Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2941
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    Thanks for the useful infos viswa.


    Sponsored Links
    Sriramajayam likes this.

    KOTHAISURESH

  2. #2942
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Thx u friend.




    Quote Originally Posted by kvsuresh View Post
    Thanks for the useful infos viswa.


    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2943
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2944
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    வெயிலில் விளையாடுவதால் சருமம் கருப்பாகுமா?



    வெயிலில் விளையாடும் குழந்தைகளின் சருமம் கருக்குமா? அதற்காக அவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டுமா?
    சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
    குழந்தைகளுக்கு வெயில் சருமத்தில் பட வேண்டியது அவசியம். அப்போதுதான் வைட்டமின் டி குறைபாடு வராமல் இருக்கும். காலை வெயிலும் மாலை வெயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஏற்றவை. 12 மணி முதல் 3 மணி வரையிலான வெயிலைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.பள்ளிக்கூடங்களில் இந்த 12- 3 மணி நேரத்தில் விளையாட்டு பீரியட் இருந்தால் அப்போது சன் ஸ்கிரீன் உபயோகிக்கச் சொல்லி குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பலாம். வெயிலில் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக இதைத் தடவிக் கொள்ள வேண்டும். சில முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளுக்கான பிரத்யேக சன் ஸ்கிரீன் கிடைக்கிறது. கடைகளில் நீங்களாகவே சன் ஸ்கிரீன் வாங்கிக் குழந்தைகளுக்கு உபயோகிக்காதீர்கள். அதில் இருக்கும் கெமிக்கல் அவர்களது சருமத்துக்குப் பாதுகாப்பானதா எனத் தெரியாது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கவும்.
    இது தவிர தலைக்குத் தொப்பி, முழுக்கை சட்டை போன்றவற்றையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம். வாய்வழியாக எடுத்துக் கொள்கிற சன் ஸ்கிரீன் இன்னும் சிறந்தது. வாய்வழி சன் ஸ்கிரீன் என நான் குறிப்பிடுவது ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள். குறிப்பாக ஆரஞ்சு நிறத்தில் உள்ள அனைத்தும். பப்பாளி, ஆரஞ்சு, கேரட், பரங்கிக்காய், தக்காளி போன்ற அனைத்தும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் சூரியனின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நெல்லிக்காய், சாத்துக்குடி, பிரக்கோலி, கீரை போன்றவையும் இதே போன்று உதவும். இவை தவிர சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.வெயிலில் விளையாடி விட்டு வந்ததும் குழந்தைகளை உடலில் அழுக்கும் வியர்வையும் நீங்கக் குளிக்கச் செய்ய வேண்டும். உடலில் வியர்வை தங்கினால் ஃபங்கல் இன்ஃபெக் ஷன் வரும். அதன் மூலம் தேமல், படர்தாமரை போன்றவை வரலாம். குளித்ததும் உள்ளாடை முதல் உடை வரை எல்லாவற்றையும் மாற்றச் சொல்ல வேண்டியதும் அவசியம்.


    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  5. #2945
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    Ginger....

    இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் - இயற்கை மருத்துவம்
    இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள்.
    இஞ்சியில் உள்ள சத்துக்கள்:-
    இஞ்சி நிறைய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. அதில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ளது, அதோடு மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற கனிம சத்துக்களும் உள்ளன.
    இஞ்சி டீ செய்யும் முறை:-
    தேவையானவை:-
    4-6 தோலை நீக்கிய மெலிதான இஞ்சித் துண்டுகள் 1.5-2 கப் குடிநீர் சில துளிகள் எலுமிச்சை சாறு 1-2 தேக்கரண்டி தேன்
    இஞ்சியின் தோலை முழுவதுமாக நீக்கவும். மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவுள்ள நீரைக் கொதிக்க வைய்யுங்கள். அதில் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள்.
    பின் அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு கலக்கவும் 1-2 தேக்கரண்டி தேனை சேர்த்து பருகவும். இது மிகவும் ருசியாக இருக்கும். பசியை நன்கு தூண்டும்
    இன்னும் சுவையான அரோமா கலந்த சுவை வேண்டுமென்றால், நீரில் இஞ்சியைக் கொதிக்க வைக்கும் போது, கூடவே பட்டை,புதினா தழையை போட வேண்டும். அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் மட்டுமே குடிக்க வேண்டும்.
    இஞ்சி டீ குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்:-
    ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது:-
    இஞ்சி டீ ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மற்ற சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்ல உதவி புரிகிறது. செல் வளர்ச்சியை தூண்டுகிறது.
    சிறந்த வலி நிவாரணி:-
    'ஜிஞ்சரால்' என்ற பொருள் இஞ்சியில் உள்ளது. அது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. நம் உடலில் காக்ஸ்-2 என்ற என்ஸைம் தான் வலியைத் தருகிறது. அதன் செயலை தடுக்க இஞ்சி உதவி புரிந்து வலியை குறைக்கச் செய்கிறது. தொடர்ந்து இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளும் போது, எலும்பு சம்பந்தமான வியாதிகளான, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம், கீல்வாதம் ஆகியவற்றால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மைக்ரைன் எனப்படும் நாள்பட்ட ஒற்றை தலைவலி, டென்ஷனினால் வரக் கூடிய தலைவலி ஆகியவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
    மாத விடாய் பிரச்சனைகளுக்குத் தீர்வு :-
    தொடர்ந்து இஞ்சியை உட்கொள்ளும்போது, ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகிறது என 2014 ம் ஆண்டில் ISRN (Obstetrics and Gynecology) என்ற இதழ் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது. மாதவிடாயின் போது வெதுவெதுப்பான இஞ்சி டீ குடிப்பதனால், தசைகளுக்கு ஓய்வு தந்து, வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளை போக்கி இதம் அளிக்கிறது.
    வாந்தியா?வயிற்று வலியா?இஞ்சி டீ இருந்தால் கவலையில்லை:-
    இஞ்சியில் இருக்கும் ஃபீனால் மற்றும் வோலடைல் ஆயில் ஆகியவை நரம்பு மண்டலத்தை தூண்டி, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்குகிறது. குமட்டல், வாந்தியை தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு அருமையான மருந்தாகும், வாய்வினைப் போக்கும். ஜீரணத்தை தூண்டும். கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதத்தில் வரக் கூடிய வாந்தியினை இஞ்சி டீக் கொண்டு தடுக்கலாம்
    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:-
    இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செல்களை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களை அகற்ற உதவி புரிகிறது. உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
    சுவாசத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுதலை:-
    இஞ்சி மார்பில் கட்டியிருக்கும் சளியை கரைக்கும். ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும். சாதாரண சளி, இருமல்,வறட்டு இருமல், மற்றும் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் தொற்றிற்கும் நிவாரணம் அளிக்கிறது.
    கொழுப்பினை கரைக்கிறது:-
    உடலின் குடலில் படியும் கொழுப்பினை இஞ்சி வெகுவாக குறைக்கிறது. பைல் அமிலத்தின் சுரப்பினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் கொழுப்பு உடலிலேயே தங்காமல் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. உடல் பருமனை குறைக்கும்.
    இஞ்சி டீ அதிகமாக உட்கொண்டாலும் பக்க விளைவுகள் :-
    இஞ்சியை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது குமட்டல் வாந்தி வரலாம். இது அமிலத்தன்மை கொண்டுள்ளதால், அசிடிட்டி அதிகரிக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இஞ்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதய நோய் உள்ளவர்கள், பித்தப்பை கற்கள் உள்ள நோயாளிகள், மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது




    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  6. #2946
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ‎நோயற்ற‬ வாழ்விற்கு 30 குறிப்புகள்
    =================================


    1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
    2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
    3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
    4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
    5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
    6. நிறைய புத்தகம் படியுங்கள்.
    7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
    8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
    9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
    10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற் கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
    11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
    12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
    13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
    14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
    15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
    16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
    17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
    18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
    19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
    20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
    21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
    22. மன்னிக்கப் பழகுங்கள்.
    23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
    24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
    25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
    26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
    27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
    28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
    29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
    30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.






    FB


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-2.jpg  
    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2947
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2948
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info





    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpeg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2949
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மரபு மருத்துவம்: தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு
    By
    டாக்டர்.வி.விக்ரம்குமார், கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
    (வழி) தமிழ் ஹிந்து


    தாய்ப்பால் அதிகமா கொடுத்தா அழகு குறைஞ்சிடுமாமே’ என்னும் தவறான செய்திகள் இப்போது பெரும்பாலும் நம்பப்படுவதில்லை. நேர்மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உற்சாகமாக இருப்பதுடன், மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி.

    ஒளவையாரின் வாக்கு

    `பீரம் பேணி பாரம் தாங்கும்’ எனும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் பாடல் (12-ம் நூற்றாண்டு), தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள் என்பதை உணர்த்துகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைப் பெரும்பாலான மக்கள் உணர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. அத்தியாவசியமான தாய்ப்பாலைப் பெருக்கும் உணவுமுறை என்ன?

    வெந்தயம்

    “பால் கம்மியா சுரந்துச்சுன்னா, வெந்தயத்தக் கஞ்சி வைச்சி குடிச்சா, சட்டுனு பால் சுரக்கும்!” என்பார்கள் கிராமப் பெண்கள். குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவருகிறது. அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) வெளியிட்ட பாதுகாப்பான உணவுப் பட்டியலில் வெந்தயமும் இடம்பெற்றுள்ளது.

    பூண்டு

    பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாக, குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Pediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருந்தும், பால் குடிக்கக் குழந்தைகள் மறுத்தால், மேற்குறிப்பிட்ட முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.

    தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)

    இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள “Tryptophan’ என்னும் அமினோஅமிலம் புரோலாக்டின் மூலமாகத் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ‘Anthocyananin’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, கொழுப்பு சத்தைக் கரைக்கிறது, ‘Asparagamine- A ‘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

    சதாவேரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேற்றுக்குப் பின்னர்க் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.

    பப்பாளிக் காய்

    பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி, லேசாக வேகவைத்துச் சாப்பிட்டுவரப் பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, பப்பாளிக் காயைச் சாப்பிட்டவர்களின் தாய்ப்பாலில் அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

    நவீன சமுதாயம் மறந்த கைக்குத்தல் அரிசியை, மீண்டும் சமையல் அறைக்குள் வரவேற்பது அவசியம். ஏனெனில் ‘பழுப்பு அரிசியில்’ உள்ள செரடோனின் பால் சுரப்பைத் தூண்டும் புரோலாக்டின் ஹார்மோனைத் தூண்டுகிறது.

    தாய்ப்பால் அதிகரிக்கப் பற்று

    ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

    இலக்கியங்களில் தாய்ப்பால்

    தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது என்று இன்றைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதை அன்றே, ‘வயிறா தாய்முலை யுண்ணாக் குழவியும் நல்குரவு சேரபட்டார்’ என வலியுறுத்தியது ‘திரிகடுகம்’ நூல். தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றி, ‘புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைப்போல’ என நற்றிணையில் தமிழர்கள் பதிவு செய்கின்றனர். இப்படியாகப் பழங்கால இலக்கியம் தொடங்கி, இன்றைய இணைய யுகம்வரை தாய்ப்பாலின் அத்தியாவசியம் பற்றி பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

    உணவில் கவனம்

    குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். தாய் உட்கொள்ளும் உணவின் குணங்களே, தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே, வாயுப் பொருட்கள், அதிகக் காரமான மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் உணவைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பிராய்லர் கோழி, துரித உணவு, மாங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தாய்ப்பாலின் தரமும் மேம்பட்டிருக்கும். சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

    தாய்ப்பால் அமுதம்

    அதேநேரம், எதிர்காலத்தில் குழந்தை நோயின்றி வாழச் சிறந்த இயற்கை உணவாகவும் மருந்தாகவும், தாய்ப்பாலுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. வைட்டமின்கள், தாதுகள், புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்பு பொருட்கள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் பொதிந்து கிடப்பது இயற்கையின் வரம்.

    பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்வார்கள். ‘உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.

    # இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட உருளை கிழங்கை அவித்து, கொஞ்சம் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.

    # கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும்.

    # தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க, கற்பூரவல்லி இலைகளை வேக வைத்துச் சாப்பிடுவது இந்தோனேசிய மக்களின் பாரம்பரிய வழக்கம்.

    # இரும்புச்சத்து நிறைந்த அத்தி, பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் நல்ல பால்சுரப்பு உண்டாகும். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை, பேரீச்சை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    # காய்களை மசித்துச் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

    # அரைக்கீரை, முருங்கைக்கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

    # பால் பொருட்களைச் சாப்பிடுவதுடன் பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து அருந்தலாம்.

    # பருத்திப் பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு.

    # பால்பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றிச் செய்கை சுறா மீனுக்கு இருப்பதால், குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றைச் சிறிதளவு சாப்பிடலாம்.

    # அதேபோல நீரில் ஊற வைத்த வேர்க்கடலையும், முளைகட்டிய தானிய வகைகளும், சிறுதானிய உணவும் பால் சுரப்பை அதிகரிக்கும்.



    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-doc23_2961594f.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2950
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் பருமன் குறைக்க:


    பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம், சிறுநீர் வழியாகவும் வெளிப்பட்டு உடல் பருமன் குறையும்.


    FB


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter