Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2691
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    பாட்டி வைத்தியம் :-


    * நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும்.


    * இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.


    * குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.


    * நாய் கடித் தால், அந்த இடத் தில் எருக்கண் பாலை விட்டால் விஷம் முறியும்.


    * ஒரு டம்பளர் நீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும்.


    * ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.


    * அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.


    * மஞ்சள் தூள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும்.


    * அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.




    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2692
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்
    By
    குமரேசன்
    (காது-மூக்கு-தொண்டை நிபுணர்)
    (வழி) டாக்டர் விகடன்






    1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.


    2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.


    3 .அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.


    4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.


    5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.


    6 .வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.


    7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.


    8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.


    9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.


    10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.



    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-thondai-vali.jpg  
    cuteyammmu05 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2693
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    மறந்து போன மருத்துவ உணவுகளும் அதன் மருத்துவ குணங்களும் :-


    ”’உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின் நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே…”


    பிரண்டைச் சத்துமாவு


    தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.


    செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.


    மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.


    அஷ்ட வர்க்க உணவுப்பொடி


    தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.


    செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!


    மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.


    இஞ்சிப் பச்சடி


    தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு.


    செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.


    மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.


    எள்ளு சாதம்


    தேவையானவை: புழுங்கல் அரிசி – 450 கிராம், எள், நெய் – தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு – தலா 15 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.


    செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!


    மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.


    வேப்பங்கொழுந்து துவையல்


    தேவையானவை: வேப்பங்கொழுந்து – 30 இணுக்கு, வெல்லம் – 10 கிராம், உளுத்தம்பருப்பு – 20 கிராம், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.


    செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.


    மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



    cuteyammmu05 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2694
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    ஒரு மனிதனை பாம்பு கடித்து
    விட்டால் அவர் இரத்த
    ஓட்டம்,இருதயம் செயல் இழக்க
    எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு
    கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர்
    உடம்பில் உயிர் இருக்குமா ? அவர்
    மீண்டும் உயிர் பெற முடியுமா ?
    சித்த வைத்தியத்தால் முடியும்!
    பாம்பு கடித்த ஒருவரை நீங்கள்
    டாக்டரிடம் சென்று காட்டும் போது
    அவர் இறந்து விட்டார் என்று சொல்லி
    விட்டால் நீங்கள் பயப்பட தேவை
    இல்லை. பாம்பு கடித்து விட்டால்
    இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம்
    துடிப்பு நின்று விடும் ஆனால்
    உடலில் உயிர் மட்டும் இருக்கும்
    கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா
    என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு
    பக்க காதில் எண்ணெய் உற்ற
    வேண்டும் எண்ணெய் மறு காதில்
    எண்ணெய் வந்தால் அவர் இறந்து
    விட்டார் என்று அர்த்தம் மறு பக்க
    காதில் எண்ணெய் வரவில்லை
    என்றால் அவர் உடப்பில் உயிர்
    உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு
    கருஊமத்த இலையை அரைத்து
    மூக்கில் 3&5 சொட்டு விடவும்
    மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி
    விடும்.
    PLEASE SHARE FRIENDSSSS



    cuteyammmu05 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2695
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    என் wall'ku வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    மீண்டும் வருக!!!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2696
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    மூட்டு தேய்மான நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய் :-


    வெண்டைக்காயில் பொதிந்திருக்கும் முதல் தரமான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுப் பாதையை ஒழுங்காக இயங்கச் செய்து குடல் அதிக அளவில் சர்க்கரைச் சத்தை கிரகித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது.


    கரையும் தன்மையுள்ள கரையாத்தன்மையுள்ள இருவித நார்ச்சத்தை வெண்டைக்காய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெண்டைக்காயில் மண்டிக்கிடக்கும் கொழகொழப்புமிக்க சவ்வுத் தன்மை ரத்தத்தில் கொழுப்புத்தன்மை மற்றும் பித்த நீர் அதிகரிக்கா வண்ணம் அவற்றை ஈரலின் துணை கொண்டு கட்டுப்படுத்துகிறது.


    வெண்டைக்காய் ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் பயன் தருகிறது. வெண்டைக்காயிலுள்ள வழவழப்புப்பொருள் பெருங்குடலின் உட்பகுதியில் பதிந்து பெருங்குடலின் செயலைச் செம்மைப்படுத்துகிறது. இயந்திரத்துக்கு எண்ணெய் இடுவதுபோல இது பெருங்குடலுக்கு ஒரு எண்ணெய் போல (லுப்ரிகேஷன்) பயன் தருகிறது.


    வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்தானது குடலில் உள்ள, நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டு மலத்தை சிறிது கட்டும்படி செய்கிறது. இதனால் மலம் நீர்த்து பேதியாகாமல் கெட்டியாக போக உதவுகிறது. மேலும் இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.


    மற்ற மலமிளக்கிகளைப் போலல்லாமல் குடலுக்கு துன்பம் தராமல், குடலை எரிச்சலாக்கிப் புண்படுத்தாமல் மிக்க பாதுகாப்பான மலமிளக்கியாகச் செயல்படுகிறது. வெண்டைக்காயிலுள்ள வழுவழுப்பான திரவம் கொழுப்புச் சத்தையும் உணவிலுள்ள நச்சுப்பொருள்களையும், பித்த நீரையும் கட்டுப்படுத்தி வெளியேற்ற் வல்லது.


    இதனால் குடலில் ஏற்படுகிற பல்வேறு நோய்கள் தவிர்க்கப்படுகிறது. வெண்டைக்காய் ஒரு ஆரோக்கியத்தின் காவலனாக செயல்பட்டு தேவையின்றி தேங்கும் கழிவுகளையும் நச்சுத்தன்மையும் உடலை விட்டு வெளியேற உதவுகிறது. வெண்டைக்காயில் பகுதியாக உள்ள உடலுக்குத் தேவையான நல்ல உயிர் அணுக்களுக்கு ஊட்டம் தருவதாக அமைகிறது.


    இந்த பாக்டீரியாக்களால் சீரண உறுப்புக்கள் சீராக நடைபெற ஏதுவாகிறது. வெண்டைக்காயில் பொதிந்து இருக்கும் சத்துக்கள் அத்தனையும் உடலாலும் மனதாலும் பலவீனமானவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமைகிறது. பலவீனத்தையும் சோர்வையும் போக்குவது மட்டுமின்றி மனதுக்கு உற்சாகம் தருவதாகவும் மனஅழுத்தத்தைக் குறைக்கவல்லதாகவும் விளங்குகிறது.


    வெண்டைக்காய் புண்களை அகற்றும் தன்மை வாய்ந்தது. மூட்டுக்களில் ஏற்படும் தேய்மானத்தையும், மூட்டுத் தேய்வால் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தி மூட்டுக்கள் சரிவர இயங்குவதற்கு உபயோகப்படுகிறது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மை குடலின் உட்பகுதியில் படிந்து குடல் புண்ணாகாமல் பாதுகாப்பதோடு புண்களையும் ஆற்றுகிறது.


    மேலும் குடலில் அமிலத் தன்மையை செயல் இழக்கச் செய்கிறது. வெண்டைக்காய் நூரையீரல் வீக்கத்தையயும், மூச்சு விடுவதில் சிரமத்தையும் தணிக்க வல்லது. வயிற்றுக் கடுப்பு ஏற்படுவதும் அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுவதும் வெண்டைக்காயால் தணிகிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


    மேலும் தொணடைக்கட்டு தொணடைக்கம்மல், தொண்டைப்புண்களையும் ஆற்ற வல்லது. கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களை தணிக்க வல்லதாக வெண்டைக்காய் உள்ளது. வெண்டைக்காயிலுள்ள விட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது. மேலும் சேர்வினை போக்ககூடியது. வீக்கத்தைத் தணிக்க வல்லது.


    அதுமட்டுமின்றி ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோயைத் தணிக்கக் கூடியது. வெண்டைக்காயை அன்றாடம் உணவில் சேர்ப்பதால் ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவற்றின் வீக்கம், அடைப்பு ஆகியவை வராமல் தடுப்பதோடு வந்த பின்னும் குணப்படுத்தவல்ல மருந்தாக பணி செய்யும்.


    வெண்டைக்காயைத் தாராளமாக உபயோகப்படுத்துவதால் சிலவகை புற்நோய்களைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மலக்குடலுக்கும் ஆசன வாய்க்கும் இடையே மலம் தங்குவதால் ஏற்படும் புற்றுக்கு ஒரு மருந்தாக அமைகின்றது. வெண்டைக்காயில் உள்ள மருத்துவ வேதிப்பொருள்கள் முடி போன்ற சிறுசிறு ரத்த நாளங்களை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கிறது.


    இதனால் உடல் ஆரோக்கியமும் மட்டுமின்றி தோலும் மென்மையும் பளபளப்பும் பெறுகிறது. வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் கண்தெளிவு பெறவும் நல்ல மருந்தாகிறது. அன்றாடம் 2 அல்லது 3 என்கிற எண்ணிக்கையில் வெண்டைக்காயைச் சாப்பிடுவதால் கண்புரை வருவது ஓரளவு தவிர்க்கப்படுகிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


    ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கும் வெண்டைக்காய் மருந்தாகிறது. வெண்டைக்காயை உண்பதோடு அதன் வழவழப்பான சத்துவத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் முகப்பருக்கள் மறைவதோடு முகம் பளிச்சென்று இருக்க உதவுகிறது. மென்மையானதும் அழகானதுமான தோலுக்கு வெண்டைக்காய் உணவு வழி செய்கிறது.


    மனித உடலின் இணைப்புப் பகுதிகளான மூட்டுக்களில் தேய்மானம் ஆகாமல் இருப்பதற்கென இறைவன் ஓர்வித வழவழப்பான திரவத்தைச் சுரக்கச் செய்துள்ளான். அது சினோவியில் புளூயிட் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது.


    எப்போது இந்த சுரப்பி சரிவர வேலை செய்யவில்லையோ அப்போது வெண்டைக்காய் கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உணவில் iதாராளமாக வெண்டைக்காயைச் சேர்த்துக் கொள்வதால் தேய்ந்துபோன மூட்டுகளுக்குத் தெம்பாயும் போதிய சத்தையும் பெற இயலும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2697
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் ஆயுர்வேத ஜூஸ்கள்!!!


    என்ன தான் மருத்துவ உலகில் பல முன்னேற்றம் இருந்தாலும், நம் நாட்டின் கை வைத்திய முறையான ஆயுர்வேத மருத்துவ முறைக்கு இணையாக வர முடியாது. ஏனெனில் நம் ஆயுர்வேத மருத்துவமானது, பல மூலிகைகள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதாக உள்ளது.


    அதுமட்டுமல்லாமல், இந்த மூலிகை சிகிச்சையை மேற்கொள்வதால், அவை பிரச்சனையை குணமாக்க நாட்களை எடுத்துக் கொண்டாலும், நிரந்தர தீர்வை அளிப்பதாக உள்ளது. இங்கு அப்படி உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் சில ஆயுர்வேத ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


    இந்த ஜூஸ்கள் அனைத்தும் மூலிகை கடைகளில் கிடைக்கும்


    தூதுவளை சாறு :-


    தூதுவளை சாறு ஜலதோஷம் மற்றும் சளியை வெளியேற்ற உதவும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும்.


    பிரண்டை சாறு :-


    குச்சி போன்ற தோற்றத்தைக் கொண்ட பிரண்டையின் சாற்றினை குடித்து வந்தால், எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, எலும்புகளும் வலிமை அடையும்.


    ஆவாரம்பூ சாறு :-


    சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஆவாரம்பூ சாற்றினை குடிப்பது நல்லது.


    ஆடாதோடா சாறு :-


    ஆஸ்துமா நோயாளிகள் ஆடாதோடா சாற்றினை குடிப்பதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.


    கொள்ளு சாறு :-


    பொதுவாக கொள்ளுவை கடைந்து தான் சாப்பிடுவோம். ஆனால் இதன் சாற்றினை பருகி வந்தால், உடலின் ஆற்றல் குறையாமல் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.


    பாகற்காய் சாறு :-


    காலையில் பாகற்காய் சாற்றினை பருகுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.


    கோவக்காய் சாறு :-


    கோவைக்காயை பொரியல் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அதன் சாற்றினை குடித்தால், வாயு தொல்லை நீங்கும் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது.


    முடக்கத்தான் சாறு :-


    முடக்கத்தான் சாறு எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கு மிகவும் நல்லது. பலரும் முடக்கத்தான் சாறு என்றதும் என்னவென்று யோசிப்போம். மேலும் எங்கு கிடைக்கும் என்று யோசிப்போம். இந்த சாறு மூலிகை கடைகளில் நிச்சயம் கிடைக்கும்.


    வாழைத்தண்டு சாறு :-


    சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், வாழைத்தண்டை ஜூஸ் எடுத்து குடித்து வந்தால், சிறுநீரக கல் கரைந்து, சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.


    கீழாநெல்லி சாறு :-


    கீழாநெல்லி சாறு குடல்புண், தொண்டை புண் மற்றும் நோய்கள், வயிற்று வலி போன்றவற்றை குணமாக்க உதவும்.


    நெல்லிச் சாறு :-


    நெல்லிக்காய் சாறு இரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்லது. அதிலும் இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தை விருத்தி செய்து, சோகையில் இருந்து விடுபடலாம்.


    நாவல் சாறு :-


    நாவல் சாற்றினை பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுன் இருக்கும்.


    துளசி சாறு :-


    துளசியை சாறு எடுத்து தினமும் சிறிது குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் பிரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, உடலில் சுத்தமான இரத்தத்தை ஓடச் செய்யலாம்.


    அருகம்புல் சாறு :-


    தினமும் அருகம்புல் சாறு குடித்து வருவதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.


    ஆளி விதை சாறு :-


    ஆளி விதை சாறு உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2698
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    நம்மாழ்வார் கடைப்பிடித்த உணவு ரகசியம்!


    காலை:


    கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.


    மதியம்:


    ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம்.


    இரவு:


    இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.
    வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.


    FB


    sasee777 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2699
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் :-


    கறிவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.


    கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும். கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.


    ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறு வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும். கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.


    கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும். கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.


    அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது. கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பத்தை அகற்றி , சுரத்தைக் குணப்படுத்தும். கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.


    கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.


    கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2700
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,869
    Blog Entries
    1786

    Re: Today's Medical Info

    ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம் - தெரிந்துகொள்வோம்


    புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள்.


    அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும். மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும்.


    கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது. அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள்.


    எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும். ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து கொடுத்து அனுப்புங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter