Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2621
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    எளிய அழகுக் குறிப்புகள் - இயற்கை வைத்தியம்


    1. கருமை நிறம் மாற*


    பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.


    2. முகம் மிருதுவாக*


    கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.


    3. வியர்வை நாற்றம் போக:


    * குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.


    * வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


    * குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.


    * இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.


    * 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை
    ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.


    4. கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.


    5. எடை குறைய


    பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.


    6. முடிகளை நீக்க


    முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.


    முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
    வரும்.


    7. சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.


    8. தலை முடி செழித்து வளர


    வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்


    9. சருமம் நிறம் அதிகரிக்க


    ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன் பால்பவுடர் அரை டீஸ்பூன் பார்லி பவுடர் அரை டீஸ்பூன்


    மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.


    10. கண்கள் பிரகாசமாக இருக்க


    இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.


    11. கருவளையம் நீங்க


    ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.


    12. மருதாணி நன்கு சிவக்க


    மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்




    Sponsored Links
    janu23 and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2622
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!


    உடலில் நோய்கள் அடிக்கடி வருவதற்கு முக்கிய காரணம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இல்லாததே ஆகும். நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருந்தால், நீண்ட நாட்கள் நோய்களின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதற்கு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, கண்ட கண்ட மருந்து மாத்திரைகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.


    உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமின்றி, ஒரு சில பானங்களும் உதவியாக இருக்கும். அந்த பானங்களில் உங்களால் முடிந்ததை அன்றாடம் குடித்து வந்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரி, இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் வைத்துக் கொள்ள உதவும் பானங்களைப் பார்ப்போமா!!!


    எலுமிச்சை ஜூஸ் :-


    உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை ஜூஸ் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி வளமையாக உள்ளது. இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும். மேலும் விலை குறைவில் கிடைக்கக்கூடியதும் கூட. எனவே உங்களுக்கு நோய்களின் தாக்குதல் இருக்கக்கூடாதெனில், அன்றாடம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸை குடித்து வாருங்கள்.


    ஆப்பிள் சீடர் வினிகர் :-


    ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் ஜூஸ் மூலம் தயாரிக்கப்படுவதாகும். எனவே இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், குளோரின், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஃப்ளோரின் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்துமே நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். மேலும் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆசிட் இருப்பதால், இதுவும் உடலின் அமிலத்தன்மையை நிலைக்கச் செய்து, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும்.


    க்ரீன் டீ :-


    அன்றாடம் நீங்கள் க்ரீன் டீ குடிப்பவர்களா? அப்படியெனில் உங்களை நோய்க்கிருமிகள் அவ்வளவு எளிதில் தாக்க முடியாது. ஏனெனில் தினமும் க்ரீன் டீ குடித்து லந்தால், அதில் உள்ள பொருள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் க்ரீன் டீ குடித்து வந்தால், புற்றுநோய் வளர்ச்சி குறைக்கப்படுவதோடு, கட்டுப்படுத்தப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    க்ரான் பெர்ரி ஜூஸ் :-


    க்ரான் பெர்ரி ஜூஸில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளான ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை இரண்டுமே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கக்கூடியவை. இந்த க்ரான் பெர்ரி ஜூஸ் சுவையுடன் இருப்பதோடு, இதய நோயையும் தடுக்கும்.


    பீட்ரூட் ஜூஸ் :-


    பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, கரோட்டீனாய்டு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இதனை அன்றாடம் குடித்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, முளையின் இயக்கமும் சீராக இருக்கும். மேலும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.


    கிவி ஜூஸ் :-


    நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? கிவி பழத்தை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் செய்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு வேண்டிய வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி கிடைக்கும்-மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.


    ப்ராக்கோலி :-


    ப்ராக்கோலியில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் பி1, கால்சியம், புரோட்டீன் மற்றும் சல்பர் போன்றவைகள் வளமையாக நிறைந்துள்ளன, எனவே முடிந்த அளவு கொஞ்சமாக பருகுங்கள். ப்ராக்கோலி ஜுஸ் சற்று கெட்டியாக இருப்பதால், இதனை மற்றொரு ஜூஸ் உடல் சேர்ததுப் பருகுங்கள்


    கேரட் ஜூஸ் :-


    கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கேரட்டை அன்றாடம் பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராகவும் இயங்கும்.



    Dangu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2623
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் உணவுப் பொருட்கள்!!!



    தினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

    வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! பலரும் உடலை சுத்தப்படுத்த மேற்கொள்ளும் டயட்டானது சுவையற்றதாக இருக்க வேண்டுமென்று தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உண்ணும் உணவில் சர்க்கரை சேர்க்காமல் இருந்தாலே போதுமானது.

    காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு அந்த உணவுப் பொருட்களை முடிந்தால் தினமும் உட்கொண்டு வாருங்கள்.

    இஞ்சி இஞ்சியின் மருத்துவ குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும். முக்கியமாக இஞ்சியை சுடுநீரில் போட்டு காய்ச்சி, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.

    பூண்டு பூண்டு கூட உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. மேலும் பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் மற்றம் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே தினமும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். மேலும் ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

    பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றை முடிந்த அளவில் தினமும் சிறிது சாப்பிட்டு வாருங்கள். இதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் சுத்தமாகி, ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

    நார்ச்சத்துள்ள உணவுகள் நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.

    க்ரீன் டீ உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கம் குறைந்து, மூளையின் செயல்பாடு அதிகரிப்பது, கொழுப்புக்கள் கரைந்து உடல் குறைவது மற்றும் டைப்-2 நீரிழிவின் தாக்கமும் குறையும்.

    எலுமிச்சை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

    இளநீர் இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும். மேலும் இளநீர் குடித்து வந்தால், செரிமானம் சீராக நடைபெறும்.


  4. #2624
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    அனுபவ வைத்தியம்!!


    நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தால் படுக்கைப் புண் உண்டாகும் அப்படி படுக்கைப் புண் வராமல் இருக்கவும் ,அப்படி வந்துவிட்டால் விரைவில் குணமாகவும் சுத்தமான துணியினால் துடைத்துவிட்டு கற்பூரத்தையும் ஆலிவ் எண்ணையையும் கலந்து பூசுங்கள்.

    ⭕ என்னதான் பல் தேய்த்தாலும் வாய் நாற்றம் வருகிறதா?

    ஆலம் விழுதுகளை பொடி செய்து, கடுக்காய் பொடி செய்து,வேப்பம் பட்டையை பொடி செய்து மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு ஒரு வாரம் பல் துலக்குங்கள் வாய் துர்நாற்றம் அண்டாது.

    ⭕ ஒரு நற்செய்தி: கற்பூரம் அதிக அளவில் சாராயம் தயாரிக்கப்படும்போது கலக்கப்படுகிறது, நாம் உபயோகிக்கும் பல ரசாயனங்களில் கலக்கப் படுகிறது,அப்படி கற்பூரத்தினால் ஒவ்வாமை வந்தால் பித்தம் அதிகமாகும் , தலை சுற்றல் ஏற்படும்அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு காப்பி குடித்தால் சரியாகிவிடும் தலை சுற்றல்.

    ⭕ அன்றாடம் நாம் பல் துலக்கும் வழக்கத்தை ஏற்படுத்தித் தந்த முன்னோர்களுக்கு நன்றி சொல்வோம் தூங்கி எழுந்தவுடன் பல்லை நன்றாக நம் விரல்களால் உள்ளும் புறமும் பிடித்து அழுத்தி துலக்குங்கள் நன்றாக உணரலாம் தூக்கக் கலக்கம் தெளிவதை, ஏனென்றால் நம் பற்களுக்கும் நம் மூளைக்கும் தொடர்பு உண்டு.

    நம் பற்கள் அழுத்தப்படுவதால் மூளை சுறுசுறுப்படைகிறது. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது பல் துலக்கும் ப்ரஷ் .

    அதனால்தான் பல் பிடுங்கும் போது அதன் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு பிடுங்குவார்கள், அப்படி வேர்களில் பாதிப்பு ஏற்பட்டால் மூளை பாதிப்படையும் .



  5. #2625
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Today's Medical Info

    ரத்தத்தை சுத்திகரிக்கும் சுக்கான் கீரை...
    நாம் அறியாத அரிய வகைக் கீரைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் ஒன்று சுக்கான் கீரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல் சரியாகும். வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து சுக்கான். ரத்த அழுத்தத்தை சரிசெய்யும். இதயத்தைப் பலப்படுத்தும். வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.
    1. சுக்கான் கீரையைத் தண்ணீர் விட்டு அலசி, வறுத்த உளுந்தம் பருப்புடன் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி சட்னியாக அரைத்து, காலை உணவில் சேர்த்துச் சாப்பிடலாம்.
    2. சுக்கான் கீரையை அலசி, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து.
    3. கால்சியம் அதிகம் இருப்பதால், மதிய உணவில் பொரியலாக சேர்த்துக்கொள்ளலாம். வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கலாம்.
    4. சுக்கான் கீரையுடன் ஏதாவது ஒரு பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் நீங்கும்.









  6. #2626
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    Re: Today's Medical Info

    Thanks for sharing the useful tips


  7. #2627
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2628
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்....


    சத்துள்ள கீரைகள் என்ற பட்டியலில் வெங்காயத்தாளையும் சேர்த்து கொள்ளுங்கள். வெங்காயத் தாளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.


    மேலும் இதில் விட்டமின் C, விட்டமின் B2 மற்றும் தயமின் உட்பட பல விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவைகளில் விட்டமின் A மற்றும் விட்டமின் K கூட நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பொஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.


    சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளில் உள்ள விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.


    வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

    வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.



    selvipandiyan likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2629
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Today's Medical Info

    சித்தர்கள் தந்த மூலிகை ஆடாதோடை..!
    ஆடாதோடை இதன் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanica) ஆகும். இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.
    உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.
    சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
    இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
    இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
    இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும்.
    இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
    ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்.







  10. #2630
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Today's Medical Info

    யானை வணங்கியும், பூனை வணங்கியும்
    நான் இப்போது சொல்லப் போவது இரண்டு மூலிகைகளைப் பற்றியது. முதலில் யானை வணங்கியைப் பற்றிப் பார்ப்போம். யானை வணங்கி என்பது யானை நெருஞ்சில் என்றழைக்கப்படும் பெருநெருஞ்சில்தான்.
    பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு,பெரும்பாடு என்னும் கடும் உதிரப்போக்கு,சிறுநீரகக் கல்(URINARY கோளாறுகள்(NEPHRITIS), சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும், தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது.
    யானைகள் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக் குறையால் சரியாகத் தண்ணீர் குடிக்க இயலாததால் யானைகளுக்கு கடும் நீரெரிச்சலும், கடும் நீர்க்கடுப்பும் வரும். அப்போது யானைகள் இந்த பெருநெரிஞ்சிலை தின்று தங்கள் நீர்க்கடுப்பும், நீரெரிச்சலும் நீங்கி இதை வணங்கிச் செல்வதால் இதற்கு யானை வணங்கி என்றும், யானை நெருஞ்சில் என்றும் பெயர். மிருகங்களுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லையே!
    யானை நெருஞ்சிலை காலையில் பழைய சோற்று நீராகாரத்தில் போட்டு அசைத்துக் கொண்டிருந்தால், சற்று நேரத்தில் நீராகாரம் கஞ்சி போலாகும். யானை நெருஞ்சிலை எடுத்து வெளியே போட்டுவிட்டு வெறும் அந்த நீராகாரத்தை மட்டும் மூன்று நாள் மட்டும் பருகி வந்தால், மேலே சொன்ன பிணிகள் அகலும்.
    அடுத்து பூனை வணங்கி என்பது குப்பை மேனி என்ற செடிதான். இதை கசக்கி பூனை அருகில் போட்டால், பூனை கண்ணை மூடிக் கொண்டு முன்கால்கள் இரண்டையும் கண்களின் மேல் வைத்துக் கொள்ளும்.
    ஏனெனில் குப்பை மேனியில் உள்ள கந்தகச் சத்து பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால் இது அவ்வாறு செய்கிறது. மேலும் இதை எலி போன்ற ஆரோக்கிய குறைவான உணவை உண்டால் அதனால் உண்டாகின்ற நஞ்சு நீங்க பூனை இரவில் சென்று உண்ணும். அப்போதுதான் பனியால் குப்பை மேனியின் கந்தக வீரியம் குறைந்திருக்கும். பின் குப்பை மேனியை பூனை வணங்கிச் செல்லும். எனவேதான் இதற்கு பூனை வணங்கி என்று பெயரிடப்பட்டது.
    இதன் வேறு பெயர்கள் அரிமஞ்சரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கோழிப் பூண்டு, சங்கர புஷ்பி.
    உப்பையும் குப்பை மேனிச் சாற்றையும் கலந்து,சிறு குழந்தைகளுக்கு வரும் சிரங்கு முதலான வியாதிகளுக்கு மேற்பூச்சாக பூசி வெயிலில் நிற்க வைக்க கொஞ்சம் எரிச்சல் எடுக்கும்.மூன்று நாட்களில் அத்தனை சிரங்கும் கருகி உதிரும்.







loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter