வழியை போக்கும். மேலும் செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.


    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter