Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree186Likes

Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்


Discussions on "Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்" in "Health" forum.


  1. #51
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

    விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...

    * இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

    * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

    * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

    * ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

    * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

    * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

    * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    * கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

    * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

    * அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.



    (FB)



    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #52
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    முக்கனிகளில் முக்கியமான கனி - மாம்பழம்
    ----------------------------------------------------------------------------

    என்ன சத்து?

    வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ளது. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வைட்டமின் சியும் உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் இதில் அதிகம் உள்ளது. மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம் உள்ளது. ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ளது.

    என்ன பலன்கள்?

    வைட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது

    பலர் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். இப்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.

    சருமத்துக்கு மிகவும் நல்லது

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்துக்கு மிகவும் நல்லது.

    வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும்

    சுவையான பழத்தைப் பற்றிய சுவையான தகவல் -

    இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இங்கிருந்து உலகம் முழுவதும் பரவி இப்பொது உலகெங்கும் மாம்பழங்கள் 1000 வகைகள் உள்ளன. இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

    தவறான புரிதல்

    மாம்பழம் சூடு என்று சிலர் சொல்வார்கள். காரணம் மாம்பழத்தை சாப்பிடுகையில் அதன் சுவையில் ஈர்க்கப்பட்டு அளவு தெரியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம். அதனால் தான் பிரச்னை. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் விஷம். எனவே இந்த சீசனில் அளவோடு மாம்பழத்தை சுவைத்து அதன் முழுப் பலன்களையும் பெறலாம். (அப்பறம் என்ன, உடனே சாப்பிடுங்க )



    Read more: http://www.penmai.com/forums/health/...#ixzz2QAlDOZKT


    naliniselva likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #53
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    தர்பூசணி பழம் சாப்பிட சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அதுவே கொடை வள்ளல்.

    கோடைக் காலத்தில் இதன் விளைச்சல் பன்மடங்காக இருக்கும்.அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நாம் பழங்களை மட்டும் சாப்பிட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம்.விதைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மையும் கூட.

    இப்பழத்தின் விதை வெள்ளரி விதையின் சுவையில் இருக்கும்.
    கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.இது கொடி வகையை சார்ந்தது.அதனால் நீர்ச்சத்தும், விட்டமின்களும் அதிக அளவில்
    உண்டு.


    இதில் பழம் மாத்திரம் அல்ல, இப்பழத்தின் தோல்,விதை, காய் என அனைத்தும் பயன் தரக் கூடியவை.
    பழத்தை மட்டும் சாப்பிட்டு அதன் அடிபாகத்தை வீசி விடுகிறோம். பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம்.
    பழத்தை ஜூசாக செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் சிறிது மிளகு-சீரகப் பொடி தூவியும் அருந்தினால் உடனேயே பசி எடுக்கும்.

    கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுப்பதற்கு பதிலாக இப்பழ ஜூசை வடிகட்டாமல் கொடுக்க, வெயிலில் இழந்த சத்தை மீட்டுக் கொடுக்கும்.

    Last edited by datchu; 11th Apr 2013 at 10:10 PM.
    naliniselva likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #54
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    தாகத்தை தணிக்க மட்டுமல்ல தர்பூசணி…

    கோடையில் தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.ஆண்மையை அதிகரிப்பதில் வயாகரா மாத்திரையின் சக்தியை விட அதிகமான சக்தி தர்பூசணி பழத்துக்கு உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    கோடைகாலமும் தர்பூசணியும் இயற்கையானது அந்தந்த சீசனிற்கு ஏற்ப பழங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கிறது. கோடையில் உஷ்ணத்தை சமாளிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.

    தர்பூசணியில் உள்ள சத்துக்கள்

    தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.

    இயற்கை வயாக்கரா

    தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாக்ரா’ என்பது தான். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்பவர் தர்பூசணி பழம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

    தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்’ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

    இதயநோயாளிகளுக்கும் நன்மை

    தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக 'சிட்ரூலின்’, `அர்ஜினைனாக’ எனும் வேதிப்பொருளாக மாற்றப் படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    நம் ஊரில் தாகம் தணிக்க தர்பூசணி பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, விதைகளை நீக்கி விட்டு சாப்பிடுவார்கள். இல்லையெனில் பாழத்தை துண்டுகளாக்கி சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவி சாப்பிடுவார்கள். மேலும் பழ ரசமாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையை படித்த பின்னர் பழத்தின் சிவப்பு பகுதியை விட்டு விட்டு வெண்மை பகுதியைத்தான் அதிகம் சாப்பிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

    Last edited by datchu; 11th Apr 2013 at 10:27 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #55
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    பேரிச்சம் பழத்தில் உள்ள மருத்தவ குணங்கள்...!

    நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.

    அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள்.


    naliniselva likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #56
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை!


    இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு.

    ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும்.

    அந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். அதிலம் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது.

    அதிலும் அந்த சிட்ரிக் ஆசிட் எலுமிச்சையிலேயே அதிகமாக உள்ளது. அதிலும் இந்த எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து, தினமும் ஒரு வேளை பருக வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது ஒன்றிலிருந்து 0.13 விகிதமாகக் குறைகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சிறுநீரக கல்லின் வகை மற்றும் அறிகுறிகள் கால்சியம் வகை கற்கள்:
    அந்த கற்கள் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது கற்கள் நகர்ந்துமுதுகு வலி, சிறுநீரில் இரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். யூரிக் ஆசிட் வகை கற்கள்: இந்த பொருள் சிறுநீரில் இருக்கும் பொருள் தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக சேரும் போது, அந்த பொருள் முழுவதுமாக வெளியேறாமல், உடலிலேயே தங்கிவிடும். இது அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவருக்கு ஏற்படும். இதனால் வயிற்றில் வலி ஏற்படும்.

    மான் கொம்பு கற்கள்: இது மானின் கொம்பு போன்று இருக்கும். மேலும் உடலில் கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கனவே கற்கள் இருந்து அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால், அதனை சாதாரணமாக விடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகிறார். அதே சமயம் எலுமிச்சை சாற்றையும் தொடந்து பருக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.



    Last edited by datchu; 13th Apr 2013 at 03:32 PM.
    naliniselva likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #57
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    useful info maythili mam...



    நளினி



  8. #58
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.

    இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

    வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

    இந்த ஆய்வு அமெரிக்க ரத்த அழுத்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது.




    Last edited by datchu; 17th Apr 2013 at 11:13 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #59
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    மங்குஸ்தான்

    பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.
    இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection), காளான்களையும் (Fungus) அழிக்க பயன்படுத்தினர்.

    மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதி தடிமனாக காணப்படும். பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்.

    மன அழுத்தம் போக்கும்

    நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

    வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

    உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

    வாய் துர்நாற்றம் நீங்க

    மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும். கிருமிகளைக் கொள்ளும்.

    கண் எரிச்சலைப் போக்க

    கனிணியில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

    இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

    சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

    பெண்களுக்கு

    மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

    சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #60
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

    முக்கனியின் உடல் நல பயன்கள்


    மாம்பழத்தின் உடல் நல பயன்கள்

    முக்கனியில் முதல் கனி மா. மாம்பழத்தில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில மாம்பழங்கள் சற்றே புளிப்பாக இருக்கும். இந்தரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.

    மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.

    மனிதர்களுக்கு வைட்டமின் கி தினசரி 5000 யூனிட்டுகள் தேவை . மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. நோஞ்சன் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர்.

    இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும். உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது.


    பலாப்பழத்தின் உடல் நல பயன்கள்

    பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

    பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.

    நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.

    பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது

    வாழைப்பழதின் உடல் நல பயன்கள்

    உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.

    தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும். காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கப் இளநீர் ஆகியவை சேர்த்து நாள்தோறும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

    சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து நாள்தோறும் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து நாள்தோறும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.




    Last edited by datchu; 20th Apr 2013 at 05:37 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter