Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2531
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள் :-


    உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம்.


    • பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.


    • ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.


    • வால் நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இது பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.


    • பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.


    * ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.


    • க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.


    • தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.




    Sponsored Links
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2532
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info. - 2


    மே 5ம் தேதி உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 30 கோடி பேர் ஆஸ்துமா நோயாளிகளாக உள்ளதாக, உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கத்தால், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு குடியெறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு தான் ஆஸ்துமா தாக்கம் அதிகமாக இருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை 2025ல் 40 கோடியாக உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வாமையே ஆஸ்துமாநீண்ட கால ஒவ்வாமையால் வருவதே ஆஸ்துமா. நுரையீரல் மற்றும் சுவாச குழாய்களில் ஏற்படும் மாற்றங்களால் மூச்சிரைப்பு ஏற்படும். மூச்சுத்திணறல், இளைப்பு, அதிக இருமலால் தூங்கக்கூட முடியாது. நெஞ்சில் வலி அல்லது இறுக்கம் ஏற்படும். நுரையீரல் செயல்திறன் பாதிக்கப்படும். 4 வகைகள்...உள்இயல்பால் வருவது, புறவழியால் ஏற்படுவது, மருந்துகளால் உருவாவது, தொழில் வகையால் ஏற்படுவது என ஆஸ்துமாவில் 4 வகைகள். இயல்பான ஆஸ்துமா குழந்தை பருவத்தில் வரக்கூடியது. பரம்பரையால் வரலாம்.

    பெண்களுக்கு அதிகம் வரும். புறவழி ஆஸ்துமா அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய வெளிப்பொருட்களால் ஏற்பட கூடியது. இது ஆண்களை அதிகம் பாதிக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு எளிதில் பரவும். மருந்துகளால் ஏற்படும் ஆஸ்துமா ஏதாவது நோய்க்கு மருந்துகள் எடுத்து கொள்ளும் போது, அதனால் அலர் ஜி ஏற்பட்டு ஆஸ்துமா வருகிறது. உடல் எடை, மருந்தின் அளவு பொருத்து ஆஸ்துமா தாக்கம் இருக்கும். ஆஸ்பிரி ன் போன்ற மருந்துகள் உதாரணம். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வரும்.

    தொழிலால் பாதிப்புசெய்யும் தொழிலே தெய்வம். ஆனால் அந்த தொழிலால் கூட பலருக்கு ஆஸ்துமா வரும். அதில் பஞ்சாலை தொழிலாளர்கள், புகைப்பட ஊழியர்கள், மாவு அரைக்கும் தொழிலாளர்கள், பேக்கரி யில் வேலை செய்பவர்கள், பிளாஸ்டிக் தொழில் செய்பவர்கள், சாயப்பொருள்களை தயாரிப்பவர்கள், கல் உடைக்கும் தொழிலாளர்கள், விமானத்தில் பணிபுரி பவர்கள், கோழிப்பண்ணையாளர்கள், கால்நடை மருத்துவர்கள், தச்சுவேலை செய்பவர்கள், நெசவாளர்களை இந்நோய் தாக்கும்.

    ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்: சிலருக்கு ஒத்துக்கொள்ளாத பொருளை சாப்பிட்ட உடன் அல்லது சுவாசித்த உடன் உடலில் மாற்றங்கள் ஏற்படும். இதுதான் ஒவ்வாமை(அலர் ஜி). அலர் ஜி ஏற்படுத்தும் பொருள் உடலுக்குள் சென்றதும் திசுக்களில் உள்ள எதிர் ப்பு பொருட்கள் எதிர் க்கின்றன. அலர் ஜி பொருளுக்கும் எதிர் பொருளுக்கும் இடையே சண்டை நடக்கிறது. இதை ஆன்டிெஜன் ஆன்டிபாடி செயல்பாடு எனப்படும். திசுக்களில் இருந்து ஹிஸ்டமின், பிராடி கைனின், கைனின் போன்ற பொருள் வெளியேற்றப்படுகிறது. இவைதான் மூச்சு குழாய்களில் இறுக்கத்தையும் பிடிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. தும்மல், மூக்கிலிருந்து நீர் வடிதல், கண்நோய் ஏற்படுகிறது.

    பரம்பரைக் காரணம் பரம்பரையும் ஒரு காரணம். பெற்றோர் அல்லது மூதாதையரோ அல்லது குடும்பத்தில் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளில் யாருக்கேனும் இந்நோய் தாக்கியிருந்தால் அது மற்றவர்களுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வாமை அடுத்த காரணமாகிறது. சுற்றுப்புற மாசுக்கள், தொழிற்சாலை கழிவுகள், நுரையீரல் மற்றும் சுவாச குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பஞ்சாலை, அதிக புகை வெளியேறும் தொழிற்சாலைகள், சிமெண்ட் மற்றும் கல் உடைக்கும் ஆலைகள் காரணமாகிறது.

    யாருக்கும் வரலாம் குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது. குழந்தையையும் இந்த நோய் தாக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவா–்களுக்கு காற்றில் காணப்படும் தூசிகள், நுண்ணுயிரிகள் மூலம் ஏற்படலாம். மேலும் வைரஸ், புகை பிடித்தல், குளிர் ந்த காற்று மற்றும் மனஅழுத்தம் ஆகியவை மூலமும் ஏற்படலாம்.கட்டுப்படுத்த முடியும்அலோபதியில் முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்நோய்க்கான அறிகுறிகளையும், வீரி யத்தையும் கட்டுப்படுத்தலாம். நோயின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை மூலம் நோயாளிகள் இயல்பான வாழ்க்கையை பெறலாம்.என்ன செய்ய வேண்டும்

    தூய்மையான சூழல் இருக்க வேண்டும். தூசிகள் நிறைந்த சூழலை தவிர்க்க வேண்டும், படுக்கை மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும், செல்லப்பிராணிகளை வாரம் ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், படுக்கை விரி ப்புகளை தரமான ஒவ்வாமை நீக்கும் சோப்பு மூலம் சுத்தம் செய்ய வேண்டும். தரை விரி ப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வாமை பரி சோதனை செய்து ெகாள்ள வேண்டும். செல்லப்பிராணிகளை படுக்கையிலோ அல்லது படுக்கை அறையிலோ அனுமதிக்கக்கூடாது. ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். மகரந்தம், பாசிகள், பூஞ்சைகள் இருக்கும் இடத்தில் வேலை செய்வதை, விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    படுக்கை விரி ப்புகளை வாரந்தோறும் வெந்நீரி ல் துவைக்க வேண்டும். தூசி தாக்காமல் பார் த்து கொள்ள வேண்டும், செல்லப்பிராணிகளை படுக்கை மற்றும் அறைகளில் விடக்கூடாது. குளிர் காலங்களில் பனியின் தாக்கமும், கோடைக்காலங்களில் மகரந்தத்தின் தாக்கமும் அதிகம் இருப்பதால் வெளியில் அதிக நேரம் இருப்பதை தவிர் க்க வேண்டும், வாசனை திரவியங்களின் நறுமணம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் அதனை பயன்படுத்துவதை தவிர் க்க வேண்டும், சுகாதாரமான குடிநீர் மற்றும் சூழல் மூலம் நோய் தாக்காமல் தற்காத்து கொள்ள வேண்டும், குளிர்ந்த நீர் , குளிர் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். இவைகளை தவிர்த்து ஆஸ்துமாவில் இருந்து விடுபட வேண்டும்.இத்தகவலை சுவாசம் தமிழ்நாடு ஆஸ்துமா அலர் ஜி ஆராய்ச்சி மைய டாக்டர் ஜி.கமல் கூறியுள்ளார்.

    நன்றி - டாக்டர் ஜி.கமல்


    jv_66 likes this.

  3. #2533
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info. - 2


    நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம். படிக்கலாம் அல்லது ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா? அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.? போதும் . மேலோட்டமாகவே பார்ப்போம். நாம் உட்கார்ந்து செய்யக்கூடிய வேலை எதுவாயினும் உடல் பொதுவாக நிமிர்ந்த நிலையில் இருக்காது என்பதைக் கவனியுங்கள். மூச்சு எண்ணிக்கை அல்லது மூச்சின் நீளம் குறையக் காரணம் பல இருந்தாலும் முக்கியமானது நேராக உட்காராமைதான் மூச்சுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

    செத்தா போய்விட்டுவோம்?

    உடல் அதற்குத் தேவையான அளவு மூச்சை எடுத்துக்கொள்ளத்தானே செய்யும் என்றால் ஆமாம். ஆனால் அந்த மூச்சு உயிரோடு இருக்கப் பயன்படுமே தவிர நம்மை உயிர்ப்போடு வைத்திருக்காது.

    மூச்சு இழுத்துவிடுவதில் உடனடி பலனை இரத்தம் பெறுகிறது. இரத்தம் வளமானாலே நோய் என்பது உங்களை விட்டு தூர விலகிவிடும். மூச்ச இழுன்னு சொன்னா நமக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டர் நெஞ்சுல ஸ்டெதஸ்கோப்ப வச்சுக்கிட்டு மூச்ச இழுக்கச் சொன்னதும், வயித்த எக்கி நெஞ்சுக்கூட்ட உயர்த்தி தம் கட்டி மூச்ச்ச இழுக்கறதுதான் தெரியும் இப்படி இழுக்கும்போது நுரையீரல் நிறைய காற்று நிரம்புவது போல் தெரிஞ்சாலும் உண்மையில் சற்றே அதிகம் இழுக்கிறோமே தவிர முழுமையாக காற்றை இழுப்பதில்லை. சரி மூச்சை சரியான விதத்தில் இழுப்பது எவ்வாறு? தபால்ல நீச்சல் பழகுவதுபோல இந்த இடுகையில், எழுத்தில், எப்படி மூச்சு விட்டுப் பழகுவது?

    முதலில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, நுரையீரலில் காற்றை இழுப்பது என்பதற்கு பதிலாக, மூக்கின் வழியே காற்றை ஊற்றுவதைப் போன்ற உணர்வுடன் காற்றை மிக மெதுவாக இழுத்துப் பாருங்கள்.

    இதைச் சரியாகச் செய்கிறோமா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்தானே., எவ்வாறு?...

    காற்று நுரையீரலின் கீழ்பகுதியில் நிறையும் போது அடிவயிற்றின் முன்புறங்கள் முன்னோக்கி வரும். அடுத்து இயல்பாக நெஞ்சுக்கூடு, விலா எலும்புகள் விரிவடையும். மேலும் காற்று நிறைய நிறைய உடல் இன்னும் நிமிர்ந்து அடிவயிற்றின் கீழ்பாகம் சற்றே உள்நோக்கி நகரும். இந்த நிலையில் காற்று இழுப்பது தானாக நின்றுவிடும். மிகச்சில நொடிகள் இயல்பாக தம் கட்டாமல் காற்றைப் பிடித்து வைத்துவிட்டு இயன்ற அளவு மெதுவாக மூச்சுக்காற்றினை வெளியேற்றவும். வெளியேற்றும்போது அடிவயிற்றினை சற்று இறுக்கி காற்றை வெளியேற்ற வேண்டும் காற்று வெளியே போனதும் நெஞ்சினையும் அடிவயிற்றினையும் நன்கு தளர்த்தி விட்டுக்கொண்டு மறுபடியும் துவங்கவும்.

    இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள். உணவு உண்டவுடன் மிதமாகச் செய்யுங்கள். கிடைக்கும் நன்மைகளை எனக்கு நீங்கள் பட்டியல் இடுவீர்கள்.)

    சாதி, மதம், இனம், அரசியல் தாண்டி உடல்நலம், மனநலம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதுபோல் காற்று எல்லோருக்கும் பொதுதான். அதை முறையாக பயன்படுத்திப்பாருங்களேன் இலவசமாக...!
    -சிவா-


    jv_66 likes this.

  4. #2534
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது. இஞ்சியிலிருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளளாட்ரின் ஆகிய மருந்து பொருள்கள் உடலுக்கு தெம்பையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியவை. இது இஞ்சியிலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


    இப்போது உலகப் புகழ் பெற்ற டாக்டர்களும், மருத்துவ பல்கலைக் கழகங்களும் இஞ்சியின் மருத்துவத்தைப் பற்றி புரிந்து கொண்டுள்ளன.

    இஞ்சியின் மருத்துவ குணங்களை அறிந்து தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை ஆராய்ந்து நிரூபித்துக் காட்டியுள்ளன.

    நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

    இதயநோய் வராது

    தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது

    இதயத்தை பலப்படுத்தும்

    பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.

    வலிப்பு நோயை குணப்படுத்தும் எனப் புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதியில் இஞ்சி மருந்து தினமும் கொடுக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

    காது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சி பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.

    மயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்து ‘டிரம்மைன்’ ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982 –ம் ஆண்டில் கண்டுபிடித்தது.

    இதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான் டாக்டர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை குறைக்க விலை உயர்ந்த ‘பீட்டா’ ஆங்கில மருந்தை இப்போது பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.

    இரத்தத்தை இதயம் ஒழுங்காக அனுப்ப பயன்படுத்தப்படும் ‘டிஜிடாலிஸ்’ மருந்தை போலவே, இஞ்சியும் இரத்தத்தை ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

    பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் இரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    சாதாரண காய்ச்சல் இருந்தாலும், இருமலுக்கும் கூட இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.

    இவ்வளவு மருத்துவசக்தி வாய்ந்த இஞ்சியைப் பற்றிய அதிசய உண்மைகள் இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆனில் இஞ்சியின் சிறப்பை அன்றே எடுத்துக் கூறி இருப்பதைக் கண்டு நமக்கு அதிசயமாக உள்ளது.

    உணவில் நாம் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம். அவரவர் விருப்பப்படி இஞ்சியை பயன்படுத்திக் கொள்ள பயனுள்ள மருத்துவ குறிப்புகள் இங்கே உங்களுக்கு தருகிறேன்.

    இஞ்சியை பொடி செய்து, டீ க்கு பதிலாக இஞ்சி டீ கூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது.

    பசியை உண்டாக்கும் இஞ்சி சாறு

    இஞ்சியை மேல்தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிசாறு எனப்படும். உணவு செரிமானமில்லாமல் ஏற்படும் வயிற்று போக்கிற்கு இஞ்சி சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றி தடவி வர குணமாகும்.

    இஞ்சி சாறும், வெங்காய சாறும் சம எடை கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவைகளை நிறுத்தலாம்.

    இருமல் குணமாகும்

    இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.

    உடல் வலிமைக்கு இஞ்சி தேன் ஒரு காயகற்பம் இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊற வைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு உண்டுவர உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

    வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி

    இஞ்சி சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தேவையான போது 5 கிராம் எடுத்து சாப்பிட வயிற்று வலி, வாந்தி முதலியவைகள் குணமடையும்.

    உடல் நலம் காக்க இஞ்சி குடிநீர்

    இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனத்தூள் ஆகியவை சுலபமாக மருந்து கடைகளில் கிடைக்கின்றன. எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக் கொள்ளவும். வேண்டும்போது 1 ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை மதியம் மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.

    வாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்

    இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான், சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மி.லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 1 ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வாத நோய் குணமாகும்.

    தலைவலிக்கு இஞ்சி

    இஞ்சி சாறு ஓரிரு சொட்டுக்கள் மூக்கில் துளியாக விட்டால் தலைவலி குணமாகிவிடும்.

    பல்வலிக்கு இஞ்சி

    இஞ்சி துண்டை பல் வலியுள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் வலி மட்டுப்படும்.

    தொந்தி குறைய இஞ்சி சாறும், தேனும்

    வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

    செய்முறை

    500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.

    சாப்பிடும் முறை

    காலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக்கட்டுப்பாடும்,

    உடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.

    குறிப்பு : சாப்பிடும் சமயம் சிலருக்கு உஷ்ணமாக வயிற்று போக்கு ஆகலாம். அப்படிப்பட்டவர்கள் இஞ்சி மருந்து அளவை மிக குறைவாக சாப்பிடுவது நல்லது.

    மஞ்சள் காமாலை ஆஸ்துமாவுக்கு இஞ்சி ஜூஸ்

    நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சி சாறுடன் சிறுது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து அருந்துவது இஞ்சி ஜூஸ் ஆகும். இது மஞ்சள் காமாலை ஆஸ்துமா சளி இவற்றை நீக்க வல்லது.

    புற்று நோயிலிருந்து பாதுகாப்பு

    தொடர்ந்து மேற்சொன்ன இஞ்சி ஜூஸ் தினமும் அருந்துபவர்களுக்கு நாக்கு, தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.

    உடல் பலத்திற்கு இஞ்சி லேகியம்

    தேவையான மூலிகை பொருட்கள் (மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்)

    இஞ்சி சாறு 1 லிட்டர், மிளகு 25 கிராம், பூண்டு 25 கிராம், வெந்தயம் 25 கிராம், அதிமதுரம் 25 கிராம், ஏல அரிசி 25 கிராம், ஓமம் 25 கிராம், சர்க்கரை 1175 கிராம், நெய் 300 கிராம்

    மேற்கண்ட மருந்துகளை மூலிகை மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி இடித்து பிழிந்து வடிகட்டி மண்சட்டியில் மூடி வைத்துக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டை தோல் உரித்து, பசும்பாலில் அவித்து பின்பு அரைத்துக் கொள்ளவும். மிளகு, ஜீரகம், ஓமம் இவைகளை இடித்து மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.

    வெந்தயத்தை நீரில் கழுவி வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். அதிமதுரத்தை பொடியாக்கிக் கொள்ளவும். சர்க்கரையை 250 மி.லி பசும்பாலை ஊற்றி சட்டியில் வைத்து காய்ச்சவும். இளகியவுடன் இஞ்சி சாற்றை ஊற்றி நன்றாக கிண்டி விட்டு, மற்ற மருந்து பொருட்களை போட்டு இளகல் பதத்தில் இறக்கி, நெய் ஊற்றி கிண்டி உடன் வேறு பாத்திரத்தில் வைக்கவும். மருந்தின் காரம் அதிகமாக இருந்தால் மொத்த மருந்தில் மேலும் 150 மி.லி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

    சாப்பிடும் முறை

    காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் அகலும். உடலும் பலம் பெறும்.

    பசியை கொடுக்கும் இஞ்சி

    இஞ்சியை கழுவி மேல்தோலை எடுத்துவிட்டு வில்லைகளாக நறுக்கி உலர வைத்துவிட வேண்டும். பின்பு எலுமிச்சம் பழச்சாற்றில் தேவையான அளவு இந்துப்பு போட்டு, இஞ்சித்துண்டுகளைக் கலந்து ஊற வைக்க வேண்டும். இவற்றை வெயிலில் உலர்த்தி கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு காலையில் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டு வரலாம். இதனால் பலவகையான நோய்கள் குணமடைவதுடன், புளி ஏப்பம், வாந்தி, மயக்கம், வயிறு உப்புசம், அஜீரணம் நீங்கும்.

    திருக்குர்ஆனை குறிப்பிட்ட இஞ்சியின் மருத்துவத்தை இன்று மருத்துவ விஞ்ஞானிகள் உணர்ந்து விட்டனர். மனிதனின் உயிர் காக்கும் இஞ்சி மருத்துவம் சிறந்த இடம் பெறுகிறது என்பதை யார்தான் மறுக்க முடியும்.

    நன்றி : டாக்டர் எம்.ஏ. ஹாருன்

    jv_66 likes this.

  5. #2535
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    இயற்கை தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அரிய வகை மருந்து. தேனை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை. சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் முழுமையான பயன்கள் அனைத்தையும் யாரும் அறிந்திருக்கமாட்டீர்கள். தேனில் 78 % கார்போ ஹைட்ரேட்டுகளும், 18 % தண்ணீரும், 0.2 % தாதுப்பொருட்களும், 3.8 % பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும் இதில் அடங்கி யுள்ளன. பூவிலுள்ள மகரந்தம், பிசின் மற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு.


    அது சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும். தேனை அதன் நிறத்தை வைத்தே வகைப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஆம், சுத்தமான தேன் தனிப்பட்ட மனமும் சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது நல்ல தேன் என்று தெரிந்துகொள்ளலாம். தேனின் மனமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ அப்பூக்களை சார்ந்தே அது இருக்கும். வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன் சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன் பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும். தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை காணலாம்!

    மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் . தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.

    பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும். குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள். கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.

    jv_66 likes this.

  6. #2536
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    நந்தியா வட்டை




    தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

    அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.
    இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது.

    இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

    நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.



    jv_66 likes this.

  7. #2537
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    முடக்கறுத்தான்

    ardiospermum halicacabum

    முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

    முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்
    முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும்.



    இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.

    "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
    காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
    கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
    முடக்கற்றான் தனை மொழி"

    - சித்தர் பாடல்-

    கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

    முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

    இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

    இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

    இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

    ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

    முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

    குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

    சுகப்பிரசவம் ஆக:

    முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப் படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

    மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:

    மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

    முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:

    ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

    பாரிச வாய்வு குணமாக -:

    கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

    சுக பேதிக்கு :

    ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

    முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

    முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.
    சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

    முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

    முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

    முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.



    Geetha A, jv_66 and Sriramajayam like this.

  8. #2538
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!


    பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது.


    முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது. முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலுக்கு நன்மையை அளிக்க சில காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி படித்து அதன் நன்மைகளை அடைந்திடுங்கள்.


    அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது :-


    முளைக்க வைக்கும் போது பயறுகளும் பீன்ஸ்களும் உயிர் பெற்ற தாவரமாக மாறுகிறது. இதனால் வைட்டமின் பி, சி மற்றும் கரோட்டின் போன்றவைகள் அதில் வளமையாக காணப்படும். மேலும் நம் உடல் கனிமங்களை நன்றாக உறிஞ்சிட உதவிடும். மேலும் இந்த செயல்முறை ஃபைடிக் அமிலத்தின் தாக்கத்தை நடுநிலையாக்கும். இந்த அமிலம் கனிமங்களுடன் சேர்ந்து, உடல் அவைகளை முழுமையாக உறிஞ்சுவதை முட்டுக்கட்டையாக இருக்கும். முளைக்காத பீன்ஸை காட்டிலும், முளைக்கட்டிய பீன்ஸில் அதிக புரதமும் குறைந்த ஸ்டார்ச்சும் உள்ளது.


    குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ் :-


    உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவின் மீது ஒவ்வொரு உணவும் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவீடு தான் க்ளைசெமிக் இன்டெக்ஸ். குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ் அடங்கியுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் இதய குழலிய நோய்கள் உருவாகும் இடர்பாட்டை இது குறைக்கும். முளைக்கட்டிய பீன்ஸ் மற்றும் பயறுகளில் க்ளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும். இதனால் அவைகளை உண்ணுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாக விளங்கும்.


    சுலபமான செரிமானம் :-


    பயறுகளும் தானியங்களும் உண்ணும் போது, செரிமானமாவதற்கு கஷ்டமாக உள்ளது என பலரும் குறை கூறுவார்கள். இருப்பினும் தானியங்கள் முளைத்து விட்டால், செரிமான செயல்முறை சுலபமாகிவிடும். முளைக்கட்டிய பயிர்களால், உணவு என்சைம்கள் செயல்படுத்தப்படும். இது செரிமானத்திற்கு உதவிடும். என்சைம்கள் வளமையாக உள்ளதால், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் முளைக்கட்டிய தானியங்கள் உதவும். இதுப்போக ஃபைடேட் போன்ற பயறுகளில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பிகளை இது குறைக்கும். இந்த ஊட்டச்சத்து எதிர்ப்பிகள் தான் செரிமானத்தை சிரமமாக்குவது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் செரிமானமாவதற்கு சிரமப்படும் உணவுகளைத் தவிர்க்கவும்.


    உடலுக்கு அல்கலைன்னின் தேவை :-


    நல்ல ஆரோக்கியத்தை பராமரித்திட, அசிடிக் மற்றும் அல்கலைன் உணவுகளை சமநிலையுடன் உண்ண வேண்டும். பொதுவாக தானியங்களிலும் பயறுகளிலும் இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அல்கலைன் உணவுகளுடன் அதனை சமநிலைப்படுத்த வேண்டும். தானியங்களையும் பயறுகளையும் முளைக்கவிட்டால், இயற்கையாகவே அவைகளில் அல்கலைன் தன்மை வந்து விடும்.


    குடல் வாய்வை உருவாக்காது :-


    பீன்ஸ் மற்றும் பயறுகளை உண்ணுவதால் குடல் வாய்வின் உற்பத்தி அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் வயிற்று பொருமலும், ஏப்பமும் ஏற்படும். வயிற்று பொருமலுக்கும், வாய்வு உண்டாவதற்கும் ஆளிகோசாகரைட்ஸ் எனும் ஒரு வகையான கார்போஹைட்ரேட்ஸ் தான் முக்கிய காரணமாக உள்ளது. முளைத்த தானியங்கள் மற்றும் பயறுகள் கார்போஹைட்ரேட்ஸ் அளவை பெருவாரியாக குறைத்து விடுவதால், வாய்வு உருவாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் அசௌகரியங்களை அது குறைத்து விடும்.


    உடல் எடையை குறைப்பதற்கு நல்லது :-


    உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படும் முக்கிய உணவுகளில் ஒன்றாக முளைக்கட்டிய பயறுகள் கண்டிப்பாக இருக்கும். தானியங்களை ஊற வைப்பதால் கொழுப்பின் அளவு குறையும். இது போக முளைத்த பீன்ஸில் அதிமுக்கிய வைட்டமின்களும், நார்ச்சத்தும் வளமையாக உள்ளது. இது பசியை குறைத்து உடல் எடையை குறைக்க உதவிடும். இவைகளில் கலோரிகளும் குறைவே. ஒரு கப் முளைத்த பீன்ஸில் 30-40 கலோரிகள் மட்டுமே இருக்கும். புரதமும் வளமையாக உள்ளதால், உடற்பயிற்சிக்கு பிறகு உண்ணக்கூடிய சிறந்த உணவாக இது இருக்கும்.



    SADAIYAN likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2539
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    எளிய இயற்கை மருத்துவம் :-


    துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.


    அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.


    துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

    இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
    கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.


    தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

    சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2540
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல்
    உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter