Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2641
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வல்லாரைக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

    ஞாபக சக்தியை அதிகரிக்க பெருமளவில் உதவும் கீரையாக திகழ்கிறது வல்லாரைக்கீரை. இதற்கு இணையாக உலகிலேயே வேறெதுவும் கிடையாது என்று கூறலாம். வல்லாரைக்கீரை பொதுவாக ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளரும்.

    வல்லாரைக்கீரையை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் போது, அதில் புளியை சேர்க்க வேண்டாம். ஏனெனில் புளி வல்லாரைக் கீரையின் சக்தியைக் கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேப் போல, உப்பையும் பாதி அளவு சேர்த்து சமைத்தால் போதுமானது.

    மாரடைப்பு :-

    வல்லாரைக் கீரையை சீரான முறையில் உங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறையும். இது இதயத்திற்கு வலு சேர்க்கும் உணவாகும்.

    குழந்தைகளுக்கு :-

    வல்லாரைக் கீரையை நெய் ஊற்றி வதக்கி சிறிதளவு இஞ்சி, ஓரிரு பூண்டு விழுதுகள் சேர்த்து துவையல் போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியப் பிரிச்சனைகள் எல்லாம் சரியாகும்.

    பற்கள் வெண்மையாக :-

    பலருக்கும் பற்களில் மஞ்சள் நிறம் படிந்திருக்கும். இதனால் வாய்விட்டு சிரிக்கக் கூட தயங்குவர். அந்த மஞ்சளைப் போக்க வல்லாரைக் கீரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போவதோடு, பற்கள் வெண்மையாக பளிச்சிடும்.

    ஆயுளை நீட்டிக்கும்:-

    சீரான முறையில் நீங்கள் வல்லாரைக் கீரையை சாப்பிட்டு வந்தால், உங்கள் ஆயுள் நீட்டிக்கும். ஏனெனில், வல்லாரையில் இரத்தத்தை சுத்தம் செய்யும் திறன் அதிகமாக இருக்கின்றது

    மூளை பலப்படும் :-

    நினைவாற்றல் மட்டுமின்றி, மூளையின் செயல்திறன், வலிமை அதிகரிக்கவும் வல்லாரைக் கீரை நல்ல முறையில் உதவுகிறது.

    கை, கால் வலிப்பு குணமாகும்:-

    கை, கால் வலிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு வல்லாரைக் கீரை ஒரு வரப்ரசாதம் என்றே கூறலாம். ஏனெனில், இது வலிப்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

    உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதால் :-

    உங்களது உணவுப் பழக்கத்தில் வல்லாரைக் கீரையை சேர்த்துக் கொள்வதால், காய்ச்சல், மாதவிடாய் கோளாறு, மாலைக் கண் போன்ற பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வுக் காணலாம்.

    முகப்பொலிவு :-

    முகத்தில் சுருக்கம், வறட்சி உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை சாப்பிடலாம். ஏனெனில், வல்லாரையில் இருக்கும் சத்துகள் உங்கள் முக சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து பொலிவுற உதவும்.





    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2642
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !


    நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.


    மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை. குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!


    பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.


    நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.


    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. .


    நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.
    தினசரி நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


    பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக நிலக்கடலையைச் சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.


    மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோஅன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.


    இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


    கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.


    100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:
    கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
    நார்சத்து- 9 மி.கி.
    கரையும் கொழுப்பு – 40 மி.கி.
    புரதம்- 25 மி.கி.
    ட்ரிப்டோபான்- 0.24 கி.
    திரியோனின் – 0.85 கி
    ஐசோலூசின் – 0.85 மி.கி.
    லூசின் – 1.625 மி.கி.
    லைசின் – 0.901 கி
    குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
    கிளைசின்- 1.512 கி
    விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
    கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
    காப்பர் – 11.44 மி.கி.
    இரும்புச்சத்து – 4.58 மி.கி.
    மெக்னீசியம் – 168.00 மி.கி.
    மேங்கனீஸ் – 1.934 மி.கி.
    பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
    பொட்டாசியம் – 705.00 மி.கி.
    சோடியம் – 18.00 மி.கி.
    துத்த நாகச்சத்து – 3.27 மி.கி.
    தண்ணீர்ச் சத்து – 6.50 கிராம்.


    எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2643
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    வீ*ட்டு வை*த்*திய*ம் !!!

    சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.


    வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

    உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.


    வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.


    ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.



  4. #2644
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    வயிற்றுக் கடுப்புக்கு மருந்து


    பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம். அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான். அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது. இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்


  5. #2645
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    வாய்ப்புண் குணமாக
    வாய்ப்புண் குணமாக மோரில் சிறிது உப்பு கலந்து அதை 5 நிமிடம் வாயில் வைத்து குதப்பி பின் துப்பவும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால் வாய்ப்புண் சரியாகி விடும்.


  6. #2646
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    வழுக்கையிலும் முடி வளரும்!---இய*ற்கை வைத்தியம்,!!!


    பெரும்பாலான ஆண்களுக்கு பரம்பரைத் தன்மை காரணமாக தலையில் வழுக்கை ஏற்படுகிறது. வழுக்கை விழுந்தால் அந்த இடத்தில் திரும்பவும் முடி வளராது என்பதுதான் உண்மையே தவிர, முடியே முளைக்காது என்று சொல்ல முடியாது. அதனால், தகுதியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் வழுக்கை உள்ள இடத்திலும் முடியை வளரச் செய்ய முடியும். என்றாலும், அதில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.

    அதற்கு என்ன செய்யலாம்?

    * எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் சேர்த்து அரைத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்து வாருங்கள். இப்படிச் செய்வதால் சம்பந்தப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளருவதை ஊக்கப்படுத்தும்.

    * அதிமதுரத்தைப் பொடித்து, குங்குமப்பூவுடன் சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைத்து விடும். இது, முடி உதிர்வதையும் தடுக்கும். பொடுகையும் போக்கும்.

    * ஆலமர விழுது, தாமரை வேர் – இந்த இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த இரண்டு பொடியையும் தலா சுமார் கிராம் எடுத்து, அதை 400 கிராம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து, பொடி கருமை நிறம் அடையும் வரை காய்ச்சி எடுத்து பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர ஆரம்பித்து விடும்.



  7. #2647
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    இடுப்பு வலி, முதுகு வலி, பெண்களுக்கான மாத விலக்குப் பிரச்னை, வெள்ளைப் படுதல் ஆகியவற்றுக்கு வெந்தயக்களி,

    வெந்தயக் களி

    தேவை: 500 கிராம் கைகுத்தல் புழுங்கல் அரிசி, 500 கிராம் கைகுத்தல் பச்சை அரிசி, 500 கிராம் தொலியுடன் கூடிய உளுந்து, 200 கிராம் வெந்தயம், 2 கிலோ கருப்பட்டி, 1 கிலோ செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், 250 கிராம் சுக்கு, 50 கிராம் ஏலக்காய்.

    அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே 8 மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியை போதிய அளவு தண்ணீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதில் ஏலம் மற்றும் சுக்கைப் போட வேண்டும். பின்னர், அதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு, மீண்டும் அதனை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள மாவைப் போட்டு கிண்ட வேண்டும். பின்னர் இடைவெளிவிட்டு, விட்டு, நல்லெண்ணெயை விட்டுக் கிண்ட வேண்டும்.

    இதையடுத்து, இறக்கிவைத்த பின்னர் மீதம் உள்ள எண்ணெயை ஊற்றி கிண்டி பரிமாற வேண்டும்.


    Last edited by Dangu; 22nd Jun 2015 at 04:25 PM.

  8. #2648
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    அகத்திக் கீரை !!!

    அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள்.

    அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் சமிபாடடையும். பித்த தொடர்பான நோய்கள் நீங்கும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடடால் தேகத்தில் சூடு தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும், சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்.

    அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம். அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

    அகத்திக் கீரைச் சாற்றை சேற்றுப் புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்திக் கீரையின் இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்துப் பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

    அகத்திக் கீரையைச் சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம். அகத்தி கீரையைக் ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்திக் கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு. எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகைப் படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

    அகத்திக் கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

    "அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே" என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

    அகத்தியை போற்றும் சித்தர் பாடல்:

    ”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
    திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
    சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
    நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."

    அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதில் வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு நல்லாகவே வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாமல் முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே முடியாமலிருக்கும்..
    இந்தமாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குகின்ற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ*ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு மகத்துவம் உள்ளது.

    அரைக்கீரையை தினமும் சோற்றுடன்/ சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும். கல்யாணமான ஆண்க*ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ*ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க*ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

    குழந்தை பெற்ற பெண்கள் உடலில் போதுமான சக்தி இருக்காது. அவர்கள் அரைக்கீரையைக் கடைஞ்சி சாப்பிட்டால் நல்ல பலம் கிடைப்பதுடன் குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும்.

    முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தா*ய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ*ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க.
    முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா*ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும்.

    இந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ*ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ*ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும். முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும்.

    பிறகு சூடு ஆறுறதுக்கு*ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா*ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம். கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.

    வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    தூதுவேளைக்கீரையை நெ*ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.

    தூதுவேளை கீரையை கஷாயமா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா*ய்ச்சல் குணமாகும். டைபா*ய்டு, நிமோனியா மாதிரி கா*ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும் என்கிறார் மூலிகை ஆரா*ய்ச்சியாளர் தமிழ்குமரன்



  9. #2649
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பழங்களின் தோலில் உள்ள சத்துக்கள் :-


    பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது.


    ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். அதுமட்டுமின்றி ஆரஞ்சு பழத்தின் தோல் வாய் துர்நாற்றம், சுவாச பிரச்சனைகள், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணத்தை வழங்கும். முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.


    வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும். அதுமட்டுமின்றி, சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்யவும் வாழைப்பழத்தின் தோல் உதவும். மேலும் குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.


    மாதுளையின் உட்பகுதியில் உள்ள முத்துக்களில் எவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளதோ, அதேப் போல் அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதில் பருக்கள், சரும அரிப்புகள், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கி அழகு பாதுகாக்கப்படுவதோடு, இதய நோய், தொண்டைப் புண் போன்றவை தடுக்கப்பட்டு, எலும்புகளின் ஆரோக்கியம், பற்களின் சுகாதாரம் போன்றவை மேம்படும்.


    தர்பூசணியில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த வெள்ளைப் பகுதியானது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். மேலும் இந்த வெள்ளைப்பகுதியை சருமத்தில் தேய்த்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.


    வெள்ளரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். வெள்ளரிக்காயின் தோலில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே உள்ளது.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2650
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மூலிகை மருத்துவம்......


    1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.


    2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட... தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.


    3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.


    4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.


    5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.


    6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.


    7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.


    8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்


    9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.


    10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.


    11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.


    12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter