Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2391
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?


    3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.


    காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.


    காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.


    இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.


    வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.


    இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.


    உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.


    இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.


    இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.


    வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.


    வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.


    ​FB



    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2392
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் :-


    சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தைகையை சத்துகள் சீதாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.


    சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.


    சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.


    * சீதாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும்.
    * சீதாப்பழ சதையோடு உப்பை கலந்து முகப்பரு மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடைந்து மறையும்.
    * இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும்.
    * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும்.
    * சீதாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்
    * சீதாப்பழம் விதைகளை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது.
    * சிறுவர்களுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும்.
    * சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.


    ​FB


    Amirporkodi and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2393
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வாய்ப்பு குறையும்...!

    காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ் எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது.

    உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.

    வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால் கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத்துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.


    FB




    kkmathy likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2394
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Today's Medical Info

    Quote Originally Posted by Sriramajayam;1440870[CENTER

    காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்


    [/CENTER]
    Very good info sir.
    Easy way to avoid heart attack.

    Sriramajayam and Dangu like this.

  5. #2395
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Thx u friend.



    @kkmathy




    Quote Originally Posted by kkmathy View Post
    Very good info sir.
    Easy way to avoid heart attack.


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2396
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.

    Welcome again!!!





    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2397
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info




    மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!



    மாதுளை மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமும் கூட. மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. மேலும் பலருக்கு மாதுளை பழம் என்றால் ரொம்பவே பிடிக்கும்.


    ஆனால் அதனை உரித்து சாப்பிடுவது என்பதை நினைக்கும் போது பலரும் அதனை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, சோம்பேறித்தனப்பட்டு வேறு பழங்களை வாங்கி உட்கொள்கின்றனர். எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான், அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம்.


    அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. சரி, இப்போது மாதுளையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!


    இதய ஆரோக்கியம் மாதுளையில் இதயத்தைப் பாதுகாக்கும். பாலிஃபீனால்கள், டானின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து தடிப்புகள் ஏற்பட்டு, அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.


    இரத்த சர்க்கரை அளவு மாதுளையில் உள்ள ப்ருக்டோஸ், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கிறது. மேலும் ஆய்வு ஒன்றில், தொடர்ந்து இரண்டு வாரங்களாக மாதுளை ஜுஸ் குடித்து வந்தவர்களின் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.


    இரத்த அழுத்தம் மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள இயற்கையான ஆஸ்பிரின், இரத்தம் உறைவதை தடுப்பதோடு, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.


    புற்றுநோயை தடுக்கிறது மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது உடலில் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் தேவையற்ற புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.


    மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த வெள்ளையணுக்களை தூண்டி, கிருமிகள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. முக்கியமாக ஆண்கள் இதனை குடித்து வந்தால், புரோஸ்டேட் புற்றநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


    வயிற்றை இதமாக்கும் மாதுளை ஜூஸ் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதிலும் 1 டம்ளர் மாதுளை ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.


    வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் மாதுளையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது, உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.


    இரத்த சோகை இரத்த சோகை உள்ளவர்கள், மாதுளையை அன்றாடம் உட்கொண்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் மாதுளையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.


    எடையைக் குறைக்கும் மாதுளையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டு வந்தால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும்.


    சரும ஆரோக்கியம் மாதுளையை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.


    வாய் ஆரோக்கியம் மாதுளையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை எளிதில் எதிர்த்து போராடி, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.


    விந்தணு உற்பத்தி மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும். எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதுளை ஜூஸ் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.


    Last edited by Dangu; 9th Mar 2015 at 07:27 AM.
    Sriramajayam likes this.

  8. #2398
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    தினமும் கீரை சாப்பிட்டீங்கன்னா, இந்த நோயெல்லாம் தூரமா ஓடிடும்!


    இந்திய உணவு கலாச்சாரம் மருத்துவ குணம் வாய்ந்தது என நாம் அனைவரும் அறிந்தது தான். நாம் உபயோகப்படுத்தும் மசாலா பொருள்களில் இருந்து பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது கீரை வகைகளை பற்றி.



    பாட்டி வைத்தியம் பற்றி நாம் பேசும் போது அதில் கீரையை தவிர்த்திட முடியாது. ஏனெனில், நமது பாட்டிமார்கள் வைத்தியம் பார்த்ததே கீரை மற்றும் மூலிகை இலை, கொடிகளை வைத்துதான். கீரையை நம் முன்னோர்கள் தினசரி உணவில் உபயோகப்படுத்தியதன் காரணம், அதனுடைய மருத்துவ குணங்களை அறிந்ததினால் தான்.


    இன்று நாம் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறோமோ இல்லையோ, வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு செல்கிறோம். இதன் காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான்.


    நமது கால தட்பவெட்ப நிலைக்கு எந்த உணவு உகந்ததோ அதை தான் நாம் சாப்பிட வேண்டுமே தவிர, இது சுவைமிக்க சுவிட்சர்லாந்து உணவு, இது ஆஸ்திரேலியாவில் பிரசித்திபெற்ற உணவு என நமது உடல்நிலைக்கும், கால நிலைக்கும் பொருந்தாத உணவுகளை உட்கொள்ள கூடாது.


    நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டுள்ள உணவு கீரை. அதிலுள்ள மருத்துவ குணம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்...


    வெந்தயக்கீரை ;வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்ட இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.


    முருங்கைக்கீரை; இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும்.


    இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.


    அரைக்கீரை ; அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.


    சிறுகீரை உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.


    அகத்திக்கீரை ; இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது. அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். எனவே அகத்திக்கீரையை அளவாக உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.


    மணத்தக்காளி கீரை இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.


    பாலக்கீரை இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும். இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.


    புளிச்சக்கீரை இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.


    பசலைக்கீரை இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.

    Last edited by Dangu; 9th Mar 2015 at 07:32 AM.
    Sriramajayam likes this.

  9. #2399
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    சாலையின் ஓரத்தில் இருக்கும் தள்ளுவண்டியை கடக்கும் போது வாசனை தூக்குகிறதா? ஆம், அதான் முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழத்தின் சீசன் ஆரம்பித்துவிட்டதே? பின் வாசனை தூக்காமலா இருக்கும்.



    அப்படி விற்கப்படும் பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்து மட்டும் செல்லாமல், அதனை வாங்கி சாப்பிடவும் செய்யுங்கள். ஏனெனில் பலாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. அதற்கென்று வரும் சீசன் போது வாங்கி சாப்பிட்டால் தான், அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும்.


    உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க...பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது.


    மேலும் இப்பழத்தில் கலோரிகள் இருக்கிறது ஆனால் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இப்பழத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு மட்டுமின்றி அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சரி, இப்போது பலாப்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போமா!!


    மலச்சிக்கல் பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.


    நோயெதிர்ப்பு சக்தி பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.


    புற்றுநோயைத் தடுக்கும் பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.


    இரத்த அழுத்தம் பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.


    குடல் புற்றுநோய் பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.


    பார்வையை மேம்படுத்தும் பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.


    சரும ஆரோக்கியம் தற்போது விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.


    எலும்புகளின் ஆரோக்கியம் பலாப்பழத்தில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எலும்புகளை வலிமையோடும் வைத்துக் கொள்ளும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.


    இரத்த சோகை பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், பேன்டோதெனிக் ஆசிட், காப்பர், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உருவாக உதவும். மேலும் இப்பழம் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சி, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.


    சளி மற்றும் நோய்த்தொற்றுகள் பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது, சளி மற்றும் நோய்த்தொற்றுகள் தாக்குவது தடுக்கப்படும். மேலும் ஒரு கப் பலாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்.


    இரத்த சர்க்கரை அளவு உடலில் மாங்கனீசு குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது. ஆனால் இந்த சத்து பலாப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.


    இதய நோய் பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவை குறைத்து, இதயத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும்.


    சரும சுருக்கம் பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.


    கூந்தல் வளர்ச்சி பலாப்பழத்தின் விதைக்கு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆகவே இதன் விதையை சமைத்து சாப்பிட்டு வந்தால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் தலையில் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.


    பட்டுப்போன்ற சருமம் நல்ல பட்டுப் போன்ற சருமத்தைப் பெற, பலாப்பழத்தின் விதையை உலர வைத்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, உலர வைத்து கழுவி வேண்டும். இப்படி செய்து வந்தால் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.


    வைட்டமின் ஏ பலாப்பழத்தின விதையில் உள்ள வைட்டமின் ஏ, முடிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தையும், முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.

    Sriramajayam likes this.

  10. #2400
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info



    Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter