Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #441
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    தயிர்

    என்ன சத்துக்கள்?

    புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.


    என்ன பலன்கள்?

    இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

    வயிற்றுப்போக்கை தடுக்கும் ஆற்றலும் கொண்டது.

    ஈறுகளின் நலன் மேம்படுகிறது. ஏனென்றால், அதில் அடங்கிய லாக்டிக் அமிலங்களின் ப்ரோபையோடிக் எப்பெக்ட் காரணமாகும்.

    நல்ல ஜீரண சக்தியை தருவதோடு அல்லாமல் செரிமான அமைப்பு மேம்படுத்த உதவுகிறது.

    நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும்

    ஆஸ்டியோபோரோசிஸ் கையாள்வதில் நன்மை

    கால்சியம் உள்ளடக்கத்தை உயர் வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் பெற உதவுகிறது

    உயர் இரத்த அழுத்தம் அபாயத்தை குறைக்க உதவுகிறது

    வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சாதம் மட்டுமாவது சாப்பிட*ச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

    மெனோபாஸ் எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் நல்ல*து. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.


    எப்படி சாப்பிடலாம்?

    தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

    சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

    அப்படியே கூட சாப்பிடலாம்


    (Dr Vikatan)



    Sponsored Links
    jv_66, datchu and kavitha_rishi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #442
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    உணவின் மூலம் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்

    சில உணவு வகைகளை சாப்பிடுவது கரையாத கொழுப்பையும் கரைய வைக்கலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

    புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள் இந்த பணியை செய்கின்றன.

    புரதச்சத்து நிறைந்த மீன் அதிக கொழுப்பை எரிக்கின்றது. மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருட்களை தடுக்கின்றன.

    காலை, மாலை இரண்டு வேளை கிரீன் டீ பருகினால் கொழுப்பு உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

    காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நீண்ட நேரம் இரைப்பையில் தங்கி இருப்பதால், அதிக பசியை குறைப்பதுடன் கொலஸ்ட்ராலை தடுக்கிறது.

    ஓட்ஸ் கஞ்சியில் தேன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.

    காலை,இரவு இரண்டு வேளையும் வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேனைக் கலந்து குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

    பாலில் நிறைய சுண்ணாம்பு சத்து உள்ளது. இது கொழுப்பை எரிப்பதற்கும், கொழுப்பு உருவாகாமல் தடுப்பதற்கும் மிகவும் தேவை.

    முட்டைக்கோஸ், அவரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

    திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, சப்போட்டோ, மாதுளை போன்ற பழங்களில் ஒன்றோ இரண்டோ தினமும் சாப்பிட வேண்டும்.

    இவற்றையெல்லாம் செய்தால் கொழுப்பை எளிதாக கரைக்கலாம். இவற்றோடு போதிய உடற்பயிற்சியும் சேரும் போது கொழுப்பு காணாமலே போய் விடும்.


    (FB/ Dr Vikatan)


    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #443
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    குளிர்ச்சி தரும் வேப்பம்பூ

    வேப்பமரம் நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மூலிகை செடியாக கருதபடுகின்றது. இந்த மூலிகை பல நோய்களுக்கு நிவாரணியாகவும் சுகாதார நலன்களை வழங்ககூடியதாகவும் உள்ளது.. கத்திரி வெயில் சுட்டெரிக்கிறதால வெப்பத்துல இருந்து தப்பிக்க குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது ரொம்ப அவசியம்.தர்பூசணி, இளநீர் வரிசையில வேப்பம்பூவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு தாங்க. வேப்பம்பூவை பொடியாக்கி ரசம், பச்சடி வைத்து சாப்பிடலாம். கண் பிரச்சனைகளான மாலை கண் நோய், விழி வெப்பமண்டல அழற்சி போன்ற கண் பிரச்சனைகளை வேம்பு பயன்படுத்தி தடுக்கலாம். தோல் அழற்சி பிரச்சனைகளுக்கு வேம்பு இலைகளை அரைத்து சாறாக பிழிந்து அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் அலர்ஜி நீங்கிவிடும்.

    உங்களுக்கு சருமநோய் தொற்று இருப்பின் வேப்பிலை குளியல் எடுத்து கொண்டால் சரும பிரச்சனைகளை தடுக்க முடியும். அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் அளவுக்கு அதிகமாக புளிப்பு தன்மை, மேல் இரைப்பை வலி இருப்பின் அதை சரிசெய்ய வேம்பு பரிந்துரைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இரத்த சுத்திகரிப்பு நச்சு பொருட்களை அழிக்ககூடியதாகவும் இருக்கிறது.வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்சனை, புண், ஈறுகளில் ரத்தம், போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள், மற்றும் ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது மேலும் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ எடுத்துகொள்ளலாம். வேப்பம் பூ ரசம் எவ்வாறு செய்வது.துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது, உப்பு, நெய் - தேவைக்கேற்ப. பொடிப்பதற்கு: மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.

    புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு (வெல்லம் கரைத்தது), பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து வரும் போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூ சேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.வேப்பம்பூ ரசம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.உடலை உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றும். ரத்த ஓட்டம் சீராகும். வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதனால உங்க வீட்டுல வேப்பம்பூ ரசம், பச்சடி வச்சி அசத்துங்க


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #444
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சீரகத்தின் மருத்துவ குணங்கள்

    நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்த ும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது தெரியுமா?

    சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

    சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்ற ல், மயக்கம் நீங்கி விடும்.

    திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படு த்தலாம்.

    அகத்திக்கீ ரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

    வறுத்த சீரகத்துடன ் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    சீரகத்துடன ் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

    ஆயுள் பெருக :
    இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #445
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    நீங்காத படைக்கு நெட்டிலிங்கம்

    வெயில் காலத்தில் உடலில் அரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே காரணம்.

    பூஞ்சைக்கிருமிகளுக்கு ஈரம் மிகவும் பிடித்த விஷயம். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின் கொழுப்பு கழிவு கலந்து வியர்வையாக வெளியேறும் மனிதத்தோலை இவை பற்றிக்கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி வெகு விரைவாக இனவிருத்தி செய்து வளர ஆரம்பித்துவிடும். பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த நாம் சொறிவதால் தோலில் சிறிய ரத்தக்காயங்கள் உண்டாகி, ரத்தத்தில் பூஞ்சை கிருமிகள் செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

    பூஞ்சை கிருமிகளை அழிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிகவும் சிரமமானதுதான். ஏனெனில் ஒருவரிடம் இருந்து அந்த கிருமிகள் அழிவதற்கு முன் குறைந்தது 10 பேருக்காவது தங்கள் இனவிருத்திகளை பரிமாற்றம் செய்துகொண்டுதான் மறைகின்றன. ஆகவேதான் பூஞ்சையால் தோன்றும் கிருமித்தொற்று வீட்டில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவுகிறது. விடுதியில் படிப்பவர்கள், பழைய, சுத்தமில்லாத ஈரத்துணியை அணிபவர்கள், நீண்டநேரம் உள்ளாடைகளை மாற்றாமல் அணிபவர்கள், ஒரே உடையை மாற்றிப் போடுபவர்கள், பிறரின் அழுக்குத் துணியையும் சேர்த்து ஒன்றாக துவைத்து பயன்படுத்துபவர்கள் என பலதரப்பட்டோருக்கு பூஞ்சை கிருமிகளின் தொற்று உண்டாகிறது. வெளியில்காலத்தில் இது அதிகப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், அதிக அசைவ உணவு உண்பவர்கள் பூஞ்சை கிருமியின் பாதிப்புக்கு அடிக்கடி ஆளாகிறார்கள்.

    பூஞ்சை கிருமியின் தொற்றை தவிர்க்க விரும்புபவர்கள் உடம்பை நன்கு சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும். கழுத்து, பிடறி, அக்குள், தொடையிடுக்கு பகுதிகளில் நன்கு தேய்த்து சுத்தம் செய்வதுடன் உலர்ந்த துண்டால் ஈரம் தங்காமல் துடைக்க வேண்டும். வெயில்காலத்தில் காலை மற்றும் மாலையில் தனித்தனி ஆடைகளை அணியவேண்டும். படை உள்ளவர்களின் உடைகளை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும். பூஞ்சை கிருமியால் தோன்றும் தொற்றானது படை, படையாக பரவுவதால் பரவுவதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும். நமக்கு நன்கு அறிமுகமான நெட்டிலிங்க மரத்தின் இலை மற்றும் பட்டை பூஞ்சைக்கிருமிகளை அழித்து படையினால் தோன்றும் புண்களை ஆற்றும்.

    நெட்டிலிங்க இலைகளை மைய அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றிய அரிப்புள்ள இடங்களில் தடவிவர படை நீங்கும். இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட வயிற்றுக்கிருமிகள் வெளியேறும். ஆனால் குறைந்தளவே சாப்பிட வேண்டும். பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அதனைக்கொண்டு படையுள்ள இடங்களில் தடவிவர படை நிறம் மாறும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #446
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    கால் வலி போக்கும் கல்தாமரை

    முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. ச

    ராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.

    எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும், இல்லாவிடில் எலும்பு சந்திப்புகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன. சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.

    சுமைலாக்ஸ் செய்லானிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர்மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும், தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம், இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களால் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.

    -டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #447
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சூட்டைத் தணிக்கப் பயன்படும் நன்னாரி

    கோடைக் காலத்தில் அதிகம் பயன்படும் மூலிகை நன்னாரி. சிறு கசப்பும், இனிப்பும் சேர்ந்த சுவையைக் கொண்ட நன்னாரி வேருக்கு மிகுந்த குளிர்ச்சித்தன்மை உண்டு.

    நீர்க்கடுப்பு குணமாக ஒரு கைப்பிடி அளவு பசுமையான நன்னாரி வேரினை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதனைத் தேவைக்கு ஏற்ப குடிநீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து கஷாயமாகக் காய்ச்சிக் கொள்ளவும். அரை டம்ளர் அளவு கஷாயத்தில் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

    மூலச்சூடு, வெட்டைச்சூடு குணமாக தண்ணீரில் சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேரை சிறிது அளவு எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் இதனை ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலுடன் கலக்கி, தினமும் இரண்டு வேளை குடிக்க வேண்டும். இதனால் மூலச்சூடு, வெட்டைச்சூடு உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். தொடர்ந்து இவ்வாறு குடித்து வந்தால், இளநரை, பித்த நரை மாறுவதோடு வறட்டு இருமலும் குணமாகும்.

    பித்தநோய் குணமாக சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேரை இரு கைப்பிடி அளவு இடித்து எடுத்துக்கொள்ளவும். இதனை கால் லிட்டர் குடிநீரில் இட்டு ஒரு நாள் முழுதும் ஊறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வடிகட்டிய நீரை தினமும் காலை மாலை என இரு வேளை குடித்து வர, அதிக பசி, தாகம், பித்த நோய், நீரிழிவு ஆகியவை கட்டுப்படுத்தப்படும். பத்தியம் அவசியம் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.

    சிறுநீர்க்கட்டு சிக்கல் தீர நன்னாரி வேரை நீரில் அலசிச் சுத்தம்செய்து வெயிலில் நன்றாகக் காயவைத்த பின்னர் இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். இந்த வேர்ச் சூரணத்தை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடித்துவந்தால், சிறுநீர்க் கழிக்க முடியாமல் அவஸ்தைப்படும் சிறுநீர்க்கட்டு நன்கு குணமாகும்.

    உடல் உஷ்ணம் தணிய சுத்தம் செய்த பசுமையான நன்னாரி வேர் அல்லது உலர்ந்த நன்னாரி வேரை மண் பானை நீரில் போட்டுவைத்து குடிநீராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சி பெறும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #448
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    மலர்களும் மருந்தாகும்


    இலுப்பைப் பூ
    இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

    ஆவாரம் பூ
    ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

    அகத்திப்பூ
    அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

    நெல்லிப்பூ
    உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

    மகிழம்பூ
    மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.

    தாழம்பூ
    இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

    செம்பருத்திப்பூ
    இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

    ரோஜாப்பூ
    இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

    வேப்பம்பூ
    சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

    முருங்கைப்பூ
    ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

    மல்லிகைப்பூ
    கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

    கருஞ்செம்பை பூ
    இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

    குங்குமப்பூ
    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #449
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    காய்கறிகளிலேயே இருக்கிறது மருத்துவ குணங்கள்

    நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து, உகந்த படி சாப்பிட்டால் நலமாக வாழலாம்.

    ** முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடலில் சேரும் கிருமிகள் வெளியேறும்.

    ** பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது.

    ** நார்த்தங்காய் பித்தத்தைத் தணிக்கும்.

    ** மாங்காய் சாப்பிட்டால் தாது பலம் பெறும். மலக்குடல் சுத்தமாகும். பசி அதிகரிக்கும்.

    ** பிடிக்கருணைக் கிழங்கு, புடலங்காய் உண்பதால் மூலத்தை அகற்றலாம்.

    ** அவரைக்காயில் புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம்.

    ** மூல நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் அத்திக்காயில் உள்ளது.

    ** பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும்.

    ** கோவைக்காயை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண், நாக்குக் கொப்புளம் சரியாகும்.

    ** அதேப்போல, முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்.

    ** வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும்.

    ** வெந்தயக் கீரை எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.

    ** சிறிய வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.

    ** சுண்டைக்காயை குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சி சேராது. மூச்சுத் திணறல் குறையும்.

    ** காரட் சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாகாமல் காக்கும். கண் பார்வைக்கு உகந்தது.

    ** பீன்ஸ் சாப்பிட்டாள் பார்வை தெளிவு கிடைக்கும். சருமம் நன்றாக இருக்கும். பித்தம் குறையும்.

    ** காலிஃபிளவர் புற்றுநோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். எதிர்ப்புச் சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும்.


    Last edited by datchu; 15th May 2013 at 11:46 AM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #450
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    புற்றுநோயை குணமாக்கும் விஸ்கியின் மருத்துவக் குணங்கள்

    ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும்.

    ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா…!

    நல்ல தூக்கம்- உடல் அதிக அசதியுடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

    புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

    நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.!!!!

    (FB)



    Subhasreemurali likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter