Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info

Discussions on "Today's Medical Info" in "Health" forum.

  1. #2331
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ப்ரோக்கோலியின் மருத்துவ குணங்கள்:-

    புற்றுநோய்க்கு எதிரான ப்ரோக்கோலி ப்ரோக்கோலி ப்ரோக்கோலி என்ற காய்கறி பற்றி அறிந்திருக்கலாம். முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காய்கறியான ப்ரோக்கோலி அதிகமான சத்துள்ளது. புற்றுநோய்க்கும் இது தடை போடும்

    ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பது ஒரு காரணமாகும்.

    ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே. ப்ரோக்கோலியில் உள்ள தாதுப்பொருட்கள், ஆன்டி ஆக்சிட்ன்ட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

    ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைச் சீராகவும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை பராமரிக்க உதவுகின்றன.

    ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை கைகொடுக்கின்றன. பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ரோக்கோலி மிகவும் பயன்படுகிறது.

    இதில் இருவரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் கேம்ப்பெரால் ஆகியவை அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன. ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன

    Sponsored Links
    shrimathivenkat and shansun70 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2332
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ரோஜா பூ மருத்துவம்:-

    முகர்ந்தாலே பலன் தரக்கூடியது ரோஜா மலர். முகர்ந்தால் சளி குறையும். தலைவலி கட்டுப்படும். வலி அப்போதும் நிற்காவிடில் மலர்ச்சாற்றை மூக்கில் பிழிந்தால் தலைவலி குறையும். ரோஜா மொட்டுக்களை லேசாக வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதிக்கு நல்ல மருந்தாக செயல்படும். ரோஜாவை நிழலில் உலர்த்தி கஷாயம் போட்டு சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தாராளமாகப் போகும். ரோஜா கஷாயத்தைக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் குடல் கழிவுடன் பித்தநீர் வெளியாகும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ரோஜாவை மென்று தின்றாலே நிறைய பலனுண்டு. வயிறு சுத்தமாகும். தாகம் அடங்கும். ஆசன எரிச்சல் அடங்கும். ரோஜாப்பூவை காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள உள் உறுப்புகள் அனைத்தும் பலப்பட்டு நன்கு இயங்கும். இது அற்புதமான இயற்கை டானிக்.

    shrimathivenkat and shansun70 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2333
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    shansun70 likes this.

  4. #2334
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Today's Medical Info

    Thanks for sharing good info.....

    Sriramajayam likes this.

  5. #2335
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Always u r my dear friend.

    Quote Originally Posted by shansun70 View Post
    Thanks for sharing good info.....

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2336
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

    Welcome again!!!

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2337
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் :-பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.கடும் சுவாசப்பாதை கோளாறு, வயது முதிர்ந்தோரின் இறப்புகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் சில உணவுகளை பார்க்கலாம். இந்த உணவுகள் நுரையீரல் நலனை ஊக்குவிப்பதோடு, காற்று மாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ள, இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
    மாதுளைப் பழங்கள் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. ஆப்பிள்களில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன. வால்நட்ஸ், பாதாம் மற்றும் ஹாசில் நட்ஸ் உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுக் கேட்டைத் தடுப்பதுடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன.இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான உணவாகும். இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. புகைப்பிடிப்போர் உண்ண வேண்டிய ஒரு அருமையான பழம் இது. நுரையீரல் ஆக்ஸிஜனை நன்கு உள்ளிழுக்கும் திறனை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

    shrimathivenkat likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2338
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம் :-

    சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா இலைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர், மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

    தினமும் 100 மில்லி கஷாயம் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 நாளைக்கு ஒருமுறை புதியதாக கஷாயத்தை தயாரித்து வைத்து கொள்ளலாம். சர்க்கரை நோயை பொருத்த வரை உணவு முறை முக்கியமான ஒன்று.வழக்கமாக அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இரவில் உணவின் அளவை பாதியாக குறைத்து கொள்ள வேண்டும். உடல் கட்டுப்பாடுக்கு ஏற்ப 20 முதல் 30 நாட்களுக்கு கஷாயத்தை தொடர்ந்து குடித்து வரவேண்டும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:

    மா இலை, அத்தி இலை ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்.

    உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்க போகும் முன் தடவி வந்தால் நோய் குணமாகும். பகல் நேரங்களில் உணவு சாப்பிடுவதற்கு முன்பு பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது.

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு:

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் குணமாகும். நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையும். அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறைகிறது. இந்த நோயை கட்டுபாட்டிற்குள் கொண்டு வராவிட்டால் குளுகோஸூம், கொழுப்பும் உடலில் அதிக நேரம் தங்கி இருந்து உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். இதை தடுக்க பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், உடலில் இன்சுலின் அதிகளவில் சுரக்கும், கெட்ட கொழுப்புகளின் அளவும் குறையும்.

    நீரிழிவு நோயாளிகளின் உடல் பருமன்:

    பாதாம் பருப்பை போல இதர கொட்டை பருப்புகளும் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதாக ஆய்வின் கூறப்படுகிறது. பாதாம் மற்றும் மற்ற கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுகின்றன. பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை அண்டாது.

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2339
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் புடலங்காயின் மருத்துவ குணங்கள் :-

    புடலங்காய் நாம் சாதாரணமாக கறியாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தோம் இல்லை. கறிக்குப் பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு.

    புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான தோலை உடையதாகும். 150 செ.மீ அளவுக்கு இது நீளமாக வளரக்கூடியது ஆகும். உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று உடையதாக இருக்கும். இது சற்று கசப்பு சுவையுடைதாக இருப்பினும். சமைக்கும் போது இதன் கசப்புத் தன்மை போய் விடுகின்றது.

    புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். விதைகள் வயிற்றுக்கு துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.

    மருத்துவப் பயன்கள் :

    100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரதச்சத்து புரோட்டின் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோகிராமும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளி யேற்ற வல்லது.

    மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது. புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ் கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன. புடலங்காய் முறைக் காய்ச்சலை போக்க கூடியது.
    எனவே அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் முறைக் காய்ச்சல் மறைந்து போகும். புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

    இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.

    பேய்ப்புடலின் மருத்துவப் பயன்கள்:

    இது இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது-. தோல் நோய்களை விரைவில் குணப்ப டுத்த வல்லது. கிருமிகளை அழிக்கவல்லது. பசியைத் தூண்டக்கூடியது. மலத்தை இளக்கி வெளியேற்றி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுவது, பித்தநோய்களைத் தணிக்ககூடியது. ஈரலைப் பலப்படுத்த வல்லது. இதனுடைய வயிற்றுப் புழுக்களைக் கொல்லக்கூடியது.

    காய்ச்சலைத் தணிக்ககூடியது. இலைகள் மேற்பூச்சாக பூசுவதால் தலையில் திட்டுதிட்டாக முடி உதிர்ந்து ஆங்காங்கே வழுக்கை போல் தோன்றுகின்ற புழுவெட்டு குணமாகும். டிரைகோ சாந்தஸ் குகுமெரினா என்பது பேய்ப்புடலின் தாவரப்பெயர் ஆகும். அமிர்தபலா, வனபட் டோடா என்பவை அதன் வடமொழிப் பெயர்கள் ஆகும்.

    பேய்ப்புடலின் இலைகளை மைய அரைத்து பசைபோல் ஆக்கி தோல் நோய்களின் மீது பூசி வர எக்ஸிமா என்று சொல்லக்கூடிய தோலில் நீர் வடியச் செய்யும் கொப்புளங்களோடு நமைச்சலும் தருகின்ற துன்பம் விரைவில் குணமாகும்.

    * பேய்புடல் இலைகள் நான்கு அல்லது 5 இலைகளை எடுத்து சுத்திகரித்து ஒரு டம்ளர் நீரிலிட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறவைத்து எடுத்து வடிகட்டி ஆறாதபுண்கள், நாற்றமெடுத்து புழுக்கள் வைத்த புண்கள், சர்க்கரை நோயால் வந்த கட்டிகள் ஆகியவற்றின் மீது ஊற்றிக் கழுவி வர விரைவில் குணமாகும்.

    * இலைப் பசையை நாட்பட்ட கட்டிகள், சீழ்வடியும் ஆறாப் புண்கள் ஆகியவற்றின் மேல் பூசும் மருந்தாகவும் பயன்படுத்த விரைவில் அவை ஆறிவிடும்.

    * பேய்ப்புடல் இலையைக் கொழுந்தாக எடுத்து நான்கைந்து இலைகளை ஓர் டம்ளர் அளவு நீர்விட்டு கொதிக்கவைத்து தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்க வயிற்றுப்போக்கினை உண்டு பண்ணி வயிற்றைச் சுத்தம் செய்யும்.

    * இலையை அரைத்துப் பிழிந்த சாறு 5 முதல் 10மி.லி வரை உள்ளுக்குக் கொடுக்க வாந்தியாகி பித்தம் வெளியேறும்.

    * இலைச்சாற்றை தலையில் தேய்த்து வைத்திருந்து சிறிது நேரம் சென்று குளித்துவிட தலைமுடி கொட்டுவது நிற்கும்.

    * இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும். புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.

    இந்நிலையில் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் புடலம் இலையைக் கசக்கித் தயாரித்த சாற்றை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து வைத்திருந்து பின் தலைக்கு குளிப்பதும் என்கிற பழக்கம் விரைவில் குணம் தர ஏதுவாகும்.

    உடலில் பித்தம் அதிகரித்து பசியின்மை, காய்ச்சல், உடல் சோர்வு, குமட்டல், ருசியின்மை என்ற தொல்லைகள் தொடர்ந்து துன்பம் தரும் போது புடலங்கொடியின் இலைச் சாற்றை தீ நீராக்கி அத்துடன் கொத்துமல்லிச்சாறு அல்லது தனியாத் தூள் சேர்த்துக் காய்ச்சி சுவைக்க பனங்கற்கண்டு சேர்த்து பருகுவதால் பித்தம் தணிந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    * கடுமையான காய்ச்சல் ஏற்படும் போது 50கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் அதில் சம அளவு சேர்த்து மல்லி இலையையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அந்த ஊறலைக் குடித்து வர கடுங்காய்ச்சலும் தணிந்து போகும். இந்த தீநீர் பித்த சம்பந்தப்பட்ட நோய்களையும் நாவறட்சி, மலச்சிக்கல் போன்றவற்றையும் குணமாக்கும்.

    * கீல்வாதம் என்னும் மூட்டுவலி என்னும் நோயால் பாதிக்கப்படுவோர் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி உள்ளுக்கக் குடிப்பதாலும் வலிகண்ட இடங்களில் மட்டுமின்றி உடல் முழுதும் தேய்த்து வைத்திருந்து குளிப்பதால் நாளடைவில் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு கல்லீரலிலும் ஆரோக்கியம் திகழும்.

    * 30முதல் 50கிராம் வரை எடையுள்ள புடலங்காயைக் கொடியின் இலைகள் இளசாக தேர்ந்தெடுத்து சமபங்கு கொத்துமல்லி இலை சேர்த்து நீரிலிட்டு ஊறவைத்து காலையில் அதன் தெளிந்ந நீரைக் குடித்து வருவதால் நாளடைவில் மஞ்சள்காமாலை மறையும்.

    * புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.

    * நன்கு முற்றிப் பழுத்த புடலையின் விதைகளை மட்டும் நீக்கி விட்டு விதையை உலர்த்தி வைத்து கொண்டு இரவில் நீரிலிட்டு ஊற வைத்திருந்து காலையில் அதன் நீரைப் பருக பேதியாகும். இதனால் குடல் சுத்தமாகும். புடலங்காயின் விதைகளை பேதி மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

    * புடலம் வேரை 5முதல் 10 கிராம் வரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி குடிக்க பித்தத்தைப் போக்கும். வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்றும். பேதியைக் கட்டுப்படுத்தும்.

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2340
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

    நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

    பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம்.

    உணவு [ நிலம் ] [ இரைப்பை , மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]

    பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது. [ வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு அடிப்படை காரணமே பசி இல்லாதபோது சாப்பிடுவது தான் ] அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இனிப்பு சாப்பிட வேண்டும்

    நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும்.
    சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும்.

    உணவில் ஆறு சுவைகள் [ இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் ] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
    நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.

    சாப்பிடும்பொழுது கண்களை மூடி, உதட்டை மூடி, உதட்டை பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்று நம் ஜீரணத்திற்கு எதிரி. முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி .

    குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.

    பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது [ கவனம் சிதறாமல் இருப்பதற்காக ]கால்களைத் தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. முதல் ஏப்பம் வந்த உடனோ அல்லது உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.

    நீர் [நீர்] [ சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] தண்ணீரைக் கொதிக்க வைத்தோ அல்லது நீரை வடிகட்டியோ குடிபதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுகாக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்க்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.

    தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு மெதுவாக வாய்வைத்து சப்பிக் குடிக்க வேண்டும்.
    மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தக் கூடாது. அப்படி குடிக்க நேர்ந்தால் உணவில் அதிக நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [ பிரெஷ் ஜூஸ் ] போன்றவற்றை பருகலாம்.
    தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் தேவைக்கு அதிகமாகவே குடித்துவிடுவோம். நீரை நிதானமாக வாய்வைத்து சப்பி குடிக்க வேண்டும்.

    நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.
    பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பாசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், சிறுநீரக கற்கள் ஏற்படும்.

    ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [ கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.

    வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும். தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும். புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.

    இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
    படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

    குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணிநேரம் தூங்க வேண்டும். மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

    இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

    நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும். இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

    இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.

    காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] புகைபழக்கம்,கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [ நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க ] வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.

    தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ]
    தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ] மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் கொசுவலையை வாங்கி மாடிக்கொள்ளுங்கள்.

    சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும். சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.

    உழைப்பு [நெருப்பு] [ இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும்.

    தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.

    காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும்.

    எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை.

    Baskar Jayaraman

    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    Last edited by Sriramajayam; 19th Feb 2015 at 12:51 AM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter