Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2851
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    எந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்?

    ஆவாரம்பூ நீர்:“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.கரிசாலை நீர்:சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.செம்பருத்தி நீர்:செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
    காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
    நன்னாரி நீர்:“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.துளசி நீர்:குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.வல்லாரை நீர்:யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.


    Sponsored Links
    Sriramajayam likes this.

  2. #2852
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info



    Sriramajayam likes this.

  3. #2853
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info



    Sriramajayam likes this.

  4. #2854
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    இரத்த குழாய் அடைப்பு நீங்க...! வீட்டுவைத்திய முறை.






    பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்..!! தனது இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரம் ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் மறுமுனையில் நோயளிக்கு பரிந்துரைத்தார் அதனை செய்தவாறு நோயாளி இருந்தார். எனினும் மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார் - தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார். இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம். இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்,, 1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் பூண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!


    FB


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-lime-veniker.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2855
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வாய்ப்புண். உதடுவெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம் :-


    1. கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்
    2. சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்
    3. திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்
    4. ஒரு பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
    5. மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
    6. மணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்
    7. மருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்
    8. ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்
    9. சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்
    10. கொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2856
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    தினமும் உணவில் சிறிது நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!


    உடல் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், உண்ணும் உணவில் எண்ணெய், நெய் போன்றவற்றை சேர்க்கமாட்டார்கள். அப்படி சேர்க்காமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஒருசில முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். அதிலும் நெய் சேர்க்காமல் இருப்பது மிகவும் தவறு. ஏனெனில் நெய்யில் ஊட்டச்சத்துக்களானது வளமாக நிறைந்திருப்பதால், அதனை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வருவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.


    ஞாபக மறதியைத் தடுக்கும் :-


    நெய்யை அன்றாடம் சிறிது சேர்த்து வருவது நரம்பு மற்றும் மூளைக்கு நல்லது . ஏனெனில் மூளையில் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் மற்றும ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. இந்த சத்துக்களின் அளவு உடலில் குறையும் போது, ஞாபக மறதி வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தினமும் இதனை சிறிது சேர்த்து வந்தால், மூளையின் செயல்பாடு சீராக இருக்கும்.


    ற்றுநோயைத் தடுக்கும்:-


    நெய்யில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதனை சூடேற்றும் போது ப்ரீ ராடிக்கல்களை குறைவாக உற்பத்தி செய்வதால், புற்றுநோய் வரும் அபாயம் குறையும். நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை நல்ல பாதுகாப்பு தரும்.


    செரிமானம் மேம்படும்:-


    நெய் செரிமான அமிலத்தை சுரக்க உதவிபுரியும். மேலும் இந்திய உணவுகளில் எளிதில் செரிமானமாக உணவுகளில் நெய் சேர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமும் இது தான் என்றும் சொல்லலாம். எனவே செரிமான சீராக நடைபெற தினமும் உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.,


    கொழுப்புக்களை கரைக்கும் :-


    உங்கள் உடலில் ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கியிருந்தால், தினமும் உணவில் நெய் சேர்த்து வாருங்கள். ஏனெனில் நெய்யில் உள்ள அமினோ அமிலங்கள், கொழுப்புக்களை கரைப்பதோடு, கொழுப்பு செல்களை சுருங்கவும் செய்யும்


    மூட்டு வலிகள் :-


    மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் டயட்டில் சிறிது நெய் சேர்த்து வந்தால், மூட்டு வலி வருவது குறையும்.


    நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்:-


    நெய்யில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2857
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பக்கவாதம் உங்கள் பக்கம் வராது...எப்படி

    முதுமையில் ஏற்படுகிற ஆரோக்கியப் பிரச்னைகளில் பக்கவாதம் முக்கியமானது. பக்கவாதம் வந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே முழுவதுமாக குணம் கிடைக்கும். பலரையும் இது படுக்கையில் போட்டுவிடும்.

    இவர்களுக்கு கை, கால் செயல் இழந்து விடுவதால் குளிப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பது போன்ற அன்றாடத் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது மனச்சோர்வும் மன அழுத்தமும் இவர்களைப் பெரிதும் பாதித்து வாழ்க்கையே வெறுத்துவிடும்.

    அதேநேரத்தில் இதை எளிதாக தடுத்து விடவும் முடியும். எப்படி?எது பக்கவாதம்:மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து அப்பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால், முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் 'பக்கவாதம்' என்று சொல்கிறோம். மூளையை வலது, இடது என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

    மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக வலது பக்கம், பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம் பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

    எப்படி வருகிறது பெருமூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து அடைத்துக் கொள்ளும்போது, அல்லது இதில் ரத்தக்கசிவு ஏற்படும்போது, அந்தப் பகுதிக்கு ரத்தம் ஓட்டம் தடைபடுகிறது. இதனால் அங்குள்ள மூளை செல்கள் செயலிழந்துவிட, அந்தப் பகுதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகள் ஓட்டுநர் இல்லாத பேருந்து போல செயலற்றுப்போகும். முக்கியமாக உடலின் ஒரு பக்கத்தில் கை, கால் மற்றும் முகத்தில் பாதிப்பகுதி செயலிழந்துவிடும். ஆகவேதான் இந்த நோய்க்குப் 'பக்கவாதம்' என்று பெயர் வந்தது.
    காரணங்கள் பக்கவாதம் வருவதற்கு வயது ஒரு முக்கியக் காரணம். ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் பெற்றோர்களுக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால் அந்தக் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வுக் கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்றன. புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் ஆகியவை பக்கவாதம் வருவதைத் துாண்டுகின்றன. மூளையில் ஏற்படும் தொற்று, தலைக்காயம் போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம்.

    முன் அறிவிப்புகள் பக்கவாதம், பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது. ஆனால் நோயாளி நன்றாக யோசித்துப் பார்த்தாரென்றால், முழுமையான பக்கவாதம் வருவதற்கு முன்பு, அவருக்கு முன்னறிவிப்பு செய்வதைப்போல, சில அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கும்.

    அந்த அறிகுறிகள் இவை: வாய் கோணுதல், வார்த்தைகள் குழறுதல், கால் தடுமாற்றம், பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோவது, பார்வை திடீரென்று குறைந்து போவது, இரட்டைப் பார்வை ஏற்படுவது, நடந்து செல்லும்போது தலைசுற்றுவது, உணவை வாய்க்குக் கொண்டு செல்லும்போது கை தடுமாறுவது, கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காதது, வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தெரிந்தால்கூட மிக விரைவாகச் செயல்பட்டு, பக்கவாதத்துக்குச் சிகிச்சை அளிக்கும் வசதியுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

    காரணம், இந்த நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள், தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும். எந்த அளவுக்குக் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவுக்கு பக்கவாதப் பாதிப்பு குறையும். இந்தப் பொன்னான நேரத்தை வீணடித்துவிடக்கூடாது.

    என்ன பரிசோதனைகள் :ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட வழக்கமான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றுடன் இசிஜி மூளைக்கான டாப்ளர் ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும் தேவைப்படும். ஸ்கேன் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் ரத்தக் குழாய் அடைத்திருக்கிறதா அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பது தெரியும். அதற்கேற்ப சிகிச்சை தரப்படும்.

    என்ன சிகிச்சை ரத்தச் சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்வது, ரத்த உறைவுக்கட்டியைக் கரைப்பது, ரத்தக்கசிவை நிறுத்துவது, ரத்தக் கொழுப்பைக் கரைப்பது, இதயத்தைப் பாதுகாப்பது, சுவாசம் சீராக நடைபெற உதவுவது போன்றவை முதல் கட்டத்தில் செய்யப்படுகின்ற சிகிச்சைகள். சிலருக்கு மூளையில் ரத்த ஒழுக்கைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.
    இயன்முறை மருத்துவர் மூலம் நோயாளியின் செயலிழந்துபோன கை, கால்களுக்குப் பயிற்சிகள் தந்து அவரை நடக்க வைப்பது சிகிச்சையின் அடுத்தகட்டம்.

    நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆனால் மக்கள் இதில்தான் தவறு செய்கிறார்கள். மருத்துவ மனையில் நோயாளி இருக்கிறவரை அவரை கவனிக்கிறார்கள். வீட்டுக்கு வந்தபிறகு இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய யோசிக்கிறார்கள். இதனால் பலரும் படுக்கையிலேயே கிடக்கிறார்கள். படுக்கைப் புண், நுரையீரலில் சளி கட்டுதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள்.

    தடுப்பது எப்படி ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்திருங்கள். ரத்தக் கொழுப்பு அளவுகள் கட்டுக்குள் இருக்கட்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.உடல் எடை வயதுக்கு ஏற்றபடி இருக்கட்டும். மன அழுத்தத்தைத் தவிருங்கள். புகைப்பழக்கம் வேண்டவே வேண்டாம். மது அருந்தாதீர்கள்! நடப்பது, ஓடுவது என ஏதாவது ஒரு உடற்பயிற்சியைத் தினமும் செய்யுங்கள். இனி பக்கவாதம் உங்கள் பக்கம் வராது









    Sriramajayam likes this.

    KOTHAISURESH

  8. #2858
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    உங்களுக்குத் தெரியுமா?


    ஊசி போடும் பெண் கொசு:

    கொசுக்களில் 3000 வகைகள் உள்ளன.இவை 28 குடும்பங்களாக ஒன்றுக்கொன்று வித்தியாசமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கொசுக்கள் பூக்களிலிருந்து சர்க்கரை சத்துள்ள திரவங்களை உறிஞ்சுகின்றன. பெண் கொசுக்கள் முட்டை இடுவதற்கு முன் ரத்தத்தைத் தேடி நம்மைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கின்றன.அதிக் ஆளவில் கொத்துகொத்தாக முட்டைகள் இடுகின்றன. பெண் கொசு, நம் உடலிலிருந்து ரத்தம் உறிஞ்சுவதற்கு முன், தன் எச்சிலை ஊசி மருந்துபோல் நம் உடம்பில் செலுத்துகிறது அதன் பிறகு தோலில் குத்தி நம் ரத்தத்தை சுலபமாக எடுத்துக்கொள்கிறது. நாம் வெளியிடும் உஷ்ணக் காற்றும், கரியமிலவாயுவும் கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும். நம் ஊர்க் கொசுக்களுக்கு ஆயுசு இரண்டு வாரம்தான். குளிர் பிரதேச கொசுக்கள் ஒரு வருடம் வரை உயிர் வாழும். மலேரியா ஜுரத்தை வாரி வழங்குவதும் கொசுக்களே!.




    Sriramajayam likes this.

    KOTHAISURESH

  9. #2859
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    Heart Operation





    21/11/15, 1:28:17 PM: Terrance: நவம்பர் 28 தேதியிலிருந்து டிசம்பர் 5 தேதி வரை குழந்தைகளுக்கு இலவச இருதய ஆப்பரேஷன் செய்யப் படுகிறது.இதற்காக 8 மருத்துவர்கள் இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள்.

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-
    விஜயவாடா ஹாஸ்பிடல்,ஆந்திரா.
    மொபைல் நம்பர்: 9494606677,9494254206

    இச்செய்தியை அதிகமாக பகிரவும்,பிஞ்சு குழந்தைகளின் நலனுக்காக ...



    Sriramajayam likes this.

    KOTHAISURESH

  10. #2860
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மனதையும், உடலையும் சுத்தம் செய்ய பெருமளவு உதவும் துளசி எனும் அற்புத மூலிகை - இயற்கை மருத்துவம் :-


    துளசி செடி உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும்.


    மன அழுத்தம் :-


    குறையும் துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.


    இரத்த சர்க்கரை அளவு :-


    டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு துளசி ஒரு அருமருந்து. இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைத்து, சீராக்க உதவுகிறது.


    கொலஸ்ட்ரால் :-


    அதிகமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசியை சாப்பிடலாம். இது அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயனளிக்கிறது. மேலும் இதனால் இதயம் வலுவடைகிறது.


    நுரையீரல் தொற்று :-


    அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.


    அழற்சி :-


    துளசி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆனது அழற்சி / மூட்டு அழற்சி போன்றவைக்கு நல்ல தீர்வளிக்க கூடியவை.


    பன்முக மூலிகை :-


    துளசி உடல் சார்ந்து மட்டுமின்றி சருமம், கூந்தல் போன்றவைக்கும் நல்ல தீர்வளிக்கிறது. இது பருக்கள் மற்றும் பொடுகு தொல்லைகளுக்கு கூட சிறந்த நிவாரணியாக இருக்கிறது.


    அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் பயன் :-


    தினமும் சிறிதளவு துளசியை வாயில் போட்டு நன்கு மென்று விழுங்கினால் சளி, இருமல், காய்ச்சல், சுவாசக் கோளாறு, செரிமான பிரச்சனை என பலவற்றுக்கும் சீரிய முறையில் தீர்வுக் காணலாம்.


    ஐந்தாயிரம் வருட பாரம்பரிய மூலிகை :-


    நமது இந்தியாவில் துளசியை உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


    தமிழ் ஹிந்து


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter