Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree245Likes

Health Bulletin


Discussions on "Health Bulletin" in "Health" forum.


  1. #2461
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    ஆஸ்டியோபோரோஸிஸ் தடுப்பது எப்படி?

    இன்றைய சூழலில் பலருக்கும் எலும்புருக்கு நோய் அல்லது எலும்பு புரை நோய் எனப்படும் எழும்பு தேய்மான நோய் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இந்நோயானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயானது எலும்பை உருக்குவதோடு மட்டுமல்லாமல் கழுத்துப் பகுதி மற்றும் முதுகுப் பகுதி வலியை அதிகரிக்கும். பெண்களைப் பொருத்தவரை மாதவிடாய் காலத்தின் கடை நாட்களில் இருப்பவர்களை இந்த நோய் அதிக அளவு பாதிக்கிறது. இந்த பிரச்னை உள்ளவர்கள், வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் வாரத்திற்கு 3 முறையாவது ஏரோபிக் மற்றும் உடலை வலுப்படுத்தும் பயிற்சியை தொடர்ச்சியாக 30 நிமிடமாவது செய்ய வேண்டும். இந்நோய் பாதிப்பு உள்ளவர்கள் உணவில் உப்பை குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதால், அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் மேலும் கால்சியத்தின் அளவையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் கால்சியம் சத்து குறையும் நிலை உருவாகும். அதன் காரணமாக எலும்பு தேய்மானம் அடையும். இதனால் வைட்டமின் 'டி' சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


    Sponsored Links

  2. #2462
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    சுகப்பிரசவப் பெண்களை அதிகம் பாதிக்கும், கர்ப்பப் பை இறக்கம்!

    பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும் போது தேவையான அளவு ஓய்வு எடுக்காமல், தொடர்ந்து வேலை செய்வது, அதிக எடையுள்ளப் பொருட்களை தூக்குவது போன்றவற்றால் இடுப்பு எலும்புத் தசைப் பகுதிகள் விரைவில் அதன் பலத்தை இழக்கும். இதுமட்டுமல்லாமல் அடிக்கடி வயிற்று வலியும் இருக்கும். இதில் மூன்று நிலைகள் உண்டு. முதல் இரண்டு நிலைகளை எளிதில் சரி செய்ய முடியும். ஆனால், மூன்றாவது நிலை அதிக அளவு உடல்நலத்தை பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் பழுதடைவது வரையிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது நல்லது. முதல் நிலை பாதிப்பாக இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது, இவையெல்லாம் பிரச்னை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள். அதிக வெள்ளைப்படுதல் கர்ப்பப்பையை தாக்கும். பெண்கள் கவனக் குறைவாக இருந்தால் கர்ப்பப் பையை இழக்க நேரிடும்.


  3. #2463
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    உயிரைப் பறிக்குமா செப்டிசீமியா!

    அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்று ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் செப்டிசீமியா. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், 28 முதல் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர் என்கிறது அமெரிக்காவின் நேனஷல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்.
    பாக்டீரியா கிருமித் தொற்றில் மிகவும் ஆபத்தானது செப்டிசீமியா. உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் அபாயகரமானது இந்தப் பிரச்னை. பாக்டீரியா நோய்த் தொற்று உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பிட்ட உறுப்பில் ஏற்பட்ட தொற்று, ரத்தத்தில் கலக்கும்போது, ரத்தத்தில் பாக்டீரியா கிருமி பல்கி பெருகி வளர்ச்சியடைகிறது. இந்த பாக்டீரியா வெளியிடும் நச்சு மற்றும் பாக்டீரியாவை அழிக்க நோய் எதிர்ப்பு சக்தி வெளியிடும் ரசாயம் ஆகியவை உடல் முழுவதும் பயணிக்கின்றன. இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்திவதையே செப்டிசீமியா என்கின்றனர்.
    உடலில் வீக்கம் ஏற்படும்போது, திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதை செப்டிக் ஷாக் என்று சொல்வர். தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை எனில் இதுவே மரணத்துக்கு வழிவகுக்கிறது.

    யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு வரலாம். அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். ஆரம்பநிலையில் சிகிச்சை பெறும்போது உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
    எதனால் செப்டிசீமியா ஏற்படுகிறது?
    இதில், பெரும்பான்மையான பாக்டீரியா தொற்று காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம். செப்டிசீமியா ஏற்பட பொதுவான பாக்டீரியா நோய்த்தொற்று...
    சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று
    நிமோனியா போன்ற நுரையீரல் நோய்த் தொற்று
    சிறுநீரக நோய்த்தொற்று
    வயிறு மற்றும் இரைப்பை நோய்த்தொற்று.
    இந்த உறுப்புக்களில் ஏற்படும் நோய்த்தொற்று, ரத்தத்தில் கலக்கும்போது பிரச்னை தீவிரம் அடைகிறது. ரத்தத்தில் கலந்த பாக்டீரியா மிக வேகமாக பல்கி பெருகுகிறது. இந்த நிலையிலேயே உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
    அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதுதவிர, மிகத்தீவிரமான காயம் அல்லது தீக்காயம், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள், ரத்தக் குழாயில் தற்காலிகமாக செயற்கை குழாய் பொருத்தியுள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
    அறிகுறிகள்
    இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தும். பாதிப்பின் முதல் நிலையில் இருந்தாலும் கூட மிகவும் சோர்ந்து மிகத்தீவிர நோயாளி போல காணப்படுவர். உடல் சில்லிட்டுப்போகும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும், மிக வேகமாக சுவாசித்தல் நடக்கும், அதிவேக இதயத்துடிப்பு இருக்கும்.
    இந்த அறிகுறிகள் தென்பட்டு, அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனில், குழப்பமான மனநிலை, சிந்திக்க முடியாத தன்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, சருமத்தில் சிவப்பு புள்ளிகள், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், சுவாசித்தலில் சிரமம், இதயத்தின் செயல்திறன் குறைவு, வயிற்றுவலி, ரத்த ஓட்டத்தில் குறைபாடு போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும்.
    இவர்களுக்கு, ஐ.சி.யு-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். வயது, உடலின் தாங்கும் திறன், பாதிப்பின் தீவிரம், ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து சிகிச்சை திட்டமிடப்படும். இவர்களுக்கு, பாக்டீரியா கிருமியை அழிக்க, ஆன்டிபயாடிக் மருந்து அளிக்கப்படும். எந்த மாதிரியான பாக்டீரியா என்று ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அதற்கான மருந்து அளிக்கப்படும்.
    ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, ரத்தம் உறையாமல் தடுக்க கையில் ஊசி மூலம் திரவங்கள், மருந்துகள் செலுத்தப்படும். சுவாசத் திணறலைத் தவிர்க்க வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.
    கடந்த செப்டம்பர் 23ம் தேதி, பஞ்சாப் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஜகதீஷ் காக்நிஜா செப்டிசீமியா பாதிப்பு காரணமாக 47 நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  4. #2464
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    Japan's Yoshinori Ohsumi wins Nobel Medicine Prize for work on cell 'recycling

    Yoshinori Ohsumi of Japan on Monday won the Nobel Medicine Prize for his work on autophagy — a process whereby cells "eat themselves" which when disrupted can cause Parkinson's and diabetes.

    Autophagy is a fundamental process in cell physiology with major implications for human health and disease.

    The process is essential for the orderly degradation and recycling of damaged cell parts and its failure is believed to be responsible for ageing and cell damage.

    Researchers first observed during the 1960s that the cell could destroy its own contents by wrapping them up in membranes and transporting them to a recycling compartment called the lysosome.

    "Difficulties in studying the phenomenon meant that little was known until, in a series of brilliant experiments in the early 1990s, Yoshinori Ohsumi used baker's yeast to identify genes essential for autophagy."

    He then went on to explain the underlying mechanisms for autophagy in yeast and showed that similar sophisticated machinery is used in human cells.

    Ohsumi's discoveries "have led to a new paradigm in the understanding of how the cell recycles its contents," the jury said.

    "Mutations in autophagy genes can cause disease, and the autophagic process is involved in several conditions including cancer and neurological disease," it added.

    Ohsumi, 71, received a PhD from the University of Tokyo in 1974. He is currently a professor at the Tokyo Institute of Technology.



    The prize+ comes with eight million Swedish kronor (around $936,000 or 834,000 euros).

    Last year, Irish-born William Campbell of the US, Satoshi Omura of Japan and China's Tu Youyou won the prestigious award for their discoveries of treatments against parasites.


  5. #2465
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    British scientists on verge of HIV cure: Report

    British scientists are on the verge of confirming a treatment for HIV, an incurable virus that leads to deadly AIDS disease, if a new treatment trial proves successful, a media report claimed on Sunday.

    A British man with HIV hopes to become the first in the world to be cured of the disease by using the pioneering new therapy designed to eradicate the virus, 'The Sunday Times' reported.

    The 44-year-old is the first of 50 people to complete a trial of the ambitious treatment, designed by scientists and doctors from five of Britain's leading universities - universities of Oxford, Cambridge, Imperial College London, University College London and King's College London.

    It is the first therapy created to track down and destroy HIV in every part of the body — including in the dormant cells that evade current treatments.

    If successful, it offers hope of an irreversible cure for HIV and could save millions of pounds spent on drugs.

    Early tests show the virus is undetectable in the man's blood.

    But he will have to wait some months before confirmation on whether the treatment has permanently cleared the disease.

    It is possible that the absence of the virus could be down to the conventional drugs that he has also been taking which can temporarily clear the body of the disease.

    Mark Samuels, managing director of the National Institute for Health Research Office for Clinical Research Infrastructure, which set up the medical consortium, told the newspaper: "This is one of the first serious attempts at a full cure for HIV. We are exploring the real possibility of curing HIV. This is a huge challenge and it's still early days but the progress has been remarkable."



    The HIV virus is mostly transmitted by sex. Once in the body it targets T-cells, part of the immune system, splicing itself into their DNA. If the T-cell is active the HIV hijacks it, turning it into a tiny factory spewing millions more viruses to infect other T-cells.



    It is this aspect of HIV activity that is targeted and suppressed by anti-retroviral therapies (ART). What ART cannot do is pick out the millions of infected T-cells lying dormant around the body -- but waiting to spring into life should ART fail. It is the HIV reservoir in these dormant cells that the research group is targeting.


    "It would be great if a cure has happened. My last blood test was a couple of weeks ago and there is no detectable virus. However, that could be the anti-retroviral therapies, so we have to wait to be sure," the London-based patient said.



    The new trial is being backed by the UK's state-funded National Health Service (NHS) because it could save millions by removing the need to treat HIV patients with ART, which costs around 380,000 pounds per person over their lifetime.


  6. #2466
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    12,552

    Re: Health Bulletin

    செங்கல்பட்டில் நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் நாட்டின் முதலாவது மருத்துவ பூங்காவை காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 330.10 ஏக்கர் நிலப்பரப்பில், எஸ்.பி.வி.’ என்று அழைக்கப்படும் சிறப்பு நோக்க திட்டத்தின்கீழ் அமைக்க மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

    இந்த பூங்காவை அமைப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைப்கேர் நிறுவனத்துக்கு 330.10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளிக்கும்.

    குறைந்த விலையில், உயர்தர மருத்துவ சாதனங்களை, கருவிகளை தயாரித்து அளிப்பதை ஊக்கப்படுத்தும் விதத்தில் மருத்துவ தொழில் நுட்ப துறையில், இந்த மருத்துவ பூங்கா, நாட்டின் முதல் திட்டமாக அமைகிறது.

    இந்த மருத்துவ பூங்காவில் பல்வேறு மருத்துவ சாதனங்களை, கருவிகளை தயாரித்து வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த மருத்துவ பூங்கா 7 வருடங்களில், பல்வேறு கட்டங்களில் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 3-வது ஆண்டில் இருந்து மனைகள், உள்குத்தகைக்கு விடப்படும். இரண்டாவது கட்டமாக அறிவு மேலாண்மை மையம் அமைக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான முறையில் மனைகளை எச்.எல்.எல். லைப் கேர் நிறுவனம் உள்குத்தகைக்கு விடும். நாட்டில் தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் இந்த மருத்துவ பூங்கா முக்கிய பங்காற்றும். இந்த பூங்கா, வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சாதனங்கள், கருவிகள் இறக்குமதி செய்வதை குறைக்கும்.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முடிவுகள் வருமாறு:-

    * எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயாளிகளின் நலன்களை, உரிமைகளை பாதுகாக்கிற வகையில், ‘எச்.ஐ.வி., எய்ட்ஸ் மசோதா 2014’-ல் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களின் சம்மதம் பெற்றே ரத்த பரிசோதனை செய்யவும், ரத்த பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்களின் ரகசியத்தை பாதுகாக்கவும் வகை செய்கிறது. அதை மீறி ரத்த பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டால், வெளியிடுவோருக்கு 3 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரையில் அபராதம் விதிக்கவும் மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது.

    * டெல்லியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2 ஏக்கர் நிலத்தை இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.


  7. #2467
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    புகைப்பிடித்தல் மற்றும் மதுவிற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடு வதற்கு உதவும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    அடிமையாவதற்கு காரணம்
    உலககெங்கும் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல விதமான நோய்களுக்கு ஆளாவதால் பலர் குறைந்த வயதிலேயே மரணமடைகின்றனர். மூளையில் ஹைபோதாலமஸ் பகுதியில் உற்பத்தியயாகும் வாசோபிரசின் என்ற நியூரோபெப்டைடின் காரணமாக இத்தகைய கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடுகிறது.

    அமெரிக்க தேசிய மது ஒழிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரே லிட்டன் ஏ.பி.டி., 436 என்ற புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது மனித மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் வாசோபிரசின் எனப்படும் நியூரோபெப்டைடின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக சோதனை மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    நிரூபணம்
    அமெரிக்க விஞ்ஞானி ரே லிட்டன் தலைமையிலான மருத்துவ குழு இந்த மருந்தை 100க்கும் மேற்பட்ட மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கொடுத்து வந்ததில் சில நாட்களிலேயே மது மற்றும் புகைப்ழக்கத்தின் மீது உள்ள நாட்டம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


  8. #2468
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    12,552

    Re: Health Bulletin

    மார்பக புற்றுநோய் சென்னை பெண்களுக்குத்தான் அதிகம்...!

    இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 28 சதவிதம் பேர் சென்னைவாசி பெண்கள்தானாம். அதில் 67 சதவிகிதம் பேர் இறப்பை தழுவுகின்றனர். 30 முதல் 40 வயது பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாக என டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.


  9. #2469
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    அதிகரித்து வரும் காசநோயாளிகள்: மீண்டும் சர்வே எடுக்கிறது மத்திய அரசு

    உலக சுகாதார அமைப்பின் அறிக்கயைின்படி இந்தியாவில் அதிகரித்து வரும் காசநோயாளிகளின் எண்ணிக்கையால் 60 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய அளவில் காச நோயாளிகள் குறித்த சர்வே மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


    அதிகரிக்கும் நோயாாளிகள்



    உலக சுகாதார அமைப்பு உலக அளவில் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, நைஜிரீயா,பாகிஸ்தான் தென்ஆப்ரிக்கா ஆகிய 6 நாடுகளில் காசநோயாளிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் இந்தியாவில் காசநோயாளிகள் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாக வெளியிட்டுள்ளது.


    60ஆ ண்டுகளுக்கு பிறகு



    இந்நிலையில் மத்திய சுகாதாரம், மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நெட்டா கூறுகையில், இந்தியாவில் காசநோயை ஒழிக்க ஏற்கனவே தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகரித்து வரும் காசநோயாளிகள் குறித்து மீண்டும் சர்வே மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக காநோய் கட்டுப்பாட்டு திட்டம் மாற்றியமைக்கப்படும் இத்திட்டத்தின்படி அரசுமருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரம் சேகரிக்கப்படும். . இதற்கான சர்வே அடுத்த ஆண்டு துவங்கும் இவ்வாறு அவர் கூறினார்.
    கடைசியாக 1965-ம் ஆண்டு சர்வே மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் இப்பணிகள் மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  10. #2470
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    ஸ்ரீபெரும்புதூரில் புற்றுநோய் வலி நிவாரண சிகிச்சை மையம்!

    அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவாக வலிநிவாரண மையம் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு மருத்துவர்கள் நாள்தோறும் சென்று, புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு வலி நிவாரண சிகிச்சையை அளித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், நோய் முற்றிய புற்றுநோயாளிகளுக்கு இலவச தங்கும் மையம், வலி நிவாரண மையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 80 படுக்கைகள் இந்த மருத்துவமனை, இன்னும் ஆறு மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter