Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #561
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    இரத்தத்தை சுத்தப்படுத்தும் புளியன் இலை


    புளி நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பொருளாகும். புளியன் பழம் ஒன்றுதான் புளி மரத்தில் கிடைக்கும் பலன் என நாம் என்னுகிறோம். புளி இலையும் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது. புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

    புளி ஒரு மென்மையான மலமிளக்கியாக செயல்படுகிறது. புளியை மாலை வேளையில் சிறிது புளியாகாரம் செய்து சாப்பிடுவதனால் குடல் இயக்கங்களை மேம்படுத்தலாம். புளி பித்த நீரால் ஏற்பட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். புளி உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைத்து ஆரோக்கியமான இதயத்தை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது..

    நீர்த்த புளிசாறு தொண்டையில் ஏற்படும் புண்னை குணமாக்குகிறது. புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறையை புளிபழம் சரி செய்கிறது. முக்கியமாக தோலில் ஏற்படும் அழற்சியை குணமாக்கும். ஆக்ஸிஜனேற்றத்திற்கு நல்ல ஆதாரமாக இருப்பது புளி, ஆதலால் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவி புரிகிறது.

    மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. புளியன் கொழுந்தை பக்குவபடுத்தி உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். புளியன்கொழுந்தை தேவையான அளவு எடுத்து அத்துடன் பருப்பு சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். புளியங்கொழுந்தை பச்சையாக சாப்பிட்டால் கண் தொடர்பான பிணிகள் அகலும். பாண்டு ரோகத்தை குணமாக்கும் சக்தியும் உண்டு. உள்வெளி ரணங்களை குணமாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #562
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    ரோஜாப்பூவின் மருத்துவப்பயன்கள்
    இய*ற்கை வைத்தியம்

    மருத்துவப்பயன்கள் :- ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.

    ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகைப்பிடயளவு இதழை ஒரு சட்டியில் போட்டு ஒருடம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தைஎடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

    ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில்வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக்காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள்சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்கபூரணமாகக் குணமாகும்.

    பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச் சேர்க்க க்கூடாது.

    ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

    ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.

    பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.

    ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும்.

    ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

    ரோஜாப்பூக்ளிலிருந்து நறுமணமான எண்ணெய் எடுக்கிறார்கள். அதற்கு அத்தர் என்று பெயர்.

    சித்தமருத்துவத்தில் இதனை பொதுவாக கழிச்சலுக்கு கொடுக்கும் மருந்துகளிலும் லேகியங்கள், மணப்பாகு முதலியவற்றுக்கு நறுமணம் ஊட்டுவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

    ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.

    ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில்போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகுவடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாகஇருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ணவயிற்று வலி போகும். குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.

    ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரைஅதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டுதினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சருமநோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #563
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    ரத்தம் உற்பத்தி செய்யும் கொடிபசலை
    .

    எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த கீரை தற்போது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இலையுடன் தண்டையும் சமைத்து சாப்பிடலாம். இரண்டிலும் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.

    கொடி பசலைக்கீரையில் வைட்டமின் ஏ,பி, போன்ற உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்புச்சத்துக்களும், காணப்படுகின்றன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் நீங்கும்.

    சிறுபசலைக்கீரை

    பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.

    சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.

    நீர்கடுப்பு குணமாகும்

    உஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக்கீரையை மூன்று வேளை சமைத்து சாப்பிட நீர்சுருக்கு குணமடையும்.

    உஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக்கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும். இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதாள தேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #564
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    தண்டு கீரை மகிமை


    முளைக் கீரை வளர்ந்து பெரிதானால் தண்டுக் கீரை. தண்டுக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெளிர் பச்சை மற்றொன்று சிவப்பு. இதில் சிவப்பு நிறத் தண்டுக் கீரை சத்தும் ருசியும் அதிகமுள்ளது.

    வெண்கீரைத் தண்டில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.

    வெண்கீரைத் தண்டைச் சமைத்துச் சாப்பிடுவதால் நீர்க்கடுப்பு நீங்கும். மூலச்சூடு தணியும், உடல் குளிர்ச்சியாகும்.

    சிவப்பு நிறக் கீரைத் தண்டு பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைக் குணமாக்குகிறது.

    சிவப்பு கீரை சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடற்புண்ணை ஆற்றும்.

    வெண்கீரைத் தண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி கரையும். வாதம் உள்ளவர்கள் வெண்கீரைத் தண்டை சாப்பிடக் கூடாது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #565
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    வெல்லமும், மிளகும் உடலுக்கு நல்லது


    தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து விடவும். சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #566
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Today's Medical Info

    Quote Originally Posted by datchu View Post
    வெல்லமும், மிளகும் உடலுக்கு நல்லது


    தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து விடவும். சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.
    Dear Mythili, wonderful home remedy for cough and throat pain. thank you


  7. #567
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் கரையாத கொழுப்பையும் கரைய வைக்கலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

    காலை, மாலை இரண்டு வேளை கிரீன் டீ பருகினால் கொழுப்பு உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

    பாலில் நிறைய சுண்ணாம்பு சத்து உள்ளது. இது கொழுப்பை எரிப்பதற்கும், கொழுப்பு உருவாகாமல் தடுப்பதற்கும் மிகவும் தேவை.

    காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நீண்ட நேரம் இரைப்பையில் தங்கி இருப்பதால், அதிக பசியை குறைப்பதுடன் கொலஸ்ட்ராலை தடுக்கிறது. ஓட்ஸ் கஞ்சியில் தேன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.

    காலை, இரவு இரண்டு வேளையும் வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேனைக் கலந்து குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

    முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன.அதில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள் இந்த பணியை செய்கின்றன.

    புரதச்சத்து நிறைந்த மீன் அதிக கொழுப்பை எரிக்கின்றது. மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருட்களை தடுக்கின்றன.

    முட்டைக்கோஸ், அவரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

    திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, சப்போட்டோ, மாதுளை போன்ற பழங்களில் ஒன்றோ இரண்டோ தினமும் சாப்பிட வேண்டும்.

    இவற்றையெல்லாம் செய்தால் கொழுப்பை எளிதாக கரைக்கலாம். இவற்றோடு போதிய உடற்பயிற்சியும் சேரும் போது கொழுப்பு காணாமலே போய் விடும்


    (FB/Dr Vikatan)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #568
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வேப்பம்பூ

    தர்பூசணி, இளநீர் வரிசையில வேப்பம்பூவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வேப்பம்பூ குடல் பூச்சிகளை அழிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.

    வேப்பம்பூ ரசம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.உடலை உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றும். ரத்த ஓட்டம் சீராகும். வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.

    சர்க்கரை நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது மேலும் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ எடுத்துகொள்ளவேண்டும்.


    (FB/Dr Vikatan)


    selvipandiyan and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #569
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    10 Health Benefits of Ginger-

    1. Ovarian cancer treatment
    2. Colon cancer prevention
    3. Morning sickness relief
    4. Motion sickness remedy
    5. Reduces pain and inflammation
    6. Heartburn relief
    7. Prevention of diabetic nephropathy
    8. Migraine relief
    9. Menstrual cramp relief
    10. Cold and flu prevention




    selvipandiyan and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #570
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    HEART ATTACKS & HOT WATER

    A very good article which takes a minute to read, about Heart Attacks and drinking warm water

    The Chinese and Japanese drink hot tea or hot soup with their meals, not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating.

    Sometimes its nice to have a cold drink after a meal especially in summer. However, the cold drink or cold water will solidify the oily stuff that you have just consumed and will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine which soon turns into fats blocking your arteries.

    Common Symptoms Of Heart Attack...

    Not every heart attack symptom is going to be the left arm hurting and you may never have the first chest pain during the course of a heart attack. Be aware of intense pain in the jaw line. Nausea and intense sweating are also common symptoms. 60% of people who have a heart attack while they are asleep do not wake up.


    (FB)


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter