User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info

Discussions on "Today's Medical Info" in "Health" forum.

 1. #431
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  பாசிப்பயறு

  என்ன சத்துக்கள்?

  கால்சியமும், பாஸ்பரசும் இதில் அதிக அளவு உள்ளது. புரதம், கார்போஹைடிரேட், மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் கூடுதலாக உள்ளன.

  என்ன பலன்கள்?

  சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

  வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

  பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

  கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.

  குழந்தைகளுக்கும், பதின்பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.

  Today's Medical Info-302716_452482898175675_948007911_n.jpg
  Sponsored Links
  jv_66 and datchu like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 2. #432
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள் சாப்பிடாமல் அடிக்கடி ஜன்க் ஃபுட்ஸ் சாப்பிடுவது உடல் நலதுக்கு மிகவும் கெடுதல் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். சாட், பீட்சா, ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால், முதலில் வரும் கோளாறு, "இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்" (பி.ஐ.எஸ்.,) குடலில் ஏற்படும் ஒரு வித எரிச்சல், அழற்சி இது.

  பீட்ஸாவில் எதை சேர்க்கிறார்கள்?

  • ஹாரிகாட் பீன்ஸ்- காய்ந்த வெள்ளை பீன்ஸ்
  • ராஜ்மா- சிவப்பான பெரிய அவரை விதை
  • கேஸ்டர் ஷூகர்- ரவை போல பொடித்த சர்க்கரை
  • ஐஸிங் ஷூகர்- சர்க்கரைப் பொடியுடன் சோளமாவு கலந்த கலவை
  • தைம்- ரோஸ் மேரி- உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இலைகள்
  • செலரி- கீரைத்தண்டு போன்ற நீளமான இலை
  • பார்ஸ்வி- கொத்தமல்லி இலை போன்றது. உணவின் மேலாக துருவிப் போட்டு அலங்கரிக்கலாம்.
  • மிக்ஸ்ட் ஸ்பைஸ்- ஜாதிக்காய், லவங்கம், கிராம்பு மூன்றையும் சமமாக பொடித்த நறுமண கலவை
  • வெள்ளை மிளகு- கறுப்பு மிளகை விட காரம் குறைந்தது
  • டொமடோ ப்யூரி- டின்னில் அடைக்கப்பட்ட தக்காளி கூழ்
  • சோயா சாஸ்- சோயா பீன்ஸில் தயாரிக்கப்பட்ட சாஸ்
  • மோனோஸோடியம்- அஜினோமோட்டோ எனப்படும் சீன உப்பு
  • ஸ்பகெட்டி- சேமியா போன்ற இத்தாலிய சேவை. கயிறு போல நீளமாக, தேன் குழல் போல தடிமனாக இருக்கும்
  • க்ரீம் ஸ்டைல் கார்ன்- பக்குவப்படுத்தி, பயன்பாட்டுக்கு தயாராக டின்களில் அடைத்த சோள முத்துக்கள்

  பதப்படுத்த எந்த உணவும் உடலுக்கு கெடுதல் தான். எனவே நார்ச்சத்துள்ள கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஜூஸ் சாப்பிடுவதை விட, பழங்களை சாப்பிட வேண்டும். பிளாக் டீ, லெமன் ஜூஸ் குடிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதை எல்லாம் கடைபிடித்து வந்தால் இர்ரிடபிள் பவல் சின்ட்ரோம் எல்லாம் வரவே வராது.  Today's Medical Info-smiley-eating-pizza-slice-emoticon.gif

  jv_66 and datchu like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 3. #433
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
  **********************************************

  வெயில் காலம் ஆரம்பித்தாலே அனைவருக்கும் மனதில் ஒருவித பயமானது ஏற்படும். ஏனெனில் மற்ற காலங்களைத் தவிர, கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக வெயில் காலத்தில் காதாரணமாகவே உடல் வெப்பமானது விரைவில் அதிகரித்துவிடும். ஆகவே அப்போது சாப்பிடும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  இல்லையெனில் சில உணவுப் பொருட்களும் உடலில் வெப்பத்தை அதிகரித்துவிடும். இதனால் எப்போதும் மனதில் ஒருவித எரிச்சல், கவனக்குறைவு, தூக்கமின்மை, வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். அதிலும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர வெயில் அல்லது கத்திரி வெயிலின் போது வீசும் வெயிலின் தாக்கத்தை தாங்கவே முடியாது. எனவே இந்த மாதத்தில் உணவுகளில் கட்டுப்பாட்டுடனும், கவனமாகவும் இருந்தால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம்.

  மேலும் கோடையில் நிறைய தண்ணீர் மற்றும் பழங்களை சாப்பிட்டு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உடல் வெப்பமானது அதிகம் இருக்கும். அத்தகையவர்கள் ஒருசில உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அத்தகையவர்களுக்காகவும், உடல் வெப்பம் அதிகமாகாமல் இருக்கவும், கோடையில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.

  கார உணவுகள்
  *************
  கார உணவுகளை கோடையில் மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

  சப்பாத்தி
  ********
  கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

  பால் பொருட்கள்
  ***************
  அன்றாடம் சாப்பிடும் பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவையும் உடல் வெப்பத்தை அதிரிக்கும். எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிடுவது நல்லது.

  சிக்கன், நண்டு, இறால்
  *********************
  அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் கோடையில் சிக்கன், நண்டு, இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிலசமயங்களில் சூட்டை கிளப்பி வயிற்றுப் பிரச்சனையான வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலில் இருந்து நீரை வெளியேற்றிவிடும். எனவே இதனை தவிர்ப்பதே நலம்.

  ஜங்க் உணவுகள்
  ***************
  பர்கர், பிட்சா, பிரெஞ்ச் ப்ரைஸ் போன்றவை செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுப்பதோடு, சில நேரங்களில் அவை ஃபுட் பாய்ஸனையும் ஏற்படுத்தும். மேலும் இத்தகைய உணவுகள் உடலுக்கு தீமையையே கொடுக்கக்கூடியது. இத்தகைய உணவுகளை அனைத்து காலங்களிலும் தவிர்ப்பதே உடலுக்கு சிறந்தது.

  காபி
  ****
  காபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை முடிந்த வரையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.

  வறுத்த உணவுகள்
  *****************
  எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.

  உலர் பழங்கள்
  *************
  உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை தான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.

  மாம்பழம்
  *********
  கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இதுவும் அளவுக்கு அதிகமானால், அவை உடல் வெப்பத்தை கிளப்பிவிட்டு, பருக்களையும் உண்டாக்கும். எனவே இந்த பழத்தை அளவாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள், இதனை தவிர்ப்பதே நல்லது.

  ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள்
  *********************************
  குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ் க்ரீம் மற்றும் குளிர் பானங்கள் இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இவற்றை சாப்பிட்டால், வாய்க்கு மட்டுமே குளிர்ச்சியாக இருக்குமே தவிர, வயிற்றிற்கு அவை சென்றால், வெப்பத்தை தான் அதிகரிக்கும்.

  (FB/That's Tamil)

  jv_66 and datchu like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 4. #434
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  re: Today's Medical Info

  உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை

  பண்ணைக்கீரை சாப்பிட்டதுண்டா? சகல சத்துகளும் நிறைந்த கீரை வேண்டுமானால் கதிர் அறுத்த வயற்காடுக்குத்தான் போக வேண்டும். விவசாய வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பும்போது, கண்ணில்படும் இளம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, குதிரைவாலி, முடக்கத்தான், நுனிப் பிரண்டை என சகல பச்சைகளும் பறித்து சேலை முந்தானையில் கட்டி வருவார்கள். இதுதான் பண்ணைக்கீரை. அடிநுனியை அகற்றிவிட்டு பொரியலோ, துவட்டலோ செய்தால் சைடிஷ் ரெடி. சுவை மட்டுமல்ல... பலனும் பல!

  நகரங்களில் சாக்கடைக் கால்வாய்களுக்கு நடுவில் வீடுகள் இருக்கின்றன. கிராமங்களிலோ சத்துணவுகளுக்கு நடுவில்தான் வீடுகள் இருக்கும். வீட்டுக்கு வேலியாக முள்முருங்கை மரம். கண்வலிக்காரர்கள் இம்மரத்தின் பூக்களைப் பார்த்தால் நோய் போய் விடும் என்பார்கள். சோயா போல இருக்கும் இதன் கொட்டையை உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்புளித்து விடும். ‘சூடுகொட்டை’ என்பார்கள். கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுகளில் சூடுகொட்டை விளையாட்டும் ஒன்று.

  தெருக்கூத்தில் அணிகலன்கள் செய்வதற்கு இம்மரத்தின் கட்டையைத்தான் பயன்படுத்துவார்கள். எடை குறைவென்பதால் உடுத்திக்கொண்டு களமாட ஏதுவாக இருக்கும். இம்மரத்தின் இலையோடு அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பார்கள். நெஞ்சிலிருக்கும் சளியை முறித்து தள்ளிவிடும். மதுரை கூடழலகர் தெருவில் முள்முருங்கை வடை சாப்பிடலாம். முள்முருங்கை இலையோடு சித்தரத்தை, மிளகு, பச்சரிசி கலந்து செய்கிறார்கள்.

  வேப்பம்பூ பூக்கும் சீசனில் சேகரித்து, காயவைத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்வார்கள்.மாதமொருமுறை வேப்பம்பூ பொரியல் செய்வார்கள். வயிற்றை வதைக்கும் பூச்சிகளை கொன்றொழித்து விடுமாம்! கடுங்காய்ச்சல் கண்டவர் களுக்கு என்றே புதருக்கு புதர் முளைத்துக் கிடக்கும் தூதுவளை. கொக்கி முள்ளால் நிறைந்திருக்கும் இதன் இலையை துவையல் அரைப்பார்கள். பொரியலும் செய்வார்கள். காயை உடைத்துப் போட்டு ரசம் வைப்பார்கள். புதர்தோறும் நெளிந்து கிடக்கும் பிரண்டையின் இளந்தண்டை ஒடித்தால் துவையல் அரைக்கலாம்.

  வயிற்றுக் கோளாறு முதல் ஆண்மைக் கோளாறு வரை எல்லாவற்றுக்கும் மருந்து. நீரிழிவுகாரர்களுக்காக, வெற்றிலை கணக்கில் மரங்கள்தோறும் படர்ந்து கிடக்கும் கசப்புக்குறிஞ்சா. மாதம் ஒருமுறை இதை பொரித்துச் சாப்பிட்டால் பலன் உண்டு. குளக்கரைகளில் இதழ் விட்டு முளைத்துக் கிடக்கும் வல்லாரை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

  கதிர் அறுத்த வயல்களில் முளைத்துக் கிடக்கும் சுக்கங்காய் (மிதுக்கங்காய்) பறித்து இரண்டாக வகுந்து மோரில் ஊற வைத்து காய வைக்க வேண்டும். அதைப் பொரித்தெடுத்தால் கசப்பும் துவர்ப்பும் மிக்க மிதுக்கு வற்றல். சுடுகஞ்சிக்கு அற்புத துணை! பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எல்லா நோய்க்கும் ஒரே மருந்து... கோதுமை ஜூஸ்!

  Last edited by datchu; 8th May 2013 at 02:36 PM.
  jv_66 and Sriramajayam like this.

  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 5. #435
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  இரவில் எட்டு மணி நேர தூக்கம் மிகவும் முக்கியம் என்கிறார்கள் மன நல ஆராய்ச்சியாளர்கள். மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறுநாள் வேலை திறன் பாதிக்கப்படும். உடல் பருமன் போன்ற பல காரணங்களால் தேவையான தூக்கம் இல்லாமல் போய்விடும்.

  தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் உற்சாகம் பிறக்கிறது.

  தூக்கம் வராமல் சிலர் இரவில் கஷ்டப்படுவார்கள். வீட்டுப் பிரச்சினைகளையோ, ஆபீஸ் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். கவலை இருந்தால் தூக்கம் கிட்டே வராது.

  உறக்கமின்றி தவிப்பவர்களுக்கான உணவுப் பட்டியல்.

  தயிர்:

  கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்கும். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம்.

  பசலைக்கீரை:

  பசலைக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த இக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

  இறால்:

  இறால் மீனுக்கு தூக்கத்தை வரவழைக்கும் திறன் இருக்கிறது என்கிறார்கள் உணவு சத்து நிபுணர்கள். இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளது.

  பீன்ஸ்:

  பீன்ஸ், அவரைக்காய், பச்சைப் பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  இனி என்ன, மேற்சொன்னவற்றில் தினம் ஒன்றை சாப்பிட்டு அமைதியான ஆழமான தூக்கத்துக்குள் அமிழ்ந்து போகலாம்.

  (FB/ Dr Vikatan)

  jv_66 and datchu like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 6. #436
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  கண்களின் அழகைப் பராமரிக்க!

  நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

  மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

  உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்…

  • தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

  • போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

  • கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

  • கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

  Today's Medical Info-graphics-eyes-746835.gif

  jv_66 and datchu like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 7. #437
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  மனஅழுத்தம் போக்கும் “இஞ்சி டீ”!

  இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங் க ள் கவலை காணாமல் போய்வி டு ம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக்கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

  கவலை நிவாரணி

  இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

  மன அழுத்தம் போக்கும்

  மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  ஜீரணசக்தி கிடைக்கும்

  மேலும் நாக்கின் ருசி சம்பந்த மான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு விக்கிறது. மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச் சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழ ற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.
  எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

  பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க இஞ்சி சாற் றில் நன்றாகத் தோய்த்த துணியை வயிற் றின்மீது வைத்துக்கொண்டால் பெரிய அ ளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

  Today's Medical Info-graphics-coffee-438304.gif
  (bye mates, c u later)

  jv_66 and datchu like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 8. #438
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  மாங்காய்

  வெயில் காலம் என்றாலே நினைவுக்கு வரும் சில விஷயங்களில் நாவில் நீர் ஊற வைக்கும் மாங்காயும் ஒன்று. மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு ஏற்படும். ஆனால் அளவாக சாப்பிட அது பல நன்மைகளைத் தரும். இது சீசனில் ஃபுட், இயற்கை அளித்த கொடை. எனவே தினமும் சில துண்டுகள் மாங்காயை சாப்பிடுவது நல்லது.

  என்ன சத்துக்கள்?

  வைட்டமின் ஏ, நார்ச்சத்து

  என்ன பலன்?

  மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
  தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

  கவனம்..

  சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

  (FB/Dr Vikatan)

  jv_66, datchu and Yamunan like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 9. #439
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  வாழைப்பழம்

  வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது - சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அதிகமாகக் கொண்டுள்ளது.

  வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இருப்பதாகக் கூறுகிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது தினமும் மூன்று வேளை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் அவர்கள்.

  மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழைப்பழம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

  ஒரு மனிதன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறுகிறான் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  மலச்சிக்கல் வியாதியில் இருந்து மனிதனைக் காப்பாற்றும் இயற்கை மருந்து வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கிவிடுகிறது.

  வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடித்தால் சோம்பல் போயேப் போச்சு.

  நெஞ்செரிப்பு, உடற் பருமன், குடற்புண், உடலில் வெப்பநிலையை சீராக வைக்கவும், மன அழுத்தம் போன்றவற்றிற்கு வாழைப்பழம் நல்ல மருந்தாக உள்ளது.

  எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகும். மேலும், இதற்கு காலநிலை எதுவும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பது குறிப்பிடத்தக்கது.

  (FB/Dr Vikatan)

  Last edited by Sriramajayam; 11th May 2013 at 11:09 PM.
  datchu likes this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 10. #440
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  re: Today's Medical Info

  ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
  தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
  அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'
  களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

  அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
  இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
  அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

  "டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

  அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

  உங்கள் விழிப்புணர்வுக்காக!
  datchu likes this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter