Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2451
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    எளிய சித்த மருத்துவம்.....


    * மிளகை நெய்யில் வறுத்து கொள்ளவும், அதை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். அதில் வெல்லப்பாகை சேர்த்து உருண்டை தயாரித்து கொள்ளவும். அந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வர சளி, இருமல் ஒழியும். குரல் கர கரப்பு நீங்கும்.


    * ஒரு வயதுக்கு அதிகமான குழந்தைக்கு வெற்றிலை சாற்றில் சிறிது தேன் சேர்த்து தந்தால் ஜலதோசம் ஓடிவிடும். சுக்கு, திப்பிலி, மிளகு எல்லா வற்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் அதே அளவு பெருங்காயத்தை எடுத்து பொரித்து பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு தினம் சிறிது சாப்பிட்டுவர வாயுத்தொல்லை, அஜீரணம் ஒழியும்.


    * இடுப்பு வலி தொடர்ந்து பெண்களுக்கு இருந்தால் உளுந்தை வறுத்து பொடி செய்து சர்க்கரை கலந்து தினம் மூன்று நெய் கரண்டி அளவு சாப்பிட்டால் போதும்


    * துளசி, வெற்றிலை, ஆடாதொடை, கண்டங்கத்திரி, சிற்றரத்தை, தூதுவேளை ஆகி யவற்றின் சாற்றை கசாயமாக்கி கொடுத்தால் கபத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும்.


    * லவங்கம், ஓமம் இரண்டையும் பொடிசெய்து அத்துடன் சிறிதளவு கற்பூரத்தையும் சேர்த்து சொத்தையுள்ள பல், வீக்கமுள்ள ஈறுகளின் மீது சில சிட்டிகை எடுத்து அப்பி, பின்னர் பத்து நிமிடம் கழித்து வாயை கொப்பளித்துவிட வேண்டும்.


    * வசம்பை சுட்டு சாம்பலாக்கி தினந்தோறும் வேளைக்கு ஒரு அரிசி எடையுடன், சிறிது தேன் சேர்த்து மூன்று வேளை தந்தால் கக்குவான் இருமல் சட்டென்று நிற்கும்.




    Sponsored Links
    narayani80 and jv_66 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2452
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,421

    Re: Today's Medical Info

    medical informations are very useful. thank you.

    Sriramajayam likes this.

  3. #2453
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ​Always u r my dear friend.


    Quote Originally Posted by narayani80 View Post
    medical informations are very useful. thank you.


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2454
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!


    நெல்லிக்காயில் ஒரு வகை தான் மலை நெல்லிக்காய். இதில் சாதாரண நெல்லிக்காயை விட அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இதனை அன்றாடம் ஒன்று சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். மேலும் மலை நெல்லிக்காயில் பாலிஃபீனால்கள், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் வைட்டமின்களான கரோட்டீன்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது.


    இங்கு மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மலை நெல்லிக்காயை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.


    சரும செல்களை பாதுகாக்கும் :-


    மலை நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், சூரியக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, சரும புற்றுநோய் வருவதும் தடுக்கப்படும்.


    இதய நோயைத் தடுக்கும் :-


    மலை நெல்லிக்காய் இரத்த கொலஸ்ட்ராலின் அளவை சீராக பராமரிக்கும். அதிலும் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிந்து, அடைப்பை ஏற்படுத்தி, அதனால் இதயம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.


    நீரிழிவைக் கட்டுப்படுத்தும் :-


    மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்பட்டு, இன்சுலினை சரியான அளவில் சுரக்க உதவும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.


    இளமையைத் தக்க வைக்கும் :-


    மலை நெல்லிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இவை கொலாஜென் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, வைட்டமின் ஏ சருமத்தின் இளமையைத் தக்க வைக்கும். அதிலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


    விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும் :-


    ஆயுர்வேத மருத்துவத்தின் படி, தினமும் மலை நெல்லிக்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், பாலுணர்வு அதிகரிப்பதோடு, ஆண்களின் விந்தணு உற்பத்தியும், தரமும் அதிகரிக்கும்.


    புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் :-


    மலை நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்திருப்பதால், இவை உடலில் கார்சினோஜெனிக் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை எதிர்த்துப் போராடும். மேலும் மலை நெல்லிக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும்.


    வயிற்று உப்புசம் :-


    மலை நெல்லிக்காயில் நார்ச்சத்து, பாலிஃபீனால் மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, நோயெதிர்ப்பு அழற்சியும் அதிகம் உள்ளது. இதனால் இவற்றை உட்கொண்டு வருவதன் மூலம், வயிற்று உப்புசம் ஏற்படுவது தடுக்கப்படும். அதிலும் மலை நெல்லிக்காயை ஜூஸ் செய்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்று உப்புசத்துடன், அசிடிட்டி பிரச்சனையும் சேர்ந்து குணமாகும்.


    தொண்டை புண் மற்றும் இருமல் :-


    மலை நெல்லிக்காயை ஜூஸ் போடும் போது, அத்துடன் சிறிது இஞ்சியை சேர்த்து, தேன் கலந்து குடித்தால், தொண்டைப் புண் மற்றும் இருமல் உடனே குணமாகும். மேலும் இந்த ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வாயில் தங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றி, நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.


    கல்லீரலை பாதுகாக்கும் :-


    தினம் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கெமிக்கல் மற்றும் ஆல்கஹால் மூலம் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும். எனவே இரவில் ஆல்கஹால் அருந்தினால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் ஆல்கஹால் குடிப்பதால் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, ஹேங் ஓவர் பிரச்சனையும் நீங்கும்.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2455
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம்:-

    வயிற்றுப் புழுக்கள்:-

    பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

    நல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு, மூன்று மிளகு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள், கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி கோளாறுகள் தீரும்.

    வயிற்றுப் புண்:-

    ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

    முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.

    சாணாக்கிக் கீரையை பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2456
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!


    பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :


    நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.


    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


    நீரழிவு நோயைத் தடுக்கும் :


    நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


    பித்தப்பைக் கல்லைக் கரைக்கும் :


    நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.


    இதயம் காக்கும் :


    நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.


    இளமையைப் பராமரிக்கும் :


    இது இளமையைப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையால் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.


    ஞாபக சக்தி அதிகரிக்கும் :


    நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.


    மன அழுத்தம் போக்கும் :


    நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.


    கொழுப்பைக் குறைக்கும் :


    ஆம், உண்மைதான். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


    கருப்பைக் கோளாறுக்கு முற்றுப்புள்ளி :


    பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்குப் பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாகப் பெண்களுக்குக் கருப்பைக்கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2457
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பலத்தோடு பலன் தரும் பலாக்கொட்டை...!!!


    நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.


    பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அது போன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையை பெருக்கும் தன்மை உள்ளது தான் பலாக்கொட்டை. ”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.


    100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாகொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.


    பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்துசப்பாத்தியாகவோ ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20, உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலா கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.


    இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.


    டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் அவர்களின் சில குறிப்பு:


    தொடர்ச்சியான முடி உதிர்வு, தலையில் அரிப்பு போன்ற தொந்தரவால் துவண்டு போகிறவர்களுக்குப் பலன் தருகிறது பலாக்கொட்டை. இதை காயவைத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பவுடர் அரை டீஸ்பூன், பயத்தமாவு ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் 2 டீஸ்பூன்... இந்த மூன்றையும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் குழைக்க வேண்டும். தேவைப்பட்டால் அதில் சிறிது வெந்நீரையும் சேர்த்து, தலையில் பூசி 10 நிமிடம் ஊறவிடுங்கள். பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பூவால் தலையை அலசினால் அரிப்பு குறைந்து, முடி கொட்டுவது நிற்கும். அடுத்து முடி வளர ஆரம்பிக்கும்.


    பலாக்கொட்டையில் சில உணவுகள் ...!!


    பலாக்கொட்டை பிரட்டல், பலாக்கொட்டை-மாங்காய் சாம்பார், பலாக் கொட்டை உருண்டை, பலாக்கொட்டைப் பொரியல், பலாக்கொட்டை- பயற்றங்காய் பிரட்டல், உருளைக்கிழங்கு பலாக்கொட்டை மசாலா, பலாக்கொட்டை பொடிமாஸ், கத்தரிக்காய் -பலாக்கொட்டை புளிப்பு கூட்டு, பலாக்கொட்டை சோயாப் பொரியல் ...!!



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2458
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    💥கடுங் கோடைக் காலத்தில் நம்மைப் பாதுகாக்கும் தோழன்தான் நுங்கு. தவிருங்கள artificial cool drinks, 🍦🍨🍧 ice cream ஐட்டங்களை!

    🌸பனைவெல்லம், பனங்கற்கண்டு,
    பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து
    கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே
    மருத்துவ குணம் வாய்ந்தவை.

    🌸நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,
    கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
    பொட்டாசியம், தயாமின்,
    அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற
    சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

    🌸நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி,
    உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.

    🌸நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.
    இதனால் சாப்பிட பிடிக்காமல்
    இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.

    🌸மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு
    இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.

    🌸சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
    எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும்
    தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச்
    சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.

    🌸ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
    தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
    விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.

    🌸நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம்
    இருப்பதால் பெண்களுக்கு மார்பகப்
    புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

    🌸வெயில் காலத்தில் அம்மை நோய்கள்
    வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு
    சக்தியைத் தரும்.
    இந்த செய்தியை உங்கள் குடும்ப மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்...



    My WhatsApp



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2459
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!




    கோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும். அத்தகையவர்கள் மோர் கொண்டு போக நினைப்பார்கள். மேலும் மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அதன் நன்மை தெரியாமலேயே இதனை நல்லது என்று நினைத்து வாங்கிக் குடிப்பார்கள்.


    எப்போதுமே எந்த ஒரு பொருளை சாப்பிடும் முன்னும், அதன் நன்மைகளை தெரிந்து கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. இங்கு அப்படி கோடையில் பலரும் அதிகம் குடிக்க நினைக்கும் மோரை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!


    வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய... நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.


    கொழுப்பைக் கரைக்கும் மதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா? அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும். இதனால் தான் மோர் குடித்த பின்னர், வயிறு இலேசானது போல் உணர்கிறீர்கள்.


    செரிமானத்தை அதிகரிக்கும் மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.


    உடல் வறட்சியைத் தடுக்கும் மோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.


    லாக்டோஸ் சகிப்புத்தன்மை சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்கும். அத்தகையவர்களால் பால் பொருட்கள் எதையும் சாப்பிட முடியாது. ஆகவே அத்தகையவர்கள் கால்சியம் சத்தை பால் பொருட்களைத் தவிர மற்ற உணவுப் பொருட்களில் இருந்து பெற வேண்டும்.


    ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மோர் குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. மேலும் இயற்கையான கால்சியத்தை மோரில் இருந்து பெறலாம்.


    பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள் மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


    இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி, மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.


    மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.


    அசிடிட்டி மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.


    தேவையான பொருட்கள்: தயிர் - 1/2 டம்ளர் குளிர்ந்த நீர் - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவு மிளகு - 2 சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி - 1 இன்ச் கறிவேப்பிலை - 2-3 இலைகள் கொத்தமல்லி - சிறிது பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)


    செய்முறை: மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாட்டிலில் தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி, அதனை மூடி நன்கு குலுக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை குலுக்கினால், மோர் ரெடி!!!

    jv_66 and Sriramajayam like this.

  10. #2460
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    எளிய இயற்கை வைத்தியம் :-


    1. நெஞ்சு சளி


    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.


    2. தலைவலி


    ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.


    3. தொண்டை கரகரப்பு


    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.


    4. தொடர் விக்கல்


    நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.


    5. அஜீரணம்


    ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
    சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.


    6. வாயு தொல்லை


    வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.


    7. வயிற்று வலி


    வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.


    8. சரும நோய்


    கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.


    9. மூக்கடைப்பு


    ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.


    10. கண் எரிச்சல், உடல் சூடு


    வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.


    ​FB


    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter