Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree4822Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #851
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    28,705
    Blog Entries
    9

    re: Today's Medical Info

    அல்சர் அவதியா..?
    சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

    இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
    இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

    காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

    ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

    சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

    கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

    வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

    பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

    கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

    மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

    பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

    சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

    சேர்க்க வேண்டியவை:

    கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

    தவிர்க்க வேண்டியவை:

    அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
    கடைப்பிடிக்க வேண்டியவை:
    காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
    உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
    பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
    தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
    சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.








    Sponsored Links
    datchu and Sriramajayam like this.

  2. #852
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,830
    Blog Entries
    1721

    re: Today's Medical Info

    காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்.

    நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் வேலையே காதுகளை பாதுகாப்பது தான். நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்கயையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.

    ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் ஓட்டை விழுந்து கேட்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்படலாம். காதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல் ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

    காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்து துணி மூலம் சுத்தப்படுத்தலாம்.

    காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தால் குழந்தையின் காதில் பிரச்சனை இருக்கலாம். பள்ளியில் கவனக்குறைவாகவும் மந்தமாகவும் குழந்தைகள் இருந்தால் காதில் நீர் கோர்த்து இருக்கலாம்.

    மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ பேச ஆரம்பிப்பதில் தாமதம் காட்டினாலோ உடனே காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். காது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக் கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும். தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம். ஜலதோசம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப்பலமாக சிந்துவதுகூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த உடனேயே மஞ்சள் காமாலை யாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும் குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் பரிசோதனை செய்வது அவசியம்.

    பெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும் ஸ்பீக்கரில் அலறும் இசையைக் கேட்பதும் காதருகே அறைவதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள். தொடர்ந்து செல்போனில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் பாட்டுக்கேட்பதையும் தவிர்கவும். சிலருக்கு எந்த காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம். இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சனைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்


    Dr Vikatan


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #853
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,830
    Blog Entries
    1721

    re: Today's Medical Info

    * சாணி வரட்டிசியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

    * தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.

    * ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

    * ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

    * துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

    * உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

    * அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

    * மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

    * நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்


    Tamil Karuthukalam


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #854
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!.

    வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

    பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

    வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

    1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

    2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

    3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

    4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

    5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

    6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

    7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

    8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

    9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

    10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

    11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

    13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

    14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

    15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

    16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

    17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

    18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

    19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

    20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

    21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

    22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

    23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

    24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

    25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

    26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

    27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

    28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

    29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

    30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

    31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

    32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

    33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

    34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

    35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

    36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

    37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

    38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

    39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

    40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

    41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

    42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

    43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

    44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

    45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

    46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

    47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

    48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

    49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

    50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.


    Last edited by datchu; 29th Sep 2013 at 08:26 AM.
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #855
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சோகை நீங்க

    குப்பைமேனி செடியை உலர்த்தி, தூளாக இடித்து பொடி 100 கிராம், மிளகு வறுத்து 10 கிராம் சேர்த்து கண்ணாடி புட்டியில் வைக்கவும். 3 மாதங்கள் 1/2 ஸ்பூன் அளவு காலை, மாலை பசும்பாலில் சாப்பிடவும். சோகை நீங்கும். ரத்தம் பெருகும். மருந்து சாப்பிடும் வரை புலால் உணவு கூடாது.

    வாய்ப்புண் குணமாக

    மாசிக்காயை நன்றாக தூள் செய்து இரண்டு சிட்டிகை ஒரு வேளைக்கு வீதம் நெய் அல்லது வெண்ணையுடன் சேர்த்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். குடல் புண் குணமாகும்.

    பித்தத்தை தவிர்க்க

    விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.

    குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க

    தினசரி 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு, பால் சாப்பிட குளுகோஸ் நேரடியாக உடலுக்குள் சேருகிறது.

    கல்லீரல் பலப்படுத்த

    தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படுகிறது. வைட்டமின் சி சத்து மற்றும் கால்சியம் இரும்பு சத்து உள்ளது.

    உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு

    உடல் நலம் குன்றியவர்கள் தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திபழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திபழம் உதவும்.

    இதயத்தில் பலம் கிடைக்க

    மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடைகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

    இரத்த அழுத்தம் சரியாக

    டீ காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழசாறு பிழிந்து சாப்பிட்டு வர நல்லது.

    குழந்தைகளுக்கு மந்தம்

    கருவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து, குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுக்கவும். மந்தம் குறையும். பசி எடுக்கும்.

    குழந்தைகளுக்கு வாய்ப்புண்

    குழந்தைகளுக்கு வாய்ப்புண் இருந்தால், இதற்கு சிறிது பாலில் மாசிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து நாக்கில் தடவ குணமாகும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #856
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    வழுக்கை தலையில் முடிவளர:

    சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

    முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

    1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

    2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

    3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
    போதும் இளநரை மாயமாகிவிடும்.

    4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

    5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #857
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Today's Medical Info

    பித்தக் கற்களை எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் இளநீர் காலையில் அருந்தும் இளநீர், சிறு நீரகங்களில் நம் உணவின் மூலம் அதிகம் சேர்ந்துள்ள கால்சிய சேமிப்பையும் மாற்றும் பித்தக் கற்களையும் எளிதில் கரைத்து வெளியேற்றிவிடும் வாய்ப்பு அதிகம். இரத்தக் கொதிப்பு நோயாளிகளையும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பக்கவாதம் தாக்காமல் பாதுகாக்க இளநீரில் அபரிதமாக உள்ள பொட்டாசியம் உப்பு உதவுகிறது. பொட்டாசியத்துடன் மக்னீசியமும் இணைந்து செயல்படுவதால் எலும்புகளும் தசைகளும் சோம்பலோ, இறுக்கமோ இன்றி புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் சுறுசுறுப்பாக மாறிவிடுகின்றோம். முக்கியமாக மக்னீசிய உப்பு மாரடைப்பு வராமல் தடுத்துவிடுகிறது. முதுமையில், இளமையான தோற்றத்தை நீடிக்கக்செய்ய இப்போது முதலே தினமும் இளநீரை அருந்திவாருங்கள், இதனால் மருத்துச் செலவு மிச்சப்பட்டு, வாழ்நாட்களும் எளிதில் நீடிக்கும்.

    Sriramajayam likes this.

  8. #858
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Today's Medical Info

    வாயுப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது? ஒரு சிலருக்கு மேலும், கீழுமாக காற்று அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கும். மேலே வாய் வழியாக வெளியாகும் வாயுவைப் பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. மாறாக கீழே வெளியாகும் வாயு அவ்வப்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும். மூக்கு வழியாக உள்ளே சுவாசிக்கப்படும் காற்று முழுவதுமாக நுரையீரலுக்குள் செல்லும். மற்றபடி, வாய் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்றின் ஒரு பகுதி நுரையீரலுக்கும் இன்னொரு பகுதி உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கும் செல்கிறது. இரைப்பை என்பது, உணவு செரிமானத்துக்காக அமிலம் சுரக்கும் ஒரு பகுதி. அதனால் இரைப்பைக்கு காற்று என்பதே என்னவென்று தெரியாது. உணவுக்குழாய் வழியாக வரும் காற்றை, அது திருப்பி அனுப்பும். அது தான் ஏப்பமாக வெளியேறுகிறது. இரைப்பைக்குள் வரும் நூறு சதவீத காற்றில் எண்பது சதவீதம் ஏப்பமாக வெளியேறிவிடும். மீதம் இருக்கும் இருபது சதவீத காற்று, இரைப்பையிலேயே தங்கிவிடும். நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும்போது, சில இராசாயன மாற்றங்களால் வாயு உருவாகிறது. சரி வாயுத் தொல்லையால் பிரச்சனையா? என்று கேட்டால், இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லலாம் என்றாலும் வயிற்றுக்குள் உற்பத்தியான வாயு, வெளியே போவில்லை என்றால் அதுபற்றி நிச்சயம் கவலைப்பட வேண்டும். வயிற்றுக்குள் உருவான வாயும் மலமும் வெளியேறித்தான் ஆக வேண்டும். உள்ளேயே தங்கிவிட்டால், பிரச்சனைதான். வாயுத்தொல்லை அதிகமாக இருக்க என்னென்ன காரணங்கள் என்பதைப் பார்ப்போம். உணவில் கிழங்கு வகைகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை இருக்கும். வாயினால் காற்று விழுங்கும் பழக்கத்தினாலும் வாயுத் தொல்லை இருக்கும். அதிகமாகச் சாப்பிடும் போதே, பேசிக்கொண்டு சாப்பிடும்போதோ, நம்மை அறியாமல் விழுங்கப்படும் காற்றும் வாயுத் தொல்லைக்கு ஒரு முக்கிய காரணம். சரி வாயுப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது? நைட்ரஜன் அதிகம் உள்ள இறைச்சி, பூண்டு வெங்காயம் சேர்ந்த உணவு வகைகளைத் தவிர்க்கவும். கிழங்கு வகைகளான உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும். இப்படி உணவு கட்டுப்பாடுடன் இருந்தாலே வாயுத்தொல்லை நீங்கும்.

    kaya3 and Sriramajayam like this.

  9. #859
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Today's Medical Info

    மலச்சிக்கலை நீக்கும் அதிமதுரம், சோம்பு பொதுவாக இயற்கை உணவுகளை உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. மலச்சிக்கல்தான் எல்லா நோய்களுக்கும் முதல் காரணம் ஆகும். நெல்லிக்காய் தூள், கடுக்காய்த்தூள் முதலியவற்றையும் தினசரி கால் தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம். இரவு உணவில் இரண்டு வாழைப் பழங்களை சாப்பிடும் பழக்கம் மலச்சிக்கலை நீக்கிவிடும். இதற்கு மேலும் மலச்சிக்கல் இருந்தால் அதிமதுரம் 100gm. சோம்பு 100gm. இரண்டையும் கலந்து பவுடராக்கி காலை, மதியம், இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும்.

    Sriramajayam likes this.

  10. #860
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    76,830
    Blog Entries
    1721

    re: Today's Medical Info

    கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?

    கேன்களில் அடைக் கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதுபற்றி யாருக்கும் தெரிவதில்லை. பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு நடத்தியபோதுதான் புற்றீசல்போல ஆயிரக்கணக்கில் கேன் தண்ணீர் நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

    உண்மையில், தண்ணீர் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது?

    கேன் தண்ணீர் பலகட்டப் பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அளிக்கப்படுகிறது' என்கிறார் தண்ணீரை பரிசோதிக் கும் மைக்ரோ பயாலஜிஸ்டான ஜெயந்தி. வாட்டர் பிளான்ட்களில் தண்ணீர் சுத்திகரிப்புச் செய்வது பற்றி அவர் கூறுகையில், 'போர் தண்ணீர், கிணற்று நீர், லாரிகளில் கொண்டு வரப்படும் நீர் ஆகியவற்றை சுத்தம் செய்து மக்கள் குடிக்கும் வகையில் மாற்றும் பணியை நாங்கள் செய்கிறோம். இந்தத் தண்ணீரில் டி.டி.எஸ். (Total dissolved solids) என்பது எவ்வளவு என முதலில் கண்டறிய வேண்டும். குடிக்கத் தகுதியானதுதானா என்பதை முடிவுசெய்வது இந்த டி.டி.எஸ்.-தான். டி.டி.எஸ். அளவு அதிகரிக்கும்போது தண்ணீர் துவர்ப்பாக, உப்பாக இருக்கும். டி.டி.எஸ். எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்தபிறகு, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் செயல்பாடு தொடங்கும்.

    முதலில் கார்பன் பில்ட்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் தூசுகள் வடிகட் டப்படும். பிறகு சான்ட் பில்ட்டர் எனப்படும் மணல் வடிகட்டியில் நீர் செலுத்தப்படும். இப்போது கலங்கலாக இருந்த நீரானது தெளிவாகும். இதன் பிறகு மைக்ரான் பில்ட்டர் எனப்படும் மிக நுண்ணிய தூசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியினுள் தண்ணீர் சுத்திகரிக்கப்படும், அதைத் தொடர்ந்து 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியினுள் செலுத்தி தண்ணீரில் உள்ள எல்லா தூசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.

    இதன் பிறகு ரிவர்ஸ்ஆஸ்மோசிஸ் எனப்படும் சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது மிகத் தூய்மையானதாக, குடிக்கத் தகுந்ததாக கிடைக்கும். இந்தத் தண்ணீரில் அல்ட்ரா வயலட் கதிர் செலுத்தி 100 சதவிகிதம் சுத்தமான குடிநீராக மாற்றப்பட்டு கேன்களில் நிரப்பப்பட்டு, மக்களுக்குக் குடிக்க அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான நிறுவனங்கள் இந்த சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சுத்திகரிப்பு அனைத்தையும் முறையாக செய்தாலே தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும்.

    இதன்பிறகு, மைக்ரோபயாலஜிஸ்ட், கெமிஸ்ட் ஆகியோர் இந்த நீரைப் பரிசோதனைகளைச் செய்வர். மைக்ரோபயாலஜியில் ஆறு விதமான பரிசோதனைகள் செய்து, அந்தத் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதிப்படுத்துவோம். கெமிஸ்ட்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தாது உப்புக்கள் உள்ளதா என்பதை ஆறு - ஏழு வகையான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகே கேனில் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளை எங்கள் ஆய்வகத்தில் மட்டும் செய்வதில்லை; மாதத்துக்கு ஒரு முறை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்வோம்'' என்றார்.



    (Dr Vikatan)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter