Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree38Likes

Medical Notes - மருத்துவ குறிப்புகள்


Discussions on "Medical Notes - மருத்துவ குறிப்புகள்" in "Health" forum.


  1. #61
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வாழைத் தண்டு, வாழைப் பூ மருத்துவ பண்புகள்




    வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும்.

    நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை ஒன்று இரண்டு அல்லது அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும்.

    கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

    அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

    அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும்



    Sponsored Links
    janu23 likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  2. #62
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வாழைப்பூ வடை



    • வாழைப்பூ - 150 கிராம்
    • பொட்டுக்கடலை - 6 மேசைக்கரண்டி
    • செத்தல் மிளகாய் - 5
    • பெருங்காயம் - கால் தேக்கரண்டியை விட குறைவு
    • தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
    • பெரிய வெங்காயம் - 30 கிராம்
    • மோர் - ஒரு டம்ளர்
    • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


    வாழைப்பூவை மோர் சேர்த்து, அவித்து எடுத்து நன்கு பிழிந்துக் கொள்ளவும் (அதிகம் வேக வைக்க தேவையில்லை). பொட்டுகடலை, மிளகாய் வற்றல், தேங்காய்ப்பூ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    வெங்காயத்தை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பூவுடன், நறுக்கின வெங்காயம் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

    வாழைப்பூ, வெங்காயத்துடன் அரைத்த கலவை, 1 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

    பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடைகளை ஒன்றொடு ஒன்று ஒட்டாமல் போட்டு பொரித்து எடுக்கவும்.




    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  3. #63
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வாழைத்தண்டு சூப்

    வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.
    மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

    சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

    குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு.

    வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

    உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

    பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும்.

    இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும்.

    தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

    உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.

    நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  4. #64
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வாழைத் தண்டு மோர்க்கூட்டு

    வேண்டியவைகள்.
    ஒரு துண்டு—வாழைத்தண்டு. இளசாக
    பச்சைமிளகாய்—2
    இஞ்சி—ஒரு துண்டு
    தேங்காய்த் துருவல்—3 டேபிள் ஸ்பூன்
    கடலைப்பருப்பு—-2 டீஸ்பூன்
    தனியா—1 டீஸ்பூன்
    சீரகம்—-1 டீஸ்பூன்
    நல்ல தயிர்—1 கப்பிற்கதிகம்
    ஒரு துளி மஞ்சள் பொடி
    ருசிக்கு உப்பு.
    தாளிக்கஎண்ணெய்
    கடுகு, உளுத்தம் பருப்பு
    பச்சைக் கொத்தமல்லி வேண்டிய அளவு.
    செய்முறை
    வாழைத் தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி லேசான
    மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
    கடலைப்பருப்பு,சீரகம், தனியாவை அலம்பி ஊரவைத்து
    அதனுடன் மிளகாய், இஞ்சி, தேங்காய் சேர்த்து மிக்ஸியில்
    நன்றாக அறைத்துக் கொள்ளவும்.
    தயிரைக் கெட்டியாகக் கடைந்து , அரைத்த விழுதைச்
    சேர்த்துக் கலக்கவும்.
    வாழைத் தண்டை சிறிது தண்ணீரில், ஒட்டப் பிழிந்து போட்டு
    நன்றாக வேக வைக்கவும். உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும்.
    தண்ணீர் அதிகமானால் இறுத்து விடவும்.
    தண்டு நன்றாக வெந்ததும் அரைத்த கலவையைக் கொட்டிக்
    கிளறி ஒரே ஒரு கொதி விட்டு இறக்கவும்.
    கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவவும்.
    ருசியான மோர்க்கூட்டு தயார். இஷ்டப்படி எத்துடனும் சேர்த்துச்
    சாப்பிடலாம்.

    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  5. #65
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    வாழைப்பூ கூட்டு



    • வாழைப்பூ - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
    • துவரம் பருப்பு - அரை கப்
    • வெங்காயம் - ஒன்று
    • பச்சை மிளகாய் - இரண்டு
    • தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    • உப்பு - தேவையான அளவு
    • தாளிக்க:
    • எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    • கடுகு - அரை டீஸ்பூன்
    • காய்ந்த மிளகாய் - இரண்டு
    • பூண்டு - இரண்டு தட்டியது
    • உளுத்தம் பருப்பு - சிறிது
    • கறிவேப்பிலை - சிறிது


    • துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் மலர வேக வைக்கவும்.
    • எண்ணெயை காய வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, உப்பு, பச்சை மிளகாய் கீறி போட்டு வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். கடைசியில் தேங்காய் பூ, வெந்த பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  6. #66
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மூக்கடலையின் குணங்கள்

    கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலையில் புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன.

    மூக்கடலைக்கு மருத்துவ குணங்கள் பல உண்டு.
    மூக்கடலையை சுண்டல் செய்து உண்பதும் மிகச் சிறந்தது.
    மூக்கடலை சுண்டல் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும், உடல் உறுதியாகும்.
    கடலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் சீதக் கழிச்சல் குணமாகும்.
    பச்சைக் கொண்டைக் கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்.
    மூக்கடலையை சாப்பிடக் கூடாதவர்கள்:
    மூக்கடலை பொதுவாக மருத்துவ குணங்களைக் கொண்டதுதான். ஆனாலும் அதில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயமும் உள்ளது.
    அதாவது, மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் பிரச்சினை உடையவர்கள், வாத நோய் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
    அவ்வாறு அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு உப்பசம், கழிச்சல், வயிற்றுவலி, மிகுந்த தாகம், மயக்கம், மூலநோய், உடல் வெப்பம் ஆகியவை உண்டாகும்.
    எனவே மேற்கூறிய பிரச்சினைகள் உடையவர்கள் இதனை அளவாகவும், மிகக் குறைந்த அளவோடும் சாப்பிடலாம்.

    Lakschellam likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  7. #67
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மூக்கடலை குழம்பு


    • முளைகட்டிய மூக்கடலை - அரை கப்
    • சின்ன வெங்காயம் - 8
    • பூண்டு - 4 பல்
    • தக்காளி - ஒன்று
    • மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
    • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
    • புளி - தேவைக்கு ஏற்ப
    • உப்பு - தேவைக்கு ஏற்ப
    • தேங்காய் - சிறிது
    • எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
    • ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
    • கொத்தமல்லி - சிறிதளவு





    • சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புளியை வேக வைத்த தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். தேங்காய், சீரகம், 3 வெங்காயம் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்
    • பின்னர் குக்கரில் கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
    • தாளித்தவற்றுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
    • அதனுடன் வேக வைத்த கடலையும் சேர்த்து வதக்கவும்
    • நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.
    • நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்
    • எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்து வைத்த தேங்காய், வெங்காய விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்
    • கடைசியாக ஆல் பர்பஸ் பொடி மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


    Lakschellam likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  8. #68
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்


    மூக்கடலை சுண்டல்

    தேவையானவை:

    வெள்ளை மூக்கடலை - 200 கிராம்
    கடலைப் பருப்பு - 100 கிராம்
    கொத்துமல்லி
    பூண்டு, இஞ்சி
    காய்ந்த மிளகாய் - 5
    பச்சை மிளகாய் - 5
    தனியா - 2 ஸ்பூன்
    ஜீரா - அரை ஸ்பூன்
    பட்டை லவங்கம்

    செய்முறை:

    பூண்டு, இஞ்சி, கொத்துமல்லி, பச்சை மிளகாய், காயந்த மிகளாய் ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

    இது தவிர, தனியா, பட்டை, லவங்கம் ஆகியவற்றையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மூக்கடலையையும், கடலைப் பருப்பையும் முதல் நாளே ஊற வைத்துக் கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் எடுத்து தண்ணீரை வடிகட்டிவிடவும்.

    பின்னர் அதில் அரைத்தவற்றை போட்டு நன்கு கிளறவும்.

    பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் அறிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கியவுடன் மசாலா கலந்த சுண்டலை கொடடி நன்கு கிளறவும்.

    இதில் கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

    கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி வைத்து துண்டுகளாக்கிய பச்சை வெங்காயம், தேவைப்பட்டால் தக்காளி, கொத்துமல்லி போட்டு பரிமாறலாம்.




    Lakschellam likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  9. #69
    k.ayshwarya.198's Avatar
    k.ayshwarya.198 is offline Citizen's of Penmai
    Real Name
    real name ayshwarya than aana veetla harini
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    chennai
    Posts
    765

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    மூக்கடலை மசாலா

    வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று பெரியது
    தக்காளி - இரண்டு
    பச்சைமிளகாய் - ஒன்று
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    பூண்டு - பத்து பல்
    எண்ணை - இரண்டு தேக்கரண்டி
    நெய் - இரண்டு தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    கொ*த்துமல்லி - *சி*றிது
    செய் முறை
    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் துள், ஐந்து பல் பூண்டு பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு வேக *விடவு*ம்.
    ஒரு தே*க்கர*ண்டி மூ*க்கடலையை *மிக்ஸியில் திரித்து போ*ட்டா*ல் மூ*க்கடலை ஒ*ன்றாக குழை*ந்து வரு*ம்.
    வெ*ங்காய*ம், த*க்கா*ளி, பூ*ண்டு இவ*ற்றை அரை*த்து*க் கொ*ள்ளவு*ம். தேவையான அளவு உ*ப்பு சே*ர்*த்து*க் கொ*ள்ளவு*ம்.
    எண்ணையை காயவைத்து *சீரக*ம் போ*ட்டு தா*ளி*த்து அரை*த்த *விழுதை சே*ர்*த்து வதக்கவும். இ*தி*ல் லேசாக த*ண்*ணீ*ர் ஊ*ற்*றி வேகவை*த்த கொ*ண்டை*க்கடலையை*ப் போ*ட்டு கொ*தி*க்க வை*த்து, கொ*த்தும*ல்*லி தூ*வி இற*க்கவு*ம்.


    Lakschellam likes this.
    Villager: Oru Thanni Bottle Kodunga
    Kadaikarar: Anga irukku eduthukkonga…
    Villager: Enna yematha pakkuriya athula “Bacteria Free”nu pottirukkula, Kodu ennoda free Bacteria’yavai!
    Kadaikarar: ????

  10. #70
    sangipriya is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    chidambaram
    Posts
    8

    Re: Medical Notes - மருத்துவ குறிப்புகள்

    Ha ha ha.....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter