Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree38Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "Health" forum.


  1. #41
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மணத்தக்காளி வற்றல் குழம்பு


    • மணத்தக்காளி வற்றல் - ஒரு கைப்பிடியளவு
    • புளி - சின்ன எலுமிச்சையளவு
    • மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
    • மல்லிப்பொடி - ஒரு தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    • சீரகம் சோம்பு தூள் - அரை மேசைக்கரண்டி
    • உப்பு - தேவையான அளவு
    • சின்ன வெங்காயம் - 10
    • பூண்டு - 1
    • தக்காளி - 2
    • நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
    • தாளிக்க:
    • கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
    • வெந்தயம் - அரை தேக்கரண்டி
    • பெருங்காயம் - கால் தேக்கரண்டி
    • வரமிளகாய் - 2
    • கறிவேப்பிலை - கைப்பிடியளவு


    • கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து மணத்தக்காளி வற்றலை போட்டு சிவந்தவுடன் உரித்த முழு வெங்காயம், பூண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
    • மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு போட்டு வதக்கி புளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
    • 2 வது முறையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.



    Sponsored Links
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  2. #42
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பாரம்பரியமான கம்பு உணவு

    கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.

    தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.

    கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

    வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும். கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும்.

    நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள்.

    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  3. #43
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கம்பு பொங்கல்

    என்னென்ன தேவை?

    கம்பு - 100 கிராம்,
    வெல்லம் - 200 கிராம், நெய் - 1 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை,
    முந்திரி, பாதாம் - சிறிதளவு.
    எப்படி செய்வது?

    கம்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி, தண்ணீரை வடித்து, மிக்சியில் ஒரு சுற்று ஓட விடவும். ரொம்பவும் நைசாக அரைக்கக் கூடாது. பிறகு அதில் 3 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்தெடுக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, பொங்கலில் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.

    * கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மணம் உண்டு என்பதால், வாசனைக்காக ஏலக்காய் கூடத் தேவையில்லை.
    * நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என எல்லாம் நிறைந்தது இது.


    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  4. #44
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கம்பு உப்புமா



    • கம்பு - ஒரு கப்
    • வெங்காயம் - ஒன்று
    • பச்சை மிளகாய் - 2
    • இஞ்சி - சிறுத் துண்டு
    • உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
    • நெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
    • உப்பு - தேவைக்கு ஏறப
    • கொத்தமல்லி - சிறிது



    வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கம்பை வடிகட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு அலசி எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    நீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.

    கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான கம்பு உப்புமா ரெடி.
    வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கம்பை வடிகட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு அலசி எடுக்கவும்.
    ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
    பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
    வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
    நீர் பாதியாக குறைந்ததும் வேக வைத்த கம்பு சேர்த்து கிளறவும்.
    கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சத்தான கம்பு உப்புமா ரெடி.






    Last edited by k.ayshwarya.198; 23rd Nov 2013 at 08:51 PM.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  5. #45
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வல்லாரையும் அதன் பயன்களும்

    வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும்.

    எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

    யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

    மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  6. #46
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வல்லாரை கீரை சாதம்

    • 1) ஆய்ந்த வல்லாரை கீரை - 1 கப்
    • 2) உதிரியாக வடித்த சாதம் - 3 கப் அளவு
    • 3) பெரிய வெங்காயம் - 1
    • 4) பச்சை மிளகாய் - 3
    • 5) இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    • 6) மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
    • 7) உப்பு - தேவைக்கேற்ப
    • 8) எண்ணெய் - தேவைக்கேற்ப
    • 9) கடுகு - 1/2 டீஸ்பூன்


    • கீரை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
    • வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
    • மேலும் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும்.
    • பின் உப்பு, மசாலாத்தூள், வதக்கிய வெங்காயத்தைப் போட்டுக் கிளறவும்.
    • இதனுடன் சாதத்தையும் சேர்த்து கலக்கவும்.
    • சுவையான சத்தான வல்லாரை கீரை சாதம் ரெடி.


    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  7. #47
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வல்லாரை துகையல் /சட்னி



    முதலில் துகையல் /சட்னி :- By:- Savithri Vasan
    ---------------------------------------
    அடுப்பில் வாணலி மிதமான சூட்டில்

    ஒரு முட்டை எண்ணை விட்டு ,

    பெருங்காயம் பொரித்து,

    உளுத்தம் பருப்பு போட்டு,

    சின்ன வெங்காயம்,

    துருவிய தேங்காய் ,போட்டு வதக்கி ,

    பிறகு கீரையையும் போட்டு வதக்கி

    இறக்கி வைக்கவும்.

    சூடு சற்று ஆறியதும் , முதலில் புளி, உப்பு
    பெருங்காயம் , வெத்த மிளகாய் ,தேங்காய் துருவல்
    உளுத்தம் பருப்பு போட்டு அரைக்கவும்

    பிறகு கீரையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

    தேவைபட்டால் வெல்லம் சேர்க்கவும்

    இப்பொழுது சுவையான துகையல் தயார் , என்ன சுவைப்போமா
    சுகம் பெறுவோமா


    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  8. #48
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வல்லாரை கூட்டு
    • வல்லாரைக்கீரை - 1 கட்டு
    • பாசிப்பருப்பு - கால் கப்
    • பச்சைமிளகாய் - 1
    • உப்பு - தேவையான அளவு
    • வறுத்து அரைக்க:
    • உளுத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி
    • மிளகாய் வற்றல் - 2
    • பெருங்காயம் - சிறிதளவு
    • துருவிய தேங்காய் - கால்கப்
    • தாளிக்க:
    • தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
    • கடுகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு
      • வல்லாரைக்கீரையை காம்பை நீக்கிவிட்டு இலையை மட்டும் ஆய்ந்து நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பு, 1 பச்சைமிளகாய் சேர்த்து குக்கரில் தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
      • பிறகு வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
      • பிறகு அதே வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
      • வல்லாரைக்கீரை கூட்டு ரெடி.



    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  9. #49
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    ஆரோக்கியப் பெட்டகம்: கொள்ளு


    கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும்.

    புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

    புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.

    கொள்ளின் பலன்கள்


    கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.

    ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது. அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன் குன்யா நோய் பாதித்த வர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.

    ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.

    சூட்டைக் கிளப்புமா?


    கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.

    எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?


    கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

    கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும் கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.



    janu23 likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  10. #50
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கொள்ளு உருண்டை குழம்பு


    தேவையானவை:
    கொள்ளு 1 கப்
    மிளகாய் வற்றல்5
    சின்ன வெங்காயம்5
    பெரிய வெங்காயம்2
    தக்காளி3
    புளி ஒருஎலுமிச்சை அளவு
    சாம்பார் பொடி1 மேசைக்கரண்டி
    உப்பு,எண்ணெய் தேவையானது
    கொள்ளு

    --------
    அரைக்க:
    தேங்காய் துருவல் 1/4 கப்
    தனியா 1 மேசைக்கரண்டி
    கடலைபருப்பு1 மேசைக்கரண்டி
    வெந்தயம்1/2தேக்கரண்டி
    --------
    தாளிக்க:
    கடுகு1 தேக்கரண்டி
    வெந்தயம்1/2தேக்கரண்டி
    கறிவேப்பிலைஒரு கொத்து
    -------
    செய்முறை:

    கொள்ளை வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
    ஊறவைத்த கொள்ளு,மிளகாய் வற்றல்.சின்ன வெங்காயம் சிறிது உப்பு எல்லாவற்றையும் நைசாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
    வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
    அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
    --------
    வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்
    பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் புளித்தண்ணீர்,தேவையான உப்பு,சாம்பார் பொடி.சிறிது தண்ணீர்,அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
    நன்கு கொதித்தவுடன் ஆவியில் வைத்த கொள்ளு உருண்டைகளை சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
    கொள்ளு உருண்டை குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.


    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter