Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 5 Post By tnkesaven
  • 2 Post By priyasarangapan
  • 2 Post By jeyanthi raj
  • 1 Post By sumitra

Beauty Tips - அழகே வா... அருகே வா!


Discussions on "Beauty Tips - அழகே வா... அருகே வா!" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Beauty Tips - அழகே வா... அருகே வா!

    ஹேர் வாஷ்
    கூந்தலை சுத்தப்படுத்த மூன்று வழிகள் உண்டு. செம்பருத்தி இலையை மைய அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். அல்லது வெண்டைக்காய் வாங்கும்போது அதில் இலை இருந்தால், அந்த வெண்டை இலையையும் அரைத்துப் பூசி குளிக்கலாம். இது இரண்டும் இல்லாமல் மூன்றாவது வழி, பாசிப்பயறை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி சுத்தமாகும். மென்மையாகப் பட்டுப்போல இருக்கும்.
    பொடுகு, பேன் தொல்லை
    . கசகசாவை பதமாக அரைத்து, அதனுடன் தயிரை கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளித்தால் இந்தத் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும்.

    வெள்ளை மிளகை அரைத்து, அதனுடன் பாலைச் சேர்த்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகு, பேனை விரட்ட முடியும்.

    இளநரை, முடி உதிர்தல் - உடைதல், அடர்த்தியான வளர்ச்சி
    இந்த எல்லா பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு காண ஒரு எண்ணெயைத் தயாரிக்கலாம்.
    தேவையானவை: கறிவேப்பிலை, மருதாணி, பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, செம்பருத்தி, நெல்லிக்காய், கடுக்காய்த்தூள், சந்தனத்தூள், தேங்காய் எண்ணெய்.
    செய்முறை: இந்தக் கீரைகளையும், நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தியையும் அரைத்து சாறு எடுத்து, அதில் கடுக்காய், சந்தனப் பொடியைப் போட்டு கலக்க வேண்டும். தேங்காய் எண்ணெயைப் பாத்திரத்தில் இட்டு சூடுபடுத்த வேண்டும். இளம் பதமாக சூடானதும், அரைத்தக் கலவையை சேர்த்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இது மெழுகு பதமானதும், இறக்கி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம், குளித்து முடித்த பிறகும்கூட தலைக்குத் தேய்க்கலாம். தினமும் இப்படி செய்து வந்தால், முடி உதிர்வதைத் தடுக்க முடியும். முடியின் வேர்கள் உறுதியாகும். கூந்தலும் அடர்த்தியாக கருகருவென வளரும். இளநரை இருக்கிறவர்களுக்கு நாளடைவில் அது காணாமல் போய்விடும்.
    ஹேர் டை
    வீட்டுத் தோட்டத்தில் இருக்கிற மருதாணி இலையைப் பறித்து, அரைத்து அதில் யூக்கலிப்டஸ் தைலத்தைக் கலந்து தலைக்குப் பூசினால் போதும். ரசாயன ஹேர் டைக்கு டாட்டா சொல்லி விடுவீர்கள். யூக்கலிப்டஸ் தைலம் சேர்ப்பதால் மருதாணி குளிர்ச்சி தரும் என்ற கவலையும் தேவை இல்லை.
    பட்டுப் பாதத்துக்கு மருதாணி!
    . பித்தம் அதிகமாவதால் குதிகால் வெடிப்பு, பாதத்தில் வலி, குடைச்சல் ஏற்படும். தோல் வெடிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தோல் உரிந்துவரும். தோல் உரிவதால் வலி உண்டாகும்.

    இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு

    மல்லி விதை (தனியா), சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அந்தப் பொடியை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு தளதளவென கொதிக்கவைத்து இறக்கவும். கொஞ்சம் வெதுவெதுப்பாக ஆறியதும், அந்தத் தண்ணீரை தாம்பாளத்தில் ஊற்றி, 10 நிமிடம் பாதத்தை அதில் வைக்கவேண்டும். அல்லது மல்லி, சீரகப்பொடியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டுவர, நாளடைவில் பாத வெடிப்பு காணாமல் போய்விடும். கால் ஆணியும் வராது. நகமும் நன்கு வளரும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
    அதேபோல சிலருக்கு கால் நகங்கள் சொத்தையாக இருக்கும். நக வெடிப்பு இருக்கும். கிருமித்தொற்று இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் கால்சியம் குறைபாடுதான். இதை உணவுமுறையிலேயே எளிதில் குணப்படுத்த முடியும். வாரம் இரண்டு நாள் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கால்சியம் சத்துகளைப் பெறமுடியும். முருங்கை, பொன்னாங்கன்னி, அரைக்கீரை, தண்டுக்கீரைகளில் கால்சியம் அதிகம் இருக்கிறது.
    நகக் கண்களை சுத்தமாக வைத்துக்கொள்வதும் சுலபம்தான். ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள், ஒரு கைப்பிடி குப்பைமேனி மற்றும் புதினாவை வெந்நீரில் கொதிக்கவைத்து இறக்கவும். கொதிநீர் வெதுவெதுப்பானதும் அதில் நகக் கண்கள் படுமாறு கால்களை வைக்கவேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்துவந்தால் அழுக்குகள் நீங்கும், கிருமித் தொல்லை இருக்காது. சொத்தை வராது, நக வெடிப்புகள் மறைந்துபோகும். தோல் பளபளக்கும். சோரியாஸிஸ், சேற்றுப்புண் இருந்தாலும் குணமாகும்; வராமலும் தடுக்கமுடியும்.
    . பாதத்தைச் சுற்றி மருதாணி வைப்பதால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். நகக்கண்களில் வைத்தால் நகச்சொத்தையும் வராது. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பாதத்தில் வெடிப்பு இருந்தால் ஆண்களும் மருதாணி வைக்கலாம்.

    nandri;'the hindu-tamil''

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: Beauty Tips - அழகே வா... அருகே வா!

    Thanks for useful information.....

    tnkesaven and sumitra like this.
    With Love,
    Priya

  3. #3
    jeyanthi raj's Avatar
    jeyanthi raj is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    105

    re: Beauty Tips - அழகே வா... அருகே வா!

    thanks for sharing this useful info

    tnkesaven and sumitra like this.

  4. #4
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Beauty Tips - அழகே வா... அருகே வா!

    Thank you Sir for sharing such an interesting information about caring the hair.

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter