Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #921
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    re: Today's Medical Info

    மலேரியாவை ஒழிக்க புதிய தடுப்பு மருந்து

    அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச்சிக் கழகத்தைச் சேற்ந்த ஆயாளர்கள் குழு இந்திய விஞ்ஞானி தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் மலேரியா நோயைத் தடுக்கும் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

    பரிசோதனையில் இந்த மருந்து சிறப்பாக செயல்பட்டதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

    மலேரியா நோய் உலகம் முழுதும் 50 கோடி மக்களை தாக்கி வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் உலகம் முழுதும் மலேரியாக் காய்ச்சலுக்கு உயிரிழந்து வருகின்றனர்னர்.

    குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டு குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். ஆசியாவிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய நிர்பாய் குமார், இது குறித்து கூறுகையில், "மலேரியா வைரஸ் பரவலைத் தடுக்கும் இந்த புதிய தடுப்பு மருந்தை எலிகளுக்குள் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டபோது, கிடைத்த முடிவுகள் ஆரோக்கியமானதாக இருந்ததால் அதனை மனித உடலுக்கும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது" என்றார்.

    அதாவது இந்த ஆய்வாளர்கள் மலேரியல் புரோட்டீனை தயாரித்து அதனை எலிகள் மற்றும் கென்யாவில் உள்ள ஆலிவ் குரங்கினங்கள் ஆகியவற்றை வைத்து பரிசோதனை செய்தனர். அப்போது கொசுவின் உடலில் வளரும், மலேரியா உருவாக்கும் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியின் வளர்ச்சியை இந்த தடுப்பு மருந்து சிறப்பாக முடக்கியது தெரிய வந்ததாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கொசுவில் உருவாகும் இந்த ஒட்டுண்ணி பல்கிப் பெருகுவதன் மூலம் மனித உடலுக்குள் புகுந்து விடுகிறது. தற்போது இந்த மலேரியா தடுப்பு புரோட்டீன் இந்த வளர்ச்சியை தடுத்து விடுகிறது.

    இந்த புரோட்டீன் வாக்சின் ஒரே ஒரு டோஸ் கொடுக்கப்பட்டபோது 93 விழுக்காடு எதிர்ப்பு சக்தி உருவானதாக கூறப்பட்டுள்ள இந்த ஆய்வில் நாளைடைவில் மலேரியா எதிர்ப்பு சக்தி 98 விழுகாடாக அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    இருப்பினும் மலேரியா ஒழிப்பு முயற்சியில் இது ஒரு தொடக்க கட்டமே என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், மேலும் பல சீரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதில் முன்னேற்றம் ஏற்பட்டால் மலேரியா நோயையே அகற்றி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.


    Sponsored Links
    datchu, sumitra and Sriramajayam like this.

  2. #922
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info



    With Love,
    Priya

  3. #923
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    சுக*ப்பிரசவத்திற்கான குறிப்புகள்…

    7 மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும்.

    காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் காரமான உணவை சாப்பிடும் முறையை தவிர்க்கவும்.

    தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும்.அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது.

    அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது.

    தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள்,தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம்.

    தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும்.

    உங்களை எப்போதும் மனஅழுத்தமில்லாமல் சந்தோஷத்தோடு வைத்துக் கொள்ளவும். பிடித்த பாடல்களைக் கேட்கலாம்.

    மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் மாதுளத்தை சாப்பிடுவதால் உங்கள் குழந்தை சிவப்பாகவும் அழகாகவும் பிறக்கும்.

    7 மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.

    தினமும் தூங்கவதற்கு முன் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். இவ்வாறு குளிப்பதால் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும்.

    இவ்வாறு செய்வதன் மூலம் சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுக்கலாம்.







    With Love,
    Priya

  4. #924
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Today's Medical Info

    நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.


    சாப்பிடக் கூடாது:


    1. சர்க்கரை.
    2. கரும்பு.
    3. சாக்லெட்.
    4. குளுக்கோஸ்.
    5. காம்பளான்.
    6. குளிர் பானங்கள்.
    7. சாம் வகைகள்.
    8. பால் கட்டி.
    9. திரட்டுப்பால்.
    10. பனிக்கூழ்.
    11. வாழைப்பழம்.
    12. பலாப்பழம்.
    13. மாம்பழம்.
    14. நுங்கு.
    15. சப்போட்டா.
    16. சீதாப்பழம்.
    17. உலர்ந்த திராட்சை.
    18. சேப்பங்கிழங்கு.
    19. உருளைக்கிழங்கு.
    20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.






    அளவோடு சாப்பிடலாம்:


    1. கம்பு.
    2. ஓட்ஸ்.
    3. அரிசி.
    4. அவல்.
    5. இரவை.
    6. பார்லி அரிசி
    7. சோளம்.
    8. மக்காச் சோளம்.
    9. கேழ்வரகு.
    10. கோதுமை.
    11. பாதாம் பருப்பு.
    12. முந்திரிப் பருப்பு.
    13. வேர்க்கடலை.
    14. பிஸ்தா பருப்பு.
    15. வால் நட்.




    அளவில்லாமல் சாப்பிடலாம்:


    1. பாகற்காய்
    2. சுரைக்காய்.
    3. வாழைத்தண்டு.
    4. வெள்ளை முள்ளங்கி.
    5. தக்காளி.
    6. கொத்தவரங்காய்.
    7. காராமணி.
    8. வெள்ளரிக்காய்
    9. அவரைக்காய்.
    10. முருங்கைக்காய்.
    11. கீரை.
    12. கண்டங்கத்திரி.
    13. கோவைக்காய்.
    14. வெங்காயம்.
    15. பூசணிக்காய்.
    16. கத்திரிக்காய்.
    17. வாழைப்பூ.
    18. பீர்க்கங்காய்.
    19. பப்பாளிக்காய்.
    20. வெண்டைக்காய்.
    21. முட்டைக்கோஸ்.
    22. நூல்கோல்.
    23. கோவிப்பூ.
    24. சீமை கத்திரிக்காய்.


    With Love,
    Priya

  5. #925
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    re: Today's Medical Info

    `காபி’யில் கண் விழித்தால்…

    காலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது? காபியா? டீயா?’
    முதலில் `டீ’க்கு வருவோமா? டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது.
    ஒரு கப் டீயில் காபியை விட குறைவான `காபினே’ இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன்நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடும்.
    சிலர் டீ கொதிக்க கொதிக்க இருக்கும்போதே அதே சூட்டில் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.
    காபி கதைக்கு வருவோம். `டீ’யை விடவும் காபியில் `காபின்’ அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும், அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர் களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம். குறிப்பாக டிகாக்ஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம்.
    வடி கட்டப்பட்ட `பிளாக் காபி’க்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.
    சிலர் கையில் எப்போதும் காபிக்கோப்பை புகைந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.

    datchu and Sriramajayam like this.

  6. #926
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    re: Today's Medical Info

    தினமும் தேவை குரோமியம்!

    ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம். 1999இல் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் ரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே தான் வந்துள்ளது. இதற்கு உண்மையான காரணம், நன்கு சுத்திகரிக்கப்பட்ட
    (ரீஃபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதுதான் காரணம் என்பதை கண்டுபிடித்தனர். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

    இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலை உணவில் சேருங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் இதில் ஏதேனும் இரண்டு இடம் பெறட்டும்.
    சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கேளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சீராக இருக்கும்.
    விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்வது நல்லது. இதில் குரோமியம் உப்பு உள்ளது.
    பல நோய்களுக்கு இந்தத் தாது உப்புக்குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதினரும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றையாவது அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


  7. #927
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சீத்தாப்பழம்

    இந்த சீசனில் கிடைக்கும் எளிய பழம். இதன் தாவரவியல் பெயர் Annona squamosa. சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.
    கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும்.

    100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, மணிச்சத்து- 0.9%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 47 மில்லி கிராம், இரும்புச்சத்து- 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி-37 மில்லி கிராம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%,கலோரி அளவு- 10.4% ஆகும்.


    பலன்கள்

    இந்தப் பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

    காய்ச்சலை குணப்படுத்தும்.

    செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் நீங்கும்.

    இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

    இதில் கால்ஷியம் சத்து இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள்.

    சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு மறைந்துவிடும்.



    (Dr Vikatan)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #928
    balamade4u's Avatar
    balamade4u is offline Friends's of Penmai
    Real Name
    பாலகிருஷ்ணன்
    Gender
    Male
    Join Date
    Jun 2011
    Location
    COIMBATORE
    Posts
    252

    re: Today's Medical Info

    Quote Originally Posted by Sriramajayam View Post
    சீத்தாப்பழம்

    இந்த சீசனில் கிடைக்கும் எளிய பழம். இதன் தாவரவியல் பெயர் Annona squamosa. சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.
    கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும்.

    100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, மணிச்சத்து- 0.9%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 47 மில்லி கிராம், இரும்புச்சத்து- 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி-37 மில்லி கிராம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%,கலோரி அளவு- 10.4% ஆகும்.


    பலன்கள்

    இந்தப் பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

    காய்ச்சலை குணப்படுத்தும்.

    செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் நீங்கும்.

    இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

    இதில் கால்ஷியம் சத்து இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள்.

    சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு மறைந்துவிடும்.



    (Dr Vikatan)
    நேத்து வாங்கிய சீதாபழத்தில.. சாப்பிட்டு முடிச்சப்றம் மீதி இருந்த தோலோட எடை தாங்க அதிகமா இருந்தது! இந்த தோலை எதுக்குங்க உபயோகப்படுத்தலாம்? எப்படி? (சாரிங்க... இது, தமாஸ் இல்லைங்க.. நிஜம்ம்மா!)

    எதையும் எதிர்பாரா அன்பை நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டால்,
    சந்தோசம் உங்களுக்கு சொந்தமாகிவிடும்!

    கிடைத்த உறவுகளில் குறை காணாதீர்கள்! குறைகளே இல்லையென்றால்,
    அதைப் பெறும் தகுதி நமக்கு இல்லாமல் போய்விடும்!


    பாசமுடன்..
    பாலா.


  9. #929
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Ok, thx u


    Quote Originally Posted by balamade4u View Post
    நேத்து வாங்கிய சீதாபழத்தில.. சாப்பிட்டு முடிச்சப்றம் மீதி இருந்த தோலோட எடை தாங்க அதிகமா இருந்தது! இந்த தோலை எதுக்குங்க உபயோகப்படுத்தலாம்? எப்படி? (சாரிங்க... இது, தமாஸ் இல்லைங்க.. நிஜம்ம்மா!)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #930
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    நச்சுக்கடி முறிவு மருத்துவம்..!

    மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம் கண்ணாடி விரியன்:பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க. தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும். வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவ. சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும். வெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும். எலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது. பூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக. பூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது. நட்டுவாக்காலி: கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter