Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree14Likes

How to Protect Human Brain?? - மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??


Discussions on "How to Protect Human Brain?? - மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??" in "Health" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    How to Protect Human Brain?? - மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா?
    ஆம், பத்தாயிரம் கோடி! இவ்வளவு செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், செல்களைக் கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்குச் செல்வதற்கும் இது தான் காரணம்.


    கொல்லாதீர்கள்
    ஆம், உங்கள் மூளையில் உள்ள செல்களைக் கொல்லாதீர்கள். என்னது, நமக்கு நாமே மூளை செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலைமுறையினரிடம் காணப்படுகிறது.
    எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் பேலன்ஸ் ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், டென்ஷன் என்றே சொல்லிக் கொண்டிருப்பர். சரியாகத் தூங்கமாட்டார்கள்; சாப்பிட மாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை செல்களை கொல்கின்றனர். அதாவது, செல்கள் செயலிழந்துபோகின்றன.


    தூக்கம் அவசியம்
    மூளை செல்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேரத் தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் டாக்டர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.


    மன அழுத்தம் நோ
    தூக்கம் வராமல் இருக்கக் காரணம், பலருக்கும் உள்ள டென்ஷன் தான். மன அழுத்தம் பல வகையில் இவர்களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு, தேவையில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது.டென்ஷன் பேர்வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை செல்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், டென்ஷன் என்று இனி சொல்லாதீர்கள்; மனதை சமப்படுத்துங்கள்.


    மதுவா?போ போ
    மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதைத் தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்குப் பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. ஆல்கஹால் செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை செல்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் டாக்டர்கள்.


    எக்சோடாக்சின்
    பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கொழுப்புச் சத்துள்ள ஜங்க் புட் வகை உணவுகளில் எக்சோடாக்சின் என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு ஜங்க் புட் தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை செல்கள் அதிகமாக குறைவதே.


    சீப்பான அயிட்டங்கள்
    அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சிப்ஸ் போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதைத் தவிர்ப்பது நல்லது; ருசிக்குச் சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.


    தண்ணீர் குடியுங்கள்
    தண்ணீர் தாராளமாகக் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது. உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்குக் காரணம் மூளை தான்; மூளை செல்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.


    தரை சுத்தமாக
    இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை ஸ்ப்ரே செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை செல்கள் குறைய வாய்ப்பு அதிகம். இது போலத்தான் பெயின்ட் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.


    காய்கறி, பழங்கள்
    இந்த மூளை செல்கள் பாதிப்பை தவிர்க்க, சிம்பிள் வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.
    பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    Useful sharing Thenu madam....

    thenuraj likes this.
    With Love,
    Priya

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    மிகவும் உபயோகமான பகிர்வு தேனு .

    thenuraj likes this.
    Jayanthy



  4. #4
    bhuv is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    villupuram
    Posts
    312

    Re: மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    very useful tips thenu thanks

    thenuraj likes this.

  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    Quote Originally Posted by priyasarangapan View Post
    Useful sharing Thenu madam....

    Thanks Priya....
    (athu enna puthusa "Madam" sernthu irukku....why...??)



  6. #6
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    Quote Originally Posted by jv_66 View Post
    மிகவும் உபயோகமான பகிர்வு தேனு .

    நன்றி அக்கா...


  7. #7
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

  8. #8
    sujathapratheep's Avatar
    sujathapratheep is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    tirchy
    Posts
    154

    Re: மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    useful information sir. thank you

    thenuraj likes this.

  9. #9
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,391

    Re: How to Protect Human Brain?? - மனித மூளையை பாதுகாப்பது எப்படி....??

    Thanks for the Info Honey Useful Sharing!!

    thenuraj likes this.

  10. #10
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter