Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree243Likes

Health Bulletin


Discussions on "Health Bulletin" in "Health" forum.


  1. #2591
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    ஹாய் லேடீஸ்... பீரியட்ஸ் முதல் மெனோபாஸ் வரை... நமக்கு நாமே செக்கப் பண்ணிக்கலாமா? #NationalWomensHealthFitnessDay




    மைக்கும் உணவில் சத்தான காய்கறிகளையெல்லாம் சல்லடை போட்டு எடுத்து கணவருக்கும், குழந்தைக்கும் பரிமாறிவிட்டு, மிஞ்சி இருக்கும் சாரையே தங்கள் தட்டுக்கு வைத்துக்கொள்வார்கள் பெண்கள். தங்களைச் சுற்றியிருப்பவர்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ளும் அந்த ஜீவன்களுக்கு, தங்கள் நலனில் அக்கறைசெலுத்தத் தோணாது. ஆனால், அந்த வழக்கத்தை மாற்ற வேண்டியது கட்டாயம்.


    பெண்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப உடல்நலனில் அக்கறைகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.


    “டீன் ஏஜ் பெண்கள்... டேக் நோட்ஸ்!
    * மாதவிடாய் நாள்களில் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்ய இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * காய்கறிகளை ஒதுக்குவதுதான் பல பருவப் பெண்களுக்கும் சத்துக்குறைபாடும் ரத்தச் சோகையும் ஏற்பட முக்கியக் காரணம். எனவே இரும்புச்சத்துள்ள பசலைக்கீரை, பீட்ரூட்,கேரட் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * வெள்ளைப்படுதல் இயல்பான ஒன்றுதான். ஒருவேளை அது அளவுக்கு அதிகமானாலோ, துர்நாற்றம், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகவும்.

    * கீரை, பருப்பு, பேரீட்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவப் பிரியர்கள் சிக்கன் அல்லது மட்டனை வாரத்துக்கு ஒருமுறையாவது நிச்சயமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * ஆய்லி ஹேர் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறையும், டிரை ஹேர் உள்ளவர்கள் வாரத்துக்கு ஒரு முறையும் தலைக்குக் குளிக்கலாம்.

    * உயரத்துக்கு ஏற்ற உடல் எடை முக்கியம். உதாரணமாக, ஒருவரின் உயரம் 160 செ.மீ எனில் அவரது எடை 160 - 100, அதாவது 60 கிலோ இருக்க வேண்டும். ஒருவேளை உயரத்துக்குக் குறைவான எடை இருப்பின் உணவில் அக்கறை காட்டவேண்டும்.

    * சரியான உணவுமுறைகளை, உணவு இடைவேளைகளைப் பின்பற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உணவைத் தவிர்க்கக் கூடாது.

    * தினமும் தியானம் செய்யலாம். அது ஆரோக்கியத்துடன் மன உளைச்சலுக்கும் தீர்வாக இருக்கும்.

    * துரித உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. இவை உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும். ஒபிஸிட்டிக்கு வாசல் திறந்துவிடும்.

    * உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தைப் பெற தினமும் பால், தயிர் இரண்டையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * ஒருவேளை மார்பகத்தில் வீக்கமோ, கட்டியோ தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

    திருமணமான பெண்கள் கவனத்துக்கு!
    * டீன் ஏஜ் பெண்களுக்கு அறிவுறுத்திய உணவு முறைகளைப் பின்பற்றவும்.

    * தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    * கணவர் சாப்பிட்டு, குழந்தைகள் சாப்பிட்டு 12 மணிக்கு காலை சாப்பாடு சாப்பிடும் பழக்கம் இருந்தால் தயவுசெய்து அதை விட்டொழிக்கவும். இவர்கள் அனைவரையும் கவனிக்க இவர்களையெல்லாம்விட உங்களுக்குதான் அதிக எனர்ஜி தேவைப்படும். எனவே, சரியான நேர இடைவேளையில் சாப்பிடவும்.
    * மருத்துவரிடம் மார்பகச் சுயபரிசோதனை செய்யும் வழிமுறையைத் தெரிந்துகொண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். மாதவிடாய் முடிவடையும் நாள்களில் இதைச் செய்யவும்.

    * மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய் பரிசோதனை செய்துகொள்ளவும்.

    * தாம்பத்யத்துக்குப் பிறகு பிறப்புறுப்பிலோ, சிறுநீர் கழிக்கும்போதோ துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம். மாதவிடாய் நாள்களில் கண்டிப்பாகத் தாம்பத்யத்தைத் தவிர்க்கவும்.

    40 ப்ளஸிலும் பெர்ஃபெக்டாக இருக்கலாம்!

    * இந்த வயதுகளில் உடல் நலனில் அதிக அக்கறை தேவை.

    * பச்சைக் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

    * ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்துகொள்ளவும்.

    * மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை அவசியம்.

    * சிறிதாக உடலில் வலி ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

    * நடைப்பயிற்சியையும், தியானத்தையும் வழக்கமாக்கவும்.

    *இந்த வயதுகளில் எலும்பு அடர்த்தி குறைய ஆரம்பிக்கும் என்பதால் கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

    மெனோபாஸ் சிரமங்களை மருத்துவ ஆலோசனைகளுடன் எதிர்கொள்ளவும்.


    Sponsored Links

  2. #2592
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    11,358

    Re: Health Bulletin

    இந்தியாவில் புற்று நோய், நீரிழிவினால் உயிரிழப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்



    இந்தியாவில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் சுகாதார சீர்கேடுகளாலும், சத்துணவு குறைபாடுகளாலும் அவதிப்படுகின்றனர். இதனால் பலவித நோய்களின் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.

    அவற்றில் புற்று நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் டெங்கு போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகளில் புற்று நோய் முதலிடத்தையும், அடுத்த இடத்தை நீரிழிவு நோயும் பிடித்துள்ளன. சமீப காலமாக புற்று நோய் அதிக அளவில் பரவி வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டில் மட்டும் 0.15 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு மக்களின் உணவு பழக்க வழக்கங்களும், வாழ்க்கை அமைப்புகளுமே காரணமாகும்.

    புற்று நோய்க்கு அடுத்த படியாக இருதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்கள் அதிக அளவில் பரவி மக்களின் உயிரை குடிக்கின்றன. இவை புற்று நோய் போன்று மற்ற உறுப்புகளுக்கு பரவுவதில்லை.

    இருதய நோயினால் நாடு முழுவதும் 3 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக நீரிழிவு நோயும் அதிகமாக உள்ளது. மொத்தம் 6 கோடியே 50 லட்சம் பேர் இந்நோயினால் அவதிப்படுகின்றனர்.

    இந்த 2 நோய்களினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நீரிழிவு நோயை அலட்சியப்படுத்தக் கூடாது. மீறினால் உயிரிழப்பு ஏற்படும். அதன் மூலம் ஆண்டுக்கு 3 சதவீதம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர்.

    காசநோயும் இந்திய மக்களை பெருமளவில் தாக்குகிறது. இந்நோயினால் மொத்த மக்கள் தொகையில் 39 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவை தவிர வயிற்றுப்போக்கு, இருமல் உள்ளிட்ட நோய்களால் 8 கோடி மக்கள் அவதிப்படுகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 6.4 சதவீதமாகும். மேலும் தோல் நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் அதிக அளவில் பரவி வருகிறது.

    பொதுவாக இத்தகைய நோய்கள் சத்துணவு குறைபாடுகளினால் ஏற்படுகிறது. இந்தியர்கள் சாப்பிடும் உணவில் புரோட்டீன், வைட்டமின், இரும்பு, மற்றும் பிற சத்துக்கள் இருப்பதில்லை. இதனால் மக்கள் தொகையில் 46 சதவீதம் பேர் அதாவது 60 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சத்துணவு குறைபாட்டினால் பெரியவர்களை விட குழந்தைகள் மனரீதியாகவும், உடல் ரீதியான வளர்ச்சியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தகவல் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2016-ம் ஆண்டு பதிப்பு சர்வதேச நோய்கள் குறித்த புள்ளி விவர பட்டியலில் கூறப்பட்டுள்ளது.


  3. #2593
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    காய்ச்சலை மறைத்தால் டாக்டர்களுக்கு சிறை

    நோயாளிகளிடம், எந்த வகை காய்ச்சல் என்பதை தெரிவிக்காத டாக்டர்களுக்கு, பொது சுகாதார சட்டப்படி, ஆறு மாத சிறை தண்டனை அளிக்கலாம்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    தமிழகத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல், மலேரியா, டைபாய்டு போன்ற காய்ச்சல்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, இந்தாண்டு, 100 பேர் வரை உயிர் இழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை பெறுவோருக்கு, எந்த வகை காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்ற தகவலை, டாக்டர்கள் மறைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

    இது குறித்து, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறியதாவது: தமிழக பொது சுகாதாரச் சட்டம், 1939ல், உருவாக்கப்பட்டது. அந்த சட்ட பிரிவு, 52, 62, 83ன்படி, தொற்று நோய்களை தடுத்தல், நோய் தாக்கம் குறித்தும், தொற்று நோய் எந்த அளவு பாதித்துள்ளது என்பது குறித்தும், பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். இது போன்ற தகவல்களை தெரிவிக்காத டாக்டர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் மீது வழக்கு தொடரலாம். அவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


  4. #2594
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    அதிர்ச்சி... இயற்கைத் தேனிலும் பூச்சிக்கொல்லி..! ஆய்வு முடிவு

    விவசாயத்தில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் ரசாயன நஞ்சுகளால், விளைபொருள்கள் விஷமாகிக் கிடக்கின்றன. இதனால் மனிதர்கள் நடமாடும் நோய் தொழிற்சாலைகளாக மாறியிருக்கிறார்கள். விதவிதமான நோய்கள், வீதிக்கு வீதி மருத்துவமனைகள் என மருந்து, மாத்திரைகளை உண்டே வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இப்படி மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது, சில நாள்களில் மருந்தே பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

    ஆக, நோய்க்கு உண்ணும் மருந்தும் விஷமாகும் காலகட்டத்தில் மனித இனம் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து விடுபட தற்போது பலரும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மருத்துவ முறைகளில் முக்கியமான பொருளாக இருப்பது தேன். இயற்கையாக காட்டில் மலரும் பூக்களிலிருந்து தேனீக்கள் உறிஞ்சிச் சேகரிக்கும் தேன், நூறு சதவிகிதம் இயற்கையானது என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், அந்த நம்பிக்கையில் இடியை இறக்கியிருக்கிறது சுவிட்சர்லாந்து நியூசாடல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்டோபே மேற்கொண்ட ஆராய்ச்சி.


    அலெக்சாண்டோபே தலைமையிலான குழுவினர், தேன் தொடர்பான ஆராய்ச்சிக்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள், பல்வேறு சூழ்நிலைகளிலிருந்து கிட்டத்தட்ட 198 தேன் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வு முடிவு மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மொத்த மாதிரிகளில் 75 சதவிகித தேன்களில் நியூனிகோ டினைட்ஸ் என்ற பூச்சிக்கொல்லி நஞ்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் பூச்சித் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்கப் பயன்படும் இந்த ரசாயன பூச்சிக்கொல்லி உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இதை விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தும்போது, காற்று மூலமாகவும் மற்ற பூச்சிகள் மூலமாகவும் இந்த நஞ்சு பரவுகிறது. விவசாய நிலங்கள் மட்டுமல்லாது அடர்ந்த காடுகளில் உள்ள பூக்களின் மகரந்தங்கள் வரை இந்த நஞ்சு சென்றடைந்துள்ளது.

    இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் அலெக்சாண்டே அபே,
    ‘ இந்தப் பூச்சிக்கொல்லிகளால் மனித இனத்துக்கு நன்மை செய்யும் பல பூச்சி இனங்கள் அழிந்துவிட்டன. இன்னும் சில அழிந்து வருகின்றன. தற்போது தேனில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரசாயன நஞ்சின் அளவு மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவை விட குறைவாகத்தான் உள்ளது.

    எனவே, தேனை உட்கொள்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா நாடுகளிலிருந்து சேகரித்த மாதிரிகளில்தான் அதிகளவில் ரசாயன நஞ்சு கலந்திருந்தது. ரசாயன பயன்பாட்டை இனியாகிலும் மனித இனம் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    இல்லாவிட்டால் ஏற்கெனவே குறைந்துவிட்ட தேனீக்கள் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும். இதன் தொடர்ச்சியாகப் பயிர்களில் மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி மாபெரும் சரிவைச் சந்திக்கும். எனவே உலகம் முழுவதிலும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்‘‘ என்கிறார்.

    ஒரு லிட்டர் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் பால் விஷமாக மாறிவிடுவதுப்போலத்தான் தேனும். இயற்கையாகப் பூத்துப் பூக்களிலிருந்து தேன் எடுத்தாலும், காற்றில் பரவும் ரசாயனங்கள் இயற்கையான பூக்களையும் நஞ்சாக மாற்றிவிடுவதால், சுத்தமான தேனிலும் சிறிது ரசாயனம் கலந்துவிடுகிறது. உலகமே ஒட்டுமொத்தமாக ரசாயன பூச்சிக்கொல்லிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வரை இந்த அவலம் தொடரத்தான் செய்யும்.


  5. #2595
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    உலகில் 25 கோடியே 30 லட்சம் பேருக்கு பார்வைக் குறைபாடு! பார்வைத்திறன் பத்திரம் #WorldSightDay


    குழந்தையின் சிரிப்பை, உலகின் உன்னதமான கலைகளை, இயற்கையின் பரிபூரணத்தை... என எண்ணற்ற அழகையெல்லாம் நமக்குக் காட்சிப்படுத்துபவை நம் கண்கள். அதே நேரத்தில் நம் பார்வைத்திறனை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளாவிட்டால், கண்கள் இருந்தும் பயனில்லை. அப்படிப்பட்ட பார்வைத்திறனின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுவதே `உலக பார்வை தினம்’ (World Sight Day).
    ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை `உலக பார்வை தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி பார்வை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லயன்ஸ் கிளப்பின் சர்வதேச அமைப்புதான் இந்த தினத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. இப்போது உலக சுகாதார நிறுவனம், சர்வதேச பார்வயின்மை தடுப்பு நிறுவனம் (The International Agency for the Prevention of Blindness) ஆகியவற்றோடு இணைந்து இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக `Make Vision Count’ என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, `ஒவ்வொரு பார்வையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்பதாகும். ஆக, பார்வைத்திறனின் அவசியம், பார்வைக்குறைபாட்டுக்கான காரணங்கள், தீர்வுகள், பாதுகாக்கும் வழிகள் அனைத்தையும் இந்த தினத்தில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    `ஐந்தில் நான்கு பேருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு தவிர்க்கக் கூடியது’ என்கிறது சர்வதேச பார்வையின்மை தடுப்பு நிறுவனத்தின் கணக்கெடுப்பு ஒன்று. அதாவது, 80 சதவிகிதம் பேருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்துவிடலாம் அல்லது பார்வைக் கோளாறு வராமல் தடுத்துவிடலாம். உலக மக்கள்தொகை 7.3 பில்லியனில் (730 கோடி), ஏறத்தாழ 253 மில்லியன் (25 கோடியே 30 லட்சம்) பேர் பார்வைக் குறைபாடு உடையவர்கள்.

    பார்வைக் குறைபாட்டுக்கு காரணங்கள் என்னென்ன?
    * ஏறத்தாழ 43 சதவிகிதம் மக்கள் `Uncorrected refractive errors' அதாவது திருத்தப்படாத பார்வைத்திறனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கிட்டப்பார்வைக் குறைபாடு, தூரப்பார்வைக் குறைபாடு ஆகியவை இவற்றில் அடங்கும்.
    * கண்புரை நோய் எனப்படும் `Cataract' வயதானவர்களுக்கு ஏற்படும். இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை.
    * விளையாடும்போது அல்லது ஏதேனும் விபத்தில் பார்வைக் குறைபாடு ஏற்படுதல்.
    * மரபு வழி ஏற்படும் பார்வைக் குறைபாடு.
    * கண்களில் ஏற்படும் தொற்றுகள்.
    * சர்க்கரைநோயால் ஏற்படும் பார்வைக் கோளாறுகள்.
    * `Glaucoma’ எனப்படும் கண்ணில் ஏற்படும் ரத்த அழுத்தம்.
    * சில வகைப் புற்று நோய்களாலும் பார்வைக் குறைபாடு ஏற்படலாம்.
    பார்வைக் குறைபாட்டைச் சரி செய்வது எப்படி?
    * சர்க்கரைநோயால் ஏற்படும் பிரச்னைகளை, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
    * `Glaucoma’ எனப்படும் ரத்த அழுத்த பிரச்னையை, சில மருத்துவரின் பரிந்துரைப்படி, சில மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
    * திருத்தப்படாத பார்வைத்திறன் குறைபாட்டை கண்ணாடிகள், லென்ஸ் போன்றவற்றை அணிந்து சீர் செய்யலாம்.
    * கண்புரை எனப்படும் காட்ராக்ட்டை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யலாம்.


    கண்ணைப் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்:
    * சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் என அனைத்து வகையான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
    * புகைபிடித்தலை நிறுத்த வேண்டும்.
    * கடும் கோடை காலத்தில், தரமான கறுப்புக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு வெளியே செல்ல வேண்டும்.
    * நீண்ட நேரம் கணினி அல்லது மொபைல் உபயோகிப்பதால் பல பிரச்னைகள் வருகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி தொலைவில் உள்ள பொருளை, 20 விநாடிகள் பார்க்கலாம். பிறகு மீண்டும் வேலையைத் தொடரலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பார்க்கும் வேலையில் இருந்து 15 நிமிடங்கள் பிரேக் எடுக்கலாம்.

    * கண் மருத்துவரை அவ்வப்போது சென்று சந்தித்து, கண்ணாடி, பார்வைத்திறன் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.



  6. #2596
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    Make-up DOES make you look younger: Eyes and lips that stand out appear more youthful, say scientists

    • Researchers looked at how facial contrast affects our perception of age
    • They found that features tend to stand out less in older women
    • Observers also tend to see women with increased facial contrast as younger
    • The findings suggest that wearing makeup to enhance your eyes and lips makes women appear more youthful


    If you spend hours perfecting your make-up each morning then there's good news – you probably look more youthful.


    Scientists have looked at how facial contrast – how much features stand out – affects our perception of age.


    Their findings suggest that wearing makeup, which makes eyes and lips stand out, makes women look younger.

    Researchers analysed images of women aged 20 to 80 using computer software to measure facial contrast. In all four groups (pictured left to right - French Caucasian, Chinese Asian, Latin American and South African) several aspects of facial contrast were found to decrease with age. Pictured top row are younger faces, and bottom row older faces




  7. #2597
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'நோ ப்ரா டே' இன்று! #nobraday


    மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு தனியார் அமைப்பு அக்டோபர் 13-ம் தேதியை 'நோ ப்ரா டே'-வாக அறிவித்தது. ஆண்டுக்கு 50,000-க்கும் அதிகமானோர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நாடான இங்கிலாந்தில் தொடங்கிய இந்த நிகழ்வு, 2011-ம் ஆண்டிலிருந்து சமூக வலைதளங்களின் கவனத்தைப் பெற்று தற்போது 40-க்கும் அதிகமான நாடுகளில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடத்துக்கும் 76,000 பெண்களைக் கொல்லும் கொடிய நோயாக மார்பகப் புற்றுநோய் மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றதாம்!

    எனவே, இந்த நாளில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் சோதனைகளைச் செய்யவும், மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்த நடைமுறையில் இருக்கும் மருத்துவ வழிமுறைகள் குறித்தும், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய கதைகள் போன்ற மார்பகப் புற்றுநோய் குறித்த பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்வுகளையும் பல்வேறு நாடுகளிலும், தனியார் அமைப்புகள் நடத்தி வருகின்றன. பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் சேர்த்தே விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. #nobraday என்கிற ஹாஷ் டேகின் மூலம் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விழிப்பு உணர்வு செய்திகள், கதைகள் பகிரப்படுகின்றன.


  8. #2598
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    Why is No Bra Day celebrated?

    No Bra Day can be traced back to Toronto, Canada, and plastic surgeon Dr Mitchell Brown.


    The aim of his original BRA (Breast Reconstruction Awareness) Day was to educate women about their choice for reconstruction when undergoing a mastectomy.


    By 2014, BRA Day was being celebrated in 30 countries worldwide.
    At BRA Day events, those affected by breast cancer can attend Q&A speeches with leading plastic surgeons, and hear inspirational survivor stories.


  9. #2599
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    Breast Cancer Care‏Verified account @BCCare









    It's that time of the week again! Give yourself a #FridayFeeling and check your breasts for signs and symptoms of breast cancer #BCAM




  10. #2600
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    94,200

    Re: Health Bulletin

    What is No Bra Day?

    The movement started in 2011 and largely takes place on social media, where women use the hashtag #nobraday to campaign.


    The aim is to raise awareness and encourage women to carry out self-examinations, screenings, and make sure they know the signs of breast cancer.


    Men, and women who don't want to go braless, are also encouraged to take part - by wearing something purple for the day.


    While ladies are encouraged to get a mammogram screening on October 13 - which can help detect breast cancer up to two years before it can be felt by the patient or a doctor.


    You can also show your support by donating to the Breast Cancer Care charity - or attending one of their many October events.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter