Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree49Likes

Summer Health Tips in Tamil


Discussions on "Summer Health Tips in Tamil" in "Health" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Summer Health Tips in Tamil

    Here are some Summer Health Care Tips in Tamil...

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    உஸ்! அப்பா என்ன வெயில் என எல்லோருமே கூறும் அளவு, சுட்டெரிக்கும் கத்தரி வெயில் தொடங்கி விட்டது. இந்த வெயிலில் உங்கள் உடல் நலனை சீராக வைத்திருக்க, என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்வோமா?


    ஒவ்வொரு சீஸனுக்கும் ஏற்ற வகையில் நமக்கு பழங்கள் கிடைக்கின்றன. பழங்களும் பச்சைக்காய்கறிகளும் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். இவற்றிலுள்ள மினரல்களும் விட்டமின்களும் நமது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும், அதுமட்டுமல்ல இதில் உள்ள நீர்ச் சத்தும் உடலுக்கு குளுமையை அளிக்கும். இவை நமது உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற உதவும்.


    நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.


    இந்த சம்மருக்கு முக்கியமான தாரகமந்திரம் குறைவாக சாப்பிட்டு நிறைவாக வாழுங்கள். சரி பழம், பச்சைக்காய்கறி சாப்பிட வேண்டும் என்று பார்த்தோம் , எந்த பழம், காய் என்று பார்ப்போமா?


    பழங்களில் பெரிக்கள் - ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, கூஸ்பெரி, ராஸ்ப்பெரி, பப்பாளி, மாம்பழம், கீர்ணிப்பழம், தர்பூசணி, ஆப்பிள், செர்ரி, காய்கறிகளில் பாகற்காய், கோஸ், காலிப்ளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.


    ஆல்கஹால் உள்ள பானங்கள், சாப்ட் டிரிங்ஸ் குடிப்பதை தவிருங்கள், ப்ரெஷ் ஜூஸ் குடிக்கத் தொடங்குங்கள். மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதை தவிருங்கள். அவ்வாறு குடிப்பது அந்த நேரத்திற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கெடுதலையே விளைவிக்கும்.


    லெமன் ஜூஸ், இளநீர் குடியுங்கள். "மோர் பெருக்கி நெய்யுருக்கி" என்பார்கள், நீர்த்த மோர் குடியுங்கள். சர்க்கரை அதிகம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். வடை, அப்பளம், சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பண்டங்களையும் தவிருங்கள். சூடான, மசாலா உணவுப்பதார்த்தங்களை அறவே தவிருங்கள். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.


    Last edited by Nishahameetha; 15th May 2013 at 11:39 AM.

  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    1. கோடைக் காலம் பிறந்து விட்டாலே, வியர்வைக்கும், வேர்க்குருவிற்கும் பஞ்சமிருக்காது. அதுமட்டுமா நாம் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள குளிர்பானங்களை நோக்கி ஓடிக் கொண்டிருப்போம். அதன் மூலம் தேவையற்ற நோய்களையும் வரவழைத்துக் கொள்வோம்.


    2. கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே அதிகமாக வெயிலில் அலைவதைத் தவிர்த்து விடுவது நல்லது.


    3. மேலும், குளிர் பானங்களுக்கு பதிலாக வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சாப்பிடலாம். இது சரும நலனுக்கு மிகவும் நல்லது.


    4. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் ஏற்படும் எத்தனையோ பிரச்சினைகளை தடுக்கலாம்.


    5.
    உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த சருமம் அதிகப்படியான வியர்வையை சுரக்கிறது. எனவே உடலுக்குத் தேவையான நீரை அடிக்கடி பருகுவதும் நல்லது.


    Last edited by Nishahameetha; 15th May 2013 at 11:38 AM.

  4. #4
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    1. கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேனீர் போன்றவற்றை அதிகம் குடிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக பழச்சாறுகள், நீர் மோர் போன்றவற்றை குடிக்கலாம். இதனால், உடலுக்கு நன்மை.


    2. அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரிக்காய், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.


    3. குழந்தைகளுக்கு அதிகளவில் பழங்கள் சாப்பிட கொடுக்க வேண்டும்.


    4. கோடை காலத்தில் அதிகளவில் எண்ணெய் பதார்த்தங்கள், புளி, காரம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.


    5. சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதை விட, ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிடலாம்.


    6. கோடை காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும். எனவே, வெயில் காலத்தில் பாலிஸ்டர் போன்ற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது.


    7. வாரா வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்; வாரத்திற்கு இரண்டு நாட்கள் குளித்தாலும் மிகவும் நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தணிந்து, குளிர்ச்சி ஏற்படும்.


    8. கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குளிப்பதன் மூலம், வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம்.


    9. அதிகமாக வியர்வை துர்நாற்றம் ஏற்படுபவர்கள், குளிக்கும் நீரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் சிறிது சந்தன எண்ணெய் ஆகியவற்றை கலந்து குளிக்கலாம். இதனால், வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.


    10. கோடை காலத்தில், அதிகமாக வேர்க்குரு பிரச்னை உடையவர்கள்; சாதம் வடித்த கஞ்சி ஆறிய பின், உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.



  5. #5
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    1. பழச்சாறு, இளநீர், மோர் போன்றவற்றை அதிகமாக குடிக்கலாம்.


    2. குளிர்ச்சியான பொருள் தானே என நினைத்து ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிக்க வேண்டாம். சில நேரங்களில் இவை சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும்.


    3. காரம், புளி, மசாலா பொருட்களை குறைத்து கொள்ளவும்.


    4. தினசரி காலை, மாலை இரு வேளையும் குளிக்கவும். அடிக்கடி முகம் கழுவவும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் வெப்பம் தணியும்.


    5. மென்மையான, மெல்லிய ஆடைகளையே அணியவும்.


    6. முகப்பூச்சு, கிரீம் போன்றவற்றை தவிர்க்கவும். அவசியம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி முகத்துக்கும், வெப்பத்துக்கும் ஏற்ற முகப்பூச்சை குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.



  6. #6
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    கோடைக்கேற்ற எலுமிச்சை வைத்தியம்!

    கோடைக்கு ஏற்ற பானமா? எடு எலுமிச்சை பழத்தை என்று தேடுவர். காரணம், அதிலுள்ள மருத்துவ குணங்கள் உடல் உஷ்ண வியாதிகளை தடுப்பதால் தான். "சிட்ரஸ் ஆசிடா' என்ற தாவரப் பெயரை கொண்ட எலுமிச்சையின் தாயகம் இந்தியாதான்.


    இந்தியா முழுவதும் இது தோட்டப் பயிராக உள்ளது. மற்ற பழங்களைக் காட்டிலும் இதில் அதிகளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. வைட்டமின் "சி' யும் உள்ளது. இவை தான் உடல் உஷ்ணத்தை குறைத்து பல வியாதிகளை வரவிடாமல் செய்கிறது.


    1. வெல்லம் கரைத்த நீரில் சுக்கைத் தட்டிப் போட்டு, எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அருந்துவது கோடை வெயிலுக்கு மிகவும் நல்லது.


    2. வெட்டி வேரை நீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து, தர்ப்பூசணி பழத்தைத் துண்டாக நறுக்கிப் போட்டு, ஒரு முழு எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாற்றைக் கலந்து அருந்தினால், கோடையின் எரிமலை உஷ்ணமும், பனிமலையாகும்.


    3. எட்டு அவுன்ஸ் நீரில் ஒரு முழு எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அருந்துவதால், கோடையில் நோய் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் சிறந்த தாகம் தணிக்கும் பானமாக உதவுகிறது. கோடையில் நீரிழிவு நோய்களின் தாகம் தீர்க்க இதை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. பித்த வியாதி உள்ளவர்கள் நிறைய எலுமிச்சம் பழசாறு அருந்துவது நல்லது.


    4. கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டினால் வரும் வியாதிகளில் காலராவும் ஒன்று. எலுமிச்சை பழசாறு ஒரு சிறந்த காலரா தடுப்பு மருந்து. எலுமிச்சை பழச்சாறைப் பானகமாகத் தயாரித்துச் சாப்பிட்டு வந்தால், காலரா நோய் வராது.


    5. எலுமிச்சை பழச்சாற்றில் நல்லெண்ணை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால், கோடையில் ஏற்படும் நீர் கடுப்பு நீங்கி விடும்.


    6. கோடையில் உடலின் வெப்பம் அதிகரிப்பதால், அதிகம் வேர்க்கும். அதிக வேர்வையில் கிருமிகள் வளர்வதால், வேர்வை நாற்றம் மற்றும் தோல் அரிப்பு ஏற்படும், வேர்க்குரு தோன்றும், இவற்றை தவிர்க்க, எலுமிச்சை சாறுடன், சோற்றுக் கற்றாழை எண்ணெய்யை கலந்து தோலில் பூசினால், நல்ல பலன் கிடைக்கும். குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் உடல் குளிர்ச்சி ஆவதுடன், தோல் நோயும் ஏற்படாது.


    7. கோடை வெயிலில் புற ஊதாக் கதிர்கள் அதிகம் இருப்பதால், வெயிலில் பலருக்கு தோல் கறுத்துப் போய் விடும். இதை அந்த இடங்களில் எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர் கலந்து தேய்க்க நிறம் மாறும். வெயில் காலத்தில் சிலருக்கு தொண்டை புண் வரும். இதற்கு எலுமிச்சை சாறு கலந்த நீரை தொண்டையில் நனையும்படி செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.


    எலுமிச்சை சாறு அடிக்கடி எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனால் கெடுதல் இல்லை. இதிலுள்ள வைட்டமின் சி டிப்திரியா, டைபாய்டு கிருமிகளை கொல்கிறது. தற்காப்பு சக்தி அளிக்கிறது, வாத நோய்களை தவிர்க்கிறது, பல் சம்பந்தமான நோய்களை தவிர்க்கிறது. பல் ஈரலை கெட்டிப் படுத்துகிறது. இன்புளுயன்ஸா, நிமோனியா போன்றவைகளை தடுக்கிறது.


    எலுமிச்சையிலுள்ள சிட்ரிக் அமிலம் ஒரு சிறந்த ரத்த சுத்திகரிப்பாக விளங்குகிறது. இதனால் ரத்த அழுத்தம் சமன் செய்யும் பணியை எலுமிச்சை செய்கிறது. ரத்த கசிவுகளை தடுத்து, ரத்த குழாய்களை பலப்படுத்துகிறது. நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை, சிறு நீரகம் போன்ற இடங்களில் ஏற்படும் ரத்த கசிவை எலுமிச்சை சாறு தடுக்கும், இதிலுள்ள வைட்டமின் 'பி' உடல் நச்சுகளை வெளியேற்றும், சிறுநீர் அடைப்பை சரி செய்யும்.


    Last edited by Nishahameetha; 15th May 2013 at 11:53 AM.

  7. #7
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    சாலையில் இறங்கி நடந்தாலே தகிக்கிறது வெயில். வெப்பத்தின் தாக்கத்தினால் உடம்பில் வியர்வை ஊற்றெடுக்கிறது. அதோடு மட்டுமல்லாது கோடை கால நோய்களாக தலைவலி, வயிற்று வலி, வாய்புண், தோல் வெடிப்புகள், வேர்க்குரு என வரிசைக்கட்டி நிற்கும். கோடையை சமாளிக்க நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள் அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.


    நீர்ச்சத்து அவசியம்

    கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது. பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. குழந்தைகளுக்கு தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை வாங்கித்தரக் கூடாது. அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது. உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன்,பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


    வெள்ளரிக்காய்
    கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன. வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம். இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன. கோடையை சமாளிக்கவும், உடலை பாதுகாக்கவும் இளநீர் ஏற்ற பானம்.


    வெட்டி வேர் பானம்
    கோடைக்கு குளிர்ச்சித்தருவது வெட்டி வேர். புல் வகையைச் சேர்ந்த வெட்டி வேர் மிகுந்த மணம் கொண்டது. இது வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டி வேருடன் சந்தனக் கட்டையை சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து அந்தண்ணீரை அருந்துவது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும், வியர்க்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்தும். வெட்டி வேர் விசிறியை நீரில் நனைத்து விசிறிக்கொள்ள குளிர்ச்சியாக இருக்கும். கோடை காலத்திற்கு ஏற்றது. கோடைக்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கப் போகும்முன் ஒன்று இரண்டு பழம் சாப்பிட்டு படுக்கலாம். இதனால் மலைச்சிக்கல் தீரும். ஆஸ்துமா, நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. சாத்துக்குடி சாப்பிடுவது தாகத்தை தணிக்கும்; வீரியத்தைக்கூட்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலும் சாத்துக்குடிக்கு உள்ளது என்பதால் கோடையில் தினமும் ஒரு சாத்துக்குடியாவது சாப்பிடுவது நல்லது.


    பொரித்த உணவு தவிர்க்கவும்
    கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்.




  8. #8
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு முதல் பங்கு
    தண்ணர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் ஈரப்பதம் எளிதில் ஆவியாவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெப்பம் ஈரப்பதத்தின் மூலமாக வெளியாகி உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. உங்களுக்கு தாகம் எடுக்கும் போது தான் தண்ணீர் பருக வேண்டும் என்று நினைப்பது முட்டால் தனம். அவ்வப்போது ஹைட்ரேட் நிறைந்ந தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய செயல் பாடுகள் நீங்கள் பருகும் தண்ணீர் மூலம் தான் அதிகரிக்கும். தண்ணீர் பருகாமல் இருந்தால் அது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் ஆதலால் தண்ணீரை அதிக அளவு எடுத்ததுக்கொள்ள வேண்டும்.


    கார்பனேற்றப்பட்ட பானங்கனைத் தவிர்க்கவும்
    கார்பனேற்றப்பட்ட பானங்கள், மது பானங்கள் போன்றவை கெட்டுப்போகாமல் இருக்கும் விதமாக வண்ணங்கள் மற்றும் சர்க்கரைகளை சேர்க்கின்றனர். அதனை பருகுவதன் மூலம் அமிலத்தன்மை நீர்ப்பெருக்கியாக செயல்பட்டு சீறுநீர் மூலமாக இழப்பபை ஏற்படுத்தும். மிகுந்த குளிர்பானங்கள் செரிமானத்தை ஏற்படுத்தும் விதமாக நீர்த்த போஸ்பாரிக் என்ற அமிலத்தை கொண்டிருக்கிறது.


    அதிகளவில் குளிர்பானங்கள் பருகும் போது இரத்தத்தில் பொசுபரசு அளவை அதிகரிக்கிறது. அதனால் பிரிக்கும் தன்மையுடைய கால்சியம் இரத்தத்திற்கு நகர்கிறது. ந்து விளைவை ஏற்படுத்தும். எலும்புகள் மற்றும் கால்சியம் இடப்பெயர்ச்சி நுண்துகள்களுடைய சிதைவு ஏற்படுகிறது. இதனால் பற்கள், சிறுநீரக கற்கள், கீல்வாதம் மற்றும் எலும்பு துருத்த மீது பிளேக் நோயை ஏற்படுகிறது. குளிர்பானங்களினால் என்சைம்கள் அஜீரணமாக்கப்பட்டு அதன் விளைவாக, உடல் இயங்க முடியாமல் தாது அளவு குறைகிறது..


    நல்ல குளிரூட்டப்பட்ட திரவத்தை குடிக்காதீர்கள்
    கோடைகாலத்தில் அனைவரும் குளிரிச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள். அக்காலத்தில் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும்.


    சத்தான கொழுப்பு அல்லாத உணவுகளை சாப்பிடுங்கள்
    ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உட்கொள்ளுதலை குறைத்தல் . அதாவது பசலை கீரை, முள்ளங்கி, சூடான மிளகுத்தூள், வெங்காயம், பூண்டு, பீட்ரூட், அன்னாசி, கிரேப்ப்ரூட் மற்றும் கனியும் மாம்பழம், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளுதலை குறைத்தல் வேண்டும். மாம்பழம் சாப்பிடவேண்டும் என்று தோன்றும் போது மாம்பழச்சாறு சாப்பிட்டுக் கொள்ளலாம்.


    உலர்ந்த பழங்கள் உட்கொள்வது குறைத்து. புதிய பழங்கள் உட்கொள்வதை அதிகரிக்கலாம். குளிர்பானத்தில் துளசி விதைகள் போட்டு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உண்ணும் உணவில், சர்க்கரை இல்லாமல், சாலடுகள் மற்றும் புதிய சாறுகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் மற்றும் மெல்லிய மோர் குடிப்பதன் மூலம் வியர்வையை தவிர்க்க முடியும்.



  9. #9
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    1. கோடையை சமாளிக்க தினமும் 3 லிட். தண்ணீர் குடிக்க வேண்டும்.


    2.
    நொறுக்கு
    தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம்.


    3.
    பகல்
    நேரங்களில் இளநீர், மோர் குடிக்கலாம்.


    4.
    ஐஸ்கிரீம்
    , குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.


    5.
    பொரித்த
    உணவுகளை சாப்பிட வேண்டாம்.


    6. தண்ணீர் என்றில்லை சூப், ஜூஸ், மோர் என்று கூட எடுத்துகொள்ளலாம்.


    7.
    உடல்
    சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.


    8.
    வாரம்
    இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.


    9.
    வெயிலில்
    போகுமுன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள், கிளம்பும் நேரம் தடவி சென்றால் அது பயனளிக்காது. இது ஸ்கின் டாக்டர் சொன்னது.


    10. கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள்.



    Last edited by Nishahameetha; 15th May 2013 at 12:03 PM.

  10. #10
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Summer Health Tips in Tamil

    Good Start dear... Naanum enaku kidaikara therincha tips share panren da...

    Nishahameetha likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter