Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #791
    kalaineemu's Avatar
    kalaineemu is offline Penmai's Cheerers
    Registered User & Blogger
    Commander's of Penmai
    Real Name
    kalai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    MADURAI
    Posts
    2,264
    Blog Entries
    81

    re: Today's Medical Info

    சுக*ப்பிரசவத்திற்கான குறிப்புகள்... (இணையத்தில் படித்தேன் தோழிகளே உங்களுக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் இங்கு பதிகிறேன் ... பதிவிட்டவருக்கு நன்றி )

    வலி அதிகம் என்றாலும் சுகப்பிரசவத்தையே பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவார்கள். இதற்குக் காரணம் சுகப்பிரசவம் என்றால் இரண்டு நாட்களில் எழுந்து நடமாடலாம் என்பதே. தவிர்க்க முடியாத காரணங்களினாலும், ஒரு சிலரின் உடல் அமைப்பினாலேயே சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது. சிசேரியன் என்றால் பத்துநாள் படுக்கை வாசம். ஆறு மாதத்திற்கு பருமனான பொருட்களை தூக்கக் கூடாது என்று படுத்தி எடுத்துவிடுவார்கள். சுக பிரசவம் வேண்டும் என்று விரும்பும் கர்ப்பிணிகள் மகப்பேறு மருத்துவர்கள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். நல்லா நடங்க தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும். தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள், தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம். ஏழு மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும். கருப்பை பாதிப்பை நீக்கும் தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது. அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது. ரத்த அணுக்களை சீராக்கும் மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் மாதுளத்தை சாப்பிடுவதால் உங்கள் குழந்தை சிவப்பாகவும் அழகாகவும் பிறக்கும். ஏழு மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும். கூலா இருங்க உங்களுக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்ற நினைப்பே உங்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும். எதற்கும் டென்சன் ஆகாமல் கூலா இருங்க என்கின்றனர் மருத்துவர்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்களை மென்மையான இசையை கேளுங்கள். அது கர்ப்பிணிகளுக்கும் நல்லது கருவில் உள்ள குழந்தைகளுக்கும் நல்லது. மனஅழுத்தமில்லாமல் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளவும். தினமும் உறங்கும் முன் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். அடிவயிற்றில் விளக்கெண்ணைய் தடவி இளம் சூடான நீரில் குளிப்பதால் சருமம் தளர்ச்சியடையும் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும். கசாயம் குடிங்க தினசரி ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க காய்ச்சி அதில் சீரகம், பனங்கல்கண்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து கசாயமாக குடிக்கலாம். பிரசவ வலி வருகிறதா? ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி அதில் சீரகத் தூள் கலந்து சாப்பிடவும். பிரசவம் எளிதாகும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். வெந்தையக்களி வெந்தையம் கால் ஸ்பூன், அரிசி அரை ஸ்பூன், வெள்ளைப்பூண்டு 5 பல் இதனை நன்றாக குழைய வேகவைத்து களி போல செய்து சாப்பிடலாம். இது உடல் சூட்டிற்கும் நல்லது. பிரசவம் எளிதாகும். இந்த ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுக்கலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

    (உரிய வழிகாட்டுதலுடன் ஆலோசனை பெற்று வழிமுறைகளை பின்பற்றுங்கள தோழிகளே)



    Sponsored Links
    Last edited by kalaineemu; 14th Sep 2013 at 11:17 AM.

  2. #792
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    ரத்த அழுத்தமா...
    கூலா இருங்க!

    ‘எனக்கு பிரஷர் இருக்கு... மாத்திரை போட்டுட்டு வந்திடுறேன்’ என்று பரபரப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரத்த அழுத்தப் பிரச்னை என்றால் என்ன? ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி? பயனுள்ள ஆலோசனை சொல்கிறார் இதய நோய் நிபுணர் சி.ஆறுமுகம்.

    உடலில் உள்ள தமனி ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் பாய்கிற வேகத்தின் அளவையே ரத்த அழுத்தம் என்று குறிப்பிடுகிறோம். இதயம் சுருங்கி விரியும்போது ரத்தம் எவ்வளவு வேகமாகப் பாய்கிறது என்பதை வைத்தே ரத்த அழுத்தம் அளவிடப்படுகிறது. அதன்படி, 120/80 மி.மீ. ஆஃப் மெர்குரி என்ற அளவுதான் சராசரியான ரத்த அழுத்தமாகக் கணக்கிடப்படுகிறது.

    ரத்த அழுத்தம் என்பது மாறிக்கொண்டே இருக்கும். எனவே, ஒரே ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனையை செய்துகொண்டு, அதுதான் நிலையான அளவு என்று எண்ண வேண்டாம். ஒரு நாளில் பல்வேறு சமயங்களில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து அதன் அடிப்படையிலேயே உங்கள் சராசரி ரத்த அழுத்தத்தைப் பதிவுசெய்ய வேண்டும்.

    உயர் ரத்த அழுத்தம் மட்டுமே பிரச்னை அல்ல; குறைவான ரத்த அழுத்தமும் பிரச்னைதான். ரத்த அழுத்தம் குறையும்போது மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவும் குறையும். அதனால் மயக்கம் ஏற்படலாம். பெரும்பாலும் குறைவான ரத்த அழுத்தம் என்பது நாமாக ஏற்படுத்திக்கொள்வது. சில மருந்துகளும் ரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடக் கூடும். இதுதவிர உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போதும், ரத்த இழப்பு ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் குறையலாம்.

    ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழ வகைகளையும், ஓட்ஸ் மற்றும் மீன் உணவுகளையும் சாப்பிடலாம்.

    உணவில் மிகக் குறைந்த அளவில் உப்பைப் பயன்படுத்துவதும், நிறைவுற்ற கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

    உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதற்கு மருத்துவரின் பரிந்துரையின்பேரில் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும்.

    Today's  Medical Info-animaatjes-dokter-16114.gif
    fb



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #793
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

    ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

    செய்முறை :

    1 - வல்லாரை இலை - 70 -கிராம்
    2 - துளசி இலை - 70 -கிராம்
    3 - சுக்கு - 35 -கிராம்
    4 - வசம்பு - 35 -கிராம்
    5 - கரி மஞ்சள் -35 -கிராம்
    6 - அதிமதுரம் -35 -கிராம்
    7 - கோஷ்டம் - 35 -கிராம்
    8 - ஓமம் - 35 -கிராம்
    9 - திப்பிலி - 35 -கிராம்
    10 - மர மஞ்சள் - 35 -கிராம்
    11 - சீரகம் - 35 -கிராம்
    12 - இந்துப்பு - 35 -கிராம்

    இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

    உண்ணும் முறை :

    காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

    ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்.


    With Love,
    Priya

  4. #794
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    எச்.ஐ.வி.,யை அழிக்க புதிய மருந்து: அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை

    வாஷிங்டன்: அமெரிக்க ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும், புதிய மருந்துப் பொருளை, கண்டுபிடித்து உள்ளனர்.

    எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான, எச்.ஐ.வி., வைரசை அழிப்பதில், மருத்துவர்களும், மருந்துப் பொருள் தயாரிப்பாளர்களும், இன்னும் தங்கள் ஆய்வில், 100 சதவீத வெற்றியை அடையவில்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் உள்ள, மின்னிசோட்டா பல்கலைக்கழக மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் மருந்துப் பொருளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, எச்.ஐ.வி.,யைக் கட்டுப்படுத்தும், இரு திரவ மருந்துகளின் கலவையில் புதிய மருந்துப் பொருளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

    ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: புற்று நோயைக் கட்டுப்படுத்த, "டெசிடேபைன், கெம்சிடேபைன்' என்ற இரு திரவ மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால், பெரும் நேர விரயமும், பொருட் செலவும் ஏற்படுகிறது. இந்த சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முடியும் வரை, எவ்வித வேலையிலும் ஈடுபட முடியாமல், படுக்கையிலேயே இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், இந்த இரு மருந்துப் பொருட்களையும் ஒன்றாக்கி, மாத்திரை வடிவில் புதிய மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளின், பொருள் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்படும். எனினும், முதற்கட்ட சோதனைகளுக்குப் பின்னரே, நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படும். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மருந்து, சோதனையில் வெற்றி பெற்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாய் அமையும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    Today's  Medical Info-chemicus18.gif

    (Dinamalar)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #795
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி.

    ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.

    பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின்(Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

    மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

    மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

    நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


    With Love,
    Priya

  6. #796
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    வெங்காயப் பூ:

    சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.

    வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.

    வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.

    கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

    பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

    ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.

    வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.

    குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.






    With Love,
    Priya

  7. #797
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?

    ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா? என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார்.

    நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு செல்கிறது. உணவு உட்கொண்டதும் இரைப்பையின் செயல்பாடு அதிகரித்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒருவித மந்த நிலை ஏற்படுகிறது.

    சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?

    'கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.'

    சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா?

    'சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.'

    சாப்பிடும்போது குளிர்ந்த நீர் அருந்தலாமா?

    'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.'

    சாப்பிட்டதும் குளிக்கலாமா?

    'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.'

    சாப்பாட்டின்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா?

    'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்'

    சாப்பிட்டதும் தூங்கலாமா?

    'மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க செல்லவேண்டும்.'

    சாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்யலாமா?

    'சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.'


    Dr Vikatan


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #798
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    பீன்ஸ் மருத்துவ குணங்கள்

    பீன்ஸ் அவரை இனத்தைச் சேர்ந்தது. பீன்ஸை இங்கிலீஷ் காய் என்பர். காரணம் ஆங்கிலேயர்கள் தங்கள்உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் காய்களில் இதுவும் ஒன்று. பீன்ஸ் குச்சி போல் நீண்டு சற்று பருத்து காணப்படும். பயறு வகை காய்களைப் போல் விதைகள் உள்ளிருக்கும்

    பச்சையாக பறித்த பீன்ஸில் கலோரி அளவு குறைவாக உள்ளது. இது எளிதில் சீரணமாகக்கூடியது. வைட்டமின், தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது
    100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம்உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்தும் தன்மை பீன்ஸ்க்கு உண்டு என்று அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. இதில் வைட்டமின் சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச்செய்கிறது. அதுபோல் ப்ளேவனாய்டு பாலிபினோலிக் ஆண்டி ஆக்ஸிடென்ட், லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால்உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

    இது சருமத்தையும், கண்களையும், புறஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி 12 உடன் இணைந்து கருவுற்ற பெண்களுக்குகருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்புபாதிப்புகள் ஏதும் பாதிக்காதவண்ணமும் தடுக்கிறது.

    பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

    பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில்முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

    பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாது உடலுக்குவலுவைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

    பீன்ஸை சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தி வந்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண் குடல்புண் ஆறும்.

    பீன்ஸை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
    மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.

    பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது . இரத்தக் குழாய் அடைப்புகளைப் போக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. இதய அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, அதிக உடல் எடையைப் போக்குகிறது.

    பீன்ஸை கொதிக்கவைத்து ஆறிய நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

    பீன்ஸ் சருமத்தைப் பாதுகாக்கும். வியர்வையைத் தூண்டும்.

    தொண்டைப்புண், வறட்டுஇருமல், நாவறட்சி இவற்றைப் போக்கும்.

    கை, கால் நடுக்கத்தைப் போக்கும்.

    நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.

    பல் வலியைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றத்தை சீராக வைத்திருக்கும்.

    நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களைக் கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

    பீன்ஸை பொரியல், அவியல், சாம்பார் என பலவாறு சமைத்து உண்ணலாம்.
    பீன்ஸைப் பயன்படுத்திநீண்ட ஆரோக்கியம் பெறுவோம்...



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #799
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    re: Today's Medical Info

    Thanks for sharing Priya, Mythili and Sriram.


  10. #800
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Always u r welcome my dear friend!
    And my name is Viswanathan, not a sriram!
    FYI
    Today's  Medical Info-t1612.gif



    Quote Originally Posted by fatima15 View Post
    Thanks for sharing Priya, Mythili and Sriram.


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter