Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #801
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    நாளுக்கு ஒரு முட்டை :

    கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டை விட, அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ். கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது. ஒரு வேறுபாடு, காய்கறி உணவை விட, முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்து, உடனே உடலில் ஏற்றுக்கொண்டு விடுகிறது. இதனால் பலன் கைமேல்.

    ஒரு நாளுக்கு ஒரு முட்டை போதும். கொலஸ்ட்ரால் அளவு கூடி விடுமே என்று பயப்பட வேண்டாம். கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைடு அளவை கூட்டாமல் தான் முட்டை, இந்த சத்தை தருகிறது. கேரட்டோட, காய்கறியோட, முட்டையையும் தான் சாப்பிடுங்களேன்!





    Sponsored Links
    priyasarangapan and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #802
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    நீங்கள் பின்தூங்கி முன் எழுபவர்களா?

    “இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும் என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம். பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம், நடவடிக்கைகள் ஆகிய வற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர்.


    குறிப்பாக, இளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கி, அதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடைய வர்களுக்கு, உணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால், அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும், மேலும், அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாக, அவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகி, இருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர்.


    நாங்கள் நடத்திய ஆய்வில், தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கு வோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர், பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதற்காக, எப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்கு வோருக்கும், இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்கு, சில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு, தூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால், இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    sumitra and Sriramajayam like this.
    With Love,
    Priya

  3. #803
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    இதயத்தை
    பாதுகாக்கும் வெந்தயக்கீரை


    வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

    வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

    வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

    வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது. வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #804
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள்

    உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

    அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும். எனவே தான், கடைகளில் ரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை.

    ஆகவே ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, ரத்தத்தை சுத்தப் படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கும் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ரத்தத்தை சீராக ஓட வைக்கும்.இங்கு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும்.

    ப்ராக்கோலி :

    இந்த பச்சை நிற காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, உடலில் ஆபத்தை விளைவிக்கும் கொடிய நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

    முட்டைகோஸ் :

    வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜுஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.

    காலிஃப்ளவர் :

    பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    பாகற்காய் :

    கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

    வேப்பிலை :

    வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

    பூண்டு :

    பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும்.

    கேரட் :

    கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜுஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

    எலுமிச்சை :

    எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

    அன்னாசி :

    பழங்களில் அன்னாசிப் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, ரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    இஞ்சி டீ :

    இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், ரத்தம் சுத்தமாக இருக்கும்.

    பார்ஸ்லி :

    சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.

    நெல்லிக்காய் :

    நெல்லிக்காயிலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தி யையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

    நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் எந்தவித தங்கு தடையின்றி இயங்க செய்வதில் ரத்தத்தின் பங்கு முக்கியமானது. சீரான ரத்த உள்ள மனிதனுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள்.

    அந்த வகையில் உடலுக்கு ஒவ்வாத உணவு பண்டங்களை தவிர்த்து மேற்கூறிய உணவு பொருட்களை உண்டு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, பிறருக்கு தானமாக கொடுக்கும் ரத்தத்தையும் சுகாதாரமானதாக கொடுப்போம்


    sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #805
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    இருமலுக்கு கை கண்ட மருந்து சிற்றரத்தை

    வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம்.

    சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.

    சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

    இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.

    பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #806
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    re: Today's Medical Info

    மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்! ! ! !

    வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம்.

    வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

    அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

    அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.

    அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

    மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே.


  7. #807
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    தலை சுற்றுகிறதா?

    யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம். ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள். அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம். கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்! முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.

    இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறையும். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம். உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து வினாடிகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.

    உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம். ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

    14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.

    உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், முட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் முலம் பெருக்கிக் கொள்ள முடியும்.

    இந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும்.


    sumitra and Sriramajayam like this.
    With Love,
    Priya

  8. #808
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    re: Today's Medical Info

    Quote Originally Posted by Sriramajayam View Post
    சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?

    ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா? என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார்.

    நம்முடைய உடலின் ஒவ்வொரு உறுப்பும் இயங்கத் தேவையான ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை ரத்தம் கொண்டு செல்கிறது. உணவு உட்கொண்டதும் இரைப்பையின் செயல்பாடு அதிகரித்து, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒருவித மந்த நிலை ஏற்படுகிறது.

    சாப்பிட்டதும் தேநீர் அருந்தலாமா?

    'கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.'

    சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா?

    'சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.'

    சாப்பிடும்போது குளிர்ந்த நீர் அருந்தலாமா?

    'உணவு உட்கொண்டதும், குளிர்ந்த நீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்சிதைவு போன்றவை ஏற்படக் கூடும். சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய், ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், சாப்பிடும்போது குளிர்ந்த நீரைப் பருகவே கூடாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவது, செரிமானத் திறனை மேம்படுத்தும்.'

    சாப்பிட்டதும் குளிக்கலாமா?

    'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.'

    சாப்பாட்டின்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் சாப்பிடலாமா?

    'உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்'

    சாப்பிட்டதும் தூங்கலாமா?

    'மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க செல்லவேண்டும்.'

    சாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்யலாமா?

    'சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.'


    Dr Vikatan
    hi visu ,
    nice and informative aricle .

    sumitra and Sriramajayam like this.

  9. #809
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    மிக்க நன்றி ஜெர்மனி விஜி!

    Today's  Medical Info-t1612.gif


    Quote Originally Posted by vijigermany View Post
    hi visu ,
    nice and informative aricle .


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #810
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    தொண்டை வலி நீங்க...


    * இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும், மிளகையும் மென்று, தின்னலாம்.

    * பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடிக்கலாம். தொண்டை வலி நீங்கும்.

    * உப்பு நீரால் கொப்பளிப்பது நல்லது.

    * சூடான நீராகாரங்களைப் பருகுவதும் நல்ல பலனைத் தரும்.

    * நீராவி பிடிப்பது (தொண்டையில் படும்படி) பிடிக்கலாம்.

    * சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்துத் தொண்டையில், அதாவது கழுத்துப் பகுதியில் தடவுங்கள். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.

    * சிறிது தண்ணீரை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து, தொண்டை பகுதியில் வைத்து, கரகர என்று செய்தல் வேண்டும்

    * வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது வலி போகும் என்று சொல்வார்கள்.

    * கற்பூரவல்லி இலை சாறு எடுத்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

    * துளசி இலைகள் போடப்பட்ட தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் புண் வராது.

    * தண்ணீரைக் காய்ச்சும்போது, ஒரு பிடி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து அருந்தலாம். தொண்டைக்கு இதமாக இருக்கும்.
    * இரவு படுக்கும்போது, பாலில் மஞ்சள்தூள், தேன், பொடித்த மிளகு போட்டு அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும்.


    Dr Vikatan


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter