Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 4 Post By tnkesaven
  • 1 Post By Mary Daisy
  • 1 Post By Amirporkodi

Curd - தயிர்


Discussions on "Curd - தயிர்" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Curd - தயிர்

    தயிரின் மேல் நிற்கும்
    ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட
    உடல் புஷ்டியைத் தரும்.

    உறை ஊற்றிய பின் சில சமயம் நன்கு உறையாமல் இருக்கும். (அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும்.) அது வயிற்றில் வேகமாகத் புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகிவற்றிற்கு வழி வகுக்கும்.

    மண் சட்டியிலிருந்து புரை குத்திய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது கெட்டியாகவும் இருக்கும்.

    ஒருபோதும் தயிரை சுட வைத்துச் சாப்பிடக்கூடாது.

    சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து, கடுகு தாளித்து உப்புச் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.
    இது உடலுக்கு ஏற்றதல்ல.

    உடலைப் புஷ்டிப்படுத்த விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.

    தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம். அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை கால் கிளாஸ் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி ஆகியவற்றை விரட்டும்.

    தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பதுதான் ஸ்ரீகண்ட். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

    பசியில்லாதவர்கள் புளிப்பு தலை காட்டத் தொடங்கிய தயிரைச் சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.

    நன்றாக புளித்த தயிர் ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

    இரவில் குளிர்ச்சியான தன்மையில் தயிரை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஜீரணக் குறைவு ஏற்படும்.
    அதனால்தான் தயிரை இரவில் உண்ணக்கூடாது என்கிறார்கள்.

    இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்த சோகை, காமாலை, தோல் நோய்,ரத்தக் கொதிப்பு போன்றவை உண்டாகும்.

    இரவில் தயிர் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் வந்தால் அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.

    courtesy; jaayiru kondaattam/dinamani kadhir



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    re: Curd - தயிர்

    thanks for sharing info about curd.....

    tnkesaven likes this.

  3. #3
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Curd - தயிர்

    healthy information about curd

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter