Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2701
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    குடல் புண்களை ஆற்றும் வாழைப்பூ :-


    வாழையின் மருத்துவப் பயன்கள்: ஒரு சாதாரண அளவுடைய வாழைப் பழத்தில் 95 கலோரி சத்தும் வைட்டமின் `சி' சத்தும் நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்வு தருவதோடு எளிதில் செரிமானமாகக் கூடியது. கொழுப்புச் சத்தோ உப்புச் சத்தோ இல்லாதது.


    வாழைப்பூ உணவாகவும், மருந்தாகவும் பயன் தரக் கூடியது. வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ் , புரோட்டீன் (புரதம்)கள் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் (பிராங்க்கைடிஸ்) மலச்சிக்கலை (கான்டிபேஷன்) தணிக்கவும்,


    குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாதவிலக்கு நேரத்தில் அடிவயிற்றையும் இடுப்பையும் கடுமையாக வலிக்கச் செய்து துன்பம் தருகின்ற (மென்ஃட்ருவல் கிராம்ப்) நோயைப் போக்க வல்லது. வாழைப்பூவினின்று எடுக்கப்படும் சத்தில் (எக்ஸ்ராக்ட்) உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுப்பதும் ஆன உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது. (ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்).


    வாழைப்பூவில் பேச்சிலஸ் செரியஸ் எக்னேசியா காலி, மலேரியாவைப் பரப்பும் ப்ளாஸ்மோடியம் பால்சிபாரம் ஆகிய நோய்க் கிருமிகளைத் தடுக்கும் வல்லமை உள்ளது




    Sponsored Links
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2702
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    அல்சர் நோயை குணப்படுத்தும் திராட்சை :-


    திராட்சைப்பழம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. திராட்சையில் பச்சை, கறுப்பு என எந்த பழம் இருந்தாலும் சாப்பிடலாம். குறிப்பாக அல்சர் என்று சொல்லப்படும் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும்.


    தினமும் காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள்... வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். இதேபோல், தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.


    பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.
    இதே பிரச்சனை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்சனை சரியாகிவிடும். கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2703
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?
    ********************************************************************************
    சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ...
    சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
    சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்


    வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ
    வெந்தயம் - கால் கிலோ


    தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
    இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.


    பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சப்ப்பிட்டு வரவும்.


    இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
    இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.


    சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார
    இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2704
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சிறுநீரக கல்லை கரைக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்....


    உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.


    குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் ‘ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.


    அறிகுறிகள்:


    இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும். குமட்டல், வாந்தி, காய்ச்சல் இருக்கும். வலியுடன் சிறுநீர் வெளியேறும். எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீரில் ரத்தம் (அ) சீழ் கலந்து வெளியேறும்.


    சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வுகள்:


    • கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.


    • வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.


    • அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.


    • ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.


    • அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.


    • அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.


    சேர்க்க வேண்டியவை:


    தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள் பூசணி, வெண் பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர், நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர்.


    தவிர்க்க வேண்டியவை:


    இந்த மருந்துகளை எடுத்து கொள்ளும் போது இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ப்ளம்ஸ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2705
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    இருமலைப் போக்கும் தூதுவளை :-


    சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. சளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும்.


    இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும்.


    இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த குத்தல் இருமலும் காணாமல் போகும்.


    தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும்.


    தூதுவளை இலை உடலுக்கு உஷணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.



    Last edited by Sriramajayam; 24th Jul 2015 at 05:00 PM.
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2706
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    புற்றுநோயை அழிக்கும் காலிஃப்ளவர்!





    Dr Vikatan


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-califlower.jpg  
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2707
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    இதயத்தை பலப்படுத்தும் சுக்கான் கீரை....


    சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு.இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும்.


    இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம். இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து.


    சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும். சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2708
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info. - 2

    மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும் ; ஆய்வில் தகவல்

    லண்டன் : மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள் ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களால் முறையற்ற வளர்சிதை மாற்றங்கள் மட்டுமின்றி நரம்பியல் நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெர்னல் எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கதிர்வீச்சுக்களால் உடல் செல்களில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புற்றுநோய் மட்டுமல்ல தொடர் தலைவலி, உடல்சோர்வு, தோல் வியாதிகள் போன்றவைகளும் மொபைல் போன் அதிகம் பயன்படுத்துபவர்களை பாதிக்கும் என கூறப்படுகிறது. இவைகள் நீண்ட நாளைய பாதிப்புகளாக மாறவும் வாய்ப்பிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    2011ம் ஆண்டு சர்வதேச புற்றுநோய் ஆய்வு கழகம் நடத்திய ஆய்விலும், கதிர்வீச்சுக்களால் தான் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன் மட்டுமின்றி வயர்லெஸ் இன்டர்நெட் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    jv_66 and Sriramajayam like this.

  9. #2709
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info. - 2


    சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைப்பது அவசியம்!

    பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர் தீபா ஹரிஹரன்:

    குறித்த தேதிக்கு சில வாரங்களுக்கு முன், குழந்தை பிறப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, 40 முதல், 42 வாரங்களில் குழந்தை பிறக்க வேண்டும். 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம், பிரசவ காலத்தில் வரும் சர்க்கரை, ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்களால், 34, 36 வாரங்களில் குழந்தை பிறக்கிறது. வேலைக்குப் போகும் பல பெண்கள், கடைசி நாள் வரை அலுவலகம் செல்ல வேண்டிய நிலை. அதனால் உடல் அளவிலும், மன அளவிலும், நிறைய அழுத்தம் அவர்களுக்கு இருக்கிறது.

    பிரசவ நாள் வரை நடப்பது, லேசான வேலைகள் செய்வது நல்லது தான். ஆனால், அளவுக்கு அதிகமான அழுத்தத்தில் இருப்பது, குறிப்பிட்ட வாரங்களுக்கு முன், பிரசவம் ஆக
    காரணமாக உள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்காவிடில், 30 வாரங்கள் வரை குழந்தை சீரான வளர்ச்சியில் இருக்கும். அதன் பின் பிரச்னை வரலாம். அம்மாவின் உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், குழந்தையின் உடலில் சர்க்கரை குறைந்து விடும். இதுபோன்ற சூழலில், 30 சதவீத குழந்தைகள், 1.8 கிலோ எடை தான் இருக்கும். எடை குறைவாகப் பிறந்தால், இயல்பாகவே மூச்சுத் திணறல் வரும்.தவிர, இதுபோன்ற குழந்தைக்கு, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயல்படும் திறன் முழுமையாக இருக்காது.

    தொற்று, மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளும் வரலாம்; வலிப்பு வருவதற்கான சாத்தியங்களும் உள்ளன. குழந்தை உடலின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் குளூக்கோஸ் செலுத்த வேண்டியிருக்கும்.அதுமட்டுமின்றி, 25, 26 வாரங்கள் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கு, அதன் பின், ஸ்கேன் செய்து பார்த்தால், கர்ப்பப் பையில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதன் தொடர்ச்சியாக திரவம் குறைந்து, குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றமே, இதற்கு காரணம். தாய், சேய் இணைப்புத் திசு வழியாக, 50 சதவீத சத்துகள், ஆக்சிஜன் குழந்தைக்குக் கிடைக்கிறது என்றால், மீதமுள்ள சத்துகளை, இந்த திரவத்தின் வழியாகவே குழந்தை எடுத்துக் கொள்கிறது. குழந்தை திரவம் குடிப்பதை, ஸ்கேன் செய்யும்போது பார்க்கலாம். பிரசவ வலி என்பது, இயற்கை கொடுத்துள்ள நல்ல விஷயம். அந்த நேரத்தில் பெண்ணின் உடலில், பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். தவிர, குழந்தை வெளியுலகை எதிர்கொள்ள, எல்லா விதத்திலும் தயாராகி விட்டது என்பதற்கான அடையாளம்!


    jv_66 and Sriramajayam like this.

  10. #2710
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,501
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter