Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2301
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..



    நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.


    தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,


    இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந் திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,


    இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.


    தேவையான பொருள்கள் :


    1.நல்லெண்ணெய்
    2.பூண்டு
    3.மிளகு


    செய்முறை:


    நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.


    இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
    அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.


    ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.


    நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்


    Sponsored Links

  2. #2302
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info




    பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள்.


    நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர் மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள்.


    நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து விடும் அளவுக்கு அப்பொழுது எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) யை புளிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும் அப்படி குடித்து விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும்.


    ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல தேவையே இல்லை.


    இந்த பதிவை படித்துவிட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறலாம்.

    jv_66, kkmathy and Sriramajayam like this.

  3. #2303
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..

    பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.

    குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.

    பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

    இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

    இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

    சத்துக்கள் நிறைந்தது

    பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    சரும புற்றுநோய்

    பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    எடையைக் குறைக்கும் உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

    உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.






    jv_66, kkmathy and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2304
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    முருங்கை காயின் நன்மைகள்

    இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும் முருங்கைகாய் முருங்கைகாய் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பொதுவான காய் கறியாகும். இது கிருமியை எதிர்த்து உடலை தூய்மை படுத்தக் கூடிய ஒரு அற்புதமான தூய்மையாக்கியாகும். முருங்கைகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்போம்.

    *முருங்கை காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும். குழந்தைகளின் எலும்பு பலப்பட கால்சியம் ஒரு பெரிய ஆதாரம்.

    *முருங்கைகாயை தொடர்ந்து சாப்பிட்டுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தங்கள் சுத்திகரிக்கப்படுகிறது.

    *கர்ப்பிணி பெண்கள் முருங்கை காய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை முருங்கை காய் நீக்குகிறது.

    முருங்கை காயில் உள்ள சத்துக்கள்:

    இரும்பு-1.5 மிகி
    கொழுப்பு, 1 கி
    புரதம், 7கி
    கார்போஹைட்ரேட், கால்சியம், 8மிகி
    பாஸ்பரஸ்-30 மிகி
    வைட்டமின் ஏ மற்றும் சி

    முருங்கைகாய் சூப் எடுத்துக் கொண்டால் இருமல் மற்றும் தொண்டைவலி, நெஞ்சு நெரிசல் என எல்லாவற்றிற்கும் உதவுகிறது.

    *முருங்கைகாயை வேகவைத்து அதில் வருகின்ற நீர் ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

    *முருங்கைகாய் சாற்றை முகத்தில் தடவினால் முகம் பொலிவுபெறும். மேலும் முருங்கைகாய் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர முகத்திற்கு மினுமினுப்பு கூடும்.

    முருங்கைகாய் பசியை அதிகரிக் உதவுகறது. முருங்கை காயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும்.

    *மூலம், தலைவலி, இரத்தநுகர்வு, சிறுநீர்நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சனைகளை நீக்கி ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.

    *உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கை காய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும்






    jv_66 and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2305
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info

    மருந்துக்கு மருந்து!


    இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் முதல் “ஜன ஒளஷதம்’ (மக்கள் மருந்து) என்ற வணிக முத்திரையுடன் மூலக்கூறு மருந்துகள் (generic medicine) குறைந்த விலையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தற்போது நிலவும் நோய்க்கு மாமருந்தாக இருக்கும்.



    இந்த ஜன ஒளஷதம், 504 மூலக்கூறு மருந்துகளில் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மாத்திரைகள்; இருதயம், நுரையீரல், வயிறு தொடர்பான நோய்களுக்கான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் ஆகியவையும் அடங்கும்.


    நோயாளிகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், மாத்திரைகளின் மூலக்கூறு பெயர்களை மட்டுமே எழுத வேண்டும் என்றும், பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வணிக முத்திரை மருந்துகளின் (branded medicine) பெயர்களை எழுதக்கூடாது என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே கடைப்பிடிக்கின்றனர்.


    அதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது, தனியார் வணிக முத்திரை மருந்துகளின் பெயர்களையே எழுதும் நிலை உள்ளது. மருத்துவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கினாலும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடுமானால், இந்த ஜன ஒளஷதம் மூலம் மக்கள் பெருமளவு பயனடைவார்கள்.


    1980-களில் ரூ.1,500 கோடியாக இருந்த இந்திய மருந்து தயாரிப்புத் தொழில், 2012-ஆம் ஆண்டு இறுதியில் ரூ.1,19,000 கோடி மதிப்புள்ள தொழில்துறையாக வளர்ந்துள்ளது. அந்த அளவுக்கு நோய்களும் பெருகியுள்ளன. விழிப்புணர்வும் பெருகியுள்ளது.


    தற்போது நடைமுறையில், சுமார் 300 மருந்துகள் அட்டவணைப் பட்டியலில் உள்ளன. இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கும் விலையில்தான் அவற்றை விற்க வேண்டும். இந்த மருந்துகளை மிகக் குறைந்த அளவிலேயே மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இதன்மூலம் சந்தையில் மருந்துத் தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. அட்டவணையில் உள்ள மூலக்கூறு மருந்துகளுடன் சில வைட்டமின்களை சேர்த்து வணிக முத்திரையுடன் சந்தையில் விற்கின்றன. இந்த மாத்திரைகளின் விலையை மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ள முடியும். ஆகவேதான் 300 மடங்குவரை கூடுதல் விலை நிர்ணயித்து விற்பதிலும், இவற்றைப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதனால்தான் மூலக்கூறு மருந்துகள் பலவும் சாமானியனின் வாங்கும் சக்தியை மீறியதாக இருக்கின்றன.


    சில உயிர்காப்பு மருந்துகளின் விலையை நிர்ணயிக்க முடியாதபோதிலும், அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு ஈடுபடுகிறது. ஆனாலும், காப்புரிமைப் பிரச்னைகளால் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவது கடினமாக உள்ளது.


    ஜன ஒளஷதம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமானால், அரசு மருந்தகங்கள் மட்டுமின்றி, தனியார் கடைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தப் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், மாநில அரசுகள் ஈடுபடலாம். இவற்றுக்கு விலைக் கழிவு உண்டு என்று ஜன ஒளஷதம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதைச் சில்லறை மருந்து விற்பனையாளர்களுக்குப் புரிய வைத்தாக வேண்டும்.


    தமிழகத்தைப் பொருத்தவரை அம்மா மருந்தகங்கள் பல இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவுபடுத்துவது, அல்லது முகவர்களை நியமித்து அம்மா மருந்தகத்தின் கொள்கைப்படி குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மிக எளிது. இருப்பினும், தற்போது அம்மா மருந்தகங்களில் வணிக முத்திரை மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜன ஒளஷதம் மருந்து, மாத்திரைகள் மூலக்கூறு அடிப்படையில் கிடைக்கும்போது, அவற்றை அம்மா மருந்தகங்கள் விற்பனை செய்ய முற்பட்டால், மக்களுக்கு உண்மையிலேயே குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.


    தமிழக அரசு மருத்துவமனைகளில் மூலக்கூறு மருந்துகள் எழுதித் தரப்படுகின்றன என்ற போதிலும், வெளியிடங்களிலும் பெருநிறுவன மருத்துவக்கூடங்களிலும் அத்தகைய சூழ்நிலை இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவ ஆலோசனை வழங்கும் அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால், இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் மாத்திரை, மருந்துகள் கிடைக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழும்.


    தமிழ்நாட்டில் ஒருசில கூட்டுறவு அங்காடிகளில் மருந்துகள் விலைக் கழிவுடன் விற்பனை செய்யப்பட்டாலும், அந்த மருந்தகங்கள் நொடிந்து போனதற்குக் காரணம், அவை விற்கும் வணிக முத்திரை மருந்துகளின் பெயரை மருத்துவர்கள் பரிந்துரைகளில் குறிப்பிடாததுதான். உண்மையில் மருந்து இருக்கும். ஆனால் மருத்துவர் எழுதித் தந்த பெயரிலான மருந்தாக இருக்காது. அதற்கு இணையான மருந்து என்று சொல்லி விற்கவும் மாட்டார்கள். ஆகவேதான், கூட்டுறவு அங்காடிகள் நொடிந்து போயின.


    விரைவில் ஜன ஒளஷதம் என்ற வணிக முத்திரையில் மூலக்கூறு மருந்துகள் கிடைக்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் மூலக்கூறு மருந்துகளை விற்பனை செய்யவும், அனைத்து மருத்துவர்களும் மூலக்கூறு மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யவுமான நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

    jv_66 likes this.

  6. #2306
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info

    நகம் கடித்தால் தொற்று நோய்கள் ஏற்படும்!


    மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. நகம் கடிப்பதால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடக்கூடும்.



    இந்த பழக்கத்தை சிறுவயதிலேயே நிறுத்தாவிட்டால், பிற்காலத்தில் உடலில் பிரச்சனைகள் ஏற்படுபட அதிக வாய்ப்புள்ளது. இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.


    இப்போது நகம் கடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.


    எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும். நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள்.


    இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானம் ஆகாமல், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.


    மேலும் கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்துவிட்டு, ஏதேனும் யோசிக்கும் போதோ அல்லது டென்சனாக இருக்கும் போது, அப்படியே கையை வாயில் வைப்போம்.


    இதனால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலி இழக்க செய்துவிடும்.


    எனவே நகங்கள் கடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால், விரைவில் பற்களையும் இழக்க நேரிடும்.

    jv_66 likes this.

  7. #2307
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info


    கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி



    என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.


    ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.


    அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.


    என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.


    பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.


    அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.


    பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.


    திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.


    விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.


    அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.


    செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.


    கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.


    அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.


    செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.


    ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.


    கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.


    தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
    http://www.sriaurobindoashram.org/vi
    use/ghlist.php


    மேலும் அதிக தகவல்களுக்கு:
    http://www.motherandsriaurobindo.org/Content.aspx


    பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
    SCHOOL FOR PERFECT SIGHT
    PONDICHERRY


    PHONE: 0413-2233659
    EMAIL: auroeyesight@yahoo.com

    jv_66 likes this.

  8. #2308
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    பாட்டி வைத்தியம் கேளுங்கள்


    1. மல்லி விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

    2. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

    3. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.


    jv_66 likes this.

  9. #2309
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

    வெற்றிலைக்கு "நாகவல்லி மெல்லடகு' என்று ஒரு பெயரும் உண்டு. வெற்றிலையின் காம்பே பல நோய்களை குணமாக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சீரண சக்தி பெற வெற்றிலைச் சாறை கொடுப்பர்.

    இந்த வெற்றிலைச் சாறானது பசியை தூண்டக் கூடியது. கபம், சீதளம், வாதம், பித்தம் நீக்கும். வெற்றிலையை எண்ணெயில் முக்கி, விளக்கில் காட்டி நெஞ்சில்போட்டால் கபத்தால் உண்டான இருமல், மூச்சுமுட்டல், மூச்சு சிரமம் நீங்கும்.

    தீக் காயங்களுக்கும், வீக்கத் திற்கும் வெற்றிலையை வைத்துக் கட்டலாம்.

    தலைக்கனம், நீர் ஏற்றம், பசிமந்தம், தொண்டைக் கம்மல் நீங்கும். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.

    இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

    இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

    வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

    இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும். சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும்.

    அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

    jv_66 likes this.

  10. #2310
    priyamuthu's Avatar
    priyamuthu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Madurai
    Posts
    207

    Re: Today's Medical Info

    Hi Friends ,

    Please tell me remedies for Vai punnu(Mouth Ulcer). I am getting it very frequently

    narayani80 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter