Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #831
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வாட்டி வதைக்கும் அல்சர் நோய்க்கான தீர்வு!

    வயசுல பெரியவங்களா இருப்பாங்க..சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு,சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும். அதென்ன அல்சர்? நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு� இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

    அல்சர் ஏன் வருது? முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது… சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம்.

    ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பி-காம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், ‘சத்து மாத்திரை வேணாம்’னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க.. காரணம் இதுதான்.

    அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்… இதெல்லாமும் அல்சருக்கு காரணம்! மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.

    எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி… இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க…? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு � ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும். அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்… நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.

    கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்… விருந்தும் கூடாது… விரதமும் கூடாது.




    Sponsored Links
    durgasakthi likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #832
    yazhini5's Avatar
    yazhini5 is offline Commander's of Penmai
    Real Name
    Rekha
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    1,116

    re: Today's Medical Info

    Good information.
    A patient who suffer from ulcer,treat t in early stage itself.otherwise it ll lead to gastric carcinoma

    Sriramajayam and bhuv like this.

  3. #833
    Revathivenu is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    chennai
    Posts
    377

    re: Today's Medical Info

    hello sir
    thank u forthe tips.ithainaan kanndippa follow panren enakku intha problem irukkirathu.unga usefulla irukkum thank u again.

    Sriramajayam likes this.

  4. #834
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    பல் வலிக்கு என்ன செய்தால் நிவாரணம் கிடைக்கும்


    உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தான் பல் வலி பாடாய்படுத்தும். அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சில இயற்கை நிவாரணிகளைக் கொண்டு பல் வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் பல் வலியை போக்கி பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பல் வலியை போக்க சிறந்த ஆறு நிவாரணிகளை பார்க்கலாம்.

    கிராம்பு

    பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்கும் கிராம்பு அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. கிராம்பு பல் வலியை போக்க கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆகவே இது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கும் முக்கிய பண்புகளை பெற்றுள்ளதால் கிராம்பை பல்வலிக்கு பயன்படுத்தலாம்.

    எப்படி பயன்படுத்தலாம்: கிராம்பு எண்ணெய்யை ஒரு காட்டன் துணி கொண்டு நனைத்து பல் வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல் வலி குணம் பெறும். பல் வலியால் அவதி படுபவர்கள் அரை தம்ளர் தண்ணீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை ஒரு சில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் முழு கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல் வலி தீரும்.

    பூண்டு

    பூண்டை பயன்படுத்தினாலும் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.பூண்டு ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிறமருத்துவ குணங்களைகொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பில் உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது..

    எப்படி பயன்படுத்தலாம்: வெறுமனே பூண்டையும், கிராம்பையும் சேர்த்து நசுக்கி சில துளிகள் உப்பு சேர்த்து பல் வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி குணம் பெறும். மேலும் பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.. இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிச்சையாகும்.

    கோதுமை புல் செடி(wheatgrass)

    பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டு செயல்படுவது கோதுமை புல். இது பல்வலிக்கு தீர்வு தர தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிற-து. கோதுமைபுல் பல் வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுப்பதற்கும் தீர்வு வழங்குகிறது.

    எப்படி பயன்படுத்தலாம்: கோதுமைபுல்லில் இருந்து சாறு எடுத்து அவற்றை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய் தொற்றை கட்டுபாட்டின் கீழ் வைத்துக்கொள்கிறது. மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல் வலியை போக்கலாம்.

    வெங்காயம்

    வெங்காயம் பல் வலியை குணப்படுத்தக்கூடிய கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல் வலி வரப்போகிறது என அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். உங்களால் மெல்ல முடியவில்லையெனில் வெங்காயத்தை பசை போல அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    கொய்யா இலைகள்

    கொய்யா இலைகளும் பல் வலியை தீர்க்கும். பாதிக்கப்பட்ட பல் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பு வலி வரப்போவது என அறிந்ததும் ப்ரெஷ்சான ஒன்று இரண்டு கொய்யா இலைகளை வாயில் விட்டு மென்று விடலாம். மேலும் ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பானதும் சில துளி உப்பு சேர்த்து வாய்களை சுத்தம் செய்யலாம். கொய்யா இலைகள் இல்லையெனில் பச்சை கீரைகளை பயன்படுத்தலாம். இவை இரண்டுமே பல் வலியை குணப்படுத்தும் சிறந்த மருந்து.

    மிளகு மற்றும் உப்பு

    மிளகு கலந்த உப்பு கூட வீட்டில் பல் வலியை கையாள சிறந்த மருந்தாகும். இது பல் வலிக்கு பயன் பெறக்கூடிய மிகச்சிறந்த மருந்தாகும். சம அளவு மிளகு, உப்பு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்தமுறையை தினமும் சில நாட்களுக்கு செய்து வந்தால் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.மேலும் பல் வலியை போக்க பெருங்காயம், ஐஸ் கியூப், பே பெர்ரி, சூடான உப்பு நீர் ஆகியவற்றைக் கொண்டும் பல்வலியை போக்கிகொள்ளலாம்.


    Sriramajayam likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  5. #835
    ankkn's Avatar
    ankkn is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    47

    re: Today's Medical Info

    pal valiyum thalai valiyum vandhadhan theriyumnu solvanga. its true. thanks for sharing the info.

    Sriramajayam likes this.

  6. #836
    ankkn's Avatar
    ankkn is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    47

    re: Today's Medical Info

    I've heard people having kidney stones gets cured when they try juice of root of plantain (vazhaithandu saaru) in empty stomach everyday.

    Sriramajayam likes this.

  7. #837
    ankkn's Avatar
    ankkn is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    47

    re: Today's Medical Info

    Good work Durga sakthi madam

    durgasakthi and Sriramajayam like this.

  8. #838
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Always u r welcome my dear friend!

    Today's  Medical Info-t1612.gif


    Quote Originally Posted by Revathivenu View Post
    hello sir
    thank u forthe tips.ithainaan kanndippa follow panren enakku intha problem irukkirathu.unga usefulla irukkum thank u again.


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #839
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வாழையடி வாழை!
    வாழைத்தண்டியின் மருத்துவ குணங்கள்..!

    என்ன சத்துக்கள்?

    அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.

    பலன்கள்

    கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

    ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.

    அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

    இரண்டு ரெசிபி

    1) வாழைத்தண்டு ஜூஸ்
    வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

    2) வாழைத்தண்டு மோர்
    வாழைதண்டு- 6
    தயிர்- 1 லிட்டர்
    இஞ்சிச் சாறு- 1 ஸ்பூன்
    எலுமிச்சை இலை - 5 அல்லது 6
    பெருங்காயத்தூள்- சிறிது
    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    வாழை தண்டிலிருந்து நாரினை நீக்கவும்.

    வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.

    இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள்சேர்க்கவும்.

    எலுமிச்சை இலையை கசக்கி மோரில் போடவும்.

    வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #840
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

    2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

    3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

    4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

    5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

    6.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter