Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2561
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
    அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்

    உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற
    இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக
    படிக்கவும்…

    மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

    சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
    உணவிற்கு பிறகு குளிர்ந்த
    தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
    அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
    வந்துவிட்டது.

    சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்
    உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள்
    திடப்பொருளாக
    மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
    திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்
    இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.
    இது திட உணவை விட வேகமாக
    உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
    இது நம் குடலில்
    அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக
    விரைவில், இது கொழுப்புகளாக
    மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

    ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர்
    அல்லது சூப் குடிப்பது நல்லது.
    மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
    மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில்
    ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில்
    தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க
    வேண்டும்.

    மாரடைப்பு வரும்போது பொதுவாக
    நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்
    கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட
    பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள்
    தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால்
    எழுந்துகொள்ள முடியாது.
    உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
    தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த
    தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.

    ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
    எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

    படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக
    பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால்
    குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற
    முடியும்.


    My WhatsApp



    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2562
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சிறுநீர் தொந்தரவை குணப்படுத்தும் முள்ளங்கி கீரை - இயற்கை மருத்துவம்


    முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது. முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை.


    சத்துக்கள்:


    * கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A,B,C முதலியவையும் இதில் அதிகம் உள்ளன.
    * இதன் கிழங்குப் பகுதியில் இருப்பதைவிட* ஆறு மடங்கு 'வைட்டமின் C' இதன் கீரைகளில் இருக்கிறது.
    * 100 கிராம் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது.
    * இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன.
    * புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. பலன்கள்: முள்ளங்கிக் கீரையை சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக சாலட் போலவும் சாப்பிடலாம்.
    ** முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையும் இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளையும் குணப்படுத்துகின்றன.
    * நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.
    * மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு.
    * முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.
    * முள்ள*ங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
    * சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
    * சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.
    * ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும்.
    * தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.
    முள்ளங்கிக் கீரையை தவிர்த்து வேண்டியவர்கள் :
    * வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஆனால், முள்ளங்கிக் கிழங்கை பகலில் மட்டும் சாப்பிடலாம்.
    ** கப உடம்புக்காரர்கள் என்று சொல்லக்கூடிய சளித் தொல்லைகள் உடையவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் அதிகமாக* சாப்பிடவேண்டாம்.
    * வாயு தொல்லை உள்ளவர்கள் பூண்டு சேர்க்காமல் சமைக்கப்பட்ட முள்ளங்கிக் கீரையோ, சமைக்காமல் சாலட் போன்று உண்ணுவதையோ தவிர்ந்துக்கொள்ளவேண்டும்.
    * பொதுவாகவே எந்தக் கீரைகளும் இரவில் சாப்பிடக்கூடாது என்றாலும் முள்ளங்கிக் கீரையை கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. (முள்ளங்கியும் அதுபோலவே இரவில் சாப்பிட்டால் தீங்குதான் விளையும்.)
    * சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.



    Last edited by Sriramajayam; 26th May 2015 at 11:04 AM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2563
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    அகத்திக்கீரை
    - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

    காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

    சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

    பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

    கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

    மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

    குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

    அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

    புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

    பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

    பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

    பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

    சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

    வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

    முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

    வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

    முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

    புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

    புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

    நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

    தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

    கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

    முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

    பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

    புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

    மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

    மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

    முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

    சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

    வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

    தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

    தவசிக்கீரை- இருமலை போக்கும்.

    சாணக்கீரை- காயம் ஆற்றும்.

    வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

    விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

    கொடிகாசினிகீரை
    - பித்தம் தணிக்கும்.

    துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

    துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

    காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

    மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

    நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.


    Sriramajayam likes this.

  4. #2564
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்...


    பல நாட்களாக பலரையும் வேதனையில் மூழ்க வைக்கும் ஒரு பிரச்சனை தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பைப் போக்க பலரும் பல வழிகளை தேடிக் கொண்டிருப்பார்கள். அதில் பலரும் முயற்சித்த ஒன்று தான் குதிகால் வெடிப்பை போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம்.


    இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், குதிகால் வெடிப்பு போன பாடில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நடக்கும் போது கடுமையான வலியைத் தரும் குதிகால் வெடிப்பைப் போக்க சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது.

    அவற்றை தவறாமல் அன்றாடம் பின்பற்றி வந்தால், குதிகால் வெடிப்பு போய்விடும். சரி, இப்போது வேதனையைத் தரும் குதிகால் வெடிப்பை எப்படி போக்குவது என்று பார்ப்போமா!!!

    வெள்ளை வினிகர் வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருக்கேற்ற உதவும் கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.

    தயிர் தயிரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் மாய்ஸ்சுரைசிங் தன்மை, குதிகால் வெடிப்பை விரைவில் போக்கும். அதற்கு தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.

    கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய் வெள்ளை வினிகருடன் சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையினுள் குதிகாலை ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் குதிகால் வெடிப்பு மறையும்.

    ஆப்பிள் சீடர் வினிகர் குதிகால் வெடிப்பை சரிசெய்ய குதிகால் வெடிப்பு ஏற்ற ஒன்று. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனுள் கால்களை ஊற வைத்து, தேய்த்து கழுவ வேண்டும்.

    ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து, குதிகால்களை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து, மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவினால், வினிகர் இறந்த செல்களை நீக்கி, ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.

    தேன் வினிகரில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

    அரிசி மாவு அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வறட்சியடைந்த பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக, வெடிப்பின்றி இருக்கும்.

    Sriramajayam likes this.

  5. #2565
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சுவாரஸ்ய நன்மைகள்.....

    முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் முந்திரி பழத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. ஆனால் அந்த முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால், நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும்.
    மேலும் முந்திரியை எப்படி விரும்பி சாப்பிடுகிறோமோ, அதேப்போல் இதனை சாப்பிட முடியாது. ஏனென்றால் இதனை அப்படியே அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும். ஆனால் இதை சாப்பிட சில வழிகள் உள்ளன

    சத்துக்கள் :-
    முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

    வைட்டமின் சி :-
    பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது . எனவே இனிமேல் 5 ஆரஞ்சு சாப்பிடுவதற்கு பதில் ஒரு முந்திரிப்பழத்தை சாப்பிடுங்கள்.

    நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் :-
    நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

    ஸ்கர்வி :-
    முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

    சாப்பிடும் முறை :-
    முந்திரி பழத்தை சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாமல் இருக்க, அதனை வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும்.






    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2566
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் ஆயுர்வேத ஜூஸ்கள்!!!

    என்ன தான் மருத்துவ உலகில் பல முன்னேற்றம் இருந்தாலும், நம் நாட்டின் கை வைத்திய முறையான ஆயுர்வேத மருத்துவ முறைக்கு இணையாக வர முடியாது. ஏனெனில் நம் ஆயுர்வேத மருத்துவமானது, பல மூலிகைகள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதாக உள்ளது.

    அதுமட்டுமல்லாமல், இந்த மூலிகை சிகிச்சையை மேற்கொள்வதால், அவை பிரச்சனையை குணமாக்க நாட்களை எடுத்துக் கொண்டாலும், நிரந்தர தீர்வை அளிப்பதாக உள்ளது. இங்கு அப்படி உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் சில ஆயுர்வேத ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    தூதுவளை சாறு :-
    தூதுவளை சாறு ஜலதோஷம் மற்றும் சளியை வெளியேற்ற உதவும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும்.

    பிரண்டை சாறு :-
    குச்சி போன்ற தோற்றத்தைக் கொண்ட பிரண்டையின் சாற்றினை குடித்து வந்தால், எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, எலும்புகளும் வலிமை அடையும்.

    ஆவாரம்பூ சாறு :-
    சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஆவாரம்பூ சாற்றினை குடிப்பது நல்லது.

    ஆடாதோடா சாறு :-
    ஆஸ்துமா நோயாளிகள் ஆடாதோடா சாற்றினை குடிப்பதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.

    கொள்ளு சாறு :-
    பொதுவாக கொள்ளுவை கடைந்து தான் சாப்பிடுவோம். ஆனால் இதன் சாற்றினை பருகி வந்தால், உடலின் ஆற்றல் குறையாமல் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

    பாகற்காய் சாறு :-
    காலையில் பாகற்காய் சாற்றினை பருகுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

    கோவக்காய் சாறு :-
    கோவைக்காயை பொரியல் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அதன் சாற்றினை குடித்தால், வாயு தொல்லை நீங்கும் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது.

    முடக்கத்தான் சாறு :-
    முடக்கத்தான் சாறு எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு மிகவும் நல்லது.

    வாழைத்தண்டு சாறு :-
    சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், வாழைத்தண்டை ஜூஸ் எடுத்து குடித்து வந்தால், சிறுநீரக கல் கரைந்து, சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

    கீழாநெல்லி சாறு :-
    கீழாநெல்லி சாறு குடல்புண், தொண்டை புண் மற்றும் நோய்கள், வயிற்று வலி போன்றவற்றை குணமாக்க உதவும்.

    நெல்லிச் சாறு :-
    நெல்லிக்காய் சாறு இரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது. அதிலும் இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தை விருத்தி செய்து, சோகையில் இருந்து விடுபடலாம்.

    நாவல் சாறு :-
    நாவல் சாற்றினை பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுன் இருக்கும்.

    துளசி சாறு :-
    துளசியை சாறு எடுத்து தினமும் சிறிது குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் பிரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, உடலில் சுத்தமான இரத்தத்தை ஓடச் செய்யலாம்.

    அருகம்புல் சாறு:-
    தினமும் அருகம்புல் சாறு குடித்து வருவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

    ஆளி விதை சாறு:-
    ஆளி விதை சாறு உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.






    sudhavaidhi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2567
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    தேன் மருத்துவம்:-

    ஒரு நாளைக்கு குறைந்தது 2 தேக்கரண்டி தேன் பருகினால் கீழ்கண்ட நோய்கள் வராமலும், வந்தால் குணமாக்கிக்கொள்ளவும் முடியும். ஜீரணம், வயிற்று உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள், இதயம் நுரையீரல் கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சிறுநீரகம் சம்பந்தப்பட்டவை. இரத்த சோகை, தூக்கமின்மை, பல், தொண்டை, காது, கண் நோய்கள், சருமத் தொல்லைகள் ஆகியவற்றிற்கு தேன் சிறந்த மருந்து. உடல் பருமனைக் குறைக்க எளிய வழி தேன். காலையில் தினமும் தொடர்ந்து வெறும் வயிற்றில் 2 தேக்கரண்டி தேன் அருந்தினால் பலன் உறுதி. மிகக் களைப்பான நிலையில் ஒரு தேக்கரண்டி தேன் அருந்திப் பாருங்கள். ஒரு கிராம் தேன் 3.15 கலோரி ஆற்றல் தருகிறது. இறைச்சி, முட்டை தரும் கலோரி அளவிது. பிரசவ வேதனை ஏற்படும்முன் 2 அவுன்ஸ் தேன் பருகினால் சுகப்பிரசவமாகும்.






    sudhavaidhi and ilakkikarthi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2568
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உணவு முறைகள்:-

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்க்கலாம்.

    • பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

    • மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதில் பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, அவுரிநெல்லி மற்றும் நாவல் பழம் சிறந்தவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான அளவு இருக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.

    • மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

    • வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.

    • மீன்களில் அதிகமாக கொழுப்பு உள்ள மீன் என்றால் அது சமன் மீன் தான். இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான DHA மற்றும் EPA அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது.

    மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.





    sudhavaidhi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2569
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல்
    உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2570
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info



    அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் !!!


    அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் !!!

    பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின்
    நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.


    தோல் நோய்களை நீக்கும்


    இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.


    நரம்புகளை வலுப்படுத்தும்


    பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.


    நோய் எதிர்ப்பு சக்தி


    மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


    கண்பார்வை தெளிவாகும்


    வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter