Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2311
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: Today's Medical Info

    Quote Originally Posted by priyamuthu View Post
    Hi Friends ,

    Please tell me remedies for Vai punnu(Mouth Ulcer). I am getting it very frequently
    hi priyamuthu


    you can take manathakkali keerai and chew the leaves. else take vitamin b complex table.


    Sponsored Links
    Sriramajayam likes this.

  2. #2312
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக சிறந்த மருந்து - இயற்கை மருத்துவம்


    Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.


    முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:


    முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.


    இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.
    இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
    முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும்.


    கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.


    இந்த கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம். துவையலும் செய்யலாம். பச்சைக்கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் தெரியாது.


    ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள "தாலைட்ஸ்" ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.


    இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும்.


    இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

    முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.


    மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய* கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2313
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சத்துப்பட்டியல்: புளி:-

    பெரும்பாலான குழம்புகளில் புளி சேர்க்கப்படுவதில் இருந்து அதன் மகத்துவத்தை உணரலாம். உணவுப் பொருட்க ளுக்கு புளிப்பு சுவையுடன், நறுமணமும் தரும். கெட்டுப்போகாமல் இருக்கவும் உதவும். இதிலுள்ள அத்தியாவசிய சத்துக்களை பார்க்கலாம்...

    * ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல பயிர் புளி. தெற்கு ஆசியாவில் அதிகமாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. புளிய மரம் 80 அடி உயரம் வரை வளரும். வெவ்வேறு நீளங்களில் காய்கள் காய்த்து பழுக்கும்.

    தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும். விதை நீக்கிய புளி சந்தையில் விற்கப்படுகிறது. 'தாமரின்டஸ் இண் டிகா' என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி 'பபேசி யேசி' தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

    * புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் புளி சதைப்பற்றில் 13 சதவீதம் என்.எஸ்.பி. நார்ப்பொருள் உள்ளது. உணவுப் பொருட்களை உப்பி பருக்கச் செய்வதில் என். எஸ்.பி. பங்கெடுக்கும்.

    * மலச்சிக்கலை தடுக்கும் ஆற்றலும் என்.எஸ்.பி. நார்ப் பொருளுக்கு உண்டு. புற்றுநோய் மற்றும் பெருங்குடல் சதைகளை பாதிக்கும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

    * மூல வியாதியை உருவாக்கும் ஒருவித உப்புப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் என்.எஸ்.பி. பங்கெடுக்கிறது. கெட்ட கொழுப்புக்களையும் இது கட்டுப்படுத்துகிறது.

    * எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மிகுந்திருப்ப தைப்போல புளியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் உள்ளது. இது உணவுக்கு புளிப்பு சுவையைத் தரு கிறது. மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் டார்டாரிக் அமிலம் செயலாற்றும். தீங்கு விளை விக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து உடலை காக்கும்.

    * புளியம்பழத்தில் லிமோனென், ஜெரனியால், சபரால், சின்னாமிக் அமிலம், மீதைல் சாலிசிலேட், பைராசின், அல்கைல்தையாசோல் போன்ற துணை ரசாயன பொருட்களும் உள்ளன. இவை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.

    * அத்தியாவசிய தாதுக்களான தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் புளியில் இருக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வல் லது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கு வகிக்கும்.

    * வைட்டமின் ஏ, போலிக் அமிலம், ரிபோபிளேவின், தயாமின், நியாசின், வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும் புளியம் பழத்தில் உள்ளன. இவை நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுபவை. நோய் எதிர்ப்பு பொருட்களாகவும் செயலாற்றும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும்



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2314
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள் :-

    இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்னாங்கண்ணிதான் சிவப்பு பொன்னாங் கண்ணி என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம்.

    1.ரத்த சுத்ததிற்கு

    ரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது பொன்னாங்கண்ணி. பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

    2.ஞாபக மறதி குணமாக

    சிலர் ஞாபக மறதி காரணமாக நிறைய இழப்பை சந்தித்திருப்பார்கள். ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.

    3.கண்பார்வைக் கோளாறுகள் நீங்க

    அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும் .

    இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

    4.பித்தத்தைக் குறைக்க

    பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும். இந்த கீரையுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

    5.பொன்னாங்கண்ணி தைலம்

    கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. இதை வீட்டிலேயே தயாரிக்கலாம். பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.

    6.தோல் வியாதிகள் குணமாக

    சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது.இவ்வளவு பயன்கள் உள்ள இந்தக் கீரையை இனிமேலும் ஒதுக்காமல் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.









    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2315
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஆரோக்கிய வாழ்வுக்கு :-


    காலை சாப்பாடு 70- 80 % வயிறு நிரம்ப சாப்பிடுங்கள்.
    மதிய உணவு -60-70% வயிறு நிரம்ப சாப்பிடுங்கள்
    இரவு உணவு -50- 60% வயிறு நிரம்ப சாப்பிடுங்கள் .


    காலை வேலை உணவு உட்கொள்ளாமல் இருப்பதோ,இரவு வேளையில் பரோட்டா,சிக்கன் என வெளுத்து கட்டுவதோ உடற்பருமனுக்கும்,சர்க்கரை வியாதி,இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.




    Dr. Vikatan


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-vikatan-lunch-menu.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2316
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்:-
    வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.
    நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும்.
    குடும்ப விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந் தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம்.
    ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.
    1.வாழைப்பழம் :
    வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.
    மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
    இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.
    2.துளசி :
    துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.
    3.குளிர்ச்சியான பால் :
    பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
    4.சோம்பு :
    இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.
    இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
    5.சீரகம் :
    சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடை பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.
    அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.
    6.கிராம்பு :
    இது ஒரு இயற்கை யான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக் கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.
    இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.
    7.ஏலக்காய் :
    சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.
    இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
    8.புதினா :
    புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
    இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.
    9.இஞ்சி :
    இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.
    வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.
    10.நெல்லிக்காய் :
    இதில் அதிகளவு வைட்டமின் `சி' உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.
    எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2317
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சத்துப்பட்டியல்: சோம்பு:-சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகம் சமையலில் நறுமணப் பொருளாக சேர்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல் வேறு சத்துப்பொருட்களும் இதில் அடங்கி இருக்கின்றன. உலக அளவில் சிறந்த மூலிகைப் பொருளாக வர்ணிக்கப்படும் அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...தெற்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்டவை சோம்பு விதைகள். அம்பெல்லிபெரி தாவர குடும்பத்தை சேர்ந்த இதன் அறிவியல் பெயர் போநிகியூலம் வல்காரேவர். மத்திய கிழக்கு பகுதிகள், சீனா, இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. சோம்பு செடிகள் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
    சோம்பு விதைகளில் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன. பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை காயம்பெரோல் மற்றும் குவார்சிட்டின்.புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கவல்லவை இவை. சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்ப் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. 100 கிராம் விதையில் 39.8 கிராம் அளவிற்கு நார்ச்சத்து காணப்படுகிறது.இவை உட்கொள்ளும் உணவை எளிதில் செரிக்க வைக்கின்றன. மேலும் மலச்சிக்கலை சீராக்குகிறது. உடலுக்கு வலிவூட்டும் தாதுப் பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன.தாமிரம் தாது, ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. சோம்பு விதைகளில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் இது அவசியம். இதிலுள்ள பொட்டாசியம் தாது, உடற் செல்களை வளவளப்பாக வைத்திருப்பதுடன், இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன.வைட்டமின்- ஏ, இ, சி போன்றவையும், பீ-குழும வைட்டமின்களான தயாமின், பைரோடாக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.சோம்பு விதைகள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு செரிமான சக்தியை அதிகரிக்கவும், வயிற்று வலியை நீக்கவும் சோம்பு கலந்த தண்ணீரை கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.சோம்பு விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கை, கால் மூட்டு வலிகளை போக்குவதுடன் மட்டுமில்லாமல் இருமலையும் போக்க வல்லது. மீன், காய்கறி உணவுகள் போன்றவற்றில் செரிமானம் மற்றும் நறுமணத்திற்காக அதிக அளவில் சோம்பு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கேக், பிஸ்கட், வெண்ணை, ரொட்டி தயாரிப்பிலும் சோம்பு சேர்க்கப்படுகிறது



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2318
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..ஒரு நாள் உணவு!காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
    அரை மணி நேர நடைப்பயிற்சி.வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்)புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)10 மணிக்கு மோர்11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்12 மணிக்கு இளநீர்மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.
    வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)
    200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை.நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.
    வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும்.
    நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.
    ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.
    காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.



    Lakschellam likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2319
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?






    நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.


    நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.


    தலைவலி :


    நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.


    படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!


    அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :


    ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.


    மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:


    ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.


    மலச்சிக்கல் :


    மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.


    படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.


    உயர் ரத்த அழுத்தம் :


    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.


    காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.



    This is 42424 Posts
    &
    75th Posts (Today)



    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-hands.jpg  
    Last edited by Sriramajayam; 13th Feb 2015 at 06:25 PM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2320
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info




    My WhatsApp


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter