Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree38Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "Health" forum.


  1. #51
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    கொள்ளு ரசம்

    என்னென்ன தேவை?

    கொள்ளு - 100 கிராம்,
    தக்காளி - 2,
    பொடித்த மிளகு,
    சீரகம் - தேவைக்கேற்ப,
    பூண்டு - 10 பல்,
    புளி - எலுமிச்சை அளவு,
    காய்ந்த மிளகாய் - 4,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது, எண்ணெய் - சிறிது.
    எப்படிச் செய்வது?

    முதல் நாள் கொள்ளை ஊற வைக்கவும். மறுநாள் அதில் இன்னும் சிறிது தண்ணீர் விட்டு வேக விட்டு, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி வைக்கவும். அதில் புளிக்கரைசல் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மிளகு, சீரகப் பொடி சேர்த்து, பூண்டு தட்டிப் போடவும். கொதி வரும் போது அடுப்பை அணைத்து, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மூடி வைத்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.



    Sponsored Links
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  2. #52
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை.

    தேவையான பொருள்கள்:
    கொள்ளு – 4 ஸ்பூன்
    பூண்டு – 5 பல்
    தக்காளி – 2
    மிளகு – 1 ஸ்பூன்
    சீரகம் – 1 ஸ்பூன்
    துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
    பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை – சிறிது
    கறிவேப்பிலை – சிறிது

    தாளிக்க
    நல்லெண்ணெய் – சிறிது
    கடுகு – சிறிது
    வரமிளகாய் – 2

    செய்முறை
    மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம். கொ*ள்ளு ரச*ம்,கொ*ள்ளு துவைய*ல்,கொ*ள்ளு குழ*ம்பு,கொள்ளு சூப் ஆ*கியவை வை*த்து அ*வ்வ*ப்போது உ*ண்டு வ*ந்தாலு*ம் உட*ல் எடை குறையு*ம்.சளி காணாமல் போகும்.

    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  3. #53
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    நீரின் குண நலன்கள்!


    நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்.....

    மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும். குளத்து நீர், வாதம், மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்கும். கிணற்று ஜலம் சரீரக் கடுப்பு, அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவை நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமுத்திர ஜலமானது பீலிகம், குன்மம், குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.

    குளிர்ந்த நீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல் முதலிய நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி நேத்திரப்பிணிகள் முதலியவைகளை குணமாக்கும். இது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம், அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு நல்லது. காய்ந்து ஆறிய நீரானது பித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம், சன்னிபாதம் முதலிய நோய்கட்குச் சிறந்தது.

    உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது.





    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  4. #54
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வெள்ளைப் பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்

    ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது.உடலுக்கு பூண்டு மிகவும் சிறறந்தது. அது உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை. உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது.

    உடம்பிலுள்ள சிறு கட்டிகள், முகப்பருக்கள், படை உள்ளிட்ட சரும நோய்களின் மீது பூண்டை அரைத்து தடவினால் நல்ல குணம் கிடைக்கும்.

    அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கு பூண்டு அருமருந்தாக உள்ளது. பூண்டை உணவு வகைகளுடன் உண்ணும்போது அது உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவு படுத்துவதுடன், அடைப்புகளையும் நீக்கி விடுகிறது. இதனால், சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது.

    உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தினந்தோறும் ஒன்று முதல் மூன்று பூண்டு பற்களை உண்டு வந்தால், இதயநோய் வருவதற்கே வாய்ப்பில்லை.

    மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை பூண்டு அகற்றி விடுவதால், எந்தவித நோயும் வராது.

    பொதுவாக, இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்போது மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, இதய நோயாளிகளுக்கு இரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதற்காக பூண்டை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே இரத்தத்தின் அடர்நிலை குறைந்து, சீரான இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. எனவே, பூண்டு உண்பதால் எவ்வித பக்க விளைவும் இல்லாமல் நோய்கள் குணமாகின்றன.

    காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம். பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.

    இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும். பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

    பூண்டில் பலவிதமான சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கல்சியம் சத்துத்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

    பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. பூச்சிக்கடி, உள்ள இடத்தில் வைத்து தேய்த்து விடலாம.
    பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.

    சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் விட்டுத் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள் சளி நீங்கும்.

    fatima15 likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  5. #55
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பூண்டு குழம்பு

    • முழு பூண்டு - 4
    • பழைய புளி, புது புளி இரண்டும் சேர்த்து - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
    • கறிவேப்பிலை - 2 கொத்து
    • தூள் வெல்லம் - ஒரு தேக்கரண்டி
    • மிளகு - ஒரு மேசைக்கரண்டி
    • சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
    • மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
    • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    • கல் உப்பு - ஒரு மேசைக்கரண்டி
    • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    • பூண்டினை தோலுரித்து வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
    • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு போட்டு வெடிக்கவிடவும்.
    • அதன் பின்னர் அதில் தோலுரித்த பூண்டு பற்களைப் போட்டு பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.
    • பூண்டு வதங்கியதும் மிளகுடன் சேர்த்து எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
    • ஊறிய புளியை கரைத்து இரண்டு கப் அளவிற்கு கரைசல் எடுத்துக்கொள்ளவும்.
    • அரைத்த பூண்டு மிளகு விழுது உள்ள பாத்திரத்தில், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
    • அதில் புளிகரைசலை ஊற்றி, கரைத்துக்கொள்ளவும்.
    • வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
    • அதில் புளி கரைசலை ஊற்றி, வாணலியை மூடி வைத்து கொதிக்க விடவும்.
    • குழம்பு கொதித்து கெட்டியாக ஆனதும் வெல்லத் தூளை போட்டு கிளறி விட்டு இறக்கிவிடவும்.
    • இப்போது சுவையான அரைத்து விட்ட பூண்டுக்குழம்பு தயார்.


    fatima15 and Bhavani Senthil like this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  6. #56
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பூண்டு ரசம்

    தேவையான பொருட்கள்

    பூண்டு 6 பல்

    புளி எலுமிச்சம்பழ அளவு

    மிளகு, சீரகம் 1 டீஸ்பூன்

    உப்பு தேவையான அளவு

    மஞ்சள் பொடி 2 சிட்டிகை

    கடுகு 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி, கறிவேப்பிலை
    கொஞ்சம

    செய்முறை

    புளியை 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.


    உப்பு, மஞ்சள் பொடி போடவும்.


    மிளகு, சீரகம், பூண்டு 4 பல், கறிவேப்பிலை,கொத்தமல்லி முதலியவைகளை நன்கு அரைத்துக் கொள்ளவும்.


    மீதமுள்ள 2 பல் பூண்டை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி தண்ணீரில் போடவும்.


    பூண்டு சேர்த்த புளி தண்ணீரில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


    நன்கு கொதித்தவுடன் இறக்கி, கடுகை தாளிக்கவும்.


    fatima15 and Bhavani Senthil like this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  7. #57
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    பூண்டு பால் கஞ்சி

    தேவையானவை:
    புழுங்கல் அரிசி - ஒரு கப்,
    பூண்டுப் பல் - 12,
    வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
    சுக்கு, சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு,
    திப்பிலி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,


    செய்முறை:
    அரிசியை நன்கு கழுவி குக்கரில் போடவும். ஒரு கப் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும். சுக்கு, சித்தரத்தை, திப்பிலியை ஒரு துணியில் கட்டி, குக்கரில் போடவும். கஞ்சி வெந்த பின்பு துணியை வெளியே எடுத்து விடவும். வெந்த கஞ்சியில் தேவைக்கேற்ப பால் சேர்த்துப் பரிமாறலாம்.


    மழைக்காலத்துக்கேற்ற ஆரோக்கியமான கஞ்சி இது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும்.


    fatima15 likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  8. #58
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்


    பூண்டு பால்
    நான் அண்மையில் அறிந்து கொண்ட தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கொலோஸ்ட்ரோல், வாயு தொல்லை போன்ற எல்லா நோய்களுக்கு மட்டுமல்ல உடல் எடை குறையவும் பூண்டு பால் கை கொடுக்கிறது என்பதை ஒரு மூலிகை வைத்தியர் சொல்ல கேட்டேன்.அதாவது பூண்டு ஒரு ஐந்து பல் எடுத்து அதனை கொஞ்சம் நீர் விட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் அதிலேயே ஒரு தம்ளர் பால் விட்டு காய்ச்சி அந்த பூண்டோடு குடித்து வர வேண்டும். அதாவது இரவு உணவுக்கு பின் உறங்கபோவதுக்கு முன் குடிக்க வேண்டும். நல்ல ரிசல்ட் கிடைத்து வருவதாக சொல்கிறார். நாமும் செய்து பார்க்கலாமே!லக்ஷ்மி
    எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
    நல்லதையே நினைப்போம்


    janu23 and fatima15 like this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  9. #59
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Hi Ayshwarya super. thanks for recipes. thanks for sharing.


  10. #60
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Quote Originally Posted by fatima15 View Post
    Hi Ayshwarya super. thanks for recipes. thanks for sharing.
    thanks fatima.

    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter