Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By tnkesaven
  • 1 Post By shrimathivenkat
  • 1 Post By Mary Daisy

இயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும்


Discussions on "இயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும்" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    இயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும்

    இளநீரில் இருப்பவை


    சோடியம் குளோரைடு,பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்ட மின்கள் நிறைந்திருக்கின்றன.


    மருத்துவ குணம் எப்படி?


    தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச் சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங் கள் இல்லாமல் போகிறது.


    எப்படிச் சாப்பிடலாம்?


    இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு / மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, ஃபிரிட்ஜில் வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.


    இளநீருக்கு மாற்று குளிர்பானமா?


    குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் கார்பனேட்டட் வாட்டரும், காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள். ஆக இளநீர் இளமைக்கும் வலிமைக்கும் இதம்.
    Courtesy:""keetru

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: இயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும்

    நல்ல தகவல்,மேலும் இளநீர் மதியம் 2 மணிக்கு மேல் குடிக்க கூடாதாம்.அதை பற்றியும் சொல்லுங்களேன்.

    tnkesaven likes this.

  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: இயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும்

    useful info...

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter