Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By shrimathivenkat

ரத்தத்தின் சுத்த பத்தம்!


Discussions on "ரத்தத்தின் சுத்த பத்தம்!" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,449

    ரத்தத்தின் சுத்த பத்தம்!

    ரத்தத்தின் சுத்த பத்தம்!
    நமது உடலில் ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்று பொருமல், சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதனால், உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

    பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும்
    . செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் வெட்டை சூடு தணிந்து ரத்தம் விருத்தியாகும்.
    முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதில் ஒரு கோழி முட்டையை உடைத்துபோட்டு கிளறி, அத்துடன் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.

    அதே போல, நாவல் பழத்தை தினமும் சாப்பிடுவதும் பலன் தரும்.

    இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தப்படுத்தப்படும்.

    தக்காளிப் பழம் சாப்பிடுவதும் நல்ல பலன்தரும்.
    ஆனால், வாத நோய் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

    இலந்தைப் பழம் சாப்பிடுவது ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். அது பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

    இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் ரத்தக்குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்து விடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.

    தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

    ரத்த அழுத்தத்தை முற்றிலுமாக போக்கவும் வழி உண்டு

    . கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை ஊற வைத்து குடித்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    அதே போல மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் சீராகும்.


    அகத்திக் கீரையை வாரத்தில் இரண்டு முறை சாப்பிடுவது ரத்தக் கொதிப்பை குணமாக்கும்.

    ரத்தக்கட்டு, சுளுக்கு ஆகியவற்றை சரி செய்ய மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து உரிய இடத்தில் பற்று போட்டால் போதும்.
    விளாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
    இதுபோல இயற்கையை நம்பினால், கோடி இன்பங்கள் வீடு வந்து சேரும்

    courtesy;''siruvar malar/dinamalar


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,449

    Re: ரத்தத்தின் சுத்த பத்தம்!

    அருமையான தகவல்கள் ,நன்றி சார்.

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter