Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree245Likes

Health Bulletin


Discussions on "Health Bulletin" in "Health" forum.


  1. #2621
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்




    உலக எய்ட்ஸ் தினமான இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் எய்ட்ஸ் நோய் துறை நிபுணரான குட்டிகுப்பாலா சூர்ய ராவ் பங்கேற்று பேசினார்.

    உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர் சுமார் 4 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நமது நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் 12 எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

    எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போதிய தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது வருத்தத்துக்குரிய விஷயம் என்று தெரிவித்த அவர், போதிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளாததால் 60 சதவீதம் எய்ட்ஸ் நோயாளிகள் பலியாகும் அவலம் நேர்வதாகவும் குட்டிகுப்பாலா சூர்ய ராவ் குறிப்பிட்டுள்ளார்.


    Sponsored Links

  2. #2622
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு சலுகைகள் வேண்டும்! வலுக்கும் குரல்கள் #NationalOrganDonationAwarenessWeek




    டல் உறுப்புதானத்தில் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து, ஹாட்ரிக் சாதனை புரிந்திருக்கிறது தமிழ்நாடு. இதற்காக, டெல்லியில் நடைபெற்ற 8-வது இந்திய உடலுறுப்பு தானம் தின விழாவில், மத்திய அரசின் பாரட்டையும் பரிசையும் பெற்று கௌரவம் சேர்த்திருக்கிறது. அதே நேரத்தில், " உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள்’’ என்று 'உடல் உறுப்பு தானம் வார விழா'வில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
    உடல் ஆரோக்கியமுள்ள ஒருவரோ, மரணமடைந்தவரோ அல்லது மூளைச் சாவடைந்து இறக்கும் தருவாயில் உள்ளவரோ தன்னுடைய உடல் உறுப்பையோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியையோ, அந்த உறுப்பு தேவையுள்ள ஒருவருக்கு வழங்கி அவர் உயிர்பிழைக்க உதவுவதே 'உடல் உறுப்பு தானம்.'


    உடல் உறுப்பு தானம்குறித்த விழிப்பு உணர்வு வடமாநிலங்களைவிட, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்பட்டுவருகிறது. இருந்தாலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுகுறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.
    எனவே, மக்களிடையே, உடல் உறுப்பு தானம்குறித்த விழிப்பு உணர்வை மேலும் அதிகரிக்க, ஊக்குவிக்க எந்த மாதிரியான திட்டங்கள் உதவும் என்பதுகுறித்து 'மோகன் ஃபவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குநர் லலிதா ரகுராமிடம் பேசினோம். அவர் சில வழிமுறைகளைச் சொன்னார். அவை...
    உடல் உறுப்பு தானத்தைக் கட்டாயமாக்குதல்
    இங்கு உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஸ்பெயின் போன்ற உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் முன்னிலை வகிக்கும் பல நாடுகளில், உறுப்பு தானம் பெறுவதில் புதுமையான நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    அதாவது, `இறந்ததும் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன்’ என்று பதிவுசெய்ய வேண்டியதில்லை. அவர்கள் இறந்த பிறகு, அரசே தானாக முன்வந்து இறந்தவர்களின் உறுப்புகளை எடுத்துக்கொள்ளும். அதேநேரத்தில், `நான் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விருப்பமில்லை’ என்று பதிவுசெய்தவர்களிடம் மட்டும் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுவதில்லை; எடுக்கப்படுவதில்லை. இதுபோன்ற திட்டங்களையும் நம் நாட்டிலும் முன்னெடுக்கலாம்.


    லைசென்ஸுடன் இணைப்பு
    ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போதே உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவராக இருந்தால், ஓட்டுநர் உரிமத்தில், 'உடல் உறுப்பு தானம் செய்பவர்' என, அச்சிட்டு வழங்கலாம். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உயிரிழக்க நேரிடும்போது, அவர்களுடைய உடல் உறுப்புகள், உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களுக்கு வழங்க ஏற்படும் காலதாமத்தைத் தவிர்க்க உதவும். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அந்த மாநிலத்தின் போக்குவரத்து துறையால் திட்டமிடப்பட்டிருக்கிறது.



    மருத்துவ ஆலோசகர் நியமித்தல்!
    தங்களின் குடும்பத்தில் ஒருவர், விபத்தில் மூளைச்சாவு அடைந்ததும், அந்த நெருக்கடியான நேரத்திலும் அவருடைய உறுப்புகளை தானமாகக் கொடுக்க, அந்தக் குடும்பத்தினர் எடுக்கும் முடிவே, முக்கியமானது. ஆனால், இறந்தவரின் இழப்பை ஈடு செய்வது எப்படி என அடுத்த கட்டம்குறித்து யோசிக்க வேண்டிய இக்கட்டான நிலையில், பெரும்பாலும் உடல் உறுப்பு தானம்குறித்து முடிவெடுப்பது அந்த குடும்பத்தினருக்கு கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருக்கும். இந்தச் சமயங்களில் அந்த மருத்துவமனையிலேயே, அவர்களுக்கு மனதளவில் தைரியமூட்டவும், அதற்கான நடைமுறைகள்குறித்து விளக்கிப் புரியவைப்பதற்கும் ஒரு மருத்துவ ஆலோசகர் நியமிக்கப்பட்டிருந்தால், உதவியாக இருக்கும்.

    எனவே, அரசு சார்பில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் உடல் உறுப்பு தானத்துக்கென ஒரு மனநல மருத்துவர் நியமிக்கப்பட்டிருந்தால், சிறப்பாக இருக்கும். அதேபோல உடல் உறுப்பு தானம் தற்போது சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. இதற்கென ஒரு தனி அமைச்சகத்தை அமைக்கலாம்.

    தானம் செய்தவரின் குடும்பத்துக்குச் சலுகை!
    உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு மருத்துவம் பலன் அளிக்காதபோதோ, மூளைச் சாவடைந்த பின்னரோ இறந்தவரிடமிருந்து இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன.

    அதுவரை அவர்கள் செலவழித்த பணத்தின் மதிப்புக்கும், அதற்கு அடுத்து அவர்களின் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்வதற்கும் அரசு சார்பில் வழங்கப்படுவது ஒரு சான்றிதழ் மட்டுமே. அதே நேரத்தில் ஒவ்வோர் உறுப்புக்கும் விலை நிர்ணயம் செய்வது, விலை பேசுவது போலாகிவிடும். ஆனால், குடும்பத் தலைவர்களை இழந்து திக்கற்ற நிலையில் நிற்கும் குடும்பத்தின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் சலுகையோ, இடஒதுக்கீடோ வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.



    பிரபலங்கள் மூலம் விழிப்பு உணர்வு
    உறுப்புதான வார விழா கடைப்பிடித்தல், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவை அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதேபோல, சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மூலமும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்.
    அரசுக்கு ஒத்துழைத்தல்
    உறுப்பு தானம் செய்யப் பதிவுசெய்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் குடும்பத்தினரிடம், அவரது விருப்பத்தை தெரிவித்து வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் இறப்புக்குப் பின்னர் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் வரும்போது, குடும்பத்தினரின் சம்மதம் கிடைப்பதிலோ, உறுப்பைப் பெறுவதிலோ ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க முடியும்.


    ஒவ்வொரு குடும்பத்தினரும், `உறுப்பு தானம் செய்வோம்’ என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் சம்பாதித்த பணத்தையோ, சேர்த்துவைத்த சொத்துகளையோ, அடுத்த சந்ததிக்காக விட்டுச் செல்லும்போது, உறுப்புகள் மட்டும் ஏன் வீணாக மண்ணில் மக்கிப் போக வேண்டும்? அவையும் சமுதாயத்துக்குப் பயன்படட்டுமே’’ என்கிறார் லலிதா ரகுராம்.
    உடலுறுப்பு தானங்களை முறைப்படுத்துவதற்காக, சுகாதாரத் துறையின் கீழ், தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

    அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், இந்த ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

    உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்காக என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவை எப்படி எளிமையாக்கப்பட்டுள்ளன என்பதுகுறித்து தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய நிர்வாகி ஒருவர் விவரித்தார்..
    .

    "உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பதிவு செய்துகொள்ளலாம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். இந்த நடைமுறையை தற்போது எளிமையாக்கி, உறுப்பு தானம் செய்ய விரும்புவோருக்கு ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையைத் தமிழக அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கென்றே அமைந்துள்ள என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அட்டையில் பெயர், ரத்தப் பிரிவுடன், சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல்... என எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும்.
    உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வை அதிகரிக்க, ஆண்டுதோறும் 'உடல் உறுப்பு தான விழா' (National Organ Donation Awareness Week ) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினங்களில், உறுப்பு தானம் செய்தவர்களை அழைத்து கௌரவிக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தில், தமிழகத்தில், 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், கடந்த 27-ம் தேதிவரை (27.11.2017) 1,062 பேரிடம் இருந்து, 5,980 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு, நிதியுதவி அளிக்கப்படுகிறது. உடலுறுப்பு தானம் செய்வதற்கான நடைமுறைகள், சட்ட திட்டங்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது’’ என்கிறார் அவர்.


  3. #2623
    vijaykumar12's Avatar
    vijaykumar12 is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2012
    Location
    India
    Posts
    12,558

    Re: Health Bulletin

    வேறு ஒருவரிடம் இருந்து தானம் பெற்ற கருப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்

    அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. இதனால் அவரால் குழந்தை பெற இயலாத நிலை இருந்தது. எனவே வேறு ஒரு பெண்ணிடம் கர்ப்பபை தானம் பெற்று குழந்தை பெற முடிவு செய்தார்.

    டெல்லாஸ் நகரில் உள்ள பேலார் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து அவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கர்ப்பபை தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

    இதையடுத்து கர்ப்பம் அடைந்த அப்பெண் தற்போது அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் கருப்பை தானம் பெற்று குழந்தை பெற்ற முதல் அமெரிக்க பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

    இத்தகவலை பேலார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் கிரெய்க் சிவாலே உறுதி செய்தார். ஆனால் கருப்பை தானம் மூலம் குழந்தை பெற்ற பெண் குறித்த தகவலை வெளியிட மறுத்து விட்டார்.

    இந்த ஆஸ்பத்திரியில் கருப்பை மாற்று ஆபரேசன் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இங்கு 8 பெண்களுக்கு இதுபோன்று கருப்பை மாற்று ஆபரேசன் நடைபெற்றுள்ளது. அவர்களில் ஒரு பெண் குழந்தை பெற்றுள்ளார். மற்றொரு பெண் கர்ப்பிணி ஆக உள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனில் முதன் முறையாக கருப்பை தானம் மூலம் ஒரு பெண் குழந்தை பெற்றார். டாக்டர் மேட்ஸ் பிரான்ஸ்ட்ராம் முயற்சியில் வெற்றிகரமாக ஆபரேசன் நடைபெற்றது.

    இறந்தவர்களிடமோ அல்லது உயிருடன் இருப்பவர்களிடமோ கர்ப்பபை தானம் பெற முடியும். தற்போது உலக அளவில் இதுபோன்று 16 கருப்பை மாற்று ஆபரேசன்கள் நடைபெற்று உள்ளது.

    அவர்களில் அமெரிக்காவின் கிளீவ் லேண்டை சேர்ந்த ஒரு பெண் இறந்தவரிடம் இருந்து கர்ப்பபை தானம் பெற்றார்.


  4. #2624
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    ட்விட்டர் சர்வே - மருத்துவச் செலவுகளுக்கு மக்கள் என்ன செய்கிறார்கள்?

    யாருக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த நோயும் வரக்கூடிய காலம் இது. டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறவே தனியார் மருத்துவமனையில் அரை லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் எல்லாமே இலவசமாகக் கிடைக்கும் என்றாலும், அங்கு சென்று குணப்படுத்திக் கொள்வதற்கான பொறுமை யாரிடமும் இல்லை. எனவே, கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைத் தனியார் மருத்துவமனைக்குத் தருவதைத் தவிர வேறு வழியில்லை.
    ஆண்டு ஒன்றுக்கு ரூ. 10,000 முதல் 15,000 வரை பிரீமியம் செலுத்தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டால், எந்த நோய் வந்தாலும் பெரிய செலவு எதுவும் செய்யாமல் குணப்படுத்திக் கொள்ளலாம்.


    ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருப் பவர்கள் நம்மிடையே குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த விழிப்பு உணர்வும் பெரிய அளவில் மக்களிடம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் திடீர் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கப் பலரும் கடன் வாங்குவது கொடுமையிலும் கொடுமை.


  5. #2625
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    மழைப் பயணத்தில் செய்யக் கூடாதவை!





    வெயில் காலத்தில், தண்ணீருக்குத் தட்டுப்பாடு என்றால், மழைக்காலத்தில் தண்ணீருக்குக் கட்டுப்பாடே இல்லை. மழை நேரங்களில் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு, அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் ‘தண்ணி பட்ட’ பாடாகி விடுகிறது. அதுவும் டூ வீலர்களில் செல்பவர்களுக்கு இது மிகப் பெரிய டாஸ்க். நடுவே குண்டு குழிகள், சைலன்ஸருக்குள் தண்ணீர் புகுந்து பைக் ஆஃப் ஆவது என்று இந்த டாஸ்க்கில் சிக்கல் அதிகம். மழை நேரங்களில் பைக் விஷயத்தில் அசால்ட்டாக இல்லாமல் செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை.
    1. சைடு ஸ்டாண்ட் போடாதீங்க!

    பலருக்கு எப்போதுமே சென்டர் ஸ்டாண்ட் போடும் பழக்கம் இருக்காது. ‘சென்டர் ஸ்டாண்ட் இருக்குங்கிறதே மறந்து போச்சு’ என்று சிரித்துக்கொண்டே சொல்பவர்கள், சிந்திக்க வேண்டிய நேரம் இது. சைடு ஸ்டாண்ட் போடும்போது, வலது பக்க ஹேண்டில்பார் வழியாக மழை நீர் கீழிறங்கி, கார்புரேட்டர் மழைநீர் சேகரிப்புத் தொட்டியாகிவிடும். தண்ணீரில் எப்படி பாஸ் பைக் ஸ்டார்ட் ஆகும்? எப்போதுமே சென்டர் ஸ்டாண்ட்தான் நல்லது. இது பேட்டரிக்கும் ஃப்யூல் டேங்க் ஃப்ளோட்டுக்கும் ஆயுளைக் கூட்டும்.

    2. நீரில் மூழ்கிய இன்ஜின்!

    நிறுத்தி வைத்திருந்த பைக், நீரால் சூழ்ந்துவிட்டால்... ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். சைலன்ஸர் வரை மூழ்கியிருந்தால், பைக்கை முன்பக்கமாக உயர்த்தி, சைலன்ஸரில் இருக்கும் நீரை வடியவிடுங்கள். பிறகு ஸ்டார்ட் செய்யுங்கள். கியர்பாக்ஸ், இன்ஜின் வரை மூழ்கியிருந்தால், ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று, இன்ஜின் ஆயிலை முழுவதும் மாற்றிய பிறகுதான் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
    3. திடீரென ஆஃப் ஆகிவிட்டதா?

    சென்னை சாலைகளை டாப் ஆங்கிளில் போட்டோ எடுத்தால், நிலவில் உள்ள மேடு பள்ளங்கள்போல் தெரியும். இதில் நீங்கள் பயணிக்கும்போது, உங்களை அறியாமலே ஒரு பெரும்பள்ளத்தில் பைக்கை இறக்கி பேலன்ஸை இழந்து பைக் சாயலாம். அந்த நேரத்தில் பைக் உடனே ஸ்டார்ட் ஆகாது. மிதி மிதி என மிதித்து கிக் ஸ்டார்ட் செய்யாமல், செல்ஃப் ஸ்டார்ட்டைப் படுத்தி எடுக்காமல் சில நிமிடங்கள் ரிலாக்ஸ் பண்ணுங்கள். வேக்யூம் லாக் ஆகியிருப்பதால், பைக் உடனே ஸ்டார்ட் ஆகாது. ஒரு நிமிடம் கழித்து முயற்சித்தால், பைக் ஸ்டார்ட் ஆகும். அடுத்து பள்ளத்தில் இறக்காமல் கிளம்புங்க!

    4.சைலன்ஸர் மூழ்கும் அளவு வெள்ளத்தில் போகலாமா?

    சிலர் சைலன்ஸரில், பிளாஸ்டிக் கவரைச் சுற்றிவிட்டு, வெள்ள நீரில் செல்வார்கள். பைக்கை ஸ்டார்ட் செய்யாமல், உருட்டியபடி செல்லலாம் என்பது ஆப்ஷன். அதையும் தாண்டி பெருவெள்ளத்தில் செல்ல வேண்டிய பட்சத்தில், சைலன்ஸர் மூழ்காது என்று உறுதி செய்த பின்பு, உங்கள் பைக்கின் கியரிங் செட்-அப்புக்கு ஏற்ப முதலாவது அல்லது இரண்டாவது கியரிலேயே ஆக்ஸிலரேட்டரை படிப்படியாகத் திருகிக்கொண்டு செல்லலாம். த்ராட்டில் விஷயத்தில் ஜென்டில்மேனாக நடக்க வேண்டும்.

    5. ஸ்பார்க் ப்ளக் கைவசம் வைத்திருங்கள்!

    ஸ்டார்ட்டிங் ட்ரபிளுக்கு உற்ற நண்பன், ஸ்பார்க் பிளக்தான். மழை நேரங்களில் பைக் ஓடும்போது, குளிரும் வெப்பமும் சேர்ந்து ஸ்பார்க் பிளக்கின் தன்மைக்கு எதிராக மோதிப் பார்க்கும். சில பிளக்குகளில் பாயின்ட்கள் தேய்ந்திருக்கும் பட்சத்தில் ஸ்டார்ட் ஆகாது. இந்த நேரத்தில் புதியதை மாட்டிவிட்டுப் பறக்கலாம். எனவே, ஸ்பார்க் பிளக் கைவசம் இருந்தால் நல்லது.
    6. லோ பேட்டரி அலெர்ட்டில் பைக் ஓட்ட வேண்டாமே!

    பேட்டரி கடைசிக் கட்டத்தில் இருக்கிறது என்று தெரிந்தும், சிலர் வலுக்கட்டாயமாக செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுவார்கள்; ஹார்ன் அடிப்பார்கள்; ஹைபீம் ஹெட்லைட் அடிப்பார்கள். ‘பைக்தான் ஓடுதே; ஓடுற வரைக்கும் ஓட்டுவோம்’ என்று ஓட்டுவார்கள். இது ஒரு கட்டத்தில் உங்களை நடுரோட்டில் நிறுத்திவிடும். பேட்டரி சார்ஜில் இருந்தால் மட்டுமே இப்போதுள்ள பைக்குகள் ஸ்டார்ட் ஆகும் என்பதை நினைவில் கொள்க. எனவே தம்பி, தினமும் பேட்டரியைக் கவனி!

    7. ஹெல்மெட் வைஸரை ஏற்றிவிடுங்கள்!


    ரெயின் கோட், ஹெல்மெட் எல்லாம் போட்டு உடம்பை ஃபுல் கவர் செய்வது எல்லாம் ஓகே. மழையில் பைக்கில் செல்லும்போது, உங்கள் ஹெல்மெட்டின் வைஸர், பார்வைக் குறைபாட்டை நிச்சயம் ஏற்படுத்தும். விண்ட்ஷீல்டில் வைப்பர் பயன்படுத்தாமல், உங்களால் மழையில் கார் ஓட்ட முடியுமா? அதே கதைதான் ஹெல்மெட்டுக்கும். ஹெல்மெட் வைஸரின் மேல் மழைத்துளிகள் விழுந்து, திட்டுத் திட்டாகத் தெரியும்போது, சாலை அரைகுறையாகத்தான் தெரியும். இரவு நேரங்களில் இது ரொம்பவும் டேன்ஜர். எனவே, வைஸரை ஏற்றிவிடுங்கள். மழை நீரை முகத்தில் வாங்கி, குறைவான வேகத்தில் போனால் தப்பில்லை.

    8. செயின் ஸ்ப்ரே இருக்கிறதா?

    மழை முடிந்திருக்கும். ஆனால், பைக்கின் பின் பக்கத்திலிருந்து ‘கரகர’வென ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பைக் ஓட்டும்போது இது எரிச்சல்தானே... அது, நிச்சயம் செயின் ஸ்ப்ராக்கெட்டில் இருந்து வரலாம். (இது செயின் கார்டு இல்லாத பைக்குகளுக்குத்தான் பொருந்தும்.) மழை நீரில் பயன்படுத்திவிட்டு, ஈரம் காய்ந்ததும் தூசி படிந்து அது தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். அதனால், செயின் ஸ்ப்ரே அடித்துவிட்டு, சத்தமில்லாப் பயணத்தைத் தொடரலாம்!

    9. டயர்கள் ரொம்ப முக்கியம்!


    சாதாரண நேரங்களிலேயே சில பைக்குகளில் கிரிப் கிடைக்காது. காரணம், தேய்ந்துபோன டயர்கள்தான். மழைக்காலம் வருவதற்கு முன்பே உங்கள் டயர்கள் எந்த அளவு தேய்ந்திருக்கிறது என்பதைச் சோதனையிடுங்கள். காற்றும் சரியான அளவில் இருப்பது அவசியம். டயரில் பட்டன்கள் தேய்ந்திருந்தால், பள்ளங்களில் ஸ்லிப் ஆவது நிச்சயம். புதிய டயர் மாற்றி மழையில் ஓட்டிப் பாருங்கள்; அத்தனை தன்னம்பிக்கை கிடைக்கும்.

    10. யோசிக்கவே வேண்டாம்.

    மழை வெள்ளம் முடிந்ததும் பைக்கை ஒரு தடவை சர்வீஸுக்கு விட்டுப் பயணத்தை நிம்மதியாகத் தொடருங்கள்.


  6. #2626
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    New breathalyser test for drugs developed

    Testing for drug use and disease in humans could soon be much simpler, as researchers have developed a breathalyser that can identify drugs from exhaled breath.

    In a study published in the Journal of Breath Research, the researchers demonstrate how collecting and analysing externally-produced compounds in the lining fluid of the airways allows for non-invasive testing and monitoring.

    "Exhaled breath contains particles carrying non-volatile substances. The main components, lipids and proteins, are derived from the respiratory tract lining fluid," said Goran Ljungkvist, from the University of Gothenburg in Sweden.

    "The collection procedure is non-invasive, can be repeated within a short time span and is convenient," Ljungkvist said.

    "The small mass sampled is, however, an analytical challenge. Nevertheless, exhaled particles are a new and promising matrix for the analysis of biomarkers," Ljungkvist said.

    The researchers took breath samples from 13 subjects who were undergoing methadone management, to explore whether traces of the drug could be detected via their breath, rather than using invasive techniques that disturb the integrity of the subject.

    "We also wanted to discover the best method for collecting methadone particles in the exhaled breath, so our study compared two different sampling methods - electret filtration, and impaction," Ljungkvist said.

    The electret (analogous to a permanent magnet) filtration method potentially collected exhaled particles of all sizes, while the one based on impaction collected particles in the size range of 0.5 to 7um (micrometer), known to reflect respiratory tract lining fluid from the small airways.

    The researchers used liquid chromatography-mass spectrometry to analyse the collected samples, as well as investigating the impact of different breathing patterns.

    Their results showed methadone was present in all samples using both methods, but when using the method based on impaction, the concentration of methadone in exhaled breath was less than one per cent of the concentration collected by the method based on filtration.

    "The difference in collected amounts of methadone between the two methods was, however, huge. That raised secondary questions on the origin of the collected particles, possible contamination from oral fluid, the breathing pattern and finally the design of the collection device," Ljungkvist said.


  7. #2627
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    Genes linked to homosexuality identified

    Scientists have discovered genetic variants linked to homosexuality by analysing the entire DNA codes of gay and heterosexual men.

    They discovered that DNA was different for gay and straight men around two genes: SLITRK5 and SLITRK6.

    The study, published in the journal Scientific Reports, is the first to look at the complete genome of over 1,000 homosexual men and compare it to genetic data from 1,231 heterosexual males.

    SLITRK6 is an important gene for brain development and is particularly active in the brain region which includes the hypothalamus.

    The hypothalamus is crucial for producing hormones linked to control sex drive. Previous studies have shown that parts of it are up to 34 per cent larger in gay men.

    Researchers from North Shore University Health System (NSUHS) in the US also discovered differences in the TSHR gene, which is linked to the thyroid, 'The Telegraph' reported.

    "Because sexuality is an essential part of human life - for individuals and society - it is important to understand the development and expression of human sexual orientation," said Alan Sanders, from NSUHS.

    "The goal of this study was to search for genetic underpinnings of male sexual orientation, and thus ultimately increase our knowledge of biological mechanisms underlying sexual orientation," Sanders said.

    However, experts suggest that the number of participants in the study is too small to draw population-wide conclusions, and the findings are not statistically significant.

    "Even if a gene variant does show some correlation with sexual orientation, this does not mean that the gene is in any way responsible for being gay - it just means it has some association with a trait that is more likely to be found in the relatively few people involved as subjects in the study," said Robin Lovell-Badge from The Francis Crick Institute in the UK, who was not involved in the study.


  8. #2628
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    ஸ்டீராய்டு மருந்து---

    மருத்துவம் என்ன சொல்கிறது? #SteroidAlert

    ஆங்கில மருத்துவத்தில், 'ஸ்டீராய்டுகள்' என்னும் வீக்கத்தை குறைக்கும் (Anti-inflammatory) மருந்துகள் மிகவும் முக்கியமானவை. `நாள்பட்ட நோய்களைக் குணமாக்குவதில் தொடங்கி, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளில் இதன் பங்கு முதன்மையானது’ என்று மருத்துவர்களால் ஒருபக்கம் கொண்டாடப்படுகிறது ஸ்டீராய்டு. மற்றொரு பக்கம், `சர்க்கரைநோய், எலும்பு வலிமை இழப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு ஸ்டீராய்டு பயன்பாடுதான் காரணமாகின்றன’ என்ற வாதம் பலராலும் முன்வைக்கப்படுகிறது.

    உண்மையில், ஸ்டீராய்டு மருந்துகள் அவசியமானவைதானா... மருத்துவத்தில் அதன் பயன்பாடுகள் என்னென்ன... அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா... என்பவற்றையெல்லாம் குறித்து பொதுநல மருத்துவர் விஜய் சக்கரவர்த்தியிடம் பேசினோம்.
    ஸ்டீராய்டு என்பது நம் உடலில் உள்ள அட்ரினல் சுரப்பில் சுரக்கும் ஒரு வகை ஹார்மோன். இந்த ஹார்மோன் உடலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் அளவைச் சீராக பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல வீக்கத்தைக் குறைப்பது (Anti-inflammatory ) இதன் முக்கியப் பணி. இது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது.

    இந்த ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படும்போதோ அல்லது வேறு மருத்துவ காரணங்களுக்காகவோ இவை வெளியில் இருந்து கொடுக்கப்படுகிறது. உதராணமாக, உடல்நலம் குன்றியவர்களுக்கும், மனஅழுத்த நோயுடன் இருப்பவர்களுக்கும் நம் உடலுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு தேவைப்படும். அதேபோல, ஒரு நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது, உடலில் சுரக்கும் ஸ்டீராய்டு போதுமானதா என்பதை ஆராய்ந்து, பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் தேவையான ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும்.

    இப்படி வெளியிருந்து கொடுக்கப்படும் ஸ்டீராய்ட்களில் `அனாபாலிக் ஸ்டீராய்டு' (Anabolic steroids), 'கார்டிகோ ஸ்டீராய்டு' (Corticosteroid) என இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன. முதல் வகை, பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது அவர்களுக்கு தசைகளுக்கு வலுவையும் ஆற்றலையும் தரக் கூடியது. மற்றொன்று, மருத்துவத் துறையில் பயன்படக்கூடியது.

    ஊசி, மாத்திரை, களிம்பு, இன்ஹேலர், ஸ்பிரே, திரவ மருந்து... எனப் பல்வேறு வகைகளில் ஸ்டீராய்டு மருந்து பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக, அலர்ஜி, ஆஸ்துமா, மூட்டுவலி பாதிப்புள்ளவர்கள், நரம்பு தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள் எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு இவை உடனடி நிவாரணம் தருபவை. `முடக்குவாதம்’ எனப்படும் ருமாட்டாய்டு ஆர்த்ரிட்டீஸ் (Rheumatoid arthritis) போன்ற ஆட்டோ இம்யூன் குறைபாடுகளுக்கும் ஸ்டீராய்டு மருந்து பெரிதும் பயன்படுகிறது.

    வலி, வேதனை, வீக்கம் குறைக்க ஸ்டீராய்டு மருந்துகளே உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
    அதேபோல உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பிறகு, இது நம் உறுப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு புதிய உறுப்புக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தி தீவிரமாகச் செயல்படும். அந்த நேரத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியின் வேகத்தைத் தணித்து, ஒவ்வாமையைப் போக்கவும் ஸ்டீராய்டு மருந்துகள் நிச்சயம் தேவை. சரும நோய்களுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. இப்படி ஸ்டீராய்டின் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
    பொதுவாக, ஸ்டீராய்டு மாத்திரைகளைக் குறைந்த அளவில், குறைந்த நாள்களுக்கு எடுத்துக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படுவதில்லை.

    இவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு எடை அதிகரிக்கும், நோய்த்தொற்று எளிதில் ஏற்படும், முகத்தில் வீக்கம் ஏற்படும், எளிதில் எலும்பு முறிவு ஏற்படும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளும் எல்லோருக்குமே இந்த பாதிப்புகள் ஏற்படும் என்பதில்லை. வாய்வழி உட்கொள்ளப்படும், மாத்திரைகளால்தான் அதிகமான பக்கவிளைவுகள் ஏற்படும். அதே நேரத்தில், அந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான மாத்திரைகளும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒருவர் உட்கொள்ளக்கூடிய ஸ்டீராய்டு மருந்துகளால் எலும்புகள் பலவீனமடையும் என்று தெரிந்தால், அந்த மருந்துகளுடன் கால்சியம் மாத்திரைகளும் வழங்கப்படும்.

    எப்போது ஆபத்து?
    சிலர் தங்களுடைய உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதுதான் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது. நோய்களின் பாதிப்புக்கு ஏற்ப ஸ்டீராய்டு மருந்துகளை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாள்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதை மருத்துவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். எனவே, எந்த ஓர் அவசரமாக இருந்தாலும், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இவ்வகை மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
    அதேபோல, விளையாட்டுத்துறையில் ஸ்டீராய்டு மருந்தை உடல் கட்டமைப்புக்காகவும், ஊக்க மருந்தாகவும் சிலர் தவறாகப் பயன்படுத்திவிடுகிறார்கள். ஆனால், இது சட்ட விரோதமானது. அதோடு, உயிருக்கு ஆபத்தானதும்கூட என்பதை நினைவில்கொள்ள வேண்டும். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, ஹார்மோன் கோளாறு, மன அழுத்தம் உண்டாவது போன்ற பல பிரச்னைகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளையும் நாமே விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடும்’’ என்றும் எச்சரிக்கிறார் மருத்துவர் விஜய் சக்கரவர்த்தி.


  9. #2629
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    Baby born with heart outside body survives surgery


    Highlights

    • Surgeons at children’s heart centre in Leicester, initially believed Vanellope would be impossible to save.
    • Surgeon’s recommended a termination to her parents as the chances of survival were so low, less than 10%, but Vanellope’s mother, Naomi Findlay, said “this wasn’t an option” for her.






  10. #2630
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    Re: Health Bulletin

    Exposure to terror may increase risk of migraine: Study

    Survivors of a terror attack may be at an increased risk of frequent migraine and other types of headaches, a study has found.

    The research, published in the journal American Academy of Neurology, involved the teenage survivors of Norway's largest mass killing in 2011.

    "A single highly stressful event may lead to ongoing suffering with frequent migraines and other headaches, which can be disabling when they keep people from their work or school activities," said Synne Stensland, from the University of Oslo in Norway.

    The 358 teenage survivors were invited to participate in the study. Of the 213 who participated, six per cent were severely injured in the attack.

    The participants were interviewed about their headache frequency four to five months after the attack.

    Their responses about headache type and frequency were compared to the responses of 1,704 young people of same sex and age who had not experienced terror.

    The teens who had been exposed to terror were four times more likely to have migraines and three times more likely to have frequent tension headaches than the teens who were not exposed to terror.

    These findings remained the same after adjusting for injury, sex, prior exposure to physical or sexual violence, and psychological distress.

    Among the female participants, 80 of the 109 who were exposed to terror had recurrent headaches, compared to 325 of the 872 who were not exposed.

    For male participants, 43 of the 104 terror survivors had headaches compared to 158 of the 832 with no exposure.

    The terror survivors were much more likely to have daily or weekly headaches than those with no exposure.

    "We suspected that headaches would increase for terror survivors, and the increase was over and above what might be expected based on psychological distress and other risk factors," said Stensland.

    "This suggests that we may need to figure out ways to help people right after events like terror attacks to help reduce the potential of frequent and disabling headaches," Stensland added.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter