Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2461
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் வெட்டிவேரின் மருத்துவ குணங்கள்....


    வெட்டிவேர் வேர்வையை உண்டாக்குவதுடன் உற்சாக மிகுதியையும் ஏற்படுத்தக் கூடியது. தலைமுடித் தைலத்தில் சேர்ந்து முடி விழாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க வெட்டிவேர் எண்ணெய் உபயோகப்படும்.
    இதைக் குடிநீராகக் காய்ச்சிக் குடிப்பதால் பல்வேறு வகைப்பட்ட காய்ச்சலும் (சுரம்) குணமாவதோடு கைகால்களில் ஏற்படும் பிடிப்பு, மாதர் தமக்கு ஏற்படும் சூதக வாயு எனப்படும் மாத விலக்குக் கோளாறுகள் ஆகியவற்றையும் குணமாக்கும்.


    வெட்டிவேர் பித்தரோகம், காமாலை, சோகை, சுரம், குட்டம் (தோல் நோய்கள்), தலைநோய், கழுத்து நோய், சுக்கில நட்டம், உன்மத்தம், திரிதோஷம், மூர்ச்சை (மயக்கம்), நேத்திர ரோகம் (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்) போன்ற நோய்களுக்கும் ஓர் அற்புதமான மூலிகை ஆகும்.
    வெட்டி வேரை அரைத்தோ அல்லது அதன் எண்ணெய்யையோ பெண்களின் மார்பகத்தின்மேல் தோன்றும் சிலந்திப் புண்கள், ரணம், கட்டி, மேகக்கட்டி இவைகளுக்கு மேற்பூச்சு மருந்தாகப் போட விரைவில் குணமாகும்.


    வெட்டிவேர் உடலுக்கு மேலும், உடல் உள்ளுறுப்புகளுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியது, உடல் காய்ச்சலைப் போக்கக் கூடியது, வியர்வையைத் தூண்டக் கூடியது, உள்ளுறுப்புகளைத் தூண்டி சீராகச் செயல்பட வைக்கக் கூடியது, வயிற்றுக் கோளாறுகளை வேறறுக்கச் செய்வது, கடுப்பினைப் போக்கவல்லது, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தக் கூடியது, வற்றச்செய்யும் தன்மையுடையது, ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது.


    வெட்டிவேர் காய்ச்சல், கடுப்பு, வயிற்றில் சேர்ந்த வாயு, வாந்தி, குமட்டல், சிறுநீரோடு விந்து வெளியாகுதல், சிறுநீர்த்தூரை வலி, எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் சேர்ந்து வருதல், ஆகியனவற்றுக்கு மருந்தாகிப் பலன் தருகின்றது. வெட்டி வேரைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வாயு ஆகியவற்றைப் போக்கக் கூடியது.


    வெட்டிவேர் ஒரு நோய் எதிர்ப்புத் தன்மை வாய்ந்த மூலிகை ஆகும். இது முகப்பருக்களைப் போக்குவதில் முதன்மையான மூலிகை ஆகும். வெட்டி வேரையும் சந்தனத்தையும் ஒருசேர சேர்த்து முகப்பூச்சாக உபயோகப்படுத்துவதால் முகப்பருக்கள் விரைவில் குணமாகும்.
    இரவு முழுவதும் சிறிது வெட்டி வேரை நீரில் இட்டு ஊற வைத்து எடுத்த நீரில் சந்தனக் கட்டையை இழைத்து வந்து . சந்தன விழுதை மேல்பூச்சாக பூசுவதால் பருக்கள் விரைவில் குணமாகும். இதனோடு கூட வெட்டிவேர் எண்ணெய்யும் அவ்வப்போது பருக்களின் மேலே போட்டு வருவதால் வெகுவிரைவான முன்னேற்றம் காணும்.
    வெட்டிவேர் தலைமுடி பராமரிப்புக்கு மிகவும் முக்கியமான ஓர் மூலிகை ஆகும். வெட்டிவேரை நீரிலிட்டு ஊற வைத்துப் பெற்ற வாசமுள்ள நீரை தாகம் தீர்க்கவும், உள்ளுறுப்புகளின் வெப்பத்தைத் தணிக்கவும் குடிப்பது வழக்கம்.


    வெட்டிவேர் நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவுவதால் தலைசூடு தணியும், கண்கள் குளிர்ச்சி பெறும், கண்பார்வையும் தெளிவு பெறும். வெட்டிவேர் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும்.


    வயிற்றில் மட்டுமின்றி உள்ளுறுப்புக்கள் வேறு எங்கு புண்கள் இருந்தாலும் அவற்றை ஆற்றுவதோடு ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும் வாய்துர்நாற்றத்தையும், உடலின் வியர்வை நாற்றத்தையும் கூட இது போக்கும்.


    வெட்டிவேர் நீர் மத்திய நரம்பு மண்டலத்துக்கு சாந்தம் தரவல்லது.
    வெட்டிவேரை ஒரு கற்றை அளவு எடுத்து மண் பானையிலிட்டு கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை அதனுள் விட்டு இரண்டு அல்லது மூன்று மணிநேர அளவு ஊறவைக்க வெட்டிவேரின் மணமும், குணமும் நீரோடு கலந்துவிடும். பின்னர் ஒரு எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்க எலுமிச்சையின் சத்தும் நீரோடு கலந்துவிடும். இதை வடிகட்டி உள்ளுக்குக் குடிப்பதற்கும் தலைமுடியைக் கழுவுவதற்கும் பயன்படுத்தலாம்.


    உடல் குளிர்ச்சி பெற்று கோடைக்கால வெய்யிலைத் தவிர்க்க உதவும். தலைமுடியை இந்நீர் கொண்டு கழுவுவதால் தலைக்குக் குளிர்ச்சியும், தலைமுடிக்கு வறண்ட நிலை மாறி ஈரத்தன்மையும், மென்மையும், அடர்த்தியும் ஏற்படுவதோடு பொடுகு போன்ற தொல்லைகளும் விலகிப் போகும்.


    வெட்டிவேரை ஓர் அருமையான குளியல் பொடியாகவும் நாம் உபயோகப்படுத்தலாம்.


    வெட்டிவேரை ஒருபந்துபோல சுற்றி குளிக்கும் போது உடலைச் சுத்தப்படுத்த தேய்த்துக் குளிக்கலாம். இதனால் தோலின் வறண்ட, இறந்துபோன செல்கள் நீக்கப்பட்டு தோல் அழகும் மென்மையும் பெறும்.
    அதுமட்டுமின்றி வெட்டிவேரையும் பாசிப்பயரையும் ஒரே மெல்லிய பொடியாக அரைத்து வைத்துக் கொண்டு சீயக்காய்,
    சோப்புக்கு பதிலாக அன்றாடம் உடலைத் தேய்த்துத் குளிப்பதற்குப் பயன்படுத்துவதால் தோல் பட்டு போன்ற பளபளப்பையும் மென்மையும் பெறுவதோடு நல்ல வண்ணத்தையும் அடையும். இப்பொடி எந்த ஒரு ரசாயனக் கலவையும் சேராததால் சிறு குழந்தைகளை குளிப்பாட்டுவதற்குக் கூட இதைப் பயன்படுத்தலாம்.


    * வெட்டி வேரைப் பாய்போல் முடைந்து நீரில் நனைத்து பகுதியிலோ வாயிற்பகுதியிலோ திரை சீலை போல தொங்க விடுவதால் வெளியிலிருந்து உள்வரும் காற்று குளிர்ந்ததாகவும், வாசனையுள்ளதாகவும் இருக்கும். வாசனை ஓர் மருத்துவ குணத்தையும் பெற்றது ஆகும். இந்த மணம் மனிதர்க்கு குளிர்ச்சி தருவதோடு மனதுக்கு இதமான அமைதியைத் தரக் கூடியது ஆகும்.
    (அரோமாதெராபி) வெட்டிவேரின் மணத்தால் இன உறுப்புகளின் இறுக்கம் தளர்ந்து (ஃப்ரிஜிடிடி) உடல் உறவில் நாட்டம் ஏற்படும். உறவின் போது கோடைக்கால எரிச்சலும் குளிர்தருவதாகும். வெட்டிவேரின் இந்த குளிர்ந்த மணம் வெறி நோயையும் (இன்சேனிடி), கடுங்கோபத்தையும், படபடப்பையும் (ஆங்சைட்டி) கூட போக்க கூடிய மருந்தாக அமையும். வெட்டி வேரின் குளுமையும் மணமும் மிக்க காற்று நல்ல உறக்கத்தைத் தூண்டக் கூடியதாகவும் (செடேடிவ்) அமையும்.


    * வெட்டி வேர் வீக்கத்தைக் கரைக்கும். (ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி) தன்மையுடைது மட்டுமின்றி நோய்த்தடுப்பு பொடியாகவோ, எண்ணெயாகவோ உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்துவதால் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து அடைப்பை அகற்றி இரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற வழிசெய்யும். மேலும் நரம்பு மண்டலங்களுக்கு ஊட்டமும் அமைதியும் தந்து ஒழுங்காகச் செயல்படும் படி வழி செய்யும்.


    * வெட்டிவேரைப் பொடியாகவோ எண்ணெயாகவோ உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்துவதால் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து அடைப்பை அகற்றி இரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற வழி செய்யும். மேலும் நரம்பு மண்டலங்களோடு ஊட்டமும், அமைதியும் தந்து ஒழுங்காகச் செயல்பட வழிசெய்யும்.


    * வெட்டி வேரை அரைத்து பசையாக்கியோ அல்லது அதன் எண்ணெயிலோ மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் மூட்டுவலிகள் (ரூமேட்டிசம்) கை,கால்வலிகள், ஓரித்தலைவாதம் (கவுட்), தசைவலிகள், தோல்வறட்சி, தோலில் ஏற்படும் வெடிப்புகள் ஆகியன விரைவில் குணமாகும்.


    * வெட்டிவேர் எண்ணெயை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்துவதால் அதனுடைய சாந்தபடுத்தும் தன்மையால் கோபம் தணியும். உணர்ச்சிவயப்படுதல், வலிப்பு மற்றும் மூர்ச்சைக்கு ஆளாகுதல், மனஅமைதியின்மை, நரம்பு தளர்ச்சி ஆகியன குணமாகும்.
    வெட்டிவேர்


    மருந்தாகும் விதம்:- .


    * வெட்டிவேரைப் பொடித்து நன்றாக சலித்து வைத்து கொண்டு அந்தி சந்தி என இரண்டு வேளையும் 200மி.கி முதல் 600 மி.கி வரை தேனுடன் சேர்த்துக் குழைத்து சாப்பிட பைத்தியம், உடல் எரிச்சல், நாவறட்சி இவைகள் நீங்குவதோடு உள்ளக் களிப்பு எய்தும்.


    * அதிகமான காயச்சல் கண்டபோது வெட்டிவேரை நீரில்அல்லது பன்னீரில் அரைத்து நெற்றிக்கு பற்றுபோடுவதால் வெகு சீக்கிரத்தில் காய்ச்சல் தணிந்து போகும்.


    * ஒரு பாட்டிலில் கால்பங்கு அளவுக்கு வெட்டி வேரையும்,வெந்தயத்தையும் போட்டு அதனுடன் சிறிது கருஞ்சீரகமும் சேர்த்து மீதிப்பகுதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி நல்ல சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதை சூரியபுடம் என்று சொல்லுவர். ஒரு வார காலம் இப்படி சூரியபுடமாக வைத்த எண்ணெயை அன்றாடம் தலைக்குத் தேய்த்து கண்களின் சிவப்பு மாறி கண்பார்வையும் தெரிவுபெறும். இதே எண்ணையை வெண்புள்ளிகளின் மீது (லூக்கோடெர்மா) சற்று அழுத்தி தேய்த்து வருவதால் நாளடைவில் வெண்புள்ளிகள் குணமாகும்.


    * வெட்டிவேரைப் பொடித்து நன்றாக சலித்துக் கொண்டு அதனுடன் நெருஞ்சிமுள் சூரணம் சமபங்கு சேர்த்து அன்றாடம் அந்தி சந்தி என இருவேளை தேனுடனோ அல்லது வெந்நீருடனா சேர்த்து அருந்தி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.


    சிறுநீரகத்தில் சிறுநீர் தேங்கி தருகின்ற சிறுநீரகக் கெடுதல் மறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் போன்றவையும் குணமாகும்.


    * வெட்டி வேர்ப்பொடி தினம் இருவேளை வெருகடி அளவு தேனில் குழைத்து உண்டு வர காக்காய் வலிப்பு (எபிலெப்ஸி) குணமாகும்.
    மணமும் மருத்துவ குணமும் நிறைந்த வெட்டிவேரை மனதில் பதிய வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோலுவோம்


    FB



    Sponsored Links
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2462
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல்
    உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2463
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம் :-


    பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.


    ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.


    காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும். உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.


    தினசரி 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு, வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு.


    குழந்தைகளுக்கு பேரிச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து தந்தால் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கினால் ஏற்படும் பலகீனத்தைப் போக்க பேரிச்சம் பழத்தை அதிகம் உட்கொள்வது நல்லது.


    FB


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2464
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வெயிலுக்கு ஏற்ற பானகம்


    தேவையானவை:


    வெல்லம் - 200 கிராம், புளி - 50 கிராம், பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, புதினா இலைகள் - 5, எலுமிச்சைப்
    பழம் - 1.


    செய்முறை:


    வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும். பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.
    பலன்கள்: உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். கோடைக்கு ஏற்ற பானம் இது.


    Dr Vikatan


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2465
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள் :-

    இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

    இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

    இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

    பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

    பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.


    FB



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2466
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள் :-

    ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

    எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

    தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

    அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

    திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

    கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

    ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

    அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.


    FB



    rsakthi1974 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2467
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மருத்துவ குணங்கள் :-

    எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

    செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

    மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் கு ணமாக்கும்.பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெ ட்டிப்படும்.

    சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்புதளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

    தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழைபழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக்கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

    மேலும் தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.






    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2468
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    எளிய இயற்கை மருத்துவம் :-

    இடைவிடாத இருமலுக்கு: அதிமதுரத்தை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

    தாது விருத்திக்கு: உடல் வலிமைக்கும் தாது விருத்திக்கும் முருங்கைப்பூ நல்லது. தினமும் இரவில் படுக்க செல்லும் முன் பசும்பாலில் முருங்கைப்பூவைப் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    தொண்டைப்புண் ஆற: இலந்தை இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதில் உப்பு போட்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் ஆறும்.

    வயிற்றில் பூச்சி போக: மாங்கொட்டை பருப்பை காயவைத்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டால் பூச்சி வெளியேறிவிடும்.

    குளவி கொட்டினால்: குளவி கொட்டினால் அந்த இடத்தில் ஒரு வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் வீக்கம் வராது. வலியும் போய்விடும்.

    சேற்றுப் புண் போக: இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது அந்த மாவை கொஞ்சம் எடுத்து அதில் எலுமிச்சம் சாறு சேர்த்து புண்ணில் தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும்.

    விக்கல் நிற்க: விடாமல் விக்கல் எடுக்கிறதா? கடுக்காய் தோலை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். விக்கல் வரும் போது ஒரு ஸ்பூன் பொடியை தேனில் கலக்கி சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

    போதை தெளிய: அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருப்பவர்களுக்கு மாதுளம்சாறு ஒரு டம்ளர் கொடுத்தால் போதும். விரைவில் போதை தெளியும்.

    பல் வலி போக: பலி வலியை உடனடியாக போக்க ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருங்கள். வலி போனதும் பல் டாக்டரை பார்த்து நிரந்தர தீர்வு காணுங்கள்.

    தூக்கம் வருவதற்கு: ஒரு வெங்காயத்தை எடுத்து கண்ணீல் சாற்றை பிழியுங்கள். கண்ணீர் வந்து அடங்கியதும் தூக்கம் தானாக வரும்.





    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2469
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பாட்டி வைத்தியம் :-


    * நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.


    * இதயமும் வலுவடையும். இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.


    * குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.


    * நாய் கடித் தால், அந்த இடத் தில் எருக்கண் பாலை விட்டால் விஷம் முறியும்.


    * ஒரு டம்பளர் நீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும்.


    * ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2470
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.


    கால் ஆணி.

    பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.

    அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு.

    கால் ஆணி ஏற்படக் காரணம்:

    பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

    கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ம் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

    காலுக்குப் பொருந்தாத சிறிய அள வு செருப்புகளைப் பயன்படுத்தவ தாலும், வெறும் காலில் நடப்பதா லும் கூட கால் ஆணி ஏற்படும்.

    கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

    கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:

    1) வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்.

    2) கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக் கும் இடங்களில் தடவி வரவும்.

    3) அம்மான் பச்சரிசி செடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் செடியை உடைச்சு, அதில் இருந்து வரும் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.

    4) மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து நன்றாக மையாக அரைக்கவேண்டும் . ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.

    5) இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

    6) மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.


    7) மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

    Last edited by Dangu; 4th Apr 2015 at 11:35 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter