Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info

Discussions on "Today's Medical Info" in "Health" forum.

  1. #2401
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஆரோக்கியத்தில் சிறந்தது லவங்கம் :-

    சைவம், அசைவம் என இரண்டு வகை சமையலிலும் மணக்கும் லவங்கப் பட்டைக்கு எப்போதும் முதலிடம் தான். பட்டையை பொடி செய்து வைத்து தாளிப்பது மற்றும் அரைப்பதில் சேர்க்கலாம். உடல் ஆரோக்யத்திலும் லவங்கப் பட்டையின் பங்கு முக்கியமானது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். லவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

    காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், நுரையீரல் சார்ந்த கோளாறுகள், சளி மற்றும் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். லவங்கப் பட்டையுடன் சுக்கு, ஓமம் மூன்றும் தலா 50 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து காலை, மாலை உணவுக்கு பின்னர் சாப்பிட்டால் அனைத்து விதமான வாயுக் கோளாறுகளும் நீங்கும்.

    லவங்கப்பட்டை, நிலவேம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் பூச்சிக் கடிகள் குணமாகும். இருமல் பிரச்னை உள்ளவர்கள் லவங்கப்பட்டையுடன் அக்காரா மற்றும் திப்பிலி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு மற்றும் இருமல் விலகும். லவங்கப்பட்டையுடன், அதிவிடயம் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

    இதில் ஐந்து கிராம் அளவு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். லவங்கப் பட்டையுடன், மாம்பருப்பு, கசகசா இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை 100 மிலி தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி குணமாகும். லவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

    இதில் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுவது நிற்கும். லவங்கப் பட்டையுடன் சிறு குறிஞ்சான் சம அளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

    ​FB

    Sponsored Links
    kkmathy and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2402
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் முட்டைகோஸின் மருத்துவ குணங்கள் :-

    நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

    இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

    முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

    இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

    பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

    ​FB

    kkmathy, shrimathivenkat and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2403
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    அனைத்து நோய்களையும் தீர்க்கும் சோற்றுக்கற்றாழை

    இந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாள் பரிசாக ஆயிரம் சோற்றுக் கற்றாழைகளை இலவசமாக கொடுக்க போகிறேன்' என்று அறிவித்துள்ளார் 'ட்ரி பேங்க்' என்ற அமைப்பின் நிறுவனர் முல்லைவனம். பிறந்த நாளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது வாடிக்கை. எதற்காக சோற்றுக்கற்றாழை வழங்குகிறீர்கள் என்று முல்லைவனத்திடம் கேட்ட போது, அவர் சொன்ன தகவல் கொஞ்சம் விசித்திரமானது.

    வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும். இன்று உணவே விஷமாகி விட்டதால் மனிதனின் ஆயுள் காலம் வெகுவாக குறைந்து விட்டது. நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற மருத்துவ முறையை இன்றைய தலைமுறையினர் மறந்து விட்டனர். இந்த இயற்கை மருத்துவத்துக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. அனைத்து வகை நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக சோற்று கற்றாழை இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை இந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சேலம், தூத்துக்குடியில் சாகுபடி செய்யப்படுகிறது. இதை கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என்று அழைக்கின்றனர். கற்றாழையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உங்களின் இளைமை என்றும் ஊஞ்சலாடும். சருமம் வறண்டுப்போகாது. கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள சூடு குறையும். அலர்ஜி, கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

    கற்றாழை ஜெல்லினால் முகத்தை கழுவினால் 'பளீச்' என்று காணப்படுவீர்கள். கற்றாழையின் மடலில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்தால் நீளமான கூந்தலை பெறலாம். காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டுகளாக கற்றாழை தினமும் சாப்பிட்டால் தேவையான சத்து கிடைக்கும். உடல் எடை கூடாமல் பலகீனம் மறையும்.

    சோற்றுக்கற்றாழையுடன் வெள்ளைப் பூண்டு, பனங்கற்கண்டு, எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து காய்ச்சி வடித்து பருகினால் வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் குட்பை. மாதவிடாய் கோளாறுகள், நீர் கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கற்றாழையில் உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

    தீக்காயங்களுக்கு உடனடி டாக்டராக சோற்றுக்கற்றாழை செயல்படும். அரிப்புகளுக்கு அருமருந்தாக உள்ளது என்று சோற்றுக்கற்றாழையின் மருத்துவ குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதை பயன்படுத்தும் போது 7 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். ஏனெனில் அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கழுவாமல் சாப்பிடும் போது நிச்சயம் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

    தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்கற்றாழை பெரிதும் உதவுகிறது. அதன் வேர்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இட்லி குக்கரில் (பானையில்) பால் விட்டு அதன் ஆவியில் வேர்களை வேக வைத்து நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு அதை பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு பாருங்கள்.

    தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்து சோற்றுக்கற்றாழை என்று சொல்வீர்கள். இதை இறைவன் அருளிய இயற்கை வயகாரா என்று சொல்லாம். சோற்றுக்கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன'' என்று கற்றாழையின் புராணத்தை கூறினார்.

    kkmathy and Sriramajayam like this.

  4. #2404
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    பாகற்காயில் கிடைக்கும் நன்மைகள்

    வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பிடிப்போர் பலர். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்புத்தன்மை தான். பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ, அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதோடு, நோயின் தாக்கம் ஏற்படாதவாறு உடலைப் பாதுகாக்கிறது. எப்படி நம்மில் பலருக்கும் எது ஆரோக்கியமானதோ அது பிடிக்காதோ, அதேப்போல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பாகற்காயும் பிடிக்காது.

    பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். அதற்கு பாகற்காயை சரியாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுவீர்கள். பின் பாகற்காய் என்றாலே விரும்பி சாப்பிடுவீர்கள். சரி, இப்போது பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்.

    சுவாச கோளாறுகள் ;

    பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

    கல்லீரல் பிரச்சனைகள் ;

    தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

    நோயெதிர்ப்பு சக்தி ;

    பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    பருக்கள் ;

    உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

    நீரிழிவு ;

    நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

    மலச்சிக்கல் ;

    மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

    ஆரோக்கியமான சிறுநீரகம் ;

    பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

    இதய நோய் ;

    பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    புற்றுநோய் ;

    பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

  5. #2405
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    ஆண்கள் பாலுடன் தேன் கலந்து குடித்தால் விந்தணுவின் உற்பத்தி அதிகமாகுமா?

    ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெறுவது தான் பால். ஏனெனில் பாலில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் டி மற்றும் பல சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

    எப்படி பால் ஆரோக்கியமானதோ அதேப்போல் தான் தேனும். தேனிலும் நிறைய சத்துக்களும் அதனால் பல நன்மைகளும் கிடைக்கும். இந்த இரண்டு பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் சிறந்தவை.

    ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!! சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால், பால் குடிக்கும் பலரும் அதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிப்பார்கள். இப்படி பாலில் தேன் கலந்து குடிப்பதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். அதிலும் ஆண்கள் இதனைக் குடித்து வந்தால் இன்னும் சிறந்தது.

    ஆய்வு முடிவு 18-50 வயதிற்குட்ட ஆண்களுள் 10 சதவீதம் பேர் குறைவான விந்தணுக்களைக் கொண்டுள்ளனர் என்று சமீத்திய அறிக்கையில் வெளிவந்துள்ளது.

    இப்படி குறைவான விந்தணுக்களைக் கொண்டவர்கள், அதன் உற்பத்தியை அதிகரிக்க பாலை குடித்து வருவது நல்ல வழி என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிலும் பாலுடன் தேன் சேர்த்து குடிப்பது சிறந்த வழி என்றும் சொல்கின்றனர்.

    ஆயுர்வேத மருத்துவம் ஆயுர்வேத மருத்துவத்தில் மலட்டுத்தன்மைக்கும், விந்தணு குறைபாட்டிற்கும் தேன் பரிந்துரைக்கப்படுகிறது. அதேப்போல் பாலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே வெதுவெதுப்பான பாலில் தேன் சேர்த்து குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.

    வைட்டமின் ஏ ஆண் ஹார்மோன்களின் உற்பத்திக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமானது. இத்தகைய வைட்டமின் ஏ பாலில் உள்ளது. மேலும் பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவற்றை குடித்து வந்தால், செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். முக்கியமாக பாலை குடித்து வந்தால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுக்கள் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

    பாலுணர்ச்சியைத் தூண்டும் தேன் நல்ல சுத்தமான தேன் பாலுணர்ச்சியைத் தூண்டும். ஏனெனில் அதில் ஜிங்க், வைட்டமின் ஈ போன்ற இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இதனை பாலுடன் சேர்த்து குடிக்கும் போது விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, பாலுணர்வும் தூண்டப்படும்.

    தேன் மற்றும் பூண்டு தேனை மற்றும் பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடலின் எனர்ஜியை அதிகரிப்பதோடு, உறவில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

    தேன் மற்றும் பட்டை தேன் மற்றும் பட்டை பொடியை ஒன்றாக கலந்து சாப்பிடும் போது, ஆர்த்ரிடிஸ், முடி உதிர்தல், பல் வலி, உயர் கொலஸ்ட்ரால், இருமல், மலட்டுத்தன்மை, வயிற்று உப்புசம், எடை குறைவு, வலிமையிழந்த நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை குணமாகும்.

    விந்தணு உற்பத்தியை குறைக்கும் செயல்கள்

    * மன அழுத்தம்
    * தூக்கமின்மை
    * புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
    * உடல் பருமன்
    * ஹார்மோன் பிரச்சனைகள்
    * ஜிங்க் குறைபாடு மேற்கூறியவைகள் தான் விந்தணு உற்பத்தியைக் குறைக்கும். ஆகவே இவற்றில் கவனமாக இருந்தால் விந்தணு உற்பத்தியில் எவ்வித பிரச்சனைகளும் வராது.

  6. #2406
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாத்துகாக்கும் எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்:-

    * எலுமிச்சை விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் ஸ்கர்வி என்னும் நோயைப் போக்க வல்லது. (விட்டமின் `சி' குறைவால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு ரத்தம் கசிகிற நிலையாகும். மேலும் இது ரத்த சோகையை உண்டு பண்ணுவதாகும். கணுக்கால் மற்றும் காலிலுள்ள தசைகளில் சற்று சிவந்த வீக்கத்தையும் தருகிற நோய்).

    * வயிற்றிலுள்ள வாயுவைப் போக்கி சீரண உறுப்புகளை பலப்படுத்தக் கூடியதாகும்.

    * வயிற்றுக் கோளாறுகள் அத்தனையும் எலுமிச்சையால் போகும்.

    * ஒவ்வாமையால் வரும் நோய்களைத் தடுக்க கூடியது.

    * தொற்று நோய்க் கிருமிகளை அழிக்க வல்லது.

    * யுனானி மருத்துவர்கள் இதன் சர்பத்தை நீரிழிவுக்கு பரிந்துரை செய்வார்கள்.

    * இருமல், கக்குவான், சளி, காய்ச்சல், பித்த சம்பந்தமான நோய்கள் எலுமிச்சையால் விலகும்.

    * எலுமிச்சை சாற்றை மேல் பூச்சாகப் பூச தேமல் தொழு நோய் வெண்ம நிறத்தோல் ஆகியன குணமாகும்.

    * எலுமிச்சையின் இலைகளும், காம்புகளும் தொற்று நோய்க் கிருமிகளைப் போக்க வல்லது.

    * 100கிராம் எலுமிச்சம் பழச்சாற்றில் 4 முதல் 50மி.கி வரையிலான விட்டமின் சி சத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் "கரோட்டின்'' விட்டமின் `பி' சத்துக்களும் உள்ளன.

    * எலுமிச்சையில் உள்ள "பைப்ளேவனாய்ட்'' என்னும் சத்து ரத்த நாளங்களின் உட்சுவர்ப் பகுதியை பலப்படுத்துகிறது. குறிப்பாக சிறைகள், தமனிகள் ஆகியவற்றை செம்மைப்படுத்துகிறது. இதனால் நரம்புச் சுற்று தவிர்க்கப்படுகிறது. மேலும் "ஆர்ட்டிரியோ செலிரோஸிஸ்'' என்னும் ரத்த நாளங்களின் அடைப்பையும் தடுத்து தடையற்ற குருதி ஓட்டத்தைத் தருகின்றது. மேலும் ஈரல் வயிறு, குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்த் தொற்றினைப் போக்க வல்லது.

    * பழச்சாற்றுடன் போதிய தேன் கலந்து பருகி வந்தால் உற்சாகத்தை தருவதோடு உடலிலுள்ள அனைத்து தாதுக்களும் பலம் பெறுகின்றன.

    * நகச் சுற்று என்னும் கொடும் நோய் குணமாக எலுமிச்சம் பழத்தை நகத்துக்கு செருகி வைப்பது பன்னெடுங்காலமாகப் பழக்கத்தில் உள்ளது.

    * எலுமிச்சை சாறு பருகுவதால் மார்பகப் புற்று நோயை உண்டாக்கும் செல்கள் பரவுவது தடுக்கப்படுவதோடு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது

    * சிறுநீரகக் கற்கள் உருவாவதை எலுமிச்சை தடுக்கிறது. அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் "யூரினரி சிட்ரேட்'' என்னும் தாதுப் பொருள் உற்பத்தியாகி சிறுநீரில் படிகங்கள் உருவாகி அவை பின்னர் சிறுநீரகக் கற்களாக மாறுவதைத் தடுக்கிறது.

    * எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் சத்து மிகுந்திருப்பதால் மானுடர்க்கு ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு வாந்தி, குமட்டல், மயக்கம் ஆகியவற்றைத் தணிக்க வல்லது.

    * எலுமிச்சைசாறு நுண் கிருமிகளை விரட்ட வல்லது. பூஞ்சைக் காளானைப் போக்க வல்லது. துர்நாற்றத்தை நீக்கக் கூடியது.

    * தொண்டைக்கட்டு ஏற்பட்ட போது அல்லது தொண்டையில் தொற்று நோய் கண்ட போது உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது வழக்கம். அதற்குப் பதிலாக எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து வாய் கொப்பளிப்பதால் விரைவில் குணம் தெரியும்.

    * எலுமிச்சை சாற்றை சிறிது நேரம் வாயில் அடக்கி வைப்பதால் பல்வலி போவதோடு ஈறுகளினின்று ரத்தம் கசிவது நிற்கும்.

    100 கிராம் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ சத்துக்கள்:

    100 கிராம் எலுமிச்சம் பழ ரசத்தில் 50 கிராம் நீர்சத்து, 1.0 கிராம் கொழுப்புச்சத்து, 1.4 கிராம் புரதச்சத்து , 11கிராம் மாவுச்சத்து , 0.8கிராம் தாதுப்பொருட்கள் , 1.2 கிராம் நார்ச்சத்து , 0.80 மி.கிராம் சுண்ணாம்புச்சத்து, 0.2மி.கிராம் பாஸ்பரஸ், 0.4மி.கி இரும்புச்சத்து, 12மி.கிராம் கரோட்டீன், 0.2 மி.கி தயாமின், 0.1 மி.கி நியாசின், 1.8 மி.கி விட்டமின் ஏ, 1.5மி.கி விட்டமின் பி, 63.0 மி.கி விட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

    kkmathy and shrimathivenkat like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2407
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    தினமும் சிறிது முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

    முந்திரியை சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. இந்த முந்திரியை ஸ்நாக்ஸ் நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவில் முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.

    குறிப்பாக, உப்பு சேர்த்து வறுத்து விற்கப்படும் முந்திரியை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளுக்கு அப்படியே எதிர் விளைவை ஏற்படுத்தும்.

    ஆரோக்கியமான இதயம் :-

    முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பலர் கொழுப்புக்கள் நிறைந்துள்ள உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்ல என்று நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. உடலுக்கு கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய நல்ல கொழுப்புக்கள் முந்திரியில் நிறைந்துள்ளதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

    நரம்புகளின் ஆரோக்கியம் :-

    மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. உடலில் மக்னீசியத்தின் அளவு குறைவாக இருந்தால், கால்சியம் இரத்த நாளங்களுக்குள் சென்று, இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். இதனால் உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

    வலிமையான எலும்புகள் :-

    கால்சியத்தைப் போலவே, மக்னீசியமும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியம். ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 300-750 கிராம் மக்னீசியம் அவசியம். ஏனெனில் மக்னீசியம் தான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது.

    இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது :-

    முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. எனவே உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொண்டு வாருங்கள்.

    புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் :-

    முந்திரியில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    முடிக்கு நல்லது :-

    முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்.

    சிறுநீரகக் கற்கள் :-

    தினமும் முந்திரியை உட்கொண்டு வந்தால், 25% சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

    எடை குறைவு :-

    முந்திரி கூட உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தவர்களை, முந்திரி சாப்பிடாமல் இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் உடல் எடை அதிகரிப்பது குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    செரிமானம் :-

    அன்றாடம் முந்திரியை சிறிது உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    வாய் பராமரிப்பு :-

    முந்திரியில் மக்னீசியம் இருப்பதால், இவை எப்படி எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறதோ, இதேப் போல் பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

    நிம்மதியான தூக்கம் :-

    தினமும் சிறிது முந்திரி சாப்பிட்டு வந்தால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், இறுதி மாதவிடாய்க்கு பின், நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

    FB

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2408
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மருந்தில்லா மருத்துவம் - இயற்கை வைத்தியம் :-

    1.மார்பு சளி
    வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

    2.சளிக் காய்ச்சல்
    புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

    3.இருமல், தொண்டை கரகரப்பு
    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    4.சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

    5.டான்சில்
    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

    6.வயிற்றுப் போக்கு
    சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

    7.வாயுக் கோளாறு
    மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

    8.நெஞ்சு சளி
    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

    9.தலைவலி
    ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

    10.தொண்டை கரகரப்பு
    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

    FB

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2409
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மூலிகை பயன்கள் - சோம்பு - இயற்கை மருத்துவம்
    மருத்துவக் குணங்கள்:

    1) பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.

    2) இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.

    3) இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

    4) எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

    5) சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

    6) அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

    7) கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

    8) உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

    9) சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

    10) நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
    அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

    11) பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

    janu23 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2410
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்....

    பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். அதற்கு பாகற்காயை சரியாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுவீர்கள். பின் பாகற்காய் என்றாலே விரும்பி சாப்பிடுவீர்கள். சரி, இப்போது பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

    சுவாச கோளாறுகள் :-
    பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

    கல்லீரல் பிரச்சனைகள் :-
    தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

    நோயெதிர்ப்பு சக்தி :-
    பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    பருக்கள் :-
    உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

    நீரிழிவு :-
    நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

    மலச்சிக்கல் :-
    மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

    ஆரோக்கியமான சிறுநீரகம் :-
    பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

    இதய நோய் :-
    பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    புற்றுநோய் :-
    பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

    எடை குறைவு :-
    பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் தண்ணீர் 80-85% சதவீதம் உள்ளதால், இதனை உட்கொண்டால், வயிறும் விரைவில் நிறைந்துவிடும்.

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter