Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree4822Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2801
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள் - இயகை மருத்துவம்


    உங்களுக்கு அடிக்கடி கால் மரத்துப் போகிறதா? குறிப்பாக இந்த பிரச்சனையை ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் சந்திப்பார்கள். அதிலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தாலோ அல்லது ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தாலோ மரத்துப் போகும். இதற்கு காரணம், உடலின் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் இரத்தம் சரியாக வழங்காதது தான்.


    பொதுவாக உடலில் கைகள், பாதம், விரல்கள், கால்கள் போன்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் தான் இந்த பிரச்சனை ஏற்படும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரக பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.


    க்ரீன் டீ :-


    உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வாருங்கள். ஏனெனில் அதில் உள்ள எபிகேலோகேட்டசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை தடையின்றி உடல் முழுவதும் பாய உதவுகிறது


    ரோஸ்மேரி :-


    நறுமணமிக்க ரோஸ்மேரி மூலிகை, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்கு இதனை உலர்ந்த வடிவத்திலோ அல்லது பிரஷ்ஷாகவோ உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.


    மிளகு :-


    பெரும்பாலான உணவுப் பொருட்களில் காரத்திற்கும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மிளகு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதிலும் இதனை அன்றாடம் ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக பாயும்.


    தக்காளி:-


    உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் பிளேக் கட்டமைப்பை உடைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் சீராக்குகிறது.


    இஞ்சி :-


    உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் இஞ்சி, பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் தான் காரணம். இவை இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.


    பூண்டு :-


    பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பூண்டு இரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து ஹைட்ரஜன் சல்பைட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஹைட்ரஜன் சல்பைடு தான் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


    வெங்காயம் :-


    வெங்காயம் கூட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். எனவே முடிந்த அளவில் இதனை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.


    நட்ஸ் :-


    நட்ஸில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3 என்னும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்து வளமாக நிறைந்துள்ளது.


    ரன்னிங் :-


    நாம் ஓடுவதற்கும், இரத்த ஓட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற பலரும் கேட்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் ரன்னிங் மேற்கொண்டால், உடலில் இரத்த சுழற்சி அதிகரிக்கும். அதிலும் தினமும் தவறாமல் 20 நிமிடம் ரன்னிங் மேற்கொள்ள வேண்டும். மேலும் நாளுக்கு நாள் ஓட்டத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.




    Sponsored Links
    gomathyraja likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2802
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    ஏன் தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? - தெரிந்துகொள்வோம்


    ஒருவேளை இவ்வுலகு நீரின்றி அமைக்கப்பட்டிருந்தல் எப்படி இருந்திருக்கும் என்று ஓர் சிறிய யோசைனைக்காக கூட சிந்திக்க முடியாது. ஏனெனில், சிந்திக்க நாம் யாரும் இவ்வுலகில் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். தண்ணீர் என்பது இயற்கை, விலங்குகள், மனிதர்கள் என அனைத்திற்கும் தேவைப்படும் ஓர் முக்கிய பொருள்.
    அதனால் தான் நம் முன்னோர்கள் "நீரின்றி அமையாது உலகு" என பாடி சென்றுள்ளனர். அப்படிப்பட்ட நீரை நீங்கள் தினமும் சரியான அளவு குடிக்காமல் இருந்தால் என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா?


    சரும சுருக்கங்கள் :-


    தினமும் சரியான அளவு நீங்கள் தண்ணீர் பருக தவறினால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். வயதிற்கு தாண்டிய வேகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும், இது வயதான தோற்றத்தை அளிக்கும்.


    நீர்வறட்சி :-


    பசி எடுக்கவில்லை எனிலும் கூட உங்கள் மூளை பசிப்பது போன்ற சிக்னலை உங்கள் உடலுக்குள் எழுப்பும். இதற்கு காரணம் சரியான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட நீர்வறட்சி தான். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும்.


    தசை வலிமை குறையும் :-


    நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால். தசையின் வலிமை குறையும். ஏனெனில் நம் உடலில் இருக்கும் தசையில் பெரும் பங்கு நீருடையது. எனவே, நீங்கள் தினமும் நீர் சரியான அளவு பருக வேண்டியது அவசியம்.


    சரும வறட்சி :-


    நீர் சரியான அளவு பருகாமல் இருப்பதால் சரும சுருக்கங்கள் மட்டுமின்றி, சரும வறட்சி ஏற்படவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு காரணம் உங்கள் உடலில் ஏற்படும் நீர்வறட்சி தான். சரியான அளவு நீர் குடிக்காமல் இருப்பதால் சரியாக வியர்வை வராது, நச்சுக்கள் உடலை விட்டு வெளியேறாது.


    மூட்டு வலி :-


    மூட்டு வலி சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சரியான அளவு தண்ணீர் பருகி வருவதால் வலியை குறைக்க முடியும். ஏனெனில் உங்கள் உடம்பில் உள்ள முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்பு போன்றவற்றில் 80% சதவீதம் நீரின் பங்கு இருக்கிறது


    கண்கள் :-


    சரியான அளவு நீங்கள் தினமும் நீர் பருகாமல் இருந்தால் கண் சிவந்தல், கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.


    மயக்கம், சோர்வு :-


    உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் வலுவிழக்கும். இதனால் உடல் சோர்வு மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.



    ajayjofi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2803
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2804
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    எண்ணெய்க் குளியல்






    எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது.


    இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக்


    கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன.


    எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:


    இரைப்பு,இளைப்பு நோய்கள்,மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம்,


    முகத்தில் உண்டாகும் நோய்கள்,அதிவியர்வை நீங்கும்.


    ஐம்புலன்களுக்கும் பலம்,தெளிவு உண்டாகும்.
    தலை,முழங்கால்கள் உறுதியடையும்.முடி கறுத்து வளரும்.


    தலைவலி ,பல்வலி நீங்கும்.


    தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,உடல் பலமாகும்,சோம்பல் நீங்கும்,


    நல்ல குரல் வளம் உண்டாகும்.


    சுவையின்மை நீங்கும்.


    இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து,


    நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-oil-bath-info.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2805
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குறிஞ்சான் கீரை - மூலிகை மருத்துவம்


    குறிஞ்சாக் கீரையில் இருவகை உண்டு. சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான். சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது. மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.


    இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது. சிறுகுறிஞ்சான் வாதமொடு சீதத்தை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை குறிஞ்சாக் கீரைதான். sirukurinjan நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.


    குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும். நாவற்பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.


    உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2806
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    குப்பைமேனி‬

    குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது.

    பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து.

    குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.

    குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம்.

    இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும்.

    குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகள் வயிற்றில் இருக்கும் புழுக்கள், மலம் வழியாக வெளியேறும்.

    இதனுடைய இலைப் பொடியை ஒரு கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால், இருமல் மற்றும் கபம் நீங்கும்.







    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2807
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    ‪பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.

    வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும்.
    நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு.

    உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்.

    அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம்.

    பழுத்த பிறகு தான் முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும்.

    காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் சளிக் கோளாறுகள் போன்றவை தோன்றும்.

    அதனால்தான் கடைகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.

    இதுவும் ஒரு டானிக் காய்கறிதான்.

    P1015893100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது.

    கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.

    நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    இது சத்துணவாகவும் சத்து மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

    முற்றிய பீர்க்கன் காயை மட்டும் சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.

    பீர்க்கன்காய் கொடி இனத்தை சேர்ந்தது.

    இந்திய விவசாய சமூகம் கண்டுபிடித்துள்ள ‘பூசா கஸ்தார்’ என்னும் ரகம் மிகவும் உயர்வானது.

    தமிழ்நாட்டில்தான் அதி நீள உயர் ரகம் பீர்க்கு என்னும் ஓர் ரகம் பயிரிடப்படுகிறது.

    இவ்வகைக் காய்கள் 70 முதல் 90 செ.மீ. வரை நீளமானவையாகவும் 200 கிராம் எடை கொண்டனவாயும் இருக்கின்றன.

    காய்கள் பச்சை நிறத்திலும் காணப்படும்.

    100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான்.

    எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.

    முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது.

    பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது.

    நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

    இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.

    புண்ணுக்கு மருந்து.

    சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்;

    இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும்.

    பற்றாகவும் இடலாம்.

    பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

    சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும்.

    ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

    பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

    இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும்.

    ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும்.

    இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்;

    ஆனால், சக்தி மிக்கது.

    இரத்த சோகை விரைந்து குணமாகும்.

    கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

    கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான்.
    கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும்.

    தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி.





    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2808
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    புற்றுநோயை எதிர்க்கும் கேரட்

    கேரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் கேரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    Carrot இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு என்று பெயர். இந்த நோயை ஒழிக்க எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகளுடன் கூடிய 24 எலிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எலிகளை மூன்று குழுக்களாக பிரித்துக் கொண்டனர். முதல் குழுவிற்கு நமக்கு நன்றாகத் தெரிந்த ஆரஞ்சுநிற காரட்டுகள் பதினெட்டு வாரங்களுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டன. மற்றொரு குழுவிற்கு தேவையான அளவில் சேர்க்கப்பட்ட காரட்டுகள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது குழுவிற்குன் அளவு அதிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவில் புற்றுநோய்க்கட்டிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது அறியப்பட்டது.

    நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிர்ஸ்டன் ப்ராண்ட் என்பவர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். புற்றுநோய்க்கட்டிகளை கட்டுப்படுத்த எவ்வளவு தேவை என்பதை துல்லியமாக கண்டறிய இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டாக்டர் ப்ராண்ட் கூறுகிறார். மேலும் காய்கறிகளைப் பயிரிடும்போதே மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.

    பச்சைக்கேரட், சமைக்கப்பட்ட கேரட், கேரட்சாறு இவற்றை உணவில் சேர்க்கும்போது அவை புற்றுநோய்க்கட்டிகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகள் தொடருகின்றன.ன் அளவு அதிகரிக்கும்போது நச்சுத்தன்மையை விளைவிக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால் ஒரே சமயத்தில் 400 கிலோ கேரட்டை சாப்பிடுவதால் மட்டுமே ஆபத்தான அளவிற்கு நச்சுத்தன்மையை உண்டாக்கப்படுமாம். என்னும் நச்சு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குள் தூண்டிவிடுகிறது என்பதுமட்டுமே இதுவரையிலான கண்டுபிடிப்பு.



    This is 53000 Posts

    Today's  Medical Info-smiley-lights-fireworks.gif



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2809
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    முருங்கை கீரையின் நன்மைகள் - இயற்கை மருத்துவம்


    1.முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.
    2.முருங்கையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்.
    3. இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது.
    4. உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல்-தேறும்.
    5.முருங்கை இலையில் வைட்டமின் A, B, C, கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
    6.ஒரு கோப்பை முருங்கை சாறில் 9முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8கோப்பை பாலில் அடங்கி இருக்கும் வைட்டமின் A உள்ளது.
    7.வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும்.
    8.இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும்.
    9. சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.
    10.உடல் சூட்டை குறைக்கும் , கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும்.
    11.இளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும்.
    12.தாய்ப்பாலை அதிகமாக ஊறவைக்கும்.
    13. பெண்கள் கண்டிப்பாக முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2810
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,774
    Blog Entries
    1721

    Re: Today's Medical Info

    கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சூப்பர் உணவுகள்!!!


    உடலின் முக்கியமான உறுப்புக்களில் ஒன்று தான் கல்லீரல். இது உடலில் பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது. அதில் செரிமானத்தில் உதவி புரிவது, மெட்டபாலிசம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டசசத்துக்களை சேகரித்து வைப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் கல்லீரல் உடலின் மற்ற பாகங்களுக்கு வேண்டிய கெமிக்கல்களை உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமின்றி உடலின் டாக்ஸின்களை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதுப்போன்று பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவது தான் கல்லீரல்.


    இந்த கல்லீரலின் ஆரோக்கியமானது, ஆரோக்கியமற்ற டயட் மற்றும் மோசமான வாழ்க்கை முறையினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்ற முடியாமல் இருக்கும். இப்படி கல்லீரல் சீராக இயங்காமல், உடலில் உள்ள டாக்ஸின்கள் சரியாக வெளியேற்றப்படாமல் இருந்தால், உடல் பருமன், இதய நோய், நாள்பட்ட சோர்வு, தலை வலி, செரிமான பிரச்சனை, அலர்ஜி போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


    ஆகவே கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய சில ஆரோக்கிய உணவுகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.


    .பூண்டு :-


    பூண்டு கல்லீரலில் உள்ள நொதிகளை சீராக செயல்பட வைத்து டாக்ஸின்களை வெளியேற்றும். மேலும் இதில் உள்ள அல்லிசின் மற்றும் செலினியம், கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு, கல்லீரலுக்கு டாக்ஸின்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது. அதற்கு 2-3 பூண்டை தினமும் பச்சையாக சாப்பிட்டும் வரலாம் அல்லது அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம்.


    எலுமிச்சை :-


    எலுமிச்சையின் நன்மைகளைப் பற்றி சொன்னால் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அவை கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகம் உற்பத்தி செய்து, சீரான செரிமானத்திற்கு வழிவகுக்கும். கல்லீரல் கனிமச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு எலுமிச்சை உதவியாக இருக்கும். ஆகவே முடிந்தால், அன்றாடம் எலுமிச்சை ஜுஸை தவறாமல் குடித்து வாருங்கள். அதிலும் தேன் சேர்த்து கலந்து குடித்து வருவது மிகவும் நல்லது.


    க்ரீன் டீ :-


    க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் மற்றும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றி, உடலின் நீர்ச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும். அதிலும் க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 2 கப் குடிக்கலாம். முக்கியமாக தேன் சேர்த்து குடிப்பது நன்மை பயக்கும். குறிப்பாக அளவுக்கு அதிகமாக குடித்தால், அதுவே கல்லீரலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.


    அவகேடோ :-


    அவகேடோவில் உள்ள குறிப்பிட்ட கெமிக்கல்கள் கல்லீரல் பாதிப்பை குறைப்பதாக 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் இந்த பழத்தில் உள்ள க்ளூடாதியோனைன், கல்லீரலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும்.


    மஞ்சள் :-


    அன்றாட உணவில் சிறிது மஞ்சளை சேர்த்து வந்தால், அது கொழுப்புக்களை கரைப்பதுடன், கல்லீரலில் தங்கியுள்ள டாக்ஸின்களையும் வெளியேற்றும். முக்கியமாக மஞ்சள் பாதிப்படைந்த கல்லீரல் செல்களை புதுப்பிக்கும் திறன் கொண்டது. ஆகவே கல்லீரல் ஆரோக்கியமாகவும், சீராகவும் செயல்பட மஞ்சளை உணவில் அன்றாடம் சேர்த்து வாருங்கள். அதிலும் 2 வாரத்திற்கு தொடர்ந்து தினமும் மஞ்சள் கலந்த பாலை இரண்டு முறை குடித்து வருவது மிகவும் நல்லது.


    ஆப்பிள் :-


    தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதுடன், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். ஆகவே அன்றாடம் முடிந்தால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வாருங்கள்.


    வால்நட்ஸ் :-


    மூளை போன்ற தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸில், கல்லீரலை சுத்தப்படுத்தும் க்ளூட்டாதியோனைன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால்கள் கல்லீரல் பாதிப்படைவதைத் தடுக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரங்களில் வால்நட்ஸை உட்கொண்டு வந்தால், கல்லீரல் பாதிப்பைத் தடுக்கலாம்.


    ப்ராக்கோலி:-


    ப்ராக்கோலியிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே உங்களுக்க இந்த காய்கறி எங்கேனும் கிடைத்தால், அதை உட்கொள்வதை தவிர்க்காதீர்கள். அதிலும் இந்த காய்கறியை வாரத்திற்கு மூன்று முறை உட்கொண்டு வந்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.


    This is 25th Posts (Today)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter