Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree4813Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2771
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.


    👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்

    👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

    👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.

    👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

    👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

    👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

    👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

    👉தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

    👉இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.

    👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

    👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

    👉இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன்👆 பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.



    Sponsored Links

  2. #2772
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம்.

    * 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

    * 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

    * 3. வயிற்றுப் புண் குணமாகும்.

    * 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

    * 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

    * 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

    * 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

    * 8. மலச்சிக்கல் நீங்கும்.

    * 9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

    * 10. உடல் இளைக்க உதவும்

    * 11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

    * 12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

    * 13. மூட்டு வலி நீங்கும்.

    * 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

    * 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

    * 16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

    * 17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

    * 18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

    * அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.


    FB




    fatima15 and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  3. #2773
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    ரசத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

    சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, கொத்துமல்லி, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

    புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும். நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது. அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

    சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.

    உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லியும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

    கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறிவேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது. ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக்கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

    ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது. ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

    மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலியவற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் மருந்தாகக் குணப்படுத்தும். எனவே, ரசத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


    FB


    fatima15 and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  4. #2774
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    முடி இழப்பை தடுக்கும் வழிகள் - இயற்கை வைத்தியம்

    தேங்காய்:

    முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி கண்டிஷனும் செய்கிறது. முடி உடைதலை குறைக்கக் கூடிய அத்தியாவசிய கொழுப்புகள், கனிமங்கள் மற்றும் புரதங்களுடன் நிறைய பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.
    முடி உதிர்வதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய்ப் பாலை உபயோகிக்கலாம். இதன் உள்ளடக்கங்கள் உங்கள் முடிக்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. சிறிது தேங்காய் எண்ணெயை சூடு செய்து அதை உங்கள் முடியின் வேரிலிருந்து நுனி வரை மசாஜ் செய்து, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அலசவும். அல்லது தேங்காயைத் துருவி, அதை சிறிது தண்ணீர் கலந்து பிழிந்து அதன் பாலை எடுக்கவும். அதை நீங்கள் பார்த்த வழுக்கையாக உள்ள அல்லது மெலிதாக உள்ள பகுதியில் தடவவும். இரவு முழுவதும் அதை விட்டு, பின்பு மறுநாள் காலையில் அலசவும்.

    வெங்காயச் சாறு:

    கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சல்பருக்கு வெங்காயம் ஒரு சிறந்த ஆதாரமாகும். அதன் சாற்றை உச்சந்தலையில் உபயோகிப்பது முடி விழுவதை கட்டுப்படுத்த உதவுகிறது. வெங்காயத்தை நன்றாக சிறிதாக வெட்டி அதன் சாற்றை பிழிந்தெடுக்கவும். அதை உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் விட்டு விடவும். ஒரு மிதமான ஷாம்பூவினால் அலசி முடியை உலர விடவும். முடிவுகளைப் பார்த்து இதை வாரம் இருமுறை உபயோகிக்கவும்.

    பூண்டு:

    சில பல் பூண்டை நசுக்கவும். அதனுடன் சிறிது தேங்காய் எண்ணையை சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அதை சிறிது நேரம் குளிர வைத்து உங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அதை, 30 நிமிடங்கள் விட்டு பின்பு அலசலாம். இதை ஒரு வாரத்தில் இரண்டு முறைகள் செய்யவும்.






    Dangu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  5. #2775
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    ஜீரண சக்தியை தூண்டி வயிற்று கோளாறுகளை சரி செய்யும் தயிர் - இயற்கை மருத்துவம்

    சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது. சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. தயிர் ஒரு அருமருந்து. உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும்.

    தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான். அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு பக் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும். பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம்.

    மெனோபாஸ் எட்டப் போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன. கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
    நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். தயிரை சோற்றுடன் கலந்து சாப்பிடபிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து. குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும்.


    This is 51500 Posts




    krrishna and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  6. #2776
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    பக்கவாத நோய் வரக்காரணம் தடுக்கும் வழிமுறைகள் - தெரிந்துகொள்வோம்


    கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன.பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லா திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.


    மூளைக்கு செல்லும் பேரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராணவாயு , ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படித்தல், அதிக உடல் எடை, பருமன் கூடுதல், புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று நோயாலும், பக்கவாதம் வரலாம்.

    பாரம்பரியமாகவும் இந்த பாதிப்பு வருகிறது. 80 சதவீத பக்கவாதம், மூளையில் ரத்தக்குலாஇகல் அடைப்பாலும், 20 சதவீஸ் பக்கவாதம், மூளையில் ரத்தம் கசிந்து தேங்குவதாலும் ஏற்படுகிறது. பக்கவாதத்தை வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல், செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு, திடீரென தலை சுற்றல், திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பேரர் பேசுவதை புரிய முடியாமை, திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    அப்போதே, உஷாராகி விடுவது நல்லது. அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மொழி அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (thrombolitic therapy ) செலுத்தினால், முற்றிலும் குணப்படுத்த முடியும். தாமதமாக வந்தால், மருந்து மருந்து போட்டாலும் பயனில்லை. பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும்.


    தகுதியான் நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்த முடியாது. பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு, நீண்ட கால சிகிச்சையாக மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப, பேச்சு பயிற்சியாளர், உடல் இயக்க சிகிச்சையாளர், மன நல ஆலோசகர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி, பாதிப்புக்கு தகுந்தாற்போல் தேவைப்படும். இவர்கள் அனைவரும் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, வெகு விரைவில் குணமாக வாய்ப்புள்ளது.


    சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்துதல் அவசியம். பழம் கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை கொழுப்பு உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில் உள்ளது.







    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-pakkavaatham.jpg  
    Last edited by Sriramajayam; 27th Sep 2015 at 05:30 PM.
    Dangu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  7. #2777
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    சளி, இருமலைத் துரத்தும் மிளகு!


    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது!


    * சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.


    * வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.


    * ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.


    * தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.


    * மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்.


    டாக்டர் விகடன்


    Dangu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  8. #2778
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்க..
    குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.
    சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.


    Sriramajayam likes this.

  9. #2779
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info


    தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்பிடலாமா?


    முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிடக்கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.

    தேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட பேட் (உறைந்த கொழுப்பு). கெமிக்கல் மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. உறைந்த கொழுப்பு கொலாஸ்டிராலை அதிகரிக்கும் என்றார்கள். உறையாத கொழுப்பு கொல்ச்டிராலை குறைக்கும் என்ரார்கள். அதை நம்பி பலரும் பாரம்பரியமா உன்டு வந்த தேங்காய் எண்னெய் ச்மையலை நிறுத்திவிட்டு சூரியகாந்தி, எண்னெய்வித்துக்களுக்கு மாறினார்கள்.

    ஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விஷயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல கொல்ஸ்டிராலை என்பதை. நல்ல கொல்ஸ்டிரால் உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொலஸ்டிராலை மீண்டும் லிவருக்கு கொன்டுபோய் ஜீரணம் செய்வித்துவிடும். அந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிஆரலை தேங்காய் எண்னெய் அதிகரிக்கும். அந்த நல்ல கொலச்டிராலை எண்னெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்னெய்கள் குறைக்கும்.

    மேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. இது தேங்காய்பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே சோர்ஸ் தாய்ப்பால் தான்!!!!!!!

    தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உன்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துன்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும். இத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிடவிடாமல் தடுத்து பாக்டரியில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜனேட்டட் எண்னெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் ட்ரான்ஸ்ஃபேட் எனும் வகை ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது.

    இது குறித்து நிகழ்த்தபாட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது

    http://jn.nutrition.org/content/131/2/242.full

    இரு குழுக்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டன. ஒரு குழு சோயா எண்ணெய்யை சமையலுக்கு உட்கொண்டது. இன்னொரு குழு லாரிக் அமிலம் நிரம்பிய தேங்காய் எண்னெயால் ச்மைக்கபட்ட உனவுகலை உன்டது.

    ஆய்வு முடிவில் தேங்காய் எண்னெயில் செய்தவற்றை உன்ட குழுவினருக்கு நல்ல கொலஸ்டிரால் கணிசமாக அதிகரித்தது. ட்ரைகிளிசரைட்ஸும் குறைந்தது. அவர்கள் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைந்தது. மோசமான எல்டிஎல் கொலஸ்டிரால் எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை (ஆனால் எல்டிஎல்/ எச்டிஎல் ரேஷியோ அதிகரித்தால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் கணிசமாக குறையும்).

    அதை விட முக்கியமாக "வெஜிட்டபிள் ஆயிலில் இருந்து எடுத்த எண்னெயில் சமைத்தவர்களின் எச்டிஎல் கொலஸ்டிரால் குறைந்தது" என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

    அப்புறம் ஏன் நாட்டில் ஹார்ட் அட்டாக்குகள் பெருகாது என கேட்கிறேன்?

    கொழுப்பை குறைக்கும் தேங்காய் . . .

    தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

    அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

    தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.

    சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.

    தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.

    தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.

    தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல்.

    ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

    புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

    தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

    தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

    மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

    மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.

    தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

    தைலங்கள் . . .

    தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

    எளிதில் ஜீரணமாகும் . . .

    தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

    பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

    வயிற்றுப்புண்கள். . .

    தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

    தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

    மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

    வைரஸ் எதிர்ப்பு . . .

    தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது

    ஆண்மைப் பெருக்கி . . .

    முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

    குழந்தை சிவப்பு நிறமாக . . .

    குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

    தேங்காய் எண்ணெய் . . .

    இன்றைய நவீன உலகில் பலரு*ம் தே*ங்கா*ய் எ*ண்ணெயை தலை*யி*ல் தே*ய்*ப்பதே இ*ல்லை. தலை முடி ஒ*ட்டி*க் கொ*ண்டு முக*ம் அழுது வ*ழியு*ம் எ*ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும்.

    ஆனா*ல், தே*ங்கா*ய் எ*ண்ணெயை*ப் போ*ன்று உடலு*க்கு ந*ன்மை செ*ய்யு*ம் ஒரு பொரு*ள் வேறு எதுவுமே இ*ல்லை எ*ன்று கூறலா*ம். தலை*க்கு தே*ங்கா*ய் எ*ண்ணெ*ய் தே*ய்*த்து*க் கொ*ள்வது *மிகவு*ம் ந*ல்லது. தலை*யி*ன் தோ*ல் பகு*தியை வற*ண்டு *விடாம*ல் தே*ங்கா*ய் எ*ண்ணெ*ய் பாதுகா*க்கு*ம்.

    மேலு*ம், கு*ளி*ப்பத*ற்கு மு*ன்பு*ம் தே*ங்கா*ய் எ*ண்ணெயை உட*ல் முழுவது*ம் பூ*சி*க் கொ*ண்டு ஊற*வி*ட்டு*க் கு*ளி*க்கலா*ம். இது தோலு*க்கு *மிகவு*ம் ந*ல்லது. அ*திகமாக மே*க்-அ*ப் போடு*ம் பெ*ண்க*ள், இர*வி*ல் மு*க*த்தை சு*த்த*ம் செ**ய்து* வி*ட்டு தே*ங்கா*ய் எ*ண்ணெயை தட*வி*க் கொ*ண்டு படு*க்கலா*ம். இதனா*ல் சரும*த்*தி*ற்கு ந*ல்ல பொ*லிவு *கிடை*க்கு*ம்.

    பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

    வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

    வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

    புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

    தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

    உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

    தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.

    தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

    சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

    வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.


    Sriramajayam likes this.

  10. #2780
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    73,105
    Blog Entries
    1669

    Re: Today's Medical Info

    பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - இயற்கை வைத்தியம்:-


    * முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.
    * இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.
    * வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும்.
    * சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.
    * மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.
    * 40 வயதை தாண்டிவிட்டால் அதிக உணவை தவிர்த்து சத்துள்ள உணவு குறைந்த அளவும், அதிக பழச்சாறும் பருகினால் நோய் வராது.
    * கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
    * கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
    * மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.



    Last edited by Sriramajayam; 16th Oct 2015 at 01:37 PM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter